குருவினு ஒரு படம் கொஞ்ச நாள் முன்னால வந்துச்சு , சூப்பர் படம் என்ன பாட்டு என்ன பைட்டு , அது ஏனோ நம்ம பயலுவளுக்கு புடிக்கல ,
புடிக்கலணா சும்மா இருக்க வேண்டியதுதான அந்த படத்த பத்தி கலாய் கலாய்ணு கலாச்சு கிழிச்சு பிச்சி பிராண்டி துவைச்சு போட்ட கிழிஞ்ச ஜட்டி மாதிரி ஆக்கிணாங்க ,
அப்பலாம் நான் விஜய நினைச்சு கண்ணுல பட்ட துரும்பாட்டம் துடிதுடிச்சு போயிருக்கேன் , வருங்கால ஒரிசா கவர்னர் ஜே.கே.ரித்திஷ் குமார் அப்புறம் தமிழக விடிவெள்ளி இளம் நாயகன் அதிரடி ஸ்டார் சாம் ஆண்டர்சன் ரேஞ்சுக்கு விஜய கலாய்ச்சு ,
வெந்த ________ ல எதையோ சொருகின மாதிரி கதறி கண்ணீர் வடிச்சிருக்கேன் , இப்பதான் கொஞ்ச நாளா தசாவதாரம் வந்ததுலருந்து கொஞ்ச கொஞ்சமா எல்லாரும் மறந்திருந்தாங்க , 2 நாள் முன்னால சைட்டடிக்கலாம்ணு சத்யம் தியேட்டர் பக்கமா பட்டிகாட்டான் எதையோ பாத்த மாதிரி மார்க்கமா போற வர பொண்ணுங்கள தேமேணு பாக்கறப்பதான் அந்த மெகா சைஸ் போஸ்டர் என் கண்ணுல படணுமா!!!
இத்தனைக்கும் அந்த கெரகம் புடிச்ச தியேட்டர்ல ஒரு ஷோ கூட அந்த படம் ஓடலை . இந்த போஸ்டர் அஜித் ரசிகர்கள் செஞ்ச சதியா இருக்கமோ....
படத்துமேல கிளிக்கி அந்த கொடுமைய நீங்களே பாருங்க....... :-(((

ஒரு மெகா சைஸ் பிரச்சனை :
சென்னையில் மெகா சைஸ் விளம்பர ஹோர்டிங்குகள் வைக்க சில மாதங்களுக்கு முன் சென்னை மாநகராட்சி தடை விதித்திருந்தது , ஆனால் அந்த தடை விதிக்கப்பட்ட காலத்திலிருந்தே அதை சற்றும் பொறுட்படுத்தாமல் சத்யம் திரையரங்க நிர்வாகம் தொடர்ந்து தனது விளம்பர ஹோர்டிங்குகளை வைத்து கொண்டுதான் வந்திருக்கிறது , இதற்காக இவர்கள் ஏதும் சிறப்பு அனுமதி பெற்றார்களா என்பது தெரியவில்லை . அல்லது சென்னை மாநகராட்சி இதுவரை இந்த விளம்பர ஹோர்டிங்குகளை பார்க்க வில்லையா என்பதும் தெரியவில்லை .
இந்த விளம்பர ஹோர்டிங்குகள் நகரின் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதாலும் , காட்சி மாசு (visual pollution ) ஏற்படுத்துவதாகவும் இருப்பதாலும் , வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையிலும் இருப்பதாலுமே தடை விதிக்கப்பட்டது , இதை சற்றும் பொருட்படுத்தாமல் சத்யம் திரையரங்கம் மட்டுமல்லாது , பல முக்கிய சாலைகளில் அமைந்துள்ள சங்கம் , அபிராமி போன்ற திரையரங்குகளும் மெகா சைஸ் ஹோர்டிங்குகளை இன்னும் வைக்கப்பட்டுள்ளது வருத்தத்தை அளிப்பதுடன் இது பல விபத்துகளுக்கு வழி வகுக்கும் என்பது நிதர்சனம் .
காட்சி மாசினை குறித்தும் அதன் தீங்குகளை குறித்தும் அறிந்து கொள்ள
21 comments:
பின்னூட்ட சுட்டித்தனம்
labelல்ல ரொம்ப சீரியஸ் மேட்டர்ன்னு போட்டு இருக்கீங்களே, அது ஹோர்டிங்குகள் & காட்சி மாசு மேட்டருக்கு மட்டும்தான..குருவியோட 100 நாட்களுக்கு இல்லியே????
அட கொடுமையே.. இந்த படமும் நூறு நாளா...
நேற்று சத்யம் சினிமாஸ் போகும்போது நானும் கவனித்தேன், நீங்களும் கவனித்திருக்கிறீர்கள். என்ன ஒரு கோ-இன்சிடென்ஸ்? :-)
//நேற்று சத்யம் சினிமாஸ் போகும்போது நானும் கவனித்தேன், நீங்களும் கவனித்திருக்கிறீர்கள். என்ன ஒரு கோ-இன்சிடென்ஸ்? :-)//
ங்கொய்யால. ரெண்டு பேரும் ஒண்ணா தானே போயிருப்பீங்க? ரெண்டு பேரும் கவனிச்சதுலே என்னய்யா கோயின்சிடென்சு?
it doesn't mean dat its still shown in satyam..its an commerical space and if u can afford u can place an ad for ur blog there..
next,corparation asked to remove the hoardings which are illegal..satyam cinemas got the permission to put a hoarding there..so,no problem..
this message doesn't mean kuruvi is qualified movie for 100 days...i am a vijay fan but i dont like kuruvi...
தலைப்ப பாத்த உடன சினிமால உள்ள visual pollution பத்தி தான் பேசறீங்களோன்னு நினைச்சி வந்தேன். பாத்தா வேற ஏதோ இருக்கு.
நான் முதல் முதல visual pollution அப்படின்னு யோசிச்சது "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" படம் பாத்ததுக்கு அப்புறம் தான்.
ஜே.கே.ரித்திஷ் குமார் - யாருங்க இவன் ? பெரும் தொல்லையா இருக்கு. எந்த பதிவு படிச்சாலும் இந்த பேரு வருது.
அனானிய ரூட்ல விட்டுட்டு ரெண்டு பெரும் சத்யம் போனீங்களா ? இல்லாங்காட்டி இவ்வளவு கடுப்பு ஏன் ?
ஹா ஹா நல்ல காமெடி.
:))))
\\நேற்று சத்யம் சினிமாஸ் போகும்போது நானும் கவனித்தேன், நீங்களும் கவனித்திருக்கிறீர்கள். என்ன ஒரு கோ-இன்சிடென்ஸ்? :-)
\\
:-)))))))))))))))))))
:-((((((((
ங்கொய்யால,அடங்கவே மாட்டிங்களாடா!!
அதிஷா ,
போன வாரம் வரை சன் டிவியில் படங்களின் வரிசையில் நான்காம் இடத்தில் குருவி இருக்கிறது தெரியுமா ?
//வருங்கால ஒரிசா கவர்னர் ஜே.கே.ரித்திஷ் குமார் அப்புறம் தமிழக விடிவெள்ளி இளம் நாயகன் அதிரடி ஸ்டார் சாம் ஆண்டர்சன் ரேஞ்சுக்கு விஜய கலாய்ச்சு//
சாம் ஆண்டர்சன் படம் எபூ வருது அதிஷா??!!ம்ம்ம்ம்..................:-)
மொத்தத்தில் நல்ல பகடி
வாங்க விஜய் ஆனந்த்,
குருவி நூறு நாள் ஒடுனா சீரியஸ் இல்லைங்களா
____________________________
வாங்க விக்கி
அதென்ன இந்த படமும்...
இந்த வருடத்தின் ஒரே வெற்றி படம் இதானே
லக்கி ஐயா , பாருங்களேன் என்ன ஒரு கோ-இன்டிஸன்ஸ்
___________________________
அனானி அண்ணா ... ???
நன்றி விஜய் பேன், நான் கூட தீவிரவாத விஜய் பேன்தான்
__________________________________
வாங்க அவனும் அவளும் விரைவில் தலிவர் ரித்திஷ் பத்தி முழு பதிவு தனியா போடுறேன் ஓகே
வாங்க அருவை பாஸ்கர் , சன்டிவி நானும் பார்த்தேன்ங்க , தகவலுக்கு மிக்க நன்றி
___________________________________
வாங்க ஸயீத் மிக்க நன்றி
___________________________________
முரளி அண்ணா என்ன இது சிரிப்பு
வாங்க லேகா , நாம் ஆண்டர்சனின் யாருக்குள் யாரே ஏற்கனவே ரிலீஸ் ஆகி கேன்ஸ் பட விழாக்கு போயிருச்சு
ஆர்குட்டில் போயி தேடி பாருங்க
அவர பத்தி எல்லா டீடெய்லும் கிடைக்கும்
__________________________________
பின்னுட்டமிட்ட அனைத்து அனானி நண்பர்களுக்கும் மிக்க நன்றி
எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா...;)
\\ எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா...;) \\
வாங்க உருப்படாதது ,
எல்லார் மாதிரிதான் வித்அவுட் டிக்கெட்ல கோயம்புத்தூர் டிரெயின்ல போய்கிட்டே யோசிக்கிறதுதான்
onnum puriya illa :((
Post a Comment