Pages

02 August 2008

சீதை தேடிய ராமன் - 100 வார்த்தைகளில் ஒரு கதை முயற்சி

'' சீதா , இன்னும் எவ்ளோ நேரம்தான் அங்கேயே உக்காந்துருப்பே!! '' முதுகை தடவியபடி ராஜி.


'' இல்ல ராஜி இன்னைக்காவது என் ராம் என்னை பாக்க வரமாட்டானானுதான் , காத்திருக்கேன் '' , கண்களில் நீருடன் நட்சத்திரங்களை பார்த்தபடி சீதா .


'' பைத்தியாமாடி நீ!! ''


'' அவன் கட்டாயம் வருவான்டி , ப்ளீஸ் என்ன தனிய இருக்க விடு, ''


'' ஆறு வருஷமா வராதவன் இன்னைக்கு வரப்போறானா , அவன் இந்நேரம் எவளையாவது கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்ந்திட்டிருப்பான் ''

'' அப்படிலாம் சொல்லாதடி அவனுக்கு என்ன பிரச்சனையோ என்னவோ !! கட்டாயம் வருவான் , இந்த ஆறு வருஷமும் ஒரு விநாடி கூட அந்த நம்பிக்கை எனக்கு குறையல , ஆனா இன்னைக்கு மனசுக்குள்ள அவனுக்கு என்னாச்சோனு ஒரே பயமாருக்கு '' அவள் கண்களின் ஓரம் ஈரம் ,

'' அப்புறம் உன் இஷ்டம் , இந்த முதியோர் இல்லத்தில இருக்குற பாதிபேருக்கு இந்த நம்பிக்கை மட்டும் என்னைக்குமே குறையறதில்ல , உன் புள்ளைல விட்டுக் கொடுப்பியா '' .


பல்லாயிரம் ஒளிஆண்டுகளுகப்பால் வழி தவறிய ராக்கெட்டில் தன் உதவி ரோபோவிடம் தன்னை கொல்ல உத்தரவிட்டான் ராமன் .





பி.கு. : இந்த கதையில் ஒண்ணு ரெண்டு வார்த்தை கூட குறைய வந்திருந்தால் மன்னிக்கவும் நான் கணக்கில் கொஞ்சம் வீக்கு ;-) . அடுத்து வர கதைகள்ள அக்குறை நிவர்த்தி செய்யப்படும்