லூசுத்தனமும்... கேனத்தனமும்... உன்மத்தமும்....

>> 18 November 2008




என்னை ஏனோ யாருக்கும் பிடிப்பதில்லை
பிடிக்காமல் இருக்க நான் என்ன பாகற்காயா
அத்தனை கசப்பல்ல நான்..?

அனைவருக்கும் இனிப்பாய் இருக்க
நான் என்ன பலகாரமா..
அதிலும் காரம் இருக்கிறதே...?

பலகாரத்தில் காரம் இருந்தும்
அகங்காரம் இல்லையே...?
புறங்காரம் கொடியதா...
அகங்காரம் கொடியதா...

அடேய் மூடா பாகற்காயை விரும்புவோர் உண்டு
இனிப்பு நோய்க்கு மருந்தாய் போ...

முக அழகா
அக அழகா
உடல் அழகா
சிகை அழகா

பணமில்லா பையும்
வலுவில்லா கையுமா.....?

அடேய் மூடா அனைவருக்கும் பிடித்தபடி நடக்க
யாராலும் இயலாது

காந்தியும்
கம்பனும்
புத்தனும்
புதுமைபித்தனும்,
இயேசுவும்
தேவதாசுவும்
தெரியுமா
உனக்கு....

ஆணவம் கொள்ளாதே..
ஆடவனே...

தோற்றாலும் வெற்றியாம்...
தோற்றவன் செய்வதெல்லாம் தப்பாயெ போவதேன்
வெற்றியடைந்தவன் செய்வதெல்லாம் சரியாகவே போவதேன்
மனமா - தோல்வி தரும் -ரணமா?
தோல்விக்கும் அடுத்த முயற்சிக்கும் என்ன தொடர்பு
வெற்றி பெற்றவனின் அடுத்தடுத்த முயற்சிகளில்
தோல்வியடைந்தவனின் வேகமும் உத்வேகமும் இருக்கிறதா

முயற்சிகள் தோற்றாலும்

முயலும்...... முயலும்

முயல் நீ

முயல் பிடிக்காதோர் உண்டா?...

முயல் முயல் முயல்....
அகங்காரமில்லா
புறங்காரமாய்
அனைவருக்கும் பிடித்திட்ட
பலகாரமாய்
இனித்திடலாம்...
அடையார்
ஆனந்தபவன்
எந்தப்பக்கம்........
இனிப்பாய்..... மீண்டும் ஜனிப்பேன்.....
தூ....... கேனப்பயலே...
உன்மத்தனே ஓடிவிடு...

15 கருத்துக்கள்:

அதிஷா November 18, 2008 12:32 PM  

இத்தனை தனம் இருந்தாலும் நம்ம ஆல்டைம் பேவரைட் டுபுரித்தனம்தான்...

பின்னூட்ட டுபுரித்தனம்...

நையாண்டி நைனா November 18, 2008 12:54 PM  

மீ தா பஸ் டூ போடலாம்னு பார்த்தா...

நீங்களே...!!???

அதனாலே இது பின்னூட்ட டுபுரித்தனம் தான்....

அக்னி பார்வை November 18, 2008 1:42 PM  

தலை சுற்றுகிறது..

Robin November 18, 2008 2:10 PM  

//வெற்றியடைந்தவன் செய்வதெல்லாம் சரியாகவே போவதேன்// ரசித்தேன்.

கோவி.கண்ணன் November 18, 2008 2:30 PM  

//அடையார்
ஆனந்தபவன்
எந்தப்பக்கம்........
//

சரவண பவன் பக்கம் கைகாட்டாமல் இருந்தால் சரி ராஜகோபால் பையனை தூக்கி உள்ளே வச்சிட்டாங்களாம்.

கவிதை முயற்சி நன்று. பத்திகளைப் பிரிச்சுப் போட்டு வரி வரியாக எழுதினால் கவிதை. :)

Thooya November 18, 2008 3:57 PM  

ஆகா ஆகா
இது கவிதையா?
இல்லை
தாங்கள் வாழ்வில் கண்ட தத்துவங்களா?

மணிகண்டன் November 18, 2008 4:26 PM  

************ கவிதை முயற்சி நன்று. பத்திகளைப் பிரிச்சுப் போட்டு வரி வரியாக எழுதினால் கவிதை************

ஆனாலும் உங்களுக்கு நக்கல் கொஞ்சம் அதிகம் தான் கோவி.

பரிசல்காரன் November 18, 2008 5:05 PM  

நண்பருக்கு..

உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள்ளவும். எந்த நிலையிலும் நம்பிக்கை இழக்காதீர்கள்.

விலெகா November 18, 2008 6:57 PM  

அக்னி பார்வை said...
தலை சுற்றுகிறது
repeatuuuuuuuuuuuuuu:)))))

விலெகா November 18, 2008 6:59 PM  

அக்னி பார்வை said...
தலை சுற்றுகிறது
repeatuuuuuuuuuuuuuu:)))))

K.Ravishankar November 18, 2008 7:34 PM  

அதிஷா,

உருது மொழியில் இருப்பதால் புரியவில்லை.
கோனார் நோட்ஸ் போடவும்.

மணிகண்டன் November 18, 2008 9:04 PM  

உங்க ஒத்த வரி கவிதையை மிகவும் ரசிச்சேன்.

அதான் உங்க "label" சொல்றேன்.

மிச்சத்த இன்னும் படிக்கற பொறுமை இல்லை.

விஜய் ஆனந்த் November 18, 2008 10:30 PM  

:-)))...

தலைவரே என்ன ஆச்சு???

gayathri November 19, 2008 1:00 PM  

விலெகா said...
அக்னி பார்வை said...
தலை சுற்றுகிறது
repeatuuuuuuuuuuuuuu:)))))
rerepeatuuuuuuuuuuuuuu:)))))
repeatuuuuuuuuuuuuuu
peatuuuuuuuuuuuuuu:)))))

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP