Pages

20 November 2008

சென்னையில் கீற்று வாசகர் சந்திப்பு .....




கீற்று இணையதளம் குறித்து அனைவருக்கும் தெரிந்திருக்கலாம் . தெரியாதவர்கள் இங்கே பார்க்கவும் http://www.keetru.com/ . நமது தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் போல தமிழில் வெளியாகும் பல தமிழ் சிற்றிதழ்களை ஒரே இடத்தில் தொகுத்து தரும் அட்சயபாத்திரம் கீற்று இணையதளம் .

ஞாநியின் தீம்தரிகிட இதழ் இணையத்தில் வரத்துவங்கிய காலக்கட்டத்தில் அவை கீற்று இணையதளம் மூலமாகவே கிடைத்து வந்தது , தீம்தரிகிட இதழ் மூலமாகவே எனக்கு கீற்று அறிமுகமானது , அதன் பிறகு அங்கே வெளியாகும் அணங்கு,கதைசொல்லி ,புரட்சிப்பெரியார் முழக்கம் போன்ற சிற்றிதழ்கள் ஆனந்த விகடனும் குமுதமும் மட்டுமே தெரிந்த எனக்கு இன்னொரு உலகினை அறிமுகப்படுத்தியது . புத்தகங்கள் தமிழில் கிடைக்க அரிதான வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் இவ்விணையதளம் ஒரு வரப்பிரசாதமாய் திகழ்கிறது .

இவ்வாரம் இவ்விணையதளம் தனது நான்காம் ஆண்டை துவக்குகிறது .

மிக அருமையாக நடந்துவரும் இவ்விணைய தளத்தின் வாசகர்கள் சந்திக்கவும் உரையாடவும் இவ்வாரம் சென்னையில் ஒரு வாசகர் சந்திப்பை அவ்விணையதள நண்பர்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர் . இச்சந்திப்பில் வாசகர்கள் கலந்து கொண்டு தங்களது, கீற்று தளம் குறித்த உங்கள் நிறைகுறைகளையும் அதனை மேம்படுத்த உங்களது ஆலோசனைகளையும் வழங்கலாம் . உங்களுக்கு ஏதேனும் அவ்விணையதளம் குறித்த சந்தேகங்கள் இருப்பின் அதனையும் கேட்டு தெரிந்து கொள்ள ஏதுவாய் இச்சந்திப்பு அமையும்.


வலைப்பதிவர்கள் மற்றும் கீற்று வாசகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் .


நாள்: 30-11-2008, ஞாயிற்றுக் கிழமை


நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


இடம்: BEFI Hall, நரேஷ் பால் சென்டர், தேனாம்பேட்டை, சென்னை (காமராஜர் அரங்கம் எதிரில்)


மேலதிக விபரங்களுக்கு - http://keetru.com/editorial/readers_meet.php


இவ்விழாவில் கலந்துகொள்ள எந்தவித கட்டணங்களும் கிடையாது , அதுபோல இவ்விழாவில் கீற்று வாசகர்கள் தவிர அவ்விணையதளம் குறித்து அறிய விரும்பும் யாரும் கலந்து கொள்ளலாம் . இதில் நமது வலைப்பதிவர்கள் பலரும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது .


*********************************

அவளோதான்பா........ ;-)

*********************************