
இருப்பத்தி நான்கு வரி ஹைக்கூவில்
இருப்பத்தி இரண்டில்
தேடிக்கொண்டிருக்கிறான்
கண்ணில்லாத குருடன்
இருப்பத்தி நான்கில் கிடைக்கப்போகும்
பார்வையை
பதினேழாம் வரியில் பறக்கும் பட்டாம்பூச்சி
பத்தொன்பதில் இறந்து போனால்
பனிரெண்டாம் வரியில் பிறந்தது என்ன
மூன்றாம் வரியில் கூட்டமாய் அமர்ந்திருந்தவர்கள்
இருபதாம் வரியில் அந்த வண்ணத்துப்பூச்சியின் மறைவில்
கலைந்து சென்றனர்
இதோ இந்த ஹைக்கூவில் இருபத்திநான்கு வரிகளும்
41 comments:
ஹேய்... அதிஷா
கலக்கல்!
mmmmmmmm...
கவிதை நல்லாயிருக்கு அதிஷா.
me the first
அண்ணா புரியவில்லையே
வாவ்.. அதிஷா..
நீதான்யா ஒரிஜினல் ‘கவிஞன்!’
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
கவிதை நல்லாயிருக்கு அதிஷா.
//
வேறென்ன வேறென்ன வேண்டும்?????அதிஷா???
எடுத்துக் கொண்ட மேட்டர் அருமை.. தளம்புரிந்து விட்டது உங்களுக்கு என்பதன் ஆரம்பம் இது..வாழ்த்துக்கள்.
கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கி
கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கி
கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கிக்கி
இது ஓடாபோன்னு ஹ்க்கு க்வித
நன்றி சென்ஷி
நன்றி மயாதி
நன்றி சுந்தர் அண்ணா
நன்றி அன்பு
நன்றி தோழர்
கவிதை புரியவில்லையே?
ரவிசங்கர் அவர்களின் பின்னூட்டம் இங்கே எப்படி இருக்கும் என்ற சஸ்பென்ஸ் தாங்கவில்லை. அவருடைய பின்னூட்டத்துக்காக ஏங்குகிறேன்.
வாவ், அதிஷா ரொம்ப நல்லா வந்திருக்கு. எனக்குப் பிடிச்சிருக்கு.
லக்கி, அப்படி ரவி வரவில்லை என்றால், சுந்தர் ரவி மாதிரியே பின்னூட்டம் போடுவார். அவரைக் கேக்கலாம் :)
அனுஜன்யா
அதிஷா,
உங்களிடமிருந்து நான் இப்படியான பதிவை எதிர்பார்க்கவில்லை.
கவிதை எனக்கு பிடித்திருந்தது.
வெறும்னே புகழ்வதற்காக அல்ல. நீங்கள் எப்படி நினைத்து எழுதியிருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் கவிதை உணர்த்தும் விஷயங்கள் பல.
••••••••••••••••••••••••••
இருபத்து நான்கு வரி ஹைக்கூவில்
இருபத்து இரண்டில்
தேடிக்கொண்டிருக்கிறான்
கண்ணில்லாத குருடன்
இருபத்தி நான்கில் கிடைக்கப்போகும்
பார்வையை
பதினேழாம் வரியில் பறக்கும் பட்டாம்பூச்சி
பத்தொன்பதில் இறந்து போனால்
பனிரெண்டாம் வரியில் பிறந்தது என்ன
மூன்றாம் வரியில் கூட்டமாய் அமர்ந்திருந்தவர்கள்
இருபதாம் வரியில் அந்த வண்ணத்துப்பூச்சியின் மறைவில்
கலைந்து சென்றனர்
இதோ இந்த ஹைக்கூவில் இருபத்திநான்கு வரிகளும்.
••••••••••••••••••••••••••••
கவிதையை இப்படி மாற்றி மறுபடியும் பதிவிட்டால் வாசிப்பின் எளிமை கூடும் என்பது என் கருத்து.
வாழ்த்துக்கள் அதிஷா.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
nice one athisa
// லக்கிலுக் said...
ரவிசங்கர் அவர்களின் பின்னூட்டம் இங்கே எப்படி இருக்கும் என்ற சஸ்பென்ஸ் தாங்கவில்லை. அவருடைய பின்னூட்டத்துக்காக ஏங்குகிறேன்.//
நானும்.. நானும்.. :-))
கவிதை கவிதை எப்படி ஆதிஷா இப்படியல்லாம் எப்படி......
என்னண்ணே இது.. புரியல..
சின்ன பசங்களுக்கு புரியுற மாதிரி எழுதுங்கண்ணே...
:-)
மிக அருமை ...
அருமை அதிஷா :)
அய்யா இனிமே கவிதை எழுதினா கோனார் நோட்ஸ் இலவசம்னு சொல்லுங்க. எனக்கு ஒன்னும் புரியல. புரிஞ்சவங்க (மட்டும்) விளக்கம் சொல்லுங்க. அதுவும் சென்ஷி..
நன்றி ராஜு
நன்றி அனுஜன்யாண்ணா
நன்றி அகநாழிகை அண்ணா.. நானும் பிளாக்கரில் கவிதையின் அமைப்பை மாற்றிப்பார்த்தேன் மாறமாட்டேன்கிறது
நன்றி வினோத் நண்பா
நன்றி ஜவஹர் அண்ணா
நன்றி கடைக்குட்டி உங்களுக்குதான் போன பதிவு போட்டேனே பாக்கலையா
நன்றி நந்தா
நன்றி இளவஞ்சி
நன்றி இளா..(சென்ஷியை அணுகவும் )
அண்ணன் சென்ஷி எங்கிருந்தாலும் இளாவின் சந்தேகத்தை தீர்த்து வைத்து ஆயிரம் பொற்காசுகளை பரிசாக பெறவும்
ரவிஷங்கர் சாரின் பின்னூட்டத்திற்காக நானும் வெயிட்டிங்ப்பா..
நன்று.
மூன்று வரியில் முடிக்கும் விசயத்தை 24 வரிகளில் எழுத ஒரு தில் வேண்டும்!
--
Regards
விஜயஷங்கர்
பெங்களூரு
ஆமா எல்லாரும் கவித கவிதன்னு சொல்றாங்களே.. அது அந்த போட்டாவுக்கு பின்னால ஒளிஞ்சினி கீதா சாமி?
வினோத்து, இதுல கவிதை எங்க இருக்குன்னு தேடிப் புடிச்சி சாட்டில் சொல்லவும்.. நன்றி வணக்கம்..
..... இருக்குடி உனக்கு 10ம் தேதி ராத்திரி பலமான ( பலான இல்ல ) பூஜை.... :(((((((((((((((((
அத்தனை வரியிலும் தேடிட்டேன், ஒரு எழவும் புரியல, ஆள விடுங்கடா சாமி
நன்றி தராசு.. இன்னும் ஒரு ரவுண்டு தேடுங்க கிடைக்கலாம்.
நன்றி விஜய்..
Enna sollurathunne theriyalaa.
:((
நாலைஞ் தடவ வயித்தல போயிடிச்சி.
ஒண்ணும் புரியல தலீவா!
ஒரு கருமாந்திரமும் புரியல. அதுனாலதான் எல்லாரும் நல்லாருக்குங்கிறாங்களோ என்னவோ!!
:))))
யோவ்.. உன்ன சொல்லணும்யா.. அவனவன் 24 வரி கவுஜ எழுதிட்டே திரியுறான்..
அன்பின் அதிஷா
கவிதை புரிந்து கொள்ள முயற்சி செய்தேன் - ஒரு மாதிரியாகப் புரிந்தது. அகநாழிகை மாற்றியது அழகாகப் புரிந்தது. நான் நினைத்த வகையிலேயே அவரும் மாற்ரி இருக்கிறார்.
சஞ்செய் ஏதோ பலான பூஜை எல்லாம் சொல்றாரே .....என்ன அது
நன்றி அப்பாஸ்ண்ணே
நன்றி குபீர் குப்பண்ணா
நன்றி அப்துல்லாண்ணே
நன்றி சீனா அண்ணே
கவிதை முயற்ச்சிக்குப் பாராட்டுகள்.
எனக்கு இந்த மாதிரி கவிதைகள் வருவதில்லை என்பது ரொம்ப குறை
உண்டு.
இனி என் எண்ணங்கள்:-
தனக்கு பார்வை வந்தால்......?
பார்வையற்றவன் உள்மனதில் பார்வை கொண்டு கவித்துவமாக இருக்கிறான்.
ஒரு பிறவி குருடன் எப்படி வண்ணத்துப்பூச்சிகளுடன் பார்க்க முடியும்.அதுதான் கவிதை.
நாம் காணமுடியாததை அவன் கண்டு
வண்ணத்துப் பூச்சிகளோடு
விளையாடுகிறான்.வண்ணங்களை தூவுகிறது.யார் யாரோ வருகிறார்கள் விளையாடுகிறார்கள்.மறைகிறார்கள்
குதூகலிக்கிறான்.
தனக்கு பார்வை கிடைத்தவுடன் இவைகள் எல்லாம் என்ன ஆகும்?
இதுவே பார்வையா?மூன்றாவது வரி
//மூன்றாம் வரியில் கூட்டமாய் அமர்ந்திருந்தவர்கள்
இருபதாம் வரியில் அந்த வண்ணத்துப்பூச்சியின் மறைவில்
கலைந்து சென்றனர்
இதோ இந்த ஹைக்கூவில் இருபத்திநான்கு வரிகளும்//
மேலிருப்பது highly poetic!
குறைகள்:
அமெச்சூர் நெடியும் அடிக்கிறது சில வரிகளில்.டிங்கரிங் செய்ய வேண்டும்.
தயவு செய்து என் விமர்சனத்தை
விமர்சிக்கவும் என்னை இங்கு அழைத்தவர்கள்.
அதிஷாவிடமும் எதிர்பார்க்கிறேன்.
வழக்கமான “நன்றி சார்” தேங்காய் பை வேண்டாம்
//
அமெச்சூர் நெடியும் அடிக்கிறது சில வரிகளில். டிங்கரிங் செய்ய வேண்டும்.//
அது இலை மறைவு காயாக இல்லாது போல் தோன்றினாலும், முதல் தடைக்கல், முதல் படிக்கட்டு ஆகிறது!
முயற்சியை தொடரவும் வினோத்.
--
Regards
விஜயஷங்கர்
பெங்களூரு
( என் இமெயிலுக்கு பதில் வரலே? )
Super ji..
அடப்பாவி.. நீயும் ரவுடிதான்னு சொல்லவேயில்ல..
//தயவு செய்து என் விமர்சனத்தை
விமர்சிக்கவும் என்னை இங்கு அழைத்தவர்கள்.//
ஆஹா.. ஓஹோ.. பேஷ் பேஷ் :-))
நன்றி விஜய் உங்கள் மெயில் ஏதும் வரவில்லை விஜய் மன்னிக்கவும் ஸ்பேமிற்கு போயிருக்கலாம். என்னை மன்னித்து மீண்டு ஒருக்கா அதே மெயிலை dhoniv@gmail.com க்கு அனுப்பவும்,
நன்றி கார்த்திகேயன்
நன்றி ஆதிமூலச்செல்லம்
ரவிசார் உங்க பின்னூட்டம் வந்தாதான் நம்ம பதிவே முழுமையடையும்..
மற்றபடி உங்கள் விமர்சனம் உண்மைதான் . மானே தேனே பொன்மானே போன்ற கவிதைகள் எழுதும் சராசரிதான் நான்.
முதல்முறையாக இது போன்றதொரு முயற்சி. அதனால் இது கட்டாயம் அமெச்சூர்த்தனம் தெரிவதில் வியப்பில்லை. செல்ஃப் எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கரையேற வேண்டும் அடுத்த முறை இன்னும் சிறப்பாய் எழுத முயல்கிறேன்,
மற்றபடி மிக்க நன்றி ரவி சார்.
அதே தேங்காய்பைதான் ஆனால் இரண்டு சாத்துக்குடியும் ஒரு சீப்பு வாழைப்பழமும் சேர்த்து உங்களுக்கு மட்டும் ஸ்பெசல்..
ரொம்ப நன்றி அதிஷா.
ஒரு விஷயம் விட்டு விட்டது.
கவிஞனுக்கு ஒரு பரிமாணம் என்றால் படிப்பவனுக்கு பல பரிமாணம் விரியும்.அதுதான் துட்டு.
சுட சுட ஒரு ஹைக்கூ பதிவுல ஏத்திட்டேன்.விமர்சிக்கவும்.
கருமம் புடிச்ச கவிதை. இதுக்கு ஒரு விமர்சனம் வேற.
கவிதையை கூட தாங்கிக்கலாம். ரவிசங்கர் கமெண்ட் படிக்க படிக்க என்னோட கண்ணு விசயகாந்த் மாதிரி சிவக்குது. வேண்டாம் ரவிசங்கர் ! :)-
Post a Comment