யாக்கை!
>> 24 June 2009

தனது சட்டைப் பையைத்தடவிப்பார்த்தான். கணிசமான சில்லரை இருந்தது. தொங்கிக்கொண்டிருந்த பாக்கட்டில் , குத்தி வைத்திருந்த ரெனால்ட்ஸ் பேனா விழுந்து விடுமோ என்கிற பயத்தோடு கவ்விப்பிடித்துக் கொண்டான். இன்னொரு கையால் பேருந்தின் மேல் கம்பியை இறுக்கமாய் பற்றிக்கொண்டான். முன்னாலும் பின்னாலும் பலர் நின்று கொண்டிருந்தனர். நிறைய பெண்கள். யாரும் இவனை கவனிக்கவில்லை. அனைவரையும் பார்த்துக்கொண்டிருந்தான். கழுத்தின் மாட்டியிருந்த மொபைல் டிங்டாங் என்றது. எஸ்.எம்.எஸ். வோடவோன்.
From - VT-PARTNER
FIND YOUR TRUE LOVE?. Who is in your dreams? someone tall and Fair? may u both make a Wonderful pair? Looking for a life partner
sms Partner ( UR DOB ) to 52252. Eg.PARTNER 06031983. Rs.3/SMS
படித்துவிட்டு அழித்தான்.
தூரத்தில் அடுத்த சிக்னலின் மஞ்சள் விளக்கு தெரிந்தது. அருகில் செல்ல சிகப்பாய் மாறியது.மேல் கம்பியை இறுகபிடித்தான். ஒரு மிகப்பெரிய சடன்பிரேக்கிற்கு தன் உடலை தயார்ப்படுத்திக்கொண்டான்.
உடலின் மேல்பாகத்தையும் கீழ்பாகத்தையும் அசையாமல் வைத்துக்கொண்டு நடுப்பகுதியை மட்டும் முன்னுக்குத் தள்ளினான் , வயிறு முட்டுவதைப்போல. எதிர்பார்த்த மாதிரியே பாங்ங்ங் என்று சடன் பிரேக் அடித்து நின்றது. இவன் நினைத்தது போலவே அந்த பெரிய இடைப் பெண்ணின் பின்னால் போய் மோதினான். நல்ல செழிப்பான உடல். மல்லிகை வாசனை. தலையில் மல்லிகைப்பூ இல்லை. வாசனை திரவியமாய் இருக்கக்கூடும். அத்தர்? மசூதி வாசலில் விற்பார்களே அதன் பெயர் என்ன?
அவளும் அந்த பிரேக்கில் நிலை தடுமாறியிருக்க கூடும் அதனால் அவனை சட்டை செய்யவில்லை. அவனுக்கு இன்னொரு முறை பிரேக் அடித்தால் தேவலை போல இருந்தது. அந்த வாசனை? பேருந்து முழுக்க பரவியிருப்பதாய் தோன்றியது.
கோயம்பேட்டில் இருந்து வடபழனி செல்வதற்குள் ஆறு சிக்னல்கள் என்பதை அறியாதவனில்லை . அடுத்தடுத்து எப்படியெல்லாம் இடித்து சுவைக்கலாம் அல்லது சுவைத்து இடிக்கலாம் என நினைத்தபடி நின்றுகொண்டிருந்தான். அடுத்த நிறுத்தம் வந்தது. அடுத்த இடிக்கு தயாராகியிருந்தான். ஆனால் அதற்கு முன்னே ஏனோ அந்த பெரிய இடைப்பெண் எம்.எம்.டி.ஏ நிறுத்ததிலேயே முன்னால் நகர்ந்து நகர்ந்து இறங்கிவிட்டாள். அடச்சே என அவனது மனம் தோல்வியை தழுவியது. அவளது முகத்தைப் பார்க்கவில்லையே!. வெளியே ஜன்னல் வழியாக பார்த்தான். உடலுக்கேற்ற முகமில்லை. முகமெல்லாம் பருக்களின் வடு. நிறமும் கம்மி. ஆனால் செழிப்பான உடல்.
இப்போது அவள் இடத்தில் ஒரு கிழவி . உடலெல்லாம் சுறுக்கம். அழுக்கு வாடை. அழுகிய கிர்னி பழத்தின் கெட்ட வாடையைப்போல வந்தது. உரசாமல் தன் உடலை வில் போல் வளைத்து நின்றான். தெரியாமல் கூட உரசிவிடக்கூடாது என்பதில் கவனமாய் உடலை இறுக்கி நின்று கொண்டு ஒரு கையால் மேல் கம்பியையும் இன்னொரு கையால் பக்கத்தில் இருந்த தூண்கம்பியையும் இறுக பற்றிக்கொண்டான். அழுகிய கிழவி வாசனை குமட்டியது. அந்த கிழவியின் தலையிலிருந்து வந்த கருவாட்டு நாற்றம் வேறு மூச்சை அடக்கிக்கொண்டான். ஒரு வழியாய் திருவல்லிக்கேணி வந்து நின்றது பேருந்து. பெருமூச்சு.
திருவல்லிக்கேணியில் இறங்கியவன். அந்த பெண்ணின் வாசனையை நினைத்த படியே தனது அறையை நோக்கி நடக்கத்துவங்கினான்.என்ன சென்ட் அது.. ஸ்பின்ஸ்?.. ம்ம் இரவு பூ வைத்து விட்டு யாருடனாவது இருந்துவிட்டு வருகிறாளோ? விபச்சாரியோ? நடுநடுவே அழுகிய கிர்னி நாற்றம் வேறு வந்து தொலைத்தது. இடித்தாலும் ஒன்றும் சொல்லாமல் இருந்தவள் அப்படித்தான் இருக்க வேண்டும்? போன் நம்பர் கேட்டிருக்கலாமோ? ச்சே தவறவிட்டு விட்டோமோ? அடச்சே சுகந்தமான நினைவுகளுக்கு நடுவே கிழவியின் சுறுக்கம் எதற்கு நினைவுக்கு வருகிறது இம்சை என எண்ணியபடியே நடந்தான்.
************
தி.கேணியில் சேப்பாக்கத்தை ஓட்டிய ஒரு சாலையில்தான் அவன் தங்கியிருந்த மேன்சன். அது ஹிட்லரின் கொடூரமான சிறைச்சாலைகளைப் போன்றது. ஒரு சிறிய பத்துக்கு பத்து அறையில் ஐந்து பேர் ஐவருக்கும் ஒரே கழிப்பறை ஒரே குளியலறை. காலை நீட்டி படுத்தால் அடுத்தவன் தலை முட்டும். புரண்டு படுத்தால் அடுத்தவன் பின்னால் முட்டும். காலைகுறுக்கினால் புழுக்கம். ஜன்னல் கிடையாது. கதவு மட்டும். ஆங்கிலேயன் காலத்து மின்விசிறிதான் அதிலிருந்து சூடான காற்று காது கிழியும் பலத்த சத்தத்துடன் வரும். மற்றபடி வசதியான அறை. படுக்கலாம் படுக்கலாம் படுக்கலாம் .
காலை , இரவு உணவு மெஸ்ஸில். மதியம் பெரும்பாலும் அலுவலக கான்டீன். சுவை குறித்து அத்தனை ஆசையெல்லாம் இல்லை. கிடைத்ததை உண்பான். காலையில் பெரும்பாலும் அவன் மலம் கழிப்பதில்லை. இரவும். பெரும்பாலும் முடிந்த வரை பொதுக்கழிப்பறையை உபயோகிப்பதே இல்லை. சரியாக தண்ணீர் ஊற்ற மாட்டார்கள், அது இது என எப்போதும் மனதிற்குள் குறை சொல்வான். அதிலும் இந்த சனியன்கள் திராபைகள் அறிவுகெட்டவர்கள் என்னதான் தின்கிறார்களோ? வயிறா? அல்லது துர்நாற்றக் கிடங்கா? இந்த ஆம்பள பசங்களுக்கு சுத்தமே கிடையாது சார் ஒழுங்கா அதையாவது கழுவுவானுங்களா தெரியல!
அதனால் பெரும்பாலும் அலுவலகத்தில்தான். சமயத்தில் பஸ்ஸிலேயே முட்டிக்கொண்டு நிற்கும் அந்த நேரத்தில் முடிந்த வரை வாயுவாய் விட்டு அடக்கிக்கொள்வான். அருகில் இருப்பவர் மூக்கைப்பொத்திக்கொள்ளும்போது தானும் சேர்ந்து மூக்கைப்பொத்திக்கொள்வான். சமயத்தில் இவன் முந்திக்கொண்டு மூக்கை அடைத்துக்கொள்வான். அதில் ஒரு சௌகரியம் மலத்தையும் அடக்கிக்கொள்ளலாம்.
**********
அவன் சென்னை வந்து பத்து வருடங்கள் ஆகிறது. அண்ணா நகர் அலுவலகத்தில் வேலை தேடி வந்த போது இணைந்தவன். சம்பாதிக்கும் சொற்ப பணத்தில் வீட்டிற்கு கொஞ்சம் தனக்கு கொஞ்சம் போக மீதமெல்லாம் கடன்தான். மற்றபடி எந்த குறையுமில்லை. வயதுதான் 35 ஆகிவிட்டது. திருமணம்? இன்னும் இல்லை. ஒரு வழியாக வாழ்க்கையில் தனது இருப்பை தற்காலங்களில் ஒரு பிடிப்பாய் நிலைப்படுத்திக்கொண்டாலும் அவனுக்கு இப்போதைக்கு இருக்கும் ஒரேப் பிரச்சனை மிகப்பெரியப் பிரச்சனை சர்வதேசப் பிரச்சனை பிரபஞ்ச பிரச்சனை அவனது ஆண்குறி.
**********
பதினைந்து வருடமாய் சுயமைதுனம். நாள் தவறாமல். காலை மாலை இருவேளையும். பஸ்ஸில் உராயும் பெண்ணை நினைத்து. அவளது வாசனை. அவளது உடலின் மென்மை. இறுக்கமான சுடிதார் அணிந்த பெண்ணின் பின்புறம். பைக்கில் கட்டி அணைத்த படி சென்ற யாரோ காதலிகள். பீச்சில் காதலனுக்கு முத்தமிடும் கன்னிப்பெண்கள். தனது அலுவலக பெண்கள்.எப்போதாவது பார்க்கும் காலைக்காட்சி கவர்ச்சிபடங்கள் , சுவரொட்டிகள் , கு**த்தில் வரும் பிரா விளம்பரம் , வி**னில் வரும் கவர்ச்சிப்படம் , காட்சிகளை எண்ணி எண்ணி.. என எண்ணெய்,சோப்பு,ஷாம்பு,எச்சில் என எல்லா வஸ்துக்களையும் உபயோகித்து என பல ஆயிரக்கணக்கான முறை சலிப்பின்றி செய்து வந்த செயல் தற்காலத்தில் கசக்க துவங்கி விட்டது.
இப்போதெல்லாம் மேற் சொன்ன எதை செய்தாலும் திருப்தி இல்லை. ஆனால் காமம். அது அடங்க மறுத்து மீண்டும் மீண்டும் தண்ணீருக்குள் அழுந்திய பந்தைப்போல வெளியே எழும்பி எழும்பி வரத்தான் துடிக்கிறது.
காமம்?
அவன் வாழ்நாளில் இது வரை ஒரு முறை கூட ஒரு பெண்ணையும் ஆடையின்றி நேரில் பார்த்ததுமில்லை, உடலுறவும் கிடையாது. பதினைந்து வயதில் தன்னோடு படித்த யாரோ பெண்ணோடு டியுசன் முடிந்து வரும்போது அவளுக்கு முத்தமிட்டதாய் ஞாயபகம். அதுவும் கன்னத்தில். ஒற்றை ஸ்பரிசம் இருபது வருடங்களுக்கு முன். அந்த காட்சியை நினைத்தால்.. நினைக்காமல் இருந்து விடுவான்.
ஒரே காட்சிப்படிமங்கள் மீண்டும் மீண்டும் மனக்கண்ணில் கொண்டு வந்து உணர்ச்சியை தூண்டுவது காளை மாட்டில் பால் கறப்பதைப் போன்றிருந்தது. அதனால் அவனுக்கு புதிது புதிதான காட்சிப்படிமங்கள் தேவையாய் இருந்திருக்கலாம். ஆனால் அவனோ காட்சிகளையும் படிமங்களையும் பற்றி சிந்திக்கும் சராசரி நிலையில் இல்லை. காம வேட்கையின் உச்சியில் இருந்தான். விபச்சாரியிடமும் சென்று பார்த்துவிட்டான் அதிலேயும் அவனால் முழுமையாய் ஈடுபட முடிவதில்லை.ஏனோ தயக்கம் , பயம் , நடுக்கம். நாற்றம். குமட்டல். இவன் வசதிக்கு பல ஆயிரத்தில் பஞ்சு மெத்தையில் பகட்டாய் முடியாதே. மௌன்ட் ரோட்டில் முப்பதுக்கும் ஐம்பதுக்கும் வரும் ரோட்டோர விபச்சாரிகளே முடிந்தது. அதுவும் தோல்வி.
காதலித்தாலாவது தனது வேட்கை தீருமென காதலிக்க துவங்கினான். மன்னிக்கவும் காதலிகளைத் தேடினான். இவனது சூம்பிப்போன உடலும் அரை வழுக்கைத் தலையையும் பார்த்து யாரும் காதலிப்பதாய் இல்லை. இவனது காமவேட்கையோடான அணுகுமுறையே காதலை எட்டாக்கனியாக்கியது.
காமம்? தீராதே!
***********
ஆன்மீகம் தற்காலிக விடுதலையை அளித்தது. நாள் தவறாத யோகா. வேளாவேளைக்கு தியானம். பிரணாயாமம். குண்டலினி சக்தி . கந்த சஷ்டி கவசம் . சைவ உணவு. குறைச்சலான உப்பு காரம். அது இது மயிறு மாங்கொட்டை மண்ணாங்கட்டி என ஆன்மீகத்தின் அத்தனையிலும் விடுதலையை தேடினான். அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை காமத்தின் வலிமை.
சில நாட்களில் கோவில் சிலைகளின் உடலைப் பார்த்தாலே அதிலும் குறிப்பாய் அம்மன் சிலைகள் ஏதேதோ பெயர்கள் ஏதேதோ கன்னிமார்கள் எல்லாருமே அணிந்திருந்த உடை மிக மிக லோ-ஹிப் . கம்பி அளவு மார்க்கச்சை. விடாதே காமம். அவனுக்குள் மீண்டும் கிளர்ச்சித் துவங்கியது. இருமடங்காய் நான்காய் பத்தாய் நூறாய் ஆயிரமாய் லட்சம் மடங்காய் கிளர்ந்தது. அய்யய்யோ அபச்சாரம் என்று நினைத்து கொண்டு கவனத்தை திசை திருப்பிக்கொள்வான். கோவிலின் வேறு ஏதாவது ஒரு சிலையில் ஏதாவது தெரியும். ஏதாவதொரு கவனச்சிதறடிப்பு கட்டாயம் இருக்கும். அதிலும் சிவன் கோவிலில் சிவலிங்கம் குறித்து எங்கோ படித்துத் தொலைத்ததில் இருந்து லிங்கத்தைப் பார்த்தாலே காமம்.
ஒரு நாள் அவனது காமம் அடக்க இயலாமல் ஒரு சிலையின் இடையையும் மாரையும் தடவிப்பார்த்து விட்டு அறைக்கு வந்து மைதுனம் செய்துவிட்டான். எல்லாம் முடிந்த பின் கழிவறை அதிர அழுதான். கண்களெல்லாம் நீரோடு இனி கோவிலுக்கு செல்வதில்லை என முடிவெடுத்தான்.
****************
இந்த காமநோய் அவனை கொன்று விடும் போலிருந்தது. அலுவலகத்தில் , மேன்சனில் ,பஸ்ஸில் , மெஸ்ஸில் , பீச்சில் , பேச்சில் , பார்வையில் , மூச்சில் , எச்சில் துப்புதல் முதல் எழனி குடிப்பது வரை என எப்போதும் காமம். விரட்டியது. இவன் அதைக்கண்டு அஞ்சினான். இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்தான். காமம். பெண். உடலுறவு. வேட்கை. எல்லாமே ஆயிரம் மடங்கு அனுதினமும் அதிகரித்தது. ஒரு தருணத்தில் தன் உறுப்பை வெட்டி எரிந்துவிடலாமா என்றும் தோன்றியிருக்கிறது.
**************
அவனது அறை நண்பன் அவன் , குமரன். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருபவன். மென்மையானவன். பெண்மை கலந்து மெல்லியதாய் பேசுபவன். நிறைய பெண் நண்பர்கள் அவனுக்கு. எப்போதும் எஸ்.எம்.எஸ்ஸிலும் போனிலும் நேரிலும் பெண்களுடன் இருப்பவன். அழகன் . அவனுக்கு குமரனை மிகப்பிடித்திருந்தது. இருவரும் நல்ல நண்பர்கள். யாரிடமும் பேசாத அறையில் குமரனிடம் மட்டும் பேசுவான். குமரன் வெகு நேரம் பேசுவான். சனிக்கிழமைகளில் இரவெல்லாம் பேசுவான். யாருமே மதிக்காத அவனை முதன்முதலில் மதித்து அண்ணா என்று அன்போடு அழைத்தவன் அவன். காசில்லாத மாதக்கடைசிக்களில் காசு கொடுத்து உதவியவன். உதவுபவன்.
ஆனால் இன்று இப்படி ஒரு முடிவை தான் எடுத்துவிட நேரிட்டது நினைத்து மிகக்கவலையாய் இருந்தான். அவனால் அதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ச்சீச்சீ ஒரு ஆண் போய் ஆணிடம் என்று தனக்குத்தானே மனதிற்குள் பேசிக்கொண்டான். ஆனால் அவனது காமம் போக்க வேறு வழியே தெரியவில்லை அவனுக்கு. குமரனை சரண்டைந்துவிட வேண்டியதுதான் என முடிவெடுத்தான்.
ஆனால் அவனிடம் இது குறித்து எப்படிப்பேசுவது, என்னப் பேசுவது , எப்படித்துவங்குது...? எப்படி செய்வது? என்ன செய்வது? ஆசனவாய்ப்புணர்ச்சியா? வாய்வழியா? அதெப்படி இன்பம் தரும்..? அவனுக்கு எப்படி முத்தமிட முடியும்? அறுவருப்பாய் இருக்காதா? எய்ட்ஸ் வந்து விட்டால் என்ன செய்வது? காண்டம் அணிய வேண்டுமா? ஏன் இப்படி எல்லாம் தோன்றுகிறது? நான் ஹோமோவா? இப்படித்தான் ஹோமோக்கள் உருவாகிறார்களா?
கேள்விகள் கேள்விகள் இரண்டு லட்சத்து சொச்சம் கேள்விகள்.. இது வேண்டாம் , இல்லை இதை விட்டால் திருமணமாகும் வரை சுயமைதுனம்தான்.. இது ஒரு வடிகால் .. ஊர் உலகத்தில் யாரும் செய்யாததா என்ன? குமரன் சம்மதிப்பானா? நிச்சயம் சம்மதிப்பான். இப்படி பல எண்ணங்கள் மாறி மாறி வந்து கொண்டே இருந்தன. அன்றைக்கு இரவெல்லாம் தூங்கவேயில்லை. குமரன் மட்டும் தனியாக தூங்கிக்கொண்டிருந்தான். குமரனையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அலுவலகத்திலும் இதே யோசனை. குமரனிடம் எப்படி சொல்வது. என்னை தவறாக நினைத்துக்கொண்டால். இல்லை இல்லை இல்லை இது தவறு. நான் ஹோமோ அல்ல. அது அறுவெறுப்பானது. வேண்டாம் வேண்டாம். ஆனால் காமம்?
***************
யோசித்தபடியே மேன்சனை நோக்கிநடந்து கொண்டிருந்தான். அறையில் நுழைந்தான். குமரன் படித்துக்கொண்டிருந்தான். குமரனை நேருக்கு நேர் பார்க்கும் மனநிலையில் இல்லை அவன். ஆனாலும் ஏதோ அசட்டு தைரியம் குருட்டு நம்பிக்கை.
''தண்ணி அடிக்கலாமாடா பாப்பா'' .
''இன்னா பெர்சு திடீர்னு புதுச்சா எங்கூடலாம் சரக்கடிக்கிறேன்ற.. மத்த பசங்களோட அடிச்சாலும் எனக்கு தனிப்பந்திதான வப்ப.. இப்ப இன்னா பாசம் வயிக்குது..''
''ஒன்னுமில்லடா மனசு சரியில்ல வாடா பாப்பா தண்ணி அடிக்கலாம்''
''இன்னாவோ போ.. ஒன்னியும் புரில.. நீயா வாங்கித்தரேன்டற.. பெர்சு ..இன்னா ஆச்சு ஓனக்கு.. ''
ஒரு வழியாய் அவனை அழைத்துக்கொண்டு ஒயின்ஷாப்பில் போய் அமர்ந்தான். இன்றைக்கு எப்படியாவது இவனுக்கு நிறைய ஊற்றிக்கொடுத்து பிளாட்டாக்கிவிட வேண்டியதுதான். போதையில் முதல்முறை முயற்சித்து பார்த்து விட வேண்டியதுதான். போதையில் இருக்கும் போது என்ன செய்ய முடியும்.? இது ஏன் எனக்கு முன்னாலேயே தோன்றவில்லை. மயங்கிய பின் என்ன செய்வது.
ஒரு பீரிலேயே போதும் என்றான் குமரன். இவனுக்கோ அதிர்ச்சி ஆனாலும் மகிழ்ச்சி . ஆனாலும் குமரன் அதீத போதையில் இருப்பதாய் உணர்ந்தான் . அறைக்கு இருவரும் திரும்பியதும் வாங்கி வந்த பரோட்டோ பொட்டலங்களையும் வறுத்த மாட்டிறைச்சியையும் பிரித்து சாப்பிட்டனர்.படுக்கையில் சாய்ந்தனர்.
*********************
பார்த்தி என்கிற பார்த்திபனும் அந்த அறைக்காரன்தான். யாரிடமும் பேசமாட்டான். குமரனிடம் மட்டும் பேசுவான். எப்போதும் ஒன்றாகவே சுற்றுபவர்கள். இவன் குமரனை சில சமயம் கவனித்திருக்கிறான். குமரனும் பார்த்தியும் எப்போதும் இரவில் வெகு நேரம் பேசிக்கொண்டிருப்பதை. பார்த்தியும் அறை நண்பன்தான். ஆனால் மற்றவர்களின் நட்பிலிருந்து இது சற்று விலகியிருப்பதாய் அவனுக்கு தோன்றியது. ஒரு மழை பெய்யும் நள்ளிரவில் இடி சத்தம் கேட்டு விழித்து பார்த்தவன் அருகில் படுத்திருந்த குமரனும் பார்த்தியும் கட்டியணைத்தபடி ஒருவரை ஒருவர் முத்தமிடுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறான். அதுவும் நிர்வாணமாக. ஆனால் இது குறித்து அவர்களிடம் கேட்டதில்லை. இவனுக்கு அதை கண்டதிலிருந்தே ஒரே அறுவெறுப்பு ச்சீ என்ன பசங்கடா நீங்க..என்று எண்ணியவணாய் தூங்கிப்போனான்.
இருவரும் காதலர்கள் என்றே அறையின் மற்ற நண்பர்கள் பேசிக்கொள்வதை பார்த்திருக்கிறான்.
************************
பார்த்தி ஊரில் இல்லை. அதனால் அவனருகில் இவன் படுத்துக் கொண்டான். மற்றவர்கள் உறங்கத்துவங்கினர். ஸ்ஸ்ஸ் எனும் மூச்சுவிடும் சப்தமும் , கிர்ர்ர்ர்ர் என்னும் குறட்டை விடும் சப்தமும் உறுதிப்படுத்தியது.
கிரீச் கிரீச் என மின்விசிறி என்றுமில்லாமல் இன்று அதீத சத்தத்துடன் சுழல்வதைப்போலிருந்தது. அதும் அசாதாரண வேகம் வேறு. கழிப்பறைக்கு சென்று சிறுநீர் கழித்தான். அச்சம்+பீர் சிறுநீராய் வெளியேறியது. வெளியேறிக்கொண்டேயிருந்தது.
இரவு மிக மெதுவாய் நகர்வதாய் உணர்ந்தான். மணி ரெண்டைத் தாண்டியிருந்தது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு குமரா குமரா.. என்று கூப்பிட்டுப் பார்த்தான் அவனோ ம்ம் என்று முனகினான். கொஞ்சம் உணர்வு இருந்தது. இதுதான் சமயமென தனது கைலியையும் தன் உள்ளாடையையும் களைந்தான். மெதுவாக அவன் மேல் காலைத்தூக்கிப்போட்டான். ஒன்றும் மறுப்பில்லை. உதட்டைக் கடித்தான். சட்டென விழித்தான் குமரன். அரைபோதையில் இருந்தான் அல்லது இப்போது ஒரளவு தெளிந்திருக்கவேண்டும்.
ப்பளாரென அவன் கன்னத்தில் இடிபோல ஒரு அறை விழுந்தது.
''ங்கொம்***** ங்கோத்**** தே***ப்பையா பாடு ... ஓசிக்குடி குடிச்சிட்டா உனக்கு தூக்கி காட்டிருவேனு நினைச்சியா.. ங்கொம்**** ஏன்டாங்கோ** என்ன பாத்தா ஐட்டங்காரன் மாதிரிக்கீதா..! ங்கொம்*** டேய் எவன் கூட வேணா போய்ருவேனு நினைச்சியா.. நீயெல்லாம் ஒரு பெரிய மனுசனு ஒன்னான்ட சகவாசம் வச்சிக்கினேன் பார்''
என்று கத்திக் கூச்சலிட அறைநண்பர்கள் விழித்துக்கொண்டு விளக்கைப்போட பக்கத்து அறையினர் எழுந்து ஓடி வந்து கதவைத்தட்ட.. சப் சப்... சொத் சொத் எனும் சப்தம் அடங்க நேரமானது. அவன் வாயிலிருந்து ஒரு முனகல் கூட இல்லை.
ஒரு மூலையில் முகமெல்லாம் சிவந்து போய் மூக்கில் ரத்தம் வர கண்ணெல்லாம் கண்ணீரோடு முழு நிர்வாணமாய் தன் உடலை முழுதாய் மூட முயற்சித்தபடி குறுக்காலிட்டு அமர்ந்திருந்தான்.
அவன் அடுத்த நாள் விடியும் முன்னே அறையை காலி செய்து விட்டு எங்கோ சென்று விட்டான்.
**************
உரையாடல் சிறுகதைப்போட்டிக்கான சிறுகதை.!

49 கருத்துக்கள்:
வாழ்த்துக்கள் அதிஷா.
ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஒரு வித உணர்வுகள் அது நேர்கோட்டில் சேரும் பொழுது ஏற்படும் சந்தோஷ அல்லது கோட்டின் பிரிவில் ஏற்படும் வெறுமை என மிக துல்லியமாய், கொஞ்சம் மசாலாவை அரைத்து கொடுத்து இருக்கிறீர்கள்..
வாழ்த்துக்கள்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
காக்கைன்னு பேரு வச்சி இருந்தா இன்னும் பொருத்தமா இருக்கும்.
கதை மாதிரியே இருக்கு நரசிம் விமர்சனமும். ஒருவேளை தீவிர இலக்கிய வாசகர்கள் மட்டும் படிக்கனுமா ?
oru scene padam paartha effect irukku.. ivvalavu vakkiram kathaikku thaevai illaiye... unarvugalai konjam decent aa veli paduthi irukkalam. romba vakkiramaa irukku
என்னப்பா இது... காமம் அவனை விரட்டுகிறதா இல்லை இவன் காமத்தை துரத்துகிறானா... சரி..சரி... பெரிய தலைங்கல்லாம் சொல்லுவாங்க.... நான் இப்ப ஒரு பிரசன்ட் மட்டும் போட்டுகறேன்.
something different.
சூப்பர் அதிஷா. யதார்த்தம்..
கலக்கல் சகா!
கலக்கல் சகா!
நிறைய பேர் சொல்லத் தயங்கும், தமிழில் இன்னும் அதிகம் பேசப்படாத விடயம். கதை ரொம்ப நல்லா வந்திருக்கு அதிஷா. முதல் முறை படிக்கும் போது கொஞ்சம் கெட்ட வார்த்தைகளைக் குறைக்கலாமோ என்று தோன்றினாலும், அவை வலுவில் திணிக்கப்படவில்லை என்பதால் ஓகே.
எஸ்ராவின் 'உறுபசி' முழுதும் நாயகனின் காமமும், அதனால் வரும் சங்கடங்களும் விவரிக்கப் பட்டிருக்கும். அவர் பாணியில் மெல்ல, அழுத்தமாகச் சொன்னார். உன்னோட பாணியில், முகத்தில் அறைந்து சொல்கிறாய். 'உரையாடல்' துவங்கியவர்கள் எதிர்பார்த்து இருக்கக்கூடிய out of the box கதை இது என்பதில் சந்தேகமில்லை. எனக்குத் தெரிந்து (நான் எல்லா கதைகளும் இன்னும் படிக்கவில்லை) இந்த ஒரு கதைதான் very very radical.
பரிசு வெல்ல வாழ்த்துகளுடன் கூடவே ஒரு சாபமும்: 'உன்னோட girl friends எல்லாரும் உன்னை விட்டு உடனே விலகக் கடவது' :)
அனுஜன்யா
அப்பிடி போடு...!
சரியான நங்கூரம்..!
அதுவும் விவரனைகள் சூப்பர் தல..!
(இன்னா லக்கிண்ணா, தமிழ் நெஞ்சமா....?)
அதிஷா கதைப் படித்தேன்.
ஒரு வீணாப் போன மிடில் கிளாஸ் மேன்சன்வாசியின்(அவனுக்கு SMS வருவது நகைமுரண்.சூப்பர்) வாழ்க்கை?அவன் சோகத்தை ஒரு மாதிரி சொல்லி இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
மான்சன் விவரிப்புகள்,பஸ் விவரிப்புகள் நன்றாக இருக்கின்றன.
மேன்சன் விவரிப்பு கதையின் ஒட்டத்தை குறைப்பதாக என் எண்ணம்.மையத்திலிருந்து விலகுகிறது.சுருக்கி எழுதியிருக்கலாம்.
//அவனது அறை நண்பன் அவன் , குமரன். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருபவன். மென்மையானவன். பெண்மை கலந்து மெல்லியதாய் பேசுபவன். பெண்களுடன் இருப்பவன். அழகன் . அவனுக்கு குமரனை மிகப்பிடித்திருந்தது//
கதைச்சொல்லி இப்படி குமரனை விவரிக்கிறார். ஆனால் குமரன்
பேச்சு:-
//இன்னா பெர்சு திடீர்னு புதுச்சா எங்கூடலாம் சரக்கடிக்கிறேன்ற.. மத்த பசங்களோட அடிச்சாலும் எனக்கு தனிப்பந்திதான வப்ப.. இப்ப இன்னா பாசம் வயிக்குது.//''இன்னாவோ போ.. ஒன்னியும் புரில.. நீயா வாங்கித்தரேன்டற.. பெர்சு ..இன்னா ஆச்சு ஓனக்கு.. ''//.''
அதிஷா பெரிய சறுக்கல்.
வழக்கமாக உங்கள் கதைகளில்
“அதிகப்பிரசங்கிதனம்” மிகையாக இருக்கும்.இதில்?
சிறுகதைக்கான முதிர்ச்சி இந்த கதையின் மூலம் பெற்றுவிட்டீர்கள் வாழ்த்துகள் வெற்றிபெறவும்
SUPER.. UNTOUCHED TOPIC.. GREAT..
CONGRATS.
காதலித்தாலாவது தனது வேட்கை தீருமென காதலிக்க துவங்கினான். மன்னிக்கவும் காதலிகளைத் தேடினான். இவனது சூம்பிப்போன உடலும் அரை வழுக்கைத் தலையையும் பார்த்து யாரும் காதலிப்பதாய் இல்லை. இவனது காமவேட்கையோடான அணுகுமுறையே காதலை எட்டாக்கனியாக்கியது.
காமம்? தீராதே!//
இந்த வர்னிப்போட இருக்ற மொகத்தை எங்கேயோ பார்த்தா போல இருக்கு..
நல்ல முடிவு.. இந்த கதையில் கடைசி வரை காமம் அவனுக்கு கிட்டவில்லை. அதுதான் இந்த கதையின் அற்புதம்...
y should u also attempt a pathos? try a cheerful one..having said that...i should admit the fact that this one is really good
என்னோட கதையை நீங்க இன்னும் படிக்கல அனுஜன்யா. அதுனால தான் இதை radical ன்னு சொல்றீங்க.
வாழ்த்துகள் அதிஷா.. கதை அருமையாக வந்திருக்கிறது. பாராட்டுகள்..
@ மணிகண்டன்
உங்க தளத்திலும் பார்த்தேன். blogkut தளத்திலும் பாத்தேன். உங்க கதை தென்படவில்லை. விளையாடுகிறீர்களா இல்ல பின்நவீன உச்சமாக எழுதாத கதையை நாங்களா உணர்ந்து, விமர்சனம் செய்யணுமா?
அனுஜன்யா
Excellent presentation. Padikkumpothu oru vitha vali manathil thurathikonde irunthathu. Great Job
சரி. டிரீட் எப்போ?
//இவனது சூம்பிப்போன உடலும் அரை வழுக்கைத் தலையையும் பார்த்து யாரும் காதலிப்பதாய் இல்லை./
இப்படியெல்லாம் தன்னை தனே தாழ்த்திக்கக்கூடாது!
இது சிறுகதையல்ல குட்டிநாவல்!
ஒரே ஒரு கேள்வி!
திரும்பவும் எப்போவாவது அந்த ரூம் பக்கம் போனிங்களா?
(சும்மா லுலுலாயிக்கு)
****
பின்நவீன உச்சமாக எழுதாத கதையை நாங்களா உணர்ந்து, விமர்சனம் செய்யணுமா?
****
அனுஜன்யா !!!!!!!!
வாழ்த்துகள் அதிஷா
காமம் அடைக்க முடியாத கதவுகளைக் கொண்டதாகவே இருக்கிறது.
சென்ற மாத தீராநதியில் படித்த ஒரு விடயம் ஞாபகத்துக்கு வருகிறது.
முதலாளிதுவத்தினர் காமத்தை பெருவணிகமாக்கிவிட்டார்கள்.
சமயவாதிகள் காமத்தை மறக்கச் சொல்லி ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சமத்துவம் பேசுவோர் அதை நன்னெறியன்றென நீங்கி வைத்துப் பார்க்கிறார்கள்.
இது யாக்கைக்கு புரியுமா? :)) நாடி நரம்புகளில் காமம் பீறிட்டு தெரிக்கும் யாக்கை உங்கள் கதை.
சக்சஸ் ஆக கக்கிராட்ஸ் மச்சி...
நல்லா இருக்க மாதிரி இருக்கு... ஆனா பொதுவாக நிறைய பதிவர்களின் கதைகளும் வரும் ஒரு இடத்தில் இக்கதையையும் இடைவெளியில் நிரப்ப முடியுமான்னு தெரியல.. :)
///பரிசு வெல்ல வாழ்த்துகளுடன் கூடவே ஒரு சாபமும்: 'உன்னோட girl friends எல்லாரும் உன்னை விட்டு உடனே விலகக் கடவது' :)
அனுஜன்யா///
அதிஷா... ஒரு யூத் கிட்ட ஏன் இப்படி வம்பு வச்சுக்கிறீங்க... பாருங்க சாபம் கொடுத்துட்டாரு...;-))
athisha unplugged, amazing
தல,
எனக்கு உங்க கிட்ட புடிச்ச விஷயமே இதுதான். உங்க மேட்டர் எல்லாத்தையும் இப்படி கதை கதையா எழுதறது.
அய்யம் பேக் (பேக்கு இல்லைங்க, பேக் BACK).
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
இந்தியாவின் மானத்தை புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் எப்படி காப்பாற்றினார்?
கதை வெகுவாக கவர்ந்தது என்பதை விட வெகுவாக பாதித்தது என்பதே உண்மை. நிறைய பெயர் தொடாத ஒரு இடம்.......
நன்றாக கதை சொல்லியிருக்கிறீர்கள்......
(கே.ரவிசங்கர் சொன்னது கதை படிக்கும்போது எனக்கும் தோன்றியது)..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
நல்ல கதை உள்ள கதை
சூப்பர்
நல்ல கதை, மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள், வெற்றி பெற வாழ்த்துகள்.
முதலிடம்னு கொடுக்கவில்லையென்றாலும் கூட, முதலிடம் பெற வாழ்த்துக்கள். :)
ரவிஷங்கர் சொன்ன ஒன்றைத் தவிர வேறெதுவும் குறை தெரியவில்லை.
புதுவித அனுபவம். வேறெதுவும் சொல தோனலை. வாழ்த்துகள் மச்சி
தங்குதடையில்லாத சரளம். அளவான வர்ணனைகள். மேன்ஷனின் அழுக்கும் மங்கலான வெளிச்சமும் வியர்வையும் புழுக்கமும் மனக்கண்ணில் விரிகின்றன. 'எச்சிலும் தொட்டு' போன்ற இடங்கள் அருவருப்பாக இருக்கின்றன. கதை எடுபட்டுவிட்டது. வாழ்த்துகள்.
நல்லாயிருக்கு அதிஷா!
(jackiesekar said (நல்ல முடிவு.. இந்த கதையில் கடைசி வரை காமம் அவனுக்கு கிட்டவில்லை. அதுதான் இந்த கதையின் அற்புதம்...)
Same Blood
James Rajendran / Coimbatore
வித்தியாசமான கதைக்களம் ,
பேசாப்பொருளை பேச துணிந்துள்ளீர்கள்.
அவன் ஏன் விடில் சொல்லி ஒரு கல்யாணம் பண்ண கூடாது வரதட்சனை இல்லாம செய்தால் நல்ல பெண் கிட்டும், எதுவும் மூடி இருக்கும் வரை தான் ஒரு ஏக்கம் காமும் அப்படி தான்..
கதையை நிதானமாக முழுசாய் படித்தேன்
அந்த வயசுல அவர் கலயாணம் பண்ணாம இருக்குறது தப்பு,
நீங்க குடும்ப சூழ்நிலை அதனால கல்யாணம் செய்யவில்லை அப்படினு சொன்னா அந்த கதா பாத்திரம் ஏன் இப்படி இலக்கு இல்லாம வறுமையில் இருக்குனு தெரியவில்லை
இந்த மாதிரி வயசுல இப்படி அவர் தோன்றியது என்பது கொஞ்சம் லேட் பிக்பப் அவர்.
டீன் ஏஜில் இந்த காமம் இருக்கும்.. ( ஹோமோ காமம் பற்றி சொல்லவில்லை )
நாங்க நண்பர்கள் பேருந்தில் இரவு பயணம் செய்யும் போது ஒருத்தன் பக்கத்தில் உட்காந்து தொல்லை தந்தான் சரி கும்பல் என்று நினத்தால் இண்டரஸ்ட் இல்லையா என்று பாத்து கேட்டான் பாரு.
நல்லா ரத்தம் வர மாதிரி அடிச்சோம்
ஏண்டா பொண்ணுகள தான் பஸில் இப்படி செய்வாங்க கேள்வி பட்டு இருக்கோம் பாத்து இருக்கோம் ஆம்பளையை கூட வா என்று வாங்கினான் அடி ..
அப்புறம் சரி இனி இப்படி செய்யாதே என்று சொல்லி விட்டோம்
இது தான் நான் கண்ட அனுபவம், ஹாஸ்டலில் இருக்கும் என கேள்வி பட்டேன்..
வேற வழி இல்லைனா இப்படியா ;) காகித்த திங்குறது ( டீஸேண்டா இருக்கனும் என்று காகிதம் என்று சொன்னேன்) அதுக்கு பேசாமா தூக்கு மாட்டி சாகலாம்
இவனை எல்லாம் சூலுக்கு எடுக்கனும்
ஆனா யாரும் தொடாத சப்ஜெக்ட் அதற்க்கு வாழ்த்துகள் :-)
Fantastic Theme...
நல்லா எழுதியிருக்கீங்க அதிஷா.. வாழ்த்துக்கள்.
ரொம்ப பயங்கரம் சார்...
நல்லாருக்கு.
கதை ரொம்ப நல்லா வந்திருக்கு அதிஷா
ரொம்ப யதார்த்தமான நடையும் ஒரு சாதாரண ‘சேவல் பண்னை’வாசியின் அவஸ்தையும் சொலல் முற்படாத மொழியில்.. வாழ்த்துகள்!!
யெப்பா கொலகாரப்பாவி...
நீயி நல்லாருப்பியா.....
உன்னிய கொன்னாத்தான் அடங்கும் போலிருக்குதே....
இதயே இன்னும் கொஞ்சம் ஆழமா விரிவா போயிருந்தா ஒரு அற்புதமான நாவல் கிடைச்சிருக்குமேய்யா....
உன்மையா இதுக்கு ஒரு பின்னூட்டம் போட்டா ஒரு பதிவு அளவு வருமே...பரவால்லையா சாமீ?
nice narration... shocking and pretty sick theme.... anyways i liked it!!!!!!! best wishes!!!!!!
அதிஷா,
உரையாடல் போட்டிக்கு வந்த சிறுகதைகளில் இதை மிக சிறந்த ஒன்றாக கருதுகிறேன். என் கதை அம்மாவுக்கு புரியாது பரிசு பெற்றது. ஆனால் அதை விட இந்த சிறுகதை சிறந்த ஒன்று என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பரிசு பெற்ற பல கதைகளை விட இது அருமையான ஒன்று.
நிறைய எழுதுங்கள்!
ஆர்வி
Post a Comment