
செல்போனில் பேசுவது சிலபேருக்கு எப்போதுமே எரிச்சலூட்டும் பிரச்சனைதான். காதலியோடு பேசுறதுன்னா ஓகே! . பிரச்சனைனாலும் சுகம்னாலும் அதில் முதல் பிரைஸ் எனக்கே எனக்குதான். ஏனோ அந்த கருமத்தை வாங்கின காலத்திலிருந்தே பல சிக்கல்கள். இருந்தாலும் அதை விட்டொழிக்கவும் முடியலை.
செல்போனில் நான் பேசுவது எனக்கு எப்போதும் உபத்திரவமாய் இருந்ததில்லை. அனைவருக்கும் அப்படித்தான். மற்றவர்கள் செல்போனில் பேசுவதுதான் பிரச்சனை, சிக்கல், மண்டை குடைச்சல் மண்ணாங்கட்டி எல்லாமே!.
அலுவலகத்தில் பக்கத்துச்சீட்டு சக ஊழியர். போனை காதில் வைத்தால் இவர் பேசுவது ஊருக்கே கேட்கும். பக்கத்தில் இருப்பவர்களைப் பற்றி கொஞ்சமும் பிரக்ஞை இன்றி காது கிழிய பேசிக்கொண்டே இருப்பது. இடையில் நமக்கு ஏதாவது கால் வந்துவிட்டால் போச்சு! நமக்கு போன் பண்ணியவருக்கு நாம் பேசுவது கேட்கிறதோ இல்லையோ பக்கத்து சீட்டுக்காரர் குரல் மட்டும் நன்றாக கேட்டுக்கொண்டே இருக்கும். சமயத்தில் அதற்கு அவர் பதில் சொல்லும் கொடுமையும் நடப்பதுண்டு!
நெருக்கமான நண்பர் அவர் உலக விசயங்களையும் உள்ளூர் மேட்டர்களையும் அலச ஆரம்பித்தால் ஒன்றைரை ஆண்டுக்கு ரூம்போட்டு பேசும் சகல வல்லமை படைத்தவர். அவரோடு கழிக்கும் நேரமெல்லாம் பொன் போன்றதாய் கருதுவேன். அவரிடம் ஒரே பிரச்சனை. நம்மோடு பேசிக்கொண்டிருக்கும் போது நடுவில் ஒரு போன் வரும் ( செல்போன்!) அவ்வளவுதான் , பக்கத்தில் ஒரு பரதேசி நிற்கிறானே என்கிற எந்த பிரக்ஞையும் இன்றி செல்போனில் மூழ்கிவிடுவார். நாம் தேமே என அவர் வாயையும் மூஞ்சையும் குகுகுகு குட்டி செல்போனையும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். எரிச்சலாக இருக்கும்.
இன்னொருவர் மிக நல்ல அறிவாளி. நிறைய படித்தவர். பண்புள்ளவர். பெரிய பதவியில் இருப்பவர். போனில் அழைத்தால் அமைதியாய் பேசுவார். அவரோடு உரையாடுவது எனக்கு எப்போதுமே சக்கரைக்கட்டிதான். நேரில் அதிகம் சந்திக்க வாய்ப்பில்லாததால் போனில் அழைத்து நிறைய விசயங்கள் குறித்து கதைப்போம். மிக ஆர்வமாய் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென அதி இன்னொரு கால் வருது கட் பண்ணிட்டு கூப்பிடறேன் என டொக் என போனை வைத்து விடுவார். நமக்குதான் ஆர்வம் அதிகமாச்சே கால் வரும் கால் வரும் என அந்த நபர் போன் பண்ணுவாரா மாட்டாரா என்ன ஆச்சோ ஏதாச்சோ என நினைத்துக்கொண்டு காத்திருப்போம். ஒரு முறை இரு முறை என்றால் பரவாயில்லை நான் எப்போது பேசினாலும் நடுவில் யாராவது போன் பண்ணித் தொலைத்து விடுகிறார்கள் போல!
மற்றொருவர் அவரும் நண்பர்தான். வெளியூரில் வசிப்பவர். இவருக்கு வாய் காது வரை. பேச ஆரம்பித்தால் சாமான்யமாக போனை வைக்க மாட்டார். ஒரு கன்டிசன் அது பெண்களோடு மட்டும். ஆண்கள் என்றால் ம்ம் அப்புறம், ஓகோ , ஓகே, சரிப்பா தேங்க்ஸ் பை இதுதான் அவரது உரையாடலாக இருக்கும். அவரையும் ஒரு மனிதராக மதித்து ஒரு டோமரு போன் பண்றானே என்கிற _______ கொஞ்சம் கூட இருக்காத என்ன!
இன்னொருவர், இவரும் வெளியூர் ஆள்தான். இவரிடம் யார் வேண்டுமானாலும் மணிக்கணக்கில் பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால் அவர் தன் வேலையில் மட்டுமே கண்ணாக இருப்பார். நடுநடுவே ம்ம் ஆமாஆமா என்று நமது உரையாடலை கவனிப்பது போன்றதொரு பாசாங்கு வேறு. காதில் போனை வைத்துக்கொண்டு கவனத்தை பக்கத்து சீட்டு பருவமங்கையிடம் வைத்திருந்தால்! ம்ம் லூசு போல நாம் எதையாவது பேசிக்கொண்டிருப்போம் , நடுவில் ஏதாவது கேட்டால் , என்ன என்ன என்று பதறுவது , பின் மீண்டும் ஒரு முறை முதலில் இருந்து துவங்க வேண்டும். வேலையில் மும்முரமாய் இருக்கிறேன் அப்புறம் பேசுகிறேன் என்று சொல்ல ஏன் தயக்கம். அதை சொல்லிவிட்டால் நாம் ஏன் அந்த நபரை தொந்தரவு செய்யப்போகிறோம். பேசறவன் கேனப்பையனா இவிங்க இருந்தா ஏரோபிளேன் ஓட்டிகிட்டே போன் பேசுவாங்களாம்!
மிகமுக்கியமான ஆட்கள் சிலர் இருக்கிறார்கள். சரக்கடித்துவிட்டு போதை ஏறவில்லையென்றால் செல்போன்தான் ஊறுகாய் இவர்களுக்கு. எவனுக்காவது போன் போட்டு யாரிடம் பேசுகிறோம் என்பது கூட தெரியாமல் மானவாரியாக அளந்து கொட்டுவது. அரசியல் முதல் ஆபாசம் வரை பேசுவார்கள். அதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா? பிரச்சனை ரொம்ப சிம்பிள் இப்படி பேசும் நேரம் இரவு 1 மணிக்கு மேல்! சாமானியத்தில் போனை வைத்தாலாவது பரவாயில்லை. சமயத்தில் விடியும் வரைகூட பேசிக்கொண்டே இருப்பார்கள். நட்பு காரணமாக நாமும் வேறு வழியின்றி.. என்னத்தை சொல்ல!
இந்த கான்பரன்ஸ் கால் ஆசாமிகள் அலும்பு அதற்கும் மேல் , யாரையாவது கான்பரன்ஸ்காலில் வைத்துக்கொண்டு நம்மை அந்த மூன்றாம் ஆளிடம் மாட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது. இப்படி கோர்த்து விட்டு ரத்தகளறி ஆக்குவதில் அலாதி பிரியம் இவர்களுக்கு.
இப்படி ஆளாளுக்கு போட்டு வதைச்சா எப்படித்தான் ம்ம் என்னத்த சொல்ல! இதுக்கு நடுவில் இந்த மிஸ்டு கால் பேர்வழிகள் , மொக்கை எஸ்எம்எஸ் கயவர்கள் , கிரெடிட்கார்ட் , பர்சனல் லோன் , ரிங்டோன் , கால்ர் டோன் , அந்த ஆபர் இந்த ஆபர் , ஆயாவுக்கு டிக்கட்டு , கக்கூஸ் போக பக்கட்டு அது இது இப்படி அப்படி...... முடியல..
20 comments:
நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?
அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.
கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.
இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.
இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.
முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.
உங்க குரல் அநியாயத்துக்கு இருக்கு அதிஷா. நாலு நாளைக்கு ஒரு தாட்டி போனை மாத்துவீங்களோ ஆனா?
மச்சி செம கலக்கல்....
ரைட்டு..ரிவிட்டு.ஹலோ..இருங்க ஒரு கால் வருது..அப்புறம் வர்ரேன்
தோழர்!
நலமாக இருக்கிறீர்களா? பார்த்து பலநாட்கள் ஆகிறதே? இன்னமும் பன்றிக்காய்ச்சலில் அவதிப்படுகிறீர்களா?
அவ்வப்போதாவது கடுதாசி எழுதவும்.
//மூஞ்சையும் குகுகுகு குட்டி செல்போனையும் //
I like that...
// மிக ஆர்வமாய் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென அதி இன்னொரு கால் வருது கட் பண்ணிட்டு கூப்பிடறேன் என டொக் என போனை வைத்து விடுவார். //
Don't you realize you are mokkafying him?
****
ஒரே பிரச்சனை. நம்மோடு பேசிக்கொண்டிருக்கும் போது நடுவில் ஒரு போன் வரும் ( செல்போன்!) அவ்வளவுதான் , பக்கத்தில் ஒரு பரதேசி நிற்கிறானே என்கிற எந்த பிரக்ஞையும் இன்றி செல்போனில் மூழ்கிவிடுவார்
****
இதில் நான் ரொம்பவே அனுபவப்பட்டு நொந்து போய் இருக்கேன். :)-
உங்கள் அனுபவங்களை அழகாக எழுதியுள்ளீர்கள்.
ரொம்ப அடிபட்டிருக்கிங்க.
காதுல ரத்தம் வருது துடைச்சிக்கோங்க.
எஸ்எம்எஸ் கயவர்கள் என்ற வார்த்தை என்னை பாதித்துவிட்டது.
முடிந்தால் Empty மெசேஜ் அனுப்பும் கயவர்கள் என மாற்றிக்கொள்ளுங்கள்..
இதில் நான் ரொம்பவே அனுபவப்பட்டு நொந்து போய் இருக்கேன்
ஆஷா...
கூட இருந்து பார்த்த மாதிரியே பதிவு போடறிங்களே.......இதெல்லாம் நல்லால்ல.
hai enakku iffdi pirachanai vanthathu illai. nan romba avasiayamna cell use pannuvan. illaina table pottutu thodak kuda matten.
//போனை காதில் வைத்தால் இவர் பேசுவது ஊருக்கே கேட்கும். பக்கத்தில் இருப்பவர்களைப் பற்றி கொஞ்சமும் பிரக்ஞை இன்றி காது கிழிய பேசிக்கொண்டே இருப்பது///
இந்த மாதிரி ஆளுங்க ரொம்ப பேர் இருக்காங்க
///நாம் தேமே என அவர் வாயையும் மூஞ்சையும் குகுகுகு குட்டி செல்போனையும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். எரிச்சலாக இருக்கும்.///
எப்படி ஆன்னு பாப்பிங்களா
ஆக மொத்தம் ரொம்ப நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கிங்க, இத எல்லாம் பாத்தா முடியுமா சொல்லுங்க
நல்லா எழுதி இருக்கீங்க :)
போன் போட்டா எடுக்குறதே இல்ல.. இந்த லட்சனத்துல அடுத்தவங்கள கொற சொல்லிகினு திரியுறயா? சரிதான்..
அருமை..
:-)
எனக்கும் இது போல நிறைய அனுபவம் உண்டு..
:-(
ங்கொக்க மக்கா.. உங்கள எல்லாம் மதிச்சி போன் பண்றாங்களே.. அவங்கள சொல்லனும்..
நல்ல வேளை.. நாம அதிக பட்சம் 3 வாட்டி தான் பேசி இருக்கோம். லிஸ்ட்ல நான் இல்லை.. ;))
வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!
// ஏனோ அந்த கருமத்தை வாங்கின காலத்திலிருந்தே பல சிக்கல்கள். இருந்தாலும் அதை விட்டொழிக்கவும் முடியலை.
//
ஆ ஆங்க!
appatiye ennnaku nadanthu mathiri
irrruku nabare
appatiye ennnaku nadanthu mathiri
irrruku nabare
Post a Comment