Pages

12 September 2009

மதுரைசம்பவத்தில் ஜி.ஐ.ஜோ!





கடைசியாக பார்த்த மதுரை சம்பவம் என் வாழ்க்கையில் மிக மோசமான சம்பவமாய் ஆகிப்போனது. அதுவும் முதல் சீனில் தொடங்கி கடைசிவரைக்கும் விடாம அடிக்கிறாய்ங்க. மதுரைக்காரய்ங்கன்னா யார் தெரியும்ல என்று பஞ்ச் டயலாக் வேறு. ஹீரோ ஹரிக்குமாருக்கு மதுரை ஸ்லாங்கு சுத்தமாய் வரல . அடித்தொண்டைல ஒரு மாதிரி திருநெல்வேலிக்கும் மதுரைக்கும் கிராஸ் கனெக்சன் போல பேசுகிறார். பரவால்ல விட்டுருவோம். ஆனா இடைவேளையோடு முடிஞ்சு போன படத்தை அதுக்கப்புறம் ஒரு மணிநேரம் ஒட்டும் கொடும வேற. இயல்பா படம் எடுக்கறேனு எத்தனை பேர்தான் இன்னும் கிளம்ப போறாங்களோ! அதுவும் மதுரை பேக்ரவுண்ட்ல..

படம் பார்த்ததுக்கு ஒரே பிரயோசனம் ராதாரவி நடிப்பு , அப்புறம் அனுயா இடுப்பு. அனுயா போலீஸாம் ! நாலரை அடிதான் இருக்காங்க!. எவ்ளோ டெரரா பாத்தாலும் குழந்தை மாதிரி உரக்கு முகம். போலீஸ நடுரோட்டில வச்சு ஹீரோ கிஸ்ஸடிப்பாராம். அவங்களும் மயங்கிருவாங்களாம். அனுயாவ கிளைமாக்ஸ்ல சீன்பட நாயகி ரேஞ்சுக்கு காட்டிருக்காங்க! . அதுக்காக ஒருவாட்டி பாக்கலாம்!.

காட்பாதர் படத்த மதுரை பேக்ரவுண்ட்ல இயல்பா எடுக்கறோம்னு NDTV கம்பெனிக்கிட்ட சொல்லி படம் எடுத்துருப்பாங்க போல.. ரொம்ப நாளைக்கப்பறம் ஆனந்த் பாபு . ஆர்வமா ஏதோ பண்ணப்போறாருனு பாத்தா சப்பையா ஒரு கேரக்டர் குடுத்து அசிங்கபடுத்திருக்காங்க.. எவ்ளோ நல்ல டான்சர் அவரு. இசை சுத்தம்.

இந்த படம் பார்த்துட்டு வெளியே வந்து தம்மடிக்கும் போது இரண்டு தீர்மானங்கள் எங்கள் சங்கத்தில் போட்டோம். ஒன்று இனிமேல் மதுரை ஸ்லாங் பேசும் எந்த பிசனாரி படத்தையும் பார்ப்பதில்லை . இன்னொன்று கூட்டணியாக கூட்டாளியோடு இனிமேல் கொஞ்ச நாளைக்கு தமிழ்ப்படங்களுக்கு தடா போட்டிருந்தோம்.

அதையும் மீறி நேற்று வெளியான ஈரம் திரைப்படம் பார்க்கும் ஆவல் கொஞ்சூண்டு துளிர்விட அதை முளையிலேயே கிள்ளி போட்டுவிட்டு, ஆங்கில படமான ஜி.ஐ.ஜோ – தி கோப்ரா கமாண்டர்னு ஆங்கிலப்படத்தின் தமிழ் டப்பிங் பார்க்க முடிவானது.படத்தோடு இயக்குனர் மம்மி புகழ் சோமர்ஸ். ஜி.ஐ ஜோ பொம்மைகள் 90கள்ல ரொம்ப பேமஸ். காமிக்ஸ் கார்ட்டூன் படங்களும் ரொம்ப ரொம்ப பேமஸ். பல நாடுகள்ல அந்த பொம்மைகளுக்கு தடை கூட இருந்தது. குழந்தைகள் மனசில வன்முறைய வளர்க்குதுனு ஒரு குற்றச்சாட்டு இருந்துச்சு.



உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் ஆரம்பக்காட்சி. புரட்சித்தலைவர் கையில் ஒரு பெட்டியோடு சில பாரினர்களை மலைப்பாங்கான இடத்திற்கு அழைத்து செல்வார். ஒரு சிகப்பு பெட்டியை எடுத்து அதற்குள் இருந்து இன்னொரு சின்ன பச்சை பெட்டி. அதற்குள் இன்னொரு மஞ்சள் பெட்டி. அதற்கு ஒரு புளு பெட்டி. கடைசியாய் அதற்கு ஒரு குட்டியூண்டு பெட்டி இருக்கும். அதை திறந்தால் பச்சை கலர் மாத்திரை. அதை ஒரு துப்பாக்கியில் போட்டு மலையை பார்த்து சுடுவார். அப்படியே மலையே உதிர்ந்திடும். தட் இஸ் த வெரி டேஞ்சரஸ் வெப்பன் அதாவது அந்த மாத்திரைதான் உலகை அழிக்கும் பயங்கர ஆயுதம். அதை பறிக்க ஒரு வில்லன் கும்பல். அய்யோ அய்யோ!
இந்த கண்றாவி கதை பார்மூலாவ ஏனோ ஹாலிவுட் காரங்க விடவே மாட்டங்க போல! பல வருஷமா நம்ம ஊர்ல ராபின்ஹீட் கதை நான் சிகப்பு மனிதன்லருந்து ஜென்டில்மேன் ரமணா கந்தசாமிவரைக்கும் விடாம புடிச்சிட்டு தொங்கற மாதரி.

அவங்களும் உலகத்த அழிக்கற ஆயுதத்த விட்டொழிக்க மாட்டேன்றாங்க. எப்பவும் போல உலகத்த அழிக்கற சக்தி வாய்ந்த ஆயுதம் அதை கடத்தற சூப்பர் வில்லன் கும்பல் அதை எதிர்க்கற சூப்பர் ஹீரோக்கள். அவ்ளோதான் கதை. அப்புறம் கிராபிக்ஸ், அது நிறைய இருக்கு. விரட்டி விரட்டி விரட்டற சீன்லாம் கிராபிக்ஸ் கலக்கல்தான். ம்ம்மி ஹீரோ ஒரு சீன்ல வராரு.. வில்லன் இரண்டு சீன்ல வராரு அவ்ளோதான். படத்தோட தமிழ் டப்பிங் செம..! நிறைய காட்சிகள் ரசிக்கற மாதிரி வசனம் எழுதிருக்காங்க.. தமிழ்படங்கள்ல கூட இப்பலாம் இப்படி வசனங்கள் பாக்கறது அபூர்வமாகிருச்சு.

மம்மி புகழ் சோமர்ஸ் இந்த படத்தின் இயக்குனர். அவரோட டிரேட்மார்க் அதிரடி சேஸிங் காட்சிகள் சூப்பராக வந்திருக்கு. அதிலயும் பாரிஸ்ல ஈபிள் டவர் சரிஞ்சு விழற காட்சி பிரமாண்டத்தின் உச்சக்கட்டம். வில்லனா கிரிஸ்டோபர்னு ஒருத்தர் வராரு நல்ல அபாரமான நடிப்பு. அப்புறம் ஹீரோயின் செம சூப்பர் அழகோ அழகு. பாதி படம் பூரா வில்லியா வரும்போதே தெரிஞ்சுருது இன்டர்வெல்லுக்கு அப்புறம் திருந்திருவாங்கனு.
மத்தகபடி சின்ன வயசில பார்த்த ஜி.ஐ.ஜோ கார்ட்டூன்,காமிக்ஸ் மாதிரி விருவிருப்பு ஒரளவு நல்லா வந்திருக்கு. வேறென்ன நிறைய செலவு பண்ணி மொக்கையான ஒரு கதையோட விருவிருப்பா கதை சொல்லிருக்காங்க. டைம் போறதே தெரியல. பஸ்ட்லருந்து கடைசிவரைக்கும் படம் மின்னல் வேகத்தில போய்கிட்டே இருக்கு. கிளைமாக்ஸ் கொஞ்சம் சொதப்பல.

மத்தபடி மொக்கையான தமிழ்படங்கள் பார்த்து காஞ்சு போயிருந்த மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா செம மசாலாவா ஒரு ஹாலிவுட் படம் . திருப்தி! . அதும் வெறும் 40 ரூவாயில. ( பல நூறு கோடி செலவு பண்ணி எடுக்கற படம் அதுவம் தமிழ்ல டப்பிங்லாம் பண்ணி அதுக்கு பால்கனிக்கே 40 ரூவாதான். கந்தசாமிக்குலாம் 100 200னு தண்டம் அழ வேண்டியிருக்கு.. தமிழ்சினிமா பாவம் ஏழைங்க இன்டஸ்ட்ரி)

ஜி.ஐ.ஜோ – இலுப்பைப்பூ சக்கரை!