அட்டைக்காப்பிக்கு ஆஸ்கார்!
>> 04 October 2009

பாட்டிகள் சில சமயம் மிகப்பெரிய விசயத்தைக்கூட அசால்ட்டாகபோகிற போக்கில் பொக்கை வாயில் சொல்லிவிட்டு போய்விடுவார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னும் அப்படித்தான். இசை குறித்த ஒரு உரையாடலில் உலகத்தையே புரட்டிப்போட்ட ஒரு இசையை அல்லது பாடலைப்பற்றி வெத்தலை எச்சிலில் காரி உமிழ்ந்து விட்டு போய் விட்டார். பாட்டிமேல் கடுங்கோபம் என்றாலும்.. அவர் சொல்வதில் கொஞ்சூண்டு நியாயம் இருப்பது போல் இருந்தது.
அப்படி என்ன இசை அது!
அந்த ஒரிஜினல் பாடலை கேட்கும் வரை நானும் உங்களைப்போலத்தான் பிரமித்துப்போய் இருந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அந்த பாடலை கேட்கும் போதும் ரத்தம் அப்படியே சுண்டி இழுக்கும். மயிர் கூச்செறியும். வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறக்கும். ச்சே இப்படி ஒரு பாட்டுக்கு ஆஸ்கார் என்ன ஆஸ்பிளேன் ஆஸ் ராக்கெட்டாலம் கூட கொடுத்திருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தேன். இந்தியாவின் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்த பாடல் அது.. பலரையும் கிறுக்கு பிடித்து அலைய விட்ட பாடல் அது! தேர்தலில் கூட ஓட்டுப்பிச்சைக்கு கட்சிகள் பயன்படுத்திய பாடல் அது! பாட்டி சொன்னபின்தான் அந்த மேட்டர் லைட்டாக நமது டியூப்லைட்டிற்குள் தீப்பிடித்தது. கொஞ்சம் இறங்கி பாடல்களை டவுண்லோட் பண்ணிக்கேட்டால்..
ச்சேச்சே ரகுமானா இப்படி! என ஒரு கணம் மிரண்டுதான் போனேன்..!
இப்படிப்பட்ட ஒரு பாடலுக்கா ஆஸ்கார் கொடுத்தார்கள் என்று மிரட்சியாய் இருந்தது. அதிர்ச்சி ஒரு பக்கம்.. இன்றைக்கு இளையாராஜா என்றொரு மேதையை குப்பையில் போட்டு கொழுத்தும் ரஹ்மான் ரசிகர்களுக்கு இது நிச்சயம் அதிர்ச்சியாகத்தானே இருக்கும். நானும் அப்படித்தான் இருந்திருக்கிறேன்!
எம்.எஸ்.வீயின் இசையில் ஸ்ரீதர் அவர்களின் இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வருகிற பாடல் அது. அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை! என துவங்கும் பாடலை பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடி இருப்பார். பலரையும் கவர்ந்த அதே பாடலின் மெட்டில் ரஹ்மானின் இசையில் ஜெய் ஹோ!
என்ன கொடுமை சார் இது! தமிழனுக்குத்தான் மூளை இல்லை! இந்தியனுக்கு தமிழ்பாட்டு தெரியாது! இசை ஆர்வலர்கள் கூட ஏமாந்து போனதுதான் ஆச்சர்யம்!
ஜெய் ஹோ பாடலில் அந்த ஜெய் ஹோவை மட்டும் தூக்கிவிட்டு மீதிப்பாடலை கேட்டால்.. அப்படியே எம்.எஸ்.வீயின் அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை!
ஏ.ஆர்.ரஹ்மான் இனிமேலாவது தமிழ்ப்பாடல்களில் இருந்து மெட்டுக்களை சுடாமல் ஃபாரின் பாடல்களில் இருந்து சுடலாம்..( எஸ்.எஸ்.மியூசிக்கில் அதுக்கும் ஆப்படிக்கிறார்களாம் ஜாக்கிரதை!). அல்லது சுட்டாலும் அந்த பாடல் எங்கிருந்து சுடப்பட்டதோ அவருக்கு ஒரு நன்றி சொல்லிவிடலாம்! பாவமில்லையா எம்.எஸ்.வீ!
சிலர் இதற்கான ராகங்களின் அடிப்படைகளை சொல்லலாம்.. சத்தியமாக எனக்கு ராகங்கள் பற்றி தெரியாது.. ஆனால் ஒரே மாதிரி பாடல் மெட்டு போட்டால் அதன் பெயர் அட்டை காப்பி என்பது மட்டும் நிச்சயம் தெரியும்!
இனி பாடல்கள்!
ரஹ்மான் ஆட்டைப்போட்ட ஒரிஜினல் சாங்! அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை!
|
அடுத்து ரஹ்மான் ஆட்டை போட்டது!
இப்படி அட்டைக்காப்பி ஆஸ்கார் கொடுப்பார்கள் என்றால் தேவா கூட எலிஜிபிள்தானுங்க!

60 கருத்துக்கள்:
இந்த ஆஸ்கர் பாடல் சற்றேறக்குறைய அழகிய தமிழ் மகனில் வரும் எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே பாடலை ஒத்திருக்கும்.நீங்கள் சொல்வது போல் நெஞ்சம் மறப்பதில்லை பாடலுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாகத்தான் படுகிறது.என்ன சொல்கிறீர்கள் அதீஷா?
அதிஷா,
கேட்டும் பார்த்தும் ஒற்றுமையை கண்டு வியந்து விட்டேன். உண்மையில் நிறைய ஒத்துப்போகிறது...
ம்.... என்ன சொல்ல?
பிரபாகர்.
உண்மைதான்!
'புதிய தலைமுறை'க்காக வாழ்த்துக்கள்!
புதிய தலைமுறையின் மெயில் ஐடி
தாருங்களேன்.
Wall-E படத்தில் உள்ள பாட்டு மொக்கையாக இருந்ததால் இதற்குக் கொடுத்திருப்பார்களோ?!!
அட ஆமாம் !! ஒரே மாதிரி தான் இருக்கு..
"எம்.எஸ்.விக்கும், இளைய ராஜாவுக்கும் எப்பவோ கிடைக்க வேண்டியது. ஆனா அவங்க அதுக்கு முயற்சி எடுக்கல. அவங்களோட சார்பாத்தான் நான் இந்த பரிசை வாங்கிக் கொண்டு வந்தேன்" என்று A.R ரகுமானே அவரோட மேடைப் பேச்சுல சொல்லிட்டாரு. பிறகு என்ன ஆதிஷா...
எனக்கு ராகங்களைப் பற்றி தெரியாது. ஆகவே இசை தெரிந்த நண்பர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
ஒரேயடியா தலையில் தூக்கி வச்சிக்க வேண்டியது, பிறகு தொப்புன்னு கீழ போட்டுட வேண்டியது... :-)
அழகுக்கும் மலருக்கும் பாடலில் இருந்து எடுத்தாண்ட ஒரிஜினல் காப்பி ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் வருகிற ஒரு பாடல். ஜெய் ஹோ, அழகிய தமிழ் மகனிலிருந்து எடுத்டாண்டது என்பதறிக! ;-)
டியர் அதிஷா,
உங்களுக்கு ஏ.ஆர்.இரகுமான் மேல் ஏதோ கோபம் போலிருக்கிறது. இஷ்டத்துக்கு எழுதியிருக்கின்றீர்கள். நீங்கள் எழுதியுள்ளது முற்றிலும் தவறு. என்னுடைய பிளாகை படித்துப் பாருங்கள். உங்கள் தவறு புரியும்.
http://musicvivek.blogspot.com/2009/10/blog-post.html
இந்த நூற்றாண்டின் most original கண்டுபிடிப்பு! ஆனால் பாருங்க, இதுக்கெல்லாம் Nobel கொடுக்கிறதில்லை.
Post பண்ணுறதுக்கு முன்னால கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களா?
தலையெழுத்து, இந்த மொக்கைய எல்லாம் படிச்சு எரிச்சலாகணும்னு!
அ(ஆ)ரிய கண்டிபிடிப்பு வாழ்த்துக்கள் :)
முதல் டியூன் நீங்கள் சொல்வது போல் ஒத்து வருகிறது.ஆனால் பாடல் முழுக்க வர மாதிரி தெரியவில்லை சார்.
Neither the Music nor the film deserve an oscar. It is most likely that the awards were given to this film to garner Indian audience, that is to say, a simple business tactic. Even Rahman would agree that his music didn't deserve the award. It is a worthless song, stupid movie.
அதாவது கழுத மேய்கிற பையனுக்கு இவ்வளவு
அறிவான்னு எல்லாருக்கும் பொறாம...
நி சொன்ன இந்த வாக்கியத்த தஞ்சாவூர் கல்வெட்டுல
எழுதி பக்கத்துலேயே உக்காந்துக்க...
உனக்கு பின்னால வர்ற சந்ததிகள்
அத பாத்து படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க....
அட ஆமாம் !! ஒரே மாதிரி தான் இருக்கு..
//இப்படி அட்டைக்காப்பி ஆஸ்கார் கொடுப்பார்கள் என்றால் தேவா கூட எலிஜிபிள்தானுங்க! //
super appu
intha song அட ஆமாம் !! ஒரே மாதிரி தான் இருக்கு..
புகழ் சொன்ன வார்த்தைகளை அப்படியே ரிப்பீட் போட்டுக் கொண்டு அடுத்த வரியை படியுங்கள்.
பிறகு இசையமைப்பாளர் விவேக்நாராயண் எழுதியுள்ள பதிவை படியுங்கள்.
நீங்கள் சொல்வது தவறு என்று புரியும்
அடி தூள் அதிஷா :)
2010 ம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு அதிஷா எனும் இசைமேதையை பரிந்துரைக்களாம்....
யேவ் அதிஷா உனக்கு எழுத்து ஞானம் தன் இல்ல சாதாராண இசை அறிவு கூடவா இல்ல ?? இப்படி பிரபலமானவர்களை பற்றி பதிவு போட்டு வாசகர் வருகையை அதிகரிப்பது ஒரு வித யுக்தி ...
2010 ம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு அதிஷா எனும் இசைமேதையை பரிந்துரைக்களாம்....
யேவ் அதிஷா உனக்கு எழுத்து ஞானம் தன் இல்ல சாதாராண இசை அறிவு கூடவா இல்ல ?? இப்படி பிரபலமானவர்களை பற்றி பதிவு போட்டு வாசகர் வருகையை அதிகரிப்பது ஒரு வித யுக்தி ...
// தமிழனுக்குத்தான் மூளை இல்லை! இந்தியனுக்கு தமிழ்பாட்டு தெரியாது//
யாரும் வந்து தமிழன் தலையில மன்ன போட வேன்டாம்... நம்ம யானை மாதிரி நாமே போட்டுக்குவோம்...
நேற்று நீங்கள் சொல்லிய போது சில பாடல்களின் தாளத்தை சொல்லி அது வேறு வேறு பாடல்களாய் எப்படி உருவெடுத்தது என்று சொன்னேன்..
அது உங்களுக்கு புரிந்திருந்தால் நிச்சயம் நீங்கள் மீண்டும் ஒரு முறை கேளுங்கள்.. நீங்கள் சொல்லியிருக்கும் குற்றசாட்டு கொஞ்சமும் சரியில்லை என்று புரியும்..
ஏனுங்க அதிஷா வினோத், ராகத்தை தானே திரும்பவும் யூஸ் பண்ணியிருக்கார்! அப்போ ராகத்துக்கு தான் ஆஸ்கரா? பாடகர்களுக்கு, வார்த்தைகளுக்கு, இசைக்கருவிகளை உபயோகித்ததற்கு இல்லையா?
:-)
பெங்களூர் பக்கம் புதிய தலைமுறை கிடைப்பதில்லை.
நல்ல நகைச்சுவை...
பிரபாகர் அண்ணே,
ரொம்ப ஆச்சரியப்படாதீங்க. பாட்டோட முதல் வரியை தவிர வேற எதுவும் ஒரே மாதிரி இல்ல.
உங்களுக்கும் ரகுமானை பிடிக்காதா?
என்ன ஒரு கண்டுபிடிப்பு.
ம்ம்ம். சான்ஸ்சேயில்ல.
இது ரொம்ப அநியாயப் பழி.
எம்.எஸ்.விக்கே தெரியாத கண்டுபிடிப்பா இருக்கே :)
கழுதை மேய்கிரத்தை மட்டும் பாரு குரங்கு.
உனக்கு ஓட்டும் கருதும் வரலைன்னா யாரை வேணும்னா
வச்சி பிஸ்நெஸ் பண்ணுவியா?
ஹோமோ பயலே.
உனக்கு ராஜா ரசிகருக்கும் ரஹ்மான் ரசிகருக்கும் சண்டை மூட்டி விடனும் அதுதானே?நீ மண்ணாப் போயிடுவ.
ப்ருனோ, எங்கிருந்தாலும் வருக.
தமிழ்ப் படங்களில் இருந்து காப்பியடித்தவர் தேவா..
ஆங்கில மொழிப்படங்களில் இருந்து காப்பிடிப்பவர் தான் ரஹ்மான் என்றிருந்தேன்...
போய் எந்த பாட்டை கேட்டுப் பாக்குறேன்!
you are wrong athisha..remove this post quickly..dont insult rahman....
இன்று athishaonline.comல் ஒரு சர்ச்சையை படித்தேன். அதிஷா அவர்கள் ஏ.ஆர்.இரகுமானின் ”ஜெய்ஹோ” பாடலும், எம்.எஸ்.வியின் ”அழகுக்கும் மலருக்கும்” பாடலும் ஒரே டியுன் என்று எழுதியுள்ளார். அது மட்டுமல்லாமல் அது அட்டைக்காப்பி என்று சாடியுள்ளார்.
நான் திரு.அதிஷா அவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் ”நீங்கள் எழுதியுள்ளது முற்றிலும் தவறு”. நான் ஒரு இசை கலைஞன். அதனால் உங்களை விட என்னால் அந்த இரு பாடல்களையும் கம்பேர் செய்ய முடியும். நான் நிச்சயமாக சொல்கிறேன், இரண்டும் வெவ்வேறு டியுன்கள்.
அதிஷா அவர்களே நீங்கள் நல்ல இரசிகராக இருக்கலாம். ஆனால் இசையின் நுணுக்கம் என்பதும், இரசிப்புத் தன்மை என்பதும் வேறு வேறு. இசையின் நுணுக்கத்தை முழுவதும் அறியாமல் நீங்கள் ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர். இரகுமானின் ஜெய்ஹோ பாடலை தரக்குறைவாக விமர்சித்து இருக்கின்றீர்கள்.
முதல் வரி தவிர மற்ற அனைத்தும் சம்பந்தமே இல்லாமல் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளன. அது மட்டுமில்லாமல் Orchestration என்ற சமாச்சாரம் இருக்கிறது சார், அதை கவனியுங்க சார். இந்த மாதிரி அரை ஆவர்த்தனத்தை கொண்டு கம்பேர் செய்ய ஆரம்பித்தால் பாகவதர் காலத்திலிருந்து எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.இரகுமானின் இன்றைய காலம் வரை எல்லா பாடல்களுமே ஏதாவது ஒரு பாடலைப்போல இருக்க நிறைய வாய்ப்பு உண்டு.
எனவே அரை மெஷர், ஒரு மெஷரை வைத்துக் கொண்டு காப்பி என்று தயவு செய்து சொல்லாதீர்கள். நான் இரண்டு பாடலுக்கும் நோட்ஸ் எழுதித்தருகிறேன். உங்களுக்குத் தெரிந்த இசைக்கலைஞரை வைத்து கம்பேர் செய்து கொள்ளுங்கள்.
பின்குறிப்பு
ஒரு இசையமைப்பாளன் என்ற முறையில், எனக்கு எம்.எஸ்.வி, இளையராஜா, இரகுமான் என்று எந்த வேறுபாடும் கிடையாது. அனைத்து இசையும் இரசிப்பவன். அதனால் நான் ஏ.ஆர்.இரகுமானுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். உங்கள் தவறை சுட்டிக்காட்ட இதை எழுதியுள்ளேன். அவ்வளவுதான்.
Evano ennavo sonnanaam... athisa neeyum ithai eluthitte.. ippadyellam blog pottu hit etha try panratha??? evlo nalla blog eluthina athisha? puthiya thalaimurai thanth maatrama???
அதாவது கழுத மேய்கிற பையனுக்கு இவ்வளவு
அறிவான்னு எல்லாருக்கும் பொறாம...
நி சொன்ன இந்த வாக்கியத்த தஞ்சாவூர் கல்வெட்டுல
எழுதி பக்கத்துலேயே உக்காந்துக்க...
உனக்கு பின்னால வர்ற சந்ததிகள்
அத பாத்து படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க....
2010 ம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு அதிஷா எனும் இசைமேதையை பரிந்துரைக்களாம்....
யேவ் அதிஷா உனக்கு எழுத்து ஞானம் தன் இல்ல சாதாராண இசை அறிவு கூடவா இல்ல ?? இப்படி பிரபலமானவர்களை பற்றி பதிவு போட்டு வாசகர் வருகையை அதிகரிப்பது ஒரு வித யுக்தி ...
பின்னூட்டங்களை மின்னஞ்சலில் பெற :)
காப்பியடிச்சா ஆஸ்கார் கொடுக்க மாட்டாங்கன்னு யார் சார் சொன்னது? அல்லது இதுக்கு முன்னாடி கொடுத்ததே இல்லையா?
தஙககள் விளக்கத்திற்கு மிக்க நன்றி விவேக் நாராயணன்.
எல்லா புகழும் இறைவனுக்கே.
மியூசிக் லிசனர் நொந்தழல் கவி
அப்பொ MSV எங்கேர்ந்து சுட்டார்னு ஒரு
ஆராய்ச்சியும் கூட செய்துடுங்களேன்.
rendu paatukum sambandhamay illai, new york ku kum aandi patti kum ulla vithyasam madhri...lol!!!
u've written rubbish...stupid and absolute non-sense!!!
un blog ku hits venum endru ippadiya rahmana vambuku ilukuradhu :-p
thumbs down...
அன்பான நண்பர் திரு அதிஷா,
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதாம்
அண்ணன் கதைகளும் கட்டுப்பாடில்லாம போனதாம்
நாளுக்கு ரெண்டு பதிவு கணக்கு மட்டும் வேணுமாம்
பேப்பர நிரப்ப சரக்கு மட்டும் காணுமாம்
எதையோ ஒண்ண அண்ணன் எடுத்தாராம்
மத்தவன் காதுல சுத்த பூ மாலையா தொடுத்தாராம்
சங்கீதம் பற்றிய புதிய கண்டுபிடுப்புதான் அண்ணனுக்கு இன்றைய வேலை
இதில் இவரின் கண்டுபிடிப்போ எந்த ஊருக்கும் போகாத ஒரு சாலை
நண்பர் அதிஷா அவர்களே, வேண்டாம் இந்த விபரீத ஆட்டம்
அண்ணன் கோவி கண்ணன் விட்டுக்கொண்டிருக்கிறார் உங்கள் மீது நோட்டம்
அபகரித்து விடுவீர்களோ என்று இருக்கிறது அவருக்கு ஒரு வாட்டம்
பதிவுலகின் சிறந்த உளறல் மன்னன் என்று அவர் கட்டிக்காக்கும் மாபெரும் பட்டம்
Rubbish generation can be done by any idiot who has a blog and a computer! But to do it systematically and with an intention to publicise ones idiocy, it takes some effort! திரு அதிஷா, it seems is trying hard to do it and the way it looks, he is likely to come out with flying colours!!
உட்டுறுங்க சார்.......வேண்டாம்....தாங்கவில்லை................!!!!!!!
நன்றி
யோவ்.. என்னைய்யா இது அக்கிரமமா இருக்கு? ஜெய் ஹோவிற்கும் இந்த பாட்டுக்கும் என்ன ராசா தொடர்பு? 10 வாட்டிக் கேட்டுப் பார்த்துட்டேன். அந்த சாயல் சுத்தமா இல்லை.ATMல் வரும் எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே பாடலை வேண்டுமானால் ஒப்பிடலாம். ஓரளவு ஒற்றுமை இருக்கும்.
அட நம்ம நண்பர் திரு ஸ்டார் ஜன் வந்து முத்திரையை பதிச்சுட்டாரே........முதலில் கவனிக்கவில்லை.....சாரி சார்...... அதுதான பார்த்தேன், என்னடா, காமடி ஆட்டத்துல Joker ஐ காணுமுன்னு...நச்சுன்னு வந்து பச்சுன்னு ஒரு போடு போடுறாரே!!!!
அது எப்படி அண்ணே....ஒரே மாதிரி இருக்கா.........?????????
அண்ணே, நம்ம பறவை முனியம்மாவோட லேட்டஸ்ட் album ஐ கேட்டீங்களா???? Beethoven second sympony போல இல்ல???? அப்படியே அடிச்சுட்டாங்க இல்ல? என்ன ஒப்புக்கொள்ளவில்லையா?? அஹா புரியுது புரியுது..... சரி சரி...கோவி அண்ணனை விட்டு இத பத்தி ஒரு அரை பக்கம் அடிச்சுவுட சொல்லுறேன், வந்து உங்க சிறந்த ஜால்ராவை தட்டிட்டு போங்க !!!!!
எல்லாம் போயீ இசை பற்றி வந்தது டும் டும் டும்
ஸ்டார் ஜன் அண்ணன் கமெண்டும் வந்துடும் டும் டும் டும்
நன்றி
are u mad?
its stupidous...Music pathi theiryadhavanga ellam dhayavu panni adhai pathi pesadheengappa........
<<<
Anonymous said :October 5, 2009 12:06 AM
அதாவது கழுத மேய்கிற பையனுக்கு இவ்வளவு
அறிவான்னு எல்லாருக்கும் பொறாம...
நி சொன்ன இந்த வாக்கியத்த தஞ்சாவூர் கல்வெட்டுல
எழுதி பக்கத்துலேயே உக்காந்துக்க...
உனக்கு பின்னால வர்ற சந்ததிகள்
அத பாத்து படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க....
>>>
<<<
Pugazh said :October 4, 2009 9:32 PM
இந்த நூற்றாண்டின் most original கண்டுபிடிப்பு! ஆனால் பாருங்க, இதுக்கெல்லாம் Nobel கொடுக்கிறதில்லை.
Post பண்ணுறதுக்கு முன்னால கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களா?
தலையெழுத்து, இந்த மொக்கைய எல்லாம் படிச்சு எரிச்சலாகணும்னு!
>>>
<<<
Music Composer Vivek Narayan said :October 4, 2009 9:12 PM
டியர் அதிஷா,
உங்களுக்கு ஏ.ஆர்.இரகுமான் மேல் ஏதோ கோபம் போலிருக்கிறது. இஷ்டத்துக்கு எழுதியிருக்கின்றீர்கள். நீங்கள் எழுதியுள்ளது முற்றிலும் தவறு. என்னுடைய பிளாகை படித்துப் பாருங்கள். உங்கள் தவறு புரியும்.
http://musicvivek.blogspot.com/2009/10/blog-post.html
>>>
<<<
Vilvarasa Prashanthan said :October 5, 2009 3:07 AM
2010 ம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு அதிஷா எனும் இசைமேதையை பரிந்துரைக்களாம்....
யேவ் அதிஷா உனக்கு எழுத்து ஞானம் தன் இல்ல சாதாராண இசை அறிவு கூடவா இல்ல ?? இப்படி பிரபலமானவர்களை பற்றி பதிவு போட்டு வாசகர் வருகையை அதிகரிப்பது ஒரு வித யுக்தி ...
>>>
<<<
Cable Sankar said :October 5, 2009 8:59 AM
நேற்று நீங்கள் சொல்லிய போது சில பாடல்களின் தாளத்தை சொல்லி அது வேறு வேறு பாடல்களாய் எப்படி உருவெடுத்தது என்று சொன்னேன்..
அது உங்களுக்கு புரிந்திருந்தால் நிச்சயம் நீங்கள் மீண்டும் ஒரு முறை கேளுங்கள்.. நீங்கள் சொல்லியிருக்கும் குற்றசாட்டு கொஞ்சமும் சரியில்லை என்று புரியும்..
>>>
பெரிய ரிப்பீட்டு... :)
என்ன அதிஷா இது??? எதையுமே ஒழுங்கா கேட்கவே மாட்டீங்களா?
பிளீஸ் நல்லா கேளுங்களேன்...
<<<
நண்பர் அதிஷா அவர்களே, வேண்டாம் இந்த விபரீத ஆட்டம்
அண்ணன் கோவி கண்ணன் விட்டுக்கொண்டிருக்கிறார் உங்கள் மீது நோட்டம்
அபகரித்து விடுவீர்களோ என்று இருக்கிறது அவருக்கு ஒரு வாட்டம்
பதிவுலகின் சிறந்த உளறல் மன்னன் என்று அவர் கட்டிக்காக்கும் மாபெரும் பட்டம்
>>>
எப்படி இப்படி??
நீங்களும் ஒரு "தமிழ் நண்டு" தான் போல..அப்படி பார்த்தா 'தங்க பதக்கத்தின் மேலே' பாட்டும். "என்ன விலை அழகே" பாட்டும் take off ல கொஞ்சம் ஒத்து போகும்!!!!!!!!!!! தாளம், ராகம், லயம் பற்றி நானும் சமீபமா படிச்சிட்டு இருக்கேன், நீங்களும் வந்து என்கூட சேர்ந்துகோங்க... அதுக்கப்புறம் பதிவுகள் போடுங்க தலைவா!!!!!!!!!
"mozart of madras" ஐ குறை சொல்ல நம்ம இசை அறிவை கொஞ்சம் வளர்த்துக்கனும்!!!!!!!!
நம்ம மக்களுக்கு உள்ள பிரச்சினை என்ன வென்றால் நம்ம ஆட்கள் யாருமே பெருசா சாதிச்சிட்டா. என்னமாவது பொய் குத்தம் கண்டுபிடிச்சி அவன கீழ தள்ள தான் பார்ப்பாங்க..
இந்த 2 பாட்டிலும் எந்த வித ஒற்றுமையும் எனக்கு தெரிய அதிஷா..
நீங்களுமா?
ரோஜா படத்துக்கே ரஹ்மான்க்கு ஆஸ்கார் வந்திருக்க வேண்டியது. ஆனால் ஆங்கில படத்துக்கே ஆஸ்கார் தரப்படும் என்ற நடைமுறை காரணமாக அவருக்கு தாமதமா இந்த அவர்ட் கிடைத்திருக்கிறது. அதற்காக இந்த ஒரு பாட்டை மட்டும் வைத்து அவருக்கு இந்த பேரெல்லாம் கொடுக்க கூடாது.
கண்டிப்பா அவர் காப்பி அடிச்சிருக்க மாட்டார்... அப்டி ஒத்து போயிருந்தா அது எதேட்சையா நடந்த ஒரு விசயமாத்தான் இருக்கும்...
பாஸ்,
எப்ப சுப்ரமனியசாமிய மீட் பன்னிங்க சொல்லவே இல்லை!!.
இந்த பதிவு அவர் கொடுத்த ஐடியா தானெ...!
நீங்களும் அறவாளி தான், but இந்த அளவுக்கு யோசிக்கனும்னா சுப்ரமணியசாமி மாதிரி மாஸ்டேர் brain வேணும்.அப்டியே இந்த michel jackson பாட்டெல்லாம் பாகவதர் பாடோட copy தான் ஒரு பதிவு போடுங்க அதுவும் ஹிட் ஆகும் .
ஹையோ ஹையோ நீங்க விளையாட்ட எழுதினத போய் எல்லாரும் நம்பிட்டாங்க .....!!!!
பாஸ்,
எப்ப சுப்ரமனியசாமிய மீட் பன்னிங்க சொல்லவே இல்லை!!.
இந்த பதிவு அவர் கொடுத்த ஐடியா தானெ...!
நீங்களும் அறவாளி தான், but இந்த அளவுக்கு யோசிக்கனும்னா சுப்ரமணியசாமி மாதிரி மாஸ்டேர் brain வேணும்.அப்டியே இந்த michel jackson பாட்டெல்லாம் பாகவதர் பாடோட copy தான் ஒரு பதிவு போடுங்க அதுவும் ஹிட் ஆகும்
ஹையோ ஹையோ நீங்க விளையாட்ட எழுதினத போய் எல்லாரும் நம்பிட்டாங்க .....!!!!!
Athisha i thought u have more exposure on manythings..like films,music and other arts..but
"அட்டைக்காப்பிக்கு ஆஸ்கார்!" post make me disappointed.Both songs are totally different in composition and chord progression.Just analyse and prove it,before that dont show ur ignorance here.Please dont repeat this anymore.
ரொம்ப நாள் முன்னாடி இளையராஜா ஒரு பேட்டியில சொன்னது ஞாபகம் வருது.
அபூர்வ சகோதரர்கள் படத்துல வர்ற "மாபிள்ளைக்கு... நல்ல யோகமடா... அந்த மணமகள் தான்... வந்த நேரமடா"... என்ற பாட்டு "நான் பார்த்ததிலே... அவள் ஒருத்தியைதான்... நல்ல அழகனென்பேன்" பாட்டை உல்டா பண்ணியதுனு ராஜாவே சொன்னார்....
மொத்ததில எல்லா பாட்டுமே repeat ஆகறமாதிரி இருக்கும்... ஏன் என்றல் 7 ஸ்வரம் & limited ராகம்.
உங்களுக்கு எழுத எதோ இருக்குன்னு கண்டனத்தையும் எழுத வேணாம்
என் நண்பன் ஒருவன் சொல்லி இந்த blog - ஐ பார்க்க நேர்ந்தது
அண்ணே ஆதிஷா அவர்களே....
எங்கேன்னே ஒத்துப்போகிறது????!!!!
காப்பி அடிப்பது என்றால் என்ன என்று கீழே பாரும்
இதோ ஈ அடிச்சான் காபி இசை "ஞானியின" பட்டியல்
01)
Priya - Akkarai seemai azhaginiley (1978)
Original : Kites(1967), Simon Dupree
02)
Priya - Darling Darling (1978)
Original : Sunny (1976), Boney M
For "Darling darling" tune listen at 0:43
For "I love youuuuu" tune listen at 1:10
03)
*** Here comes "ஈ அடிச்சான் காபி" ***
Neengal Kettavai - Kanavu Kaanum (1984)
Upkar - Kasme Vaade Pyaar Wafa (1967) by Kalyanji Anandji
04)
*** Here comes your so called "அட்டை காப்பி" ***
Murattu Kaalai - Endha Poovilum Vaasam (1980)
Original : Danza, Antonio Ruiz Pipos
05)
Nallavanukku Nallavan - Chittukku Chella Chittukku (1984)
Original : The Tale Of The Kalendar Prince (1888), Rimsky Korsakov
Listen starting from...
1:18 (tune is slow here)
1:52 (tune is fast here)
06)
Mouna Raagam - Theme music (1986)
Original : Flash Dance (1983), Giorgio Moroder
Leave out the background music
The foreground music is inspired from this song
மேலும் சில...
07)
Thaippongal - Kan malargalin
Original : Money money money, ABBA
08)
Chinna Veedu - Chittu Kuruvi Mettu (1985)
Original : Dvorak - Symphony No.9 From the New World - 3rd movement
09)
Oru kaidhiyin diary - ABC Nee Vaasi (1984)
Original : L’Arlésienne Suite Number One, 4th movement, called ‘Carillon’ (1897)
10)
Kizhakku Vaasal - Ada veetukku veetukku (Hope no one needs link?)
Mozarts 25th symphony, 1st movement
"அட வீட்டுக்கு வீட்டுக்கு" - tune for these words copied
Listen to the music at 1:22
Sound like Titan music? But it is Mozart's actually.
Titan World (Scroll to last page)
11)
Chatriyan - Poottukkal pottaalum
The Sound of Music - My Favourite Things, Richard Rodgers
Background music is copied
12)
Kalyanaraman - Kaadhal Vandhiruchu (1979) (Hope no one needs link?)
Original : Lady In Black (1971), Uriah Heep
Main funny part of music is copied
Listen at 0:28
13)
Nilave Mugam Kaattu - Sutrathe Poomithaye Nillu (1999)
Kaadhal Desam - Ennai Kanavillaiyae (1996)
Listen to background music starts @ 1:24 in Ilayaraja song
Listen to background music starts @ 0:22 in AR Rahman song
ச்சேச்சே இளையராஜாவா இப்படி??
என்ன கொடுமை சார் இது?
இவர் 1888,1897 ஆகிய வருடங்களில் இருந்தெல்லாம் சுட்டிருக்கிறார்..
1978 - லேயே இந்த காபி அடிக்கும் வேலையை துவக்கி எல்லோர்க்கும் முன்னோடியாக திகழ்ந்திருக்கிறார்
காபி அடிபதற்கு என்ன பெரிய ஞானம் தேவை?
அப்படி பார்த்தல் Deva, Harris Jeyaraj எல்லாம் ஞானிகளின் ஞானியா?
தன்னை இசை ஞானி என்றும், Maestro என்றும் சொல்லிகொள்பவர் செய்கிற வேலையா இது?
ஆதிஷா, இதற்கு உமது பதில் என்னவோ?
Now, I am very eager to see the reaction in athisha's face !!!
payapulla evvlov adichalum thanguranya~!
I jumped to this page accidentally and so happnd to read a few of your posts, especially this one. I was happy to read it in tamil since v.few pple write in tamil.
But its saddening that this post is of inferior quality, or even worse.
U have the right to raise your opinion, but not of this kind. This shows ur lack of knowledge in music. For a layman, most songs sound the same, most movies give the same idea or have the same theme. Would u say all those were copied for some reason? There are pple who live just by purely copying others' stuff especially tunes. If u intended to mock someone like them, I wouldn't have posted a reply to this. But you used sarcasm against a person who v.well deserves an oscar or something even more than that. U will have to undrstand that there are 'swarams' and 'ragams' in music and only around that the entire music in the world revolves. So, there are tunes that sound the same and its the way that a musician uses his brain to create a song that deserves the pay or an award or something else. The world knows, even if not for this song, Rahman deserves the highest award for music for any of his earlier compositions. I'm a global music lover and not a lover of any particular icon's music.
If u still insist its a copy, even then this song deserves the award for its orchestration, mixing, and chorus.
Please dont make your blogs look inferior by ragging or mocking someone. Some of your movie reviews are typical examples. But your content regarding the movie is good and your style of writing is also appreciable.
Keep up 'only' the good work. Wishes.
முதல் வரிக்கான தொடக்கம் தவிர, பெரிதாக ஒன்றும் ஒத்துப்போவதாகத் தெரியவில்லை. எல்லாப் பாடல்களுமே ஏதாவது ஒரு பழைய பாடலை நினைவு படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு எந்தத் தலைமுறையிலும், யாரும் விதிவிலக்கில்லை. இதற்காக தேவாவுடன் ரஹ்மானை ஒப்பிடுவது கொஞ்சம் அதிகம்தான் ;) தொடர்ந்த இசைப்பயணத்தில் இதுவும் ஒரு விருது என்பதாகவே எ.ஆர்.ரஹ்மான் இதை ஏற்றுக்கொண்டார் என்பதாகவே எனக்குப் படுகிறது. எம் எஸ் விஸ்வனாதனாகட்டும், இளையராஜாவாகட்டும், ரஹ்மானாகட்டும், எல்லோரும் தங்கள் வழியில், தங்கள் பாணியில் இசையை அழகு படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்; இன்னும் இருப்பார்கள். தேவையில்லாமல் இது போன்ற சர்ச்சைகளை வளர்ப்பது அநாகரீகமாகவே படுகிறது.
-ப்ரியமுடன்
சேரல்
இது உண்மை அல்ல இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
Arun here
Absolutely a wrong comparison
1.) Both are not same raaga
2.) Different shruthi
3.) Dynamics and Meend in the song are also different
Please stop talking like this and don't spoil good music / life flow
This is a stupid post.
Hope you are a Brahmin. Telling that Thamils have no brain tells who you are.
I am an IR fan but I am proud of ARR as a Thamilian.
Post a Comment