19 September 2011

எங்கேயும் எப்போதும்!விபத்து! அதனை நேருக்கு நேர் சந்திக்காத வரை நமக்கு அதன் மீதான பயம் கொஞ்சம் கூட இருப்பதில்லை. செல்போனில் பேசிக்கொண்டே பைக் ஓட்டுவதில் தொடங்கி, பிரேக் கொஞ்சம் சுமாராக இருந்தால் கூட அலட்சியமாக கார் ஓட்டுவது, தம்மடித்த படி சரக்கடித்துவிட்டு பஸ் ஓட்டும் டிரைவர்கள் என பட்டியல் ரொம்ப பெரிசு. ஆனால் நேருக்கு நேர் நாம் விபத்தை எதிர்கொள்ள நேரிடும் போதோ அல்லது நமக்கு நெருக்கமானவருக்கு ஏற்பட்டாலோ அதுகுறித்த அச்சமும் கொஞ்சம் கவனமும் நம்மை தொற்றிக்கொள்ளுவது இயல்பு. எங்கேயும் எப்போதும் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து பைக்கை எடுத்து வண்டி ஓட்டுகையில் அதை உணர முடிந்தது, சாலையில் என்னையும் மீறி அதிக கவனமும் பயமும் எங்கிருந்துதான் வந்ததோ!

சில படங்களை பார்த்துவிட்டு வெளியே வந்ததும்.. பதட்டமும் பயமும் அப்பிக்கொள்ளுவதை உணர்ந்திருக்கிறேன். ஃபைனல் டெஸ்டினேஷன் வகையறா படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். தலைக்கு மேலே சுழலும் ஃபேன் தொடங்கி சாதாரண அழுக்குப்பிடித்த மிதியடி கூட பூச்சாண்டி காட்டி பயமுறுத்தும். இதுமாதிரி படங்களை இன்னொரு முறை பார்க்கவே கூடாது என முடிவெடுத்து விடுவேன். அதன் வேதனையிலிருந்து மீளவே பல நாட்களாகும். சனிக்கிழமை பார்த்த எங்கேயும் எப்போதும் இன்னமும் என் நினைவடுக்குகளில் எஞ்சி நிற்கிறது. சாலையில் எந்த பேருந்தை கண்டாலும் அச்சமூட்டுகிறது. இனி அச்சமின்றி என்னால் மஃப்சல் பேருந்துகளில் பயணிக்கமுடியுமா என்பதே சந்தேகம்தான்.

பேருந்து மோதல்களும், தடம் புரளும் ரயில்களும் அன்றாட செய்தியாகி பல காலம் ஆகிறது. சென்றவாரம் நடந்த ரயில்விபத்து கூட பெரிதாக என்னை ஒன்றுமே செய்யவில்லை. மீடியாவும் தொடர்ந்து நிகழும் விபத்துகளும் இதுமாதிரி விபத்துகளை சகஜமாக எடுத்துக்கொள்ளுகிற நிலைக்கு நம்மை பழக்கப்படுத்திவிட்டதோ என அஞ்சுகிறேன். எனக்கு மட்டுமல்ல பெரும்பாலானவர்களுக்கும் இதே நிலைதான். ஆனால் அதே விபத்து நமக்கோ நம்மை சேர்ந்தவர்களுக்கோ ஏற்படும்போதுதான் அதன் மீதான ஒரு அச்ச உணர்வு எழுகிறது. அப்படி ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது எங்கேயும் எப்போதும். காரணம் படத்தின் பாத்திரங்கள் நமக்கு மிக மிக நெருக்கமானவர்களாகவும் நண்பர்களாகவும் இருப்பதே!

நேர்த்தியாக பின்னப்பட்ட இரண்டு காதல் கதைகள். அரசூரை விட திருச்சி பெரிய சிட்டி! திருச்சியை விட சென்னை பெரிய சிட்டி! இரண்டு காதல் ஜோடிகளுக்கான முரண் இதுதான். அரசூர் பையன் திருச்சி பெண்ணின் சாமர்த்தியத்தில் திணறுகிறான். திருச்சி பெண் சென்னை பையனின் அலட்டலில் அலறுகிறாள். ஒரு விபத்தில் ஒரு காதல் அஸ்தமிக்க இன்னொரு காதல் பூக்கிறது. நண்பனுக்கு விபத்து நேர்ந்ததை போலவே மனம் துடித்து அடங்க மறுக்கிறது.

படத்தின் கதை திரைக்கதை,நடிப்பு,இசை,எடிட்டிங்,கிராபிக்ஸ் என எல்லாமே நன்றாகவே இருந்தாலும் என்னை ரொம்பவே ஆச்சர்யப்படுத்தியது ஒளிப்பதிவுதான். ஒவ்வொரு முறையும் பாய்ந்து செல்லும் பஸ்ஸினை காட்டும்போதும் நாமும் அந்த பேருந்தில் பயணிக்கிற உணர்வினை கொடுத்துவிடுகிறது. அதிலும் அதன் வேகம், அவை மற்ற வண்டிகளை தாண்டிச்செல்லும்போது உண்டாகிற படபடப்பு.. கேமரா மேனுக்கு ஒரு பெரிய சபாஷ்! படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவின் பெரிய ரசிகராக இருக்கவேண்டும். படம் முழுக்க எங்கேயும் எப்போதும் ராஜாசார் வாசனை!

ஜெய் தன் பாத்திரத்திற்கேற்ப நன்றாகவே நடித்திருக்கிறார். அஞ்சலியின் நடிப்பு அற்புதம். சிம்ரனுக்கு பிறகு அஞ்சலிக்கு ரசிகனாகிவிடுவேனோ என அஞ்சுகிறேன். அவ்வளவு அழகு.. நிச்சயம் இப்படத்தினை குடும்பத்தோடு பார்க்கலாம். ஒவ்வொருவரும் கட்டாயம் பாக்க வேண்டியபடமும் கூட...

ஆனால் அவ்வளவு அழகான காதல்களை சொல்லிவிட்டு இறுதி 20 நிமிடங்கள் நம்மை கதறவிட்டிருக்க வேண்டாம் என்கிற எண்ணமும் எழாமல் இல்லை. இருந்தும் அந்த 20 நிமிடங்கள் நிச்சயம் விபத்தின் மீதான மக்களின் பார்வையை மாற்றும் என்பது நிச்சயம். இந்த படத்தினை பேருந்து ஓட்டுனர்களுக்கு இலவசமாக காட்ட ஏற்பாடு செய்யலாம்! அது தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கிற பெருமளவு விபத்தினை குறைக்கும் என்றே நம்புகிறேன். மற்றபடி அழகான படம் தந்த இயக்குனருக்கு பாராட்டுகள்.

31 comments:

சே.ராஜப்ரியன் said...

SUPER.......THANKS.......

Galaxy Friends & Team said...

Nice .... nanum anjali rasikan agitan... ena azhagu .... super .

MANO said...

very nice review athisha.

jaisankar jaganathan said...

நல்ல விமர்சனம்

Pot"tea" kadai said...

சத்யான்னு புதுசா ஒருத்தர்னு நினைக்கிறேன்...அவங்கப்பா எம் எஸ் வி, பி யூ சின்னப்பா ரசிகராம்.ஆனா இவருக்கு ராசா தான் கடவுள்னு ஹெல்லோ எஃப் எம் பேட்டியில் சொன்னதா நியாபகம்...

அ.சிதம்பரம் said...

Nice piece of writing and review. Good choice of words. Waiting to watch the Movies. Nandri!!!

Mounam pesum Mozhigal! said...

Very Nice Review!!!

Mounam pesum Mozhigal! said...

அருமை!

marimuthu said...

யுவா பாருக்கு போக சொல்கிறார் ! நீங்கள் படிப்பினை என்கிறீர்கள்!மொத்தத்தில் நல்ல விமர்சனம்!

ராஜன் said...

இதுக்கு யார்யா மைனஸ் ஓட்டு போடறது?!

சுமன் said...

"சிம்ரனுக்கு பிறகு அஞ்சலி"?

சிம்ரனுக்குப் பிறகு த்ரிஷாவுக்குத்தான் அந்த இடத்தைக் கொடுக்கலாம். எப்படி நீங்க அஞ்சலின்னு சொல்லலாம்?

த்ரிஷா நடிச்சிருக்க வேண்டிய கேரக்டர்தான் அவங்க ஜெய் கூட நடிக்க மாட்டேன்னு சொன்னதால அஞ்சலிக்குப் போய்டுச்சு.. அப்படியொண்ணும் அஞ்சலி பெருசா நடிச்சுடல.

'மங்காத்தா' பாருங்க.. துணை நடிகை மாதிரி வந்துட்டுப் போறா. அதுல த்ரிஷாவப் பார்த்து நம்ம 'தல'யே சொல்றார்ல..

'நீ எவ்ளோ பெரிய நடிகை..உனக்கெல்லாம் நடிப்பு சொல்லித் தரணுமா?'ன்னு..

முடிஞ்சா அஞ்சலிக்கு த்ரிஷா மாதிரி அழகா நடிக்கச் சொல்லுங்க..அப்றம் சொல்லலாம்..சிம்ரனுக்குப் பிறகு அஞ்சலின்னு..

raashidsite said...

அப்பாடா ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல படத்துக்கு விமர்சனம் வந்திருக்கு. நான் அங்காடி தெரு பாத்ததிலேயிருந்து அஞ்சலிக்கு ரசிகனாயிட்டேன். நீங்க இன்னமும் பழச கட்டிகிட்டு அழுவுங்க. சீக்கிரம் தங்கள் பயம் உண்மையாக வாழ்த்துக்கள்.

Rathnavel said...

நல்ல விமர்சனம்.
வாழ்த்துக்கள் அதிஷா.

அருணன் பாரதி said...

வணக்கம் அதிஷா. எங்கேயும், எப்போதும் விமரிசனம் பார்த்தேன். நச்சென்று இருந்தது. நான் படம் பார்த்து சுமார் 10 வருடங்களுக்கு மேல். திரையரங்கில் அவ்வளவு நேரம் இருக்க முடியாமை; கமகமக்கும் சிகரெட் புகை. எங்க ஊர்ல..விரசம் மிகுந்த காட்சிகள்; வன்முறை;உப்பு சப்பில்லாத கதை என ஏராளம். அழகர்சாமியின் குதிரை பார்க்க நினைத்து, எங்க ஊர்ல, அது பயந்து போய் ஒரே ஒட்டமா ஓடிட்டது சீக்கிரமா. இந்த படத்தை கட்டாயமா ஒரு நண்பர் பார்க்கச் சொல்லி இருக்கிறார்.இதில் உங்கள் பார்வை..படத்தைப் பற்றி.. கலக்கலா இருக்கு. இரு நாட்களாய் நேரம் இல்லை. நாளை மறுநாள் பார்க்க வேண்டும். அதுவரை..இங்கு இருக்குமா.. தெரியவில்லை. படம் பார்த்துவிட்டு எழுதுகிறேன்...மோகனா

mohana said...

வணக்கம் அதிஷா. நலமா? நச்னு ஒருவிமரிசனம் எங்கேயும் எப்போதும் படத்துக்கு. கலக்கல் அதிஷாதான். நான் படத்துக்குப் போய் 10 வருடங்கள் இருக்கும்.பல காரணிகள்: நேரம் இல்லை. 3 மணி நேரம் அங்கு உட்கார வேண்டும்..படம் கடியாக இருந்தால் தப்பிக்க வழி இல்லை; நல்ல கதையமைப்பு இல்லை; விரசமான் காட்சிகள்;அதிகமான வன்முறை..பிடிக்காத இசை.. அழகர்சாமியின் குதிரை பார்க்க நினைத்தும், எங்க ஊரிலே ஒரே ஓட்டமா ஓடிட்டுது. ஒரு நண்பர் எங்கேயும் பார்க்கச் சொன்னார். இரு நாட்களாக நேரம் இல்லை. நாளை மறுநாள் பார்க்க வேண்டும்.பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

அருணன் பாரதி said...

வணக்கம் அதிஷா. நலமா? நச்னு ஒருவிமரிசனம் எங்கேயும் எப்போதும் படத்துக்கு. கலக்கல் அதிஷாதான். நான் படத்துக்குப் போய் 10 வருடங்கள் இருக்கும்.பல காரணிகள்: நேரம் இல்லை. 3 மணி நேரம் அங்கு உட்கார வேண்டும்..படம் கடியாக இருந்தால் தப்பிக்க வழி இல்லை; நல்ல கதையமைப்பு இல்லை; விரசமான் காட்சிகள்;அதிகமான வன்முறை..பிடிக்காத இசை.. அழகர்சாமியின் குதிரை பார்க்க நினைத்தும், எங்க ஊரிலே ஒரே ஓட்டமா ஓடிட்டுது. ஒரு நண்பர் எங்கேயும் பார்க்கச் சொன்னார். இரு நாட்களாக நேரம் இல்லை. நாளை மறுநாள் பார்க்க வேண்டும்.பார்த்துவிட்டு எழுதுகிறேன்...மோகனா

அருணன் பாரதி said...

வணக்கம் அதிஷா. நலமா? நச்னு ஒருவிமரிசனம் எங்கேயும் எப்போதும் படத்துக்கு. கலக்கல் அதிஷாதான். நான் படத்துக்குப் போய் 10 வருடங்கள் இருக்கும்.பல காரணிகள்: நேரம் இல்லை. 3 மணி நேரம் அங்கு உட்கார வேண்டும்..படம் கடியாக இருந்தால் தப்பிக்க வழி இல்லை; நல்ல கதையமைப்பு இல்லை; விரசமான் காட்சிகள்;அதிகமான வன்முறை..பிடிக்காத இசை.. அழகர்சாமியின் குதிரை பார்க்க நினைத்தும், எங்க ஊரிலே ஒரே ஓட்டமா ஓடிட்டுது. ஒரு நண்பர் எங்கேயும் பார்க்கச் சொன்னார். இரு நாட்களாக நேரம் இல்லை. நாளை மறுநாள் பார்க்க வேண்டும்.பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

mohana said...

வணக்கம் அதிஷா. நலமா? நச்னு ஒருவிமரிசனம் எங்கேயும் எப்போதும் படத்துக்கு. கலக்கல் அதிஷாதான். நான் படத்துக்குப் போய் 10 வருடங்கள் இருக்கும்.பல காரணிகள்: நேரம் இல்லை. 3 மணி நேரம் அங்கு உட்கார வேண்டும்..படம் கடியாக இருந்தால் தப்பிக்க வழி இல்லை; நல்ல கதையமைப்பு இல்லை; விரசமான் காட்சிகள்;அதிகமான வன்முறை..பிடிக்காத இசை.. அழகர்சாமியின் குதிரை பார்க்க நினைத்தும், எங்க ஊரிலே ஒரே ஓட்டமா ஓடிட்டுது. ஒரு நண்பர் எங்கேயும் பார்க்கச் சொன்னார். இரு நாட்களாக நேரம் இல்லை. நாளை மறுநாள் பார்க்க வேண்டும்.பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

அருணன் பாரதி said...

வணக்கம் அதிஷா. நலமா? நச்னு ஒருவிமரிசனம் எங்கேயும் எப்போதும் படத்துக்கு. கலக்கல் அதிஷாதான். நான் படத்துக்குப் போய் 10 வருடங்கள் இருக்கும்.பல காரணிகள்: நேரம் இல்லை. 3 மணி நேரம் அங்கு உட்கார வேண்டும்..படம் கடியாக இருந்தால் தப்பிக்க வழி இல்லை; நல்ல கதையமைப்பு இல்லை; விரசமான் காட்சிகள்;அதிகமான வன்முறை..பிடிக்காத இசை.. அழகர்சாமியின் குதிரை பார்க்க நினைத்தும், எங்க ஊரிலே ஒரே ஓட்டமா ஓடிட்டுது. ஒரு நண்பர் எங்கேயும் பார்க்கச் சொன்னார். இரு நாட்களாக நேரம் இல்லை. நாளை மறுநாள் பார்க்க வேண்டும்.பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

உலக சினிமா ரசிகன் said...

நல்ல படத்துக்கு நல்ல பதிவு போட்ட நல்லவரே!
நீர் வாழ்க!!
இப்படத்துக்கு நானும் ஒரு பதிவு எழுதி உள்ளேன்.உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன்.
நன்றியுடன்,
உலகசினிமாரசிகன்.

♔ம.தி.சுதா♔ said...

எதிர் பார்ப்போடு இனித் தான் திரையரங்கம் நுழையணுமுங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

Anonymous said...

I loved it "Engeyum Eppothum" good good http://infotainment-world-news.blogspot.com/2011/09/engeyum-eppodhum-tamil-movie-review.html

Anonymous said...

அழகான வரிகளில் இதமான விமர்சனம் ஒரு சிறப்பான படைப்பிற்கு

Anonymous said...

Nice Movie everybody have to see and thanks to A.R.Murugadoss & Saravanan

Agape Tamil Writer said...

அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி

Anonymous said...

@சுமன்

Romba mukiyam......

projectdevendhra said...

http://www.change.org/petitions/dismiss-and-convict-police-who-executed-paramakkudi-massacre

Kannan said...

படம் பாக்க தூண்டும் விமர்சனம்.....
பாராட்டுகள்........

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Sahajamozhi said...

இந்த படத்தினை பேருந்து ஓட்டுனர்களுக்கு இலவசமாக காட்ட ஏற்பாடு செய்யலாம்! அது தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கிற பெருமளவு விபத்தினை குறைக்கும் என்றே நம்புகிறேன். மற்றபடி அழகான படம் தந்த இயக்குனருக்கு பாராட்டுகள்.

saravananfilm said...

உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

Press Meet Gallery

bhuvanendar said...

The film is nice but your post was very much exaggerating about the accident in the film ... it was not at all that much to the effect for final destination ... a simple accident with a lovable love stories ... that's it