Pages

02 April 2013

கேடி & கில்லாடி!






இதுவரை ஆனந்தவிகடனில் வெளியான வலைபாயுதே ட்விட்டுகள் மற்றும் ஃபேஸ்புக் ஸ்டேடஸ்களை தொகுத்து ஒரு புத்தகமாக போட்டு அதையே திரைக்கதையாக மாற்றினால் என்ன கிடைக்குமோ அதுதான் கேடிப்பில்லா கில்லாட்டிரங்கா.

படம் முழுக்கவே வசனங்களால் நிரம்பியிருக்கிறது. இப்படத்தை பார்த்து ரசிப்பதைவிட கேட்டு ரசிக்க இனிமையாக இருக்கும் என்று தோன்றுது. அல்லது படத்தின் திரைக்கதையை புத்தகமாக்கி வெளியிட்டால் படித்தும் ரசிக்க முடியும். டெக்னிகலாக மிகமிக சுமாராகவே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனாலேயே பல காட்சிகளில் பேய்ப்படம் பார்ப்பதுபோல கண்ணை மூடிக்கொண்டுதான் படத்தை கேட்க மட்டுமே செய்ய வேண்டியதாயிருந்தது என்பது வேறு விஷயம்.

சிவகார்த்திகேயனும் பரோட்டா சூரியும்தான் சூம்பிப்போன திரைக்கதையை அவ்வப்போது ஒன்லைன் டைமிங் காமெடிகளால் தூக்கி நிறுத்துகிறார்கள். சி.கா வுக்கு ஜோடியாக வருகிற அந்த ஹீரோயின் யார் என்று தெரியவில்லை. பார்த்ததும் காதலிக்க வேண்டும் போல ஆசை வந்துவிடுகிறது. சோ க்யூட்!

இயக்குனர் ராஜேஷ் தொடங்கிவைத்த டிரெண்ட் இது. பாண்டிராஜ் அதை ஒட்டி தன்பங்குக்கு ஒரு படமெடுத்திருக்கிறார். சந்தானம் இருந்திருந்தால் இதே படம் வேறுநிறத்தில் இருந்திருக்குமோ என்னவோ! இருப்பினும் படம் பார்க்கும்போது முதல்பாதியில் சில இடங்களிலும் பின்பாதியில் சில இடங்களிலும் சிரிப்பு வருகிறது.

பிட்டுப்படங்களில் படம் முழுக்க கில்மா மேட்டர்களாக போட்டு ரொப்பிவிட்டு கடைசி காட்சியில் ''தவறான செக்ஸ் உடல்நலத்துக்கு தீங்கானது'' என்று அறிவுரை சொல்வார்கள். அதுபோலவே இப்படத்திலும் அறிவுரை சொல்லும் பெற்றோர்களை படம் முழுக்க நாயகர்கள் இருவரும் கேவலமாக பேசி கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்திவிட்டு இறுதிக்காட்சியில் ஃபாதர் ஈஸ் காட் என்று காமெடி பண்ணியிருப்பது மிகவும் அருமை. படத்தின் நான் ரசித்த மிகச்சிறந்த காமெடி அதுதான். படத்திற்கு இசை யுவன்ஷங்கராம். மிகமிகமிக அடக்கிவாசித்திருக்கிறார்.

அந்தகாலத்தில் தங்கமணி ரங்கமணி, சகாதேவன் மகாதேவன், இரண்டு கில்லாடிகள் போன்ற லாஜிக்கே இல்லாத கலகல காமெடி படங்கள் போல சமகாலத்தில் யாருமே எடுப்பதில்லை என்று அடிக்கடி தோழரிடம் வருத்தங்கலந்த ஆதங்கத்தை வெளிப்படுத்துவேன். ராமநாரயணன் எடுத்த முரளி,எஸ்விசேகர்,மோகன்,நிழல்கள்ரவி என பலரும் நடித்த இத்திரைப்படங்கள் எப்போது டிவியில் ஒளிபரப்பானாலும் ரசித்து பார்க்க கூடியவையாகவே இருக்கும்.

ஒன்பதுல குரு கிட்டத்தட்ட அதுமாதிரி முயற்சிதான் என்றாலும் மகா மொக்கையான படமாக அது அமைந்தது. அந்த வகையில் டிவியில் ரிப்பீட்டில் போட்டால் பார்த்து ரசிக்க கூடிய ஜாலியான படமாகவே இந்த கேடிபில்லா வந்துள்ளது. டிவியில் போட்டால் கட்டாயம் பாருங்க டோன்ட் மிஸ் இட்!