முன்னெச்சரிக்கை - (இந்தப்பதிவு உங்கள் உடல்நலத்திற்கு கேடுவிளைவிக்கலாம்)
இந்த ஆண்டு எத்தனையோ பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகி வெற்றிபெற்றிருந்தாலும் எந்தப்படமும் நூறு நாட்களுக்கு மேல் ஓடியதாக தெரியவில்லை. இப்படியொரு மகா மோசமான தமிழ்சினிமா சூழலில் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் என்கிற புதுமுகம் நடித்த லத்திகா என்கிற மாகாவியம் 300 நாட்களை கடந்து இன்னமும் சக்கைப்போடு போடுகிறது.. (ஒரே தியேட்டரில்). மொக்கையான கதை, மட்டமான நடிப்பு, கேவலமான இசை, தாங்கமுடியாத தலைவலி படம் எப்படி 300நாட்களை கடந்தும் ஓடுகிறது என்கிற வியப்பு நம் அனைவருக்குமே இருக்கலாம்!
‘’ஆமாய்யா காசு கொடுத்துதான் படத்தை ஓட்டுறேன், ரசிகர்களுக்காக ஓட்டித்தானே ஆக வேண்டியிதாருக்கு’’ என விகடன்,குமுதம்,விஜய்டீவி,சன்டிவி முதலான பிரபல பத்திரிகைகளில் டிவியில் பேட்டியும் கொடுத்திருக்கிறார் படத்தின் நாயகன் பவர்ஸ்டார். தமிழ்சினிமாவின் சூப்பர் நாயகர்களில் யாருமே இதுபோல ஒன்றை செய்ததாக தெரியில்லை.. ரசிகர்களுக்காக உயிரையும் கொடுக்க தயங்காத மாமணியாக பவர்ஸ்டார் இருக்கிறார். அதனால்தான் ரசிகர்களின் நலன் கருதி வருடத்திற்கு ஒருபடம் நடிக்கிறாரோ என்னவோ?
அவருடைய லத்திகா திரைப்படங்களின் காட்சித்தொகுப்பு.. கண்டு மகிழுங்கள். பார்த்துவிட்டு வாட் ஏ மேன் என வியந்துபோவீர்கள்!
அதுதவிர படம் வெளியாகி ஒரு வருடமாகியும் இன்னமும் திருட்டு டிவிடி வெளிவராத ஒரே திரைப்படம் லத்திகா மட்டும்தான்! திருட்டு டிவிடியை ஒழிக்க நம் தமிழக காவல்துறையும் முட்டிப்போட்டு குட்டிகரணம் அடித்தும் முடியாதிருக்க.. சத்தமேயில்லாமல் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு புரட்சியை பண்ணிவிட்டு சின்னகவுண்டர் விஜயகாந்த் போல துண்டை தூக்கி தோளில் போட்டுகிட்டு போய்கொண்டே இருக்கிறார் பவர்ஸ்டார்.
ஜேகே ரித்திஷ் அரசியலில் பிஸியாகிவிட்ட சூழலில் அவருடைய இடத்தை நிரப்ப ஒரு தலைவன் வரமாட்டானா என ஏங்கிக்கொண்டிருந்த தமிழ் சம்முகத்திற்கு கிடைத்த வரம்தான் பவர்ஸ்டார். சினிமாவிலிருந்து அரசியல் என்பதே ரூட்டு அதை மாத்திப்போட்டு அடிச்சாரே ரிவீட்டு. அவர்தான் அரசியலிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் சொக்கத்தக்கம்தான் பவுடர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் டாக்டர் ஸ்ரீனிவாசன். சினிமாவில் ஆயிரக்கணக்கான போலிடாக்டர்கள் (விஜய்,விக்ரம் etc) இருந்தாலும் இவரு மெய்யாலுமே படித்து பட்டம் வாங்கிய ஒரிஜினல் டாக்டர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மருத்துவர் அணித்தலைவராக மட்டுமே இருந்தவர்.
ரஜினியைப்போலவே வில்லனாக தொடங்கியது பவரின் பயணம். மேகம்,போகம்,மண்டபம் என ஒன்றிரண்டு கில்மா படங்களில் அவ்வப்போது பத்து பெண்களை கற்பழிக்கும் ஒற்றை வில்லனாக முகத்தில் எந்த சுரணையுமேயில்லாமல் வெறித்தனமாக நடித்துக்கொண்டிருந்தார். என்ன ஆச்சோ ஏதாச்சோ நம் பயுபுள்ள பவர்ஸ்டார் தீர்ப்பு சொல்லும் பண்ணையாராக வாழ்ந்த ‘’நீதானா அவன்’’ என்கிற படத்தின் வரலாறு காணாத மாபெரும் வெற்றி அவருக்கு கதாநாயக அந்தஸ்த்தை பெற்றுத்தந்தது.
அந்தப்படத்தின் டிரைலர்..
ஹீரோ அந்தஸ்து கிடைத்தும் புரோடியூசர் கிடைக்கவில்லை என்கிற காரணத்தினால் ரசிகர்கள் ஏமாந்துவிடக்கூடாதே என்கிற ஒரே காரணத்திற்காகவும்.. தமிழ் மக்களுக்காகவும்.. பாரதமண்ணிற்காகவும்.. சொந்தகாசில் லத்திகா என்கிற படத்தை தயாரிக்க முன்வந்தார். அதற்கு பிறகு லத்திகா பெரும் வெற்றியடைந்து தமிழ்நாடு டாராந்துபோனதெல்லாம் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் வரலாறு..
பவர்ஸ்டாரின் இந்த வெற்றி ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்களையும் பிலிம் இன்டஸ்ட்ரியையுமே மூச்சுபேச்சில்லாமல் செய்திருக்கிறது. அண்ணாரின் அடுத்த படமான ஆனந்த தொல்லை இதனாலேயே பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
இதுதாண்டா டிரைலர் என்று சொல்லுமளவுக்கு அண்ணலின் இரண்டாவது படத்தினுடைய டிரைலர் வெளியாகியிருக்கிறது. இரண்டரை நிமிட டிரைலரே இந்த அளவுக்கு மிரட்டுதுன்னா இரண்டரை மணிநேர படம் வெளியானா தமிழ்நாடு என்னத்துக்கு ஆவறது என்கிற அச்சமும் நம் மனதில் உதிக்காமல் இல்லை! கூடங்குளத்தையே தாங்குகிற தமிழினம் இதை தாங்காதா? நம் தமிழ்மக்கள் மேல்தான் தலைவனுக்கு என்ன ஒருநம்பிக்கை. அதைதான் இந்த டிரைலரும் நமக்கு காட்டுகிறது.
உங்களுக்காக அந்த அதி அற்புத டிரைலர். டிரைலரையே இரண்டு மணிநேரம் கூட பார்க்கலாம்! அதிலும் குறிப்பாக 1:54 நிமிடத்தில் வருகிற சண்டைக்காட்சியை கண்டு அர்னால்டுக்கே குலைநடுங்கும். வாட் ஏ ஃபைட் ஆஃப் தி டுவென்டி பஸ்ட் செஞ்சுரி பாக்ஸ்.
டிரைலர் பார்த்தாச்சா.. அதை பார்க்காவிட்டால் இந்த பதிவின் நோக்கம் நிச்சயமாக நிறைவேறாது. பார்க்காமல் போக நேர்ந்தால் அது நீங்கள் செய்த புண்ணியாபலனாகவும் இருக்கலாம். இந்தப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது. விஜயின் நண்பன், தனுஷின் 3, ஆர்யாவின் வேட்டை என பிரபலங்களின் படங்களுக்கு நடுவே சந்துகேப்பில் சிந்துபாட தயாராகி வருகிறது ஆனந்ததொல்லை. படம் வெளியானால் விஜய் அஜித் சிம்பு தனுஷெல்லாம் ஃபீல்ட் அவுட் ஆகப்போவது உறுதியாக இப்போதே தெரிகிறது.
கடைசியாக ஒரு பிட்டு-
பிரபஞ்ச நாயகன் , நடிப்பு புயல் , அண்டம் வியக்கும் அண்ணன் பவர்ஸ்டாரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.
28 comments:
kerala super star Vani vishvanath is in Aanandha Thollai
kerala super star Vani vishvanath is in Aanandha Thollai
பார்க்காமல் போக நேர்ந்தால் அது நீங்கள் செய்த புண்ணியாபலனாகவும் இருக்கலாம். -- எங்க அலுவலகத்தில் youtube blocked :-)
என்ன கொடும சரவணா..!
ஏம்பா First வீடியோ முடிஞ்சகாட்டியும் 'First Night scene from a Telugu Movie' அப்படின்னு ஒரு வீடியோ லிங்க் ஓப்பன் ஆச்சு செமயா இருந்திச்சு. ரொம்ப டேங்க்ஸ் பா.
he he he he.......... enkal Rajini, vijay, ajitha thaal kooda mudiyathu. Yaaralum!
படம் பாக்க போகும் முன்னர் இன்சுரன்ஸ் எடுக்கனுமா?
அடுத்த படம் பவர்ஸ்டார்+குருமா கூட்டணி.
இணைந்த கைகள்- பார்ட்-2
-):
முடியல
:))))))))
//300நாட்களை கடந்து 3000 நாட்கள் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் லத்திகாவின் வரலாறு காணாத வெற்றியைத்தொடர்ந்து எங்கள் ஒரே சிங்கம் முகப்பேர் பெற்றெடுத்த தங்கம் பவர் இல்லாத தமிழ்நாட்டுக்கு கிடைத்த மின்சாரம்! பவர்ஸ்டார் நடித்த அடுத்த திரைப்படமான ஆனந்த தொல்லை வெளியாகிறது. லத்திகாவைப்போலவே இதுவும் சினிமா இன்டஸ்ட்ரியை ஒரு கலக்கு கலக்கும் என்பது நிச்சயம். பத்தாயிரம் நாட்கள் லட்சியம் பத்து நாளாவது நிச்சயம்!//
ஏற்கனவே இதற்கு முந்தைய பாராவில் சொல்லிவிட்டீர்களே? மீண்டும் அதே விசயம் இந்தப் பாராவில் வருகிறது பாருங்கள்.
யோவ் நீயுமா ?
//ஏம்பா First வீடியோ முடிஞ்சகாட்டியும் 'First Night scene from a Telugu Movie' அப்படின்னு ஒரு வீடியோ லிங்க் ஓப்பன் ஆச்சு செமயா இருந்திச்சு. ரொம்ப டேங்க்ஸ் பா.//
நண்பா இந்த வேலை வேறையா
அப்ப T R க்கு சரியான போட்டின்னு சொல்றீங்க.
பதிவே இவ்ளோ சிப்பா இருக்குதே!பிலிமு காட்டறீங்க...இன்னும் டமாசா இருக்கும்
பார்த்துட்டு வரல.
அடுத்த MP ரெடி போல.உங்க கைராசி அப்படி!
lathika ... manamkettavan .... i really laughed hard for that ...thirutu DVD paragraph ...mudiyala
//இவரு மெய்யாலுமே படித்து பட்டம் வாங்கிய ஒரிஜினல் டாக்டர்.// அவரு எம்.பி.பி.எஸ் டாக்டர் இல்ல. வர்மக்கலையோ எதுலயோதான்.
என் வலையில்;
ஹன்ஸிகா
அவர் அக்கு பஞ்சர்ல டாக்டர். அந்த விஷயத்துலயும் ஃபிலிம்தான் போல...
நல்ல வர்னநை நல்ல விமரிசனம் வாழ்த்துக்கள்
நல்ல வர்னநை நல்ல விமரிசனம் வாழ்த்துக்கள்
ரசிகர் மன்றத்துல சேர என்ன அடிப்படைத் தகுதி வேணும்? விண்ணப்பம் எங்க கிடைக்கும்?
:)
டிரைலர் = பவர்,பவர்,பவர்.
மச்சி இந்தப்படத்தையும் 300 நாளத்தாண்டி ஓட்டுவாருங்கிறேன்.
என்னா பெட்டு..?
What an Amazing man :))
//டிரைலர் பார்த்தாச்சா.. அதை பார்க்காவிட்டால் இந்த பதிவின் நோக்கம் நிச்சயமாக நிறைவேறாது. பார்க்காமல் போக நேர்ந்தால் அது நீங்கள் செய்த புண்ணியாபலனாகவும் இருக்கலாம்.//
தல இன்னொரு மேட்டர் விட்டுடீங்க இந்த ட்ரெயிலர் யூடியுப் சாதனையில் கொலவெறி பாடலை பின்னுக்கு தள்ளி விட்டதாம். நம்ம பவர் ஸ்டாரை ஒபாமா விருந்துக்கு கூப்பிட்டு இருக்காராம்.
பவர் ஸ்டாரை பாராட்டும் சங்கம்.
///VISA said...
ஏம்பா First வீடியோ முடிஞ்சகாட்டியும் 'First Night scene from a Telugu Movie' அப்படின்னு ஒரு வீடியோ லிங்க் ஓப்பன் ஆச்சு செமயா இருந்திச்சு. ரொம்ப டேங்க்ஸ் பா.////
ங்ணா அந்த வீடியோ வர்லீங்ணா..... கொஞ்சம் லிங் கொடுங்கண்ணா....
பலவருடக் காத்திருப்பிற்குப் பின் தமிழ்சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் அவதரித்துவிட்டதாகவே தோன்றுகிறது! ஜெய் பவர் ஸ்டார்...!
மிரண்டுட்டேன்...எல்லாருக்கும் தொப்பை நெஞ்சுக்கு கீழ தானே இருக்கும், சார்க்கு கழுத்துக்கு கீழ எல்லாமே தொப்பையாதான் தெரியுது.
Dr sir, panam niraya irundhaa enga kitta kodunga sir......
Dr sir, panam niraya irundhaa enga kitta kodunga sir......
Post a Comment