மிஸ்கின் தமிழ்சினிமாவுக்கு கிடைத்த மகத்தான இயக்குன ஆளுமை. அவருடைய படங்கள் இருபது வருடங்கள் கழித்து பள்ளிகளின் பாடத்திட்டங்களில் சேர்க்கும் அளவுக்கு சிறப்பானவை. இருபது வருடங்கள் கழித்து உலகமே கொண்டாடுகிற அளவுக்கு மிக சிறந்த படங்களை இயக்கி மிரட்டக்கூடியவர். அன்னார் படங்களை தென் மற்றும் வடை கொரியாவில் திருட்டு டிவிடியில் பார்த்து சுட்டு சுட்டு படமெடுக்கிறார்களாம்.
நாமெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்பே அதாவது சமகாலத்தில் வாழ்ந்து தொலைப்பதால் அவருடைய படங்களை இப்போதே பார்க்க வேண்டிய துர்பாக்கியநிலைக்கு ஆளாகியிருக்கிறோம். அவருடைய சமீபத்திய படமான முகமூடியைக்கூட அந்த வரிசையில் சேர்க்கலாம்.
இந்தப்படம் ஒரு சூப்பர் ஹீரோ படம் என்று விளம்பரங்களில் சொல்லிவிட்டதால் ஒரு சூப்பர் ஹீரோ சூப்பரான சூப்பர் ஹீரோ ஆகிறான். முதல் பாதியில் பேன்ட்டுக்கு மேலே ஜட்டியும் இரண்டாவது பாதியில் அதுவும் இல்லாமலும் வருகிறான். அதாவது முகமூடியில்லாமல் குங்பூ சண்டைபோட்டு டாஸ்மாக்கில் சரக்கடித்து பாட்டுப்பாடி தண்டச்சோறு தின்னும் சூப்பர் ஹீரோ! ஊருக்குள் வேலைவெட்டியில்லாமல் சூப்பராக சுற்றுகிறார். அப்படிப்பட்ட சூப்பரான சூப்பர் ஹீரோவான சூப்பர் ஹீரோ முகமூடி போட்டுக்கொண்டு சூப்பர் ஹீரோவாகி சூப்பராக ஊருக்கு நல்லது செய்கிறார். இதுதான் படத்தின் கதை. புரியவில்லையென்றால் மிஷ்கினுக்கே போன் போட்டு கேட்டுக்கொள்ளவும்.
இதற்கு நடுவில் அவன் காதலிக்கிறான். குங்பூ மாஸ்டரிடம் கேட்டு ஃப்ளாஸ்பேக்கில் நடந்ததை தெரிந்துகொள்கிறான். நல்ல நல்ல ஆணிகளை பிடுங்குவதற்காக சுத்தியல் வைத்திருக்கும் மலையாளத்துக்கார வில்லனை பழிவாங்குகிறான். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வாமல் காத்து அதர்மத்தின் கொறவளியை கடித்து துப்புகிறான்.
இந்தப் படத்தில் ஹீரோயினுக்கு ஹீரோ மேல் காதல் வருகிற அந்த அற்புதமான தருணம் படத்தினை சர்வோதயா தேச லெவலுக்கு நம்மை இட்டு செல்லுகிறது. ஹாலிவுட்டே காணாத காட்சி அது. சூப்பர் ஹீரோ என்னதான் சூப்பரான ஹீரோவாக இருந்தாலும் அவருக்கும் சுச்சா,கக்கா மாதிரியான இயற்கை உபாதைகள் வருவது இயல்புதானே. இருட்டுநேரத்தில் ஹீரோயின் எதற்காகவோ ஒரு காருக்கு பின்னால் மறைந்து அமர்ந்திருக்க எங்கிருந்தோ ஓடிவரும் சூப்பர் ஹீரோவுக்கு சுச்சா வர காருக்கு அருகில் போய் பேண்டை அவுக்கிறார். என்னாச்சி என ஒளிந்திருந்த ஹீரோயின் எட்டிப்பார்க்க.. எதையோ பார்க்க கூடாததை பார்த்துவிடுகிறார். ஹீரோ காட்டிய எதையோ கண்டு ஹீரோயினுக்கு உணர்ச்சி பொங்க காதல் பொங்கிவிடுகிறது. ஹீரோயினுக்கு காட்டிய அதை இயக்குனர் நமக்கு காட்டவில்லை. காட்டியிருந்தால் படம் இன்னும் பல உச்சங்களை தொட்டிருக்குமோ என்னவோ...
நந்தலாலா என்கிற படம் கிகிஜிரோ என்கிற பாரின் மொழிபடத்தின் அப்பட்டமான காப்பி என்று ஊரே தூற்றியபோது, மிஷ்கின் சொன்னார்.. என்னுடைய குரு அகிரா குரோசாவாவும், டாக்காஷி கிட்டானோவும்தான். கிட்டானோவுக்கான ட்ரிபூட்தான் அந்தப்படம் என்றார். ட்ரீபூட்டுக்கும் காப்பிக்கும் வித்தியாசம் தெரியாத இந்த நாட்டில் எப்படிதான் வாழ்வதோ என சலித்துக்கொண்டு தன் கையிலிருந்த மைக்கால் தன் தலையில் அடித்துக்கொண்டார்.
மிஷ்கினால்தான் ட்ரிபூட் என்கிற சொல்லே தமிழனுக்கு தெரியவந்தது. அவருடைய மற்ற படங்களை போல இல்லாமல் இந்த சிங்கிள் படத்தில் பல படங்களுக்கு ட்ரிபூட் செய்திருக்கிறார். பேட்மேன், ஸ்பைடர்மேன், ட்ரங்கன் மாஸ்டர், ஐபிமேன்2, சின்சிட்டி, கிக் ஆஸ், பைசென்ட்டனியல்மேன், ஷெர்லாக் ஹோம்ஸ், ஏதோ மோகம் ஏதோ தாகம் (ஷகிலா நடித்தது), அஞ்சரைக்குள்ள வண்டி (ஷகிலா நடிக்காதது) என எண்ணற்ற படங்களுக்கு ஒரே படத்தில் ட்ரிபூட் செய்திருப்பதற்காக தமிழ்நாடே அவருடைய திசைபார்த்து வணங்கவேண்டும். அவரை நிற்கவைத்து வரிசையில் போய் மாலை போடவேண்டும்.
சில இடங்களில் அது என்ன படத்துக்கான ட்ரிபூட் என்கிற கன்ப்யூசன் நமக்கு வந்துவிடக்கூடாது என்கிற ஒரே காரணத்திற்காக அவரே ஹின்ட்டுகளும் கொடுத்து விடுகிறார். டார்க் நைட் படத்தில் ஆஸ்கார் விருது வென்ற கேரக்டர் ஜோக்கர். கிளைமாக்ஸில் படத்தின் மலையாள கொள்ளைகார வில்லனான நரேன் ஜோக்கரை இமிடேட் செய்கிறார். அது நடக்கும்போதே இன்னொரு காட்சியில் சூப்பர் ஹீரோவின் நண்பர்கள் ஜோக்கர் வேடம் போட்டுக்கொண்டு ஏதோ செய்கிறார்கள். அடடா!
ஒரு காட்சியில் மம்மி டெக்ஸ்டைல் என்கிற பெயர்கொண்ட ஒரு மஞ்சப்பை காட்டப்படுகிறது. அது மம்மி படத்திற்கான ட்ரிபூட் என்று நானாகவே கண்டுபிடித்தேன்! வாரே வாஹ்!
எனக்கு பின்னால் அமர்ந்திருந்த அறிவே இல்லாத ரசிகன்தான் லூசு போல.. டேய் அந்த மிஸ்கின் வீட்லக்குற டிவிடி ப்ளேயர அடிச்சி உடைங்கடா என கத்தி கூச்சல் போட்டுக்கொண்டிருந்தான். ப்ளடி ஃபூல்ஸ்! அதாவது ரத்தங்கசியும் முட்டாள்கள்
படத்தில் ஒரு விஞ்ஞானி வருகிறார். இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான கிரிஷ்கர்னாட் அந்த விஞ்ஞானி பாத்திரத்தில் நடித்திருக்கிறார். முன்னர் ஒருமுறை அவரை கவர்னராக்கி நக்மாவுக்கு அப்பாவாக்கி காமெடி பண்ணிருப்பார் ஷங்கர். இதில் இவருக்கு விஞ்ஞானி வேடம். சூப்பர் ஹீரோ வீட்டு மொட்டைமாடியில் குடிசை போட்டு ரோபோட்டிக் ஆராய்ச்சிக்காக பழைய உடைந்துபோன ரேடியோவின் சர்க்யூட் போர்டுக்கு சால்ட்ரிங் வைக்கிறார்! வீட்டுக்குள்ளயே ரோபோ பண்ணை வைத்து ஈமுகோழிபோல நிறைய ரோபோக்களை செழிப்பாக வளர்க்கிறார். இது சூப்பர் ஹீரோ படம் மட்டுமல்ல சைன்ஸ்ஃபிக்சன் படமும் கூட என்பது அப்போதுதான் புரிகிறது. ஆனால் அதுபுரியாத தமிழ்சமூகம் படம் முடிந்த பின் காரி காரி துப்புகிறது! ச்சே!
இந்தப்படத்தை வெறும் சூப்பர் ஹீரோ படம் என்கிற ஒற்றை பரிமாணத்தில் அணுகுதல் தவறு. இது ஒரு சூப்பர் ஹீரோயிச,ரொமான்டிக்,டிடெக்டிவ்,காமெடியான,சென்டிமென்ட் ஓவரான ,த்ரில்லரில் அடங்கிய, ஆன்மீக, எம்ஜிஆர் போட்ட குங்பூ வித் மிக்ஸிங் ஆஃப்தி ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் அன்ட் பேட்மேன் இன்ட்டூ கிறிஸ்டோபர் நோலன் பார்த்தா தூக்குல தொங்குவான் திரைப்படம். டோன்ட் மிஸ் இட்!
மொத்தத்தில் இந்த முகமூடி ஒரு சோடாமூடி என்று சொன்னால் அது மிகையாகாது.
தலைப்பு உதவி - இயக்குனர் மிஸ்கின்.
64 comments:
அதி...
சிரிச்சு சிர்ச்சு...........
முடியலையா!!!
சின்ன திருத்தம். ஐபி மேன் அல்ல. ஈப் மான்.
சின்ன திருத்தம். ஐபி மேன் அல்ல. ஈப் மான்.
நந்தலாலா என்கிற படம் கிகிஜிரோ என்கிற /கொரிய/ மொழிபடத்தின் அப்பட்டமான காப்பி
Sakthimaan madhiri irukkuma?
நந்தலாலா என்கிற படம் கிகிஜிரோ என்கிற /கொரிய/ மொழிபடத்தின் அப்பட்டமான காப்பி
:)))))))
இதுவரையில் இவ்ளோ சீரியாஸாக லக்கி தான் எழுதுவார்.. நீங்க இந்த முறை ரொம்ப சீரியஸா ஆகிட்டீங்க போல..
தண்ணியக்குடிங்க ! :))
//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//
இது எதுக்கு நாங்க மிஷ்கினை திட்டிடுவோம்னா?
//கிறிஸ்டோபர் நோலன் பார்த்தா தூக்குல தொங்குவான் திரைப்படம். டோன்ட் மிஸ் இட்!//
ஹா ஹா ஹா
ஒரு காட்சியில் மம்மி டெக்ஸ்டைல் என்கிற பெயர்கொண்ட ஒரு மஞ்சப்பை காட்டப்படுகிறது. அது மம்மி படத்திற்கான ட்ரிபூட் என்று நானாகவே கண்டுபிடித்தேன்! வாரே வாஹ்!
ஒரு காட்சியில் மம்மி டெக்ஸ்டைல் என்கிற பெயர்கொண்ட ஒரு மஞ்சப்பை காட்டப்படுகிறது. அது மம்மி படத்திற்கான ட்ரிபூட் என்று நானாகவே கண்டுபிடித்தேன்! வாரே வாஹ்!
:-))))))))))))
>>
ஒரு காட்சியில் மம்மி டெக்ஸ்டைல் என்கிற பெயர்கொண்ட ஒரு மஞ்சப்பை காட்டப்படுகிறது. அது மம்மி படத்திற்கான ட்ரிபூட் என்று நானாகவே கண்டுபிடித்தேன்! வாரே வாஹ்!
அதிஷா ராக்ஸ்
மொக்கையான படம் என்றாலும் கூட இது மொக்கையான விமர்சனமாகவே படுகிறது.
முகமூடி என படத்திற்கு பெயர் இருப்பதாலே ரொம்ப மொக்கையாக என சொல்வதாக படுகிறது.
படம் மொக்கை என சொல்ல தேர்ந்தெடுத்தகாரணங்கள் தனிமனித காழ்ப்புணர்ச்சி எனலாம் :-))
ஏன் எனில் ஹீரோயின் என்பவரின் நாபிக்கமலம் பற்றி குறிப்பிடவேயில்லை, மேலும் சைஸ் எல்லாம் சொல்லாமல் சொல்வது, படத்தினை கவுக்க சொன்ன விமர்சனம் என நினைக்க தோன்றுகிறது.
விரைவில் படம் பார்ப்பது எப்படி விமர்சனம் எழுதுவது எப்படி என பதிவு போடுகிறேன். :-))
ஹீரோவ ஷேம் ஷேம் பப்பி ஷேமா பாத்தவுடன் ஹீரோயினுக்கு காதல் வர்றதெல்லாம் தமிழ் சினிமாவில் தான் சாத்தியம். அதுக்காக ஒரு சினிமாவை வைத்து இந்த அளவா காமெடி பண்ணுவது. இனி படம் எடுக்குற டைரக்டர் எல்லாம் “என் படத்தை வச்சு காமெடி கீமெடி பண்ணிட மாட்டீங்களே” என்று உம்மிடம் வந்து கேட்டாலும் கேட்கலாம்.
ஹீரோவ ஷேம் ஷேம் பப்பி ஷேமா பாத்தவுடன் ஹீரோயினுக்கு காதல் வர்றதெல்லாம் தமிழ் சினிமாவில் தான் சாத்தியம். அதுக்காக ஒரு சினிமாவை வைத்து இந்த அளவா காமெடி பண்ணுவது. இனி படம் எடுக்குற டைரக்டர் எல்லாம் “என் படத்தை வச்சு காமெடி கீமெடி பண்ணிட மாட்டீங்களே” என்று உம்மிடம் வந்து கேட்டாலும் கேட்கலாம்.
ரத்தங்கசியும் முட்டாள்கள் !!!!!!!! :))))))))
Semma revuew.. indha pasanga padam release agardhuku munnadi kodukara alapparai dhan thanga mudiyala bossu...
btw, one small correction... kikujiro japanese padam.. korean illa..
:-))))))))
பழிக்குப் பழி!
:))))
இன்றுமுதல் ‘பதிவுலகின் மிஷ்கின்’ என்ற பட்டம் தந்து தங்களை வாழ்த்துகிறேன். அதாவது காமெடி பண்றதுல அவரை மிஞ்சிட்டீங்க.
தமிழ் இயக்குனர்களில் பல போலிகள் உள்ளார்கள்.கே பாலச்சந்தர்,பாலு மகேந்திரா,படைப்பாளி கமலஹாசன்,பாலா,அமீர்,விஜய், அப்புறம் இந்த அலட்டல் மிஸ்கின் இவர்கள் வெட்கமில்லாமல் கால் மேல் கால் போட்டுக்கொண்டு நமக்கு புரியாத விதத்தில் உலக சினிமா என்று எதையோ பேசி நம் மண்டையை காய வைப்பார்கள்.மிஸ்கின் ஒரு 100% fake maker. இந்த பதிவை நீங்கள் மிஸ்கினுக்கு அனுப்பினால் நல்லது.
தமிழ் இயக்குனர்களில் பல போலிகள் உள்ளார்கள்.கே பாலச்சந்தர்,பாலு மகேந்திரா,படைப்பாளி கமலஹாசன்,பாலா,அமீர்,விஜய், அப்புறம் இந்த அலட்டல் மிஸ்கின் இவர்கள் வெட்கமில்லாமல் கால் மேல் கால் போட்டுக்கொண்டு நமக்கு புரியாத விதத்தில் உலக சினிமா என்று எதையோ பேசி நம் மண்டையை காய வைப்பார்கள்.மிஸ்கின் ஒரு 100% fake maker. இந்த பதிவை நீங்கள் மிஸ்கினுக்கு அனுப்பினால் நல்லது.
அதிஷா ,படம் பார்த்தவர்கள் ,இந்த பதிவையும் படித்தால்,டிக்கெட் செலவுக்கு திருப்தியாவது கிடைக்கும் .....நல்ல நகைச்சுவை ....மிஷ்கினுக்கு இது தேவை தான் ....என்ன பில்டப்பு கொடுத்தாரு .
sema kalaai....
சார் சத்தியமா சொல்றேன் ஏன் வாழ்க்கையில இப்புடி ஒரு விமர்சனம் படிச்சு வயிறு வலிக்க சிரிச்சு கண்ணில் இருந்து கண்ணீர் வந்துடுச்சு இது சூப்பர் ஹீரோ படம் இல்ல முழு நீள காமெடி படம்.செம விமர்சனம் ஆனா மிஷ்கின் சார் இதுக்கெலாம் பயபடுற இல்ல அவர்கிட்ட இன்னும் எட்டு வருஷத்துக்கு கதை இருக்காம்,நம்ம எல்லாரும் சேர்ந்து அவர எங்கயாவது ஜப்பான் கொரியானு நாடு கடத்திருவோமா
ஆம்பிளை சோடாவா, பொம்பளை சோடாவா ஆதீஷ்
அதிஷா.. பின்னிப்புட்ட சாமியோவ்..
paarraa
இந்தப்படத்தை வெறும் சூப்பர் ஹீரோ படம் என்கிற ஒற்றை பரிமாணத்தில் அணுகுதல் தவறு. இது ஒரு சூப்பர் ஹீரோயிச,ரொமான்டிக்,டிடெக்டிவ்,காமெடியான,சென்டிமென்ட் ஓவரான ,த்ரில்லரில் அடங்கிய, ஆன்மீக, எம்ஜிஆர் போட்ட குங்பூ வித் மிக்ஸிங் ஆஃப்தி ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் அன்ட் பேட்மேன் இன்ட்டூ கிறிஸ்டோபர் நோலன் பார்த்தா தூக்குல தொங்குவான் திரைப்படம். டோன்ட் மிஸ் இட்! ............masterpiece Super :)
இந்த BLOG க்கு இப்ப தான் வர்ரேன்,......ஒன்னு சொல்ல,.....இல்ல இல்ல ரொம்ப சொல்லிக்கிர ஆசப்படுரேன்<>>><>>,இந்த படத்த பாத்த உலகமகா ஜாம்பவான்,....களுக்கு,...ஒரு வேண்டு கோள்,,...இந்த BLOG ல உள்ள எல்லா comments ம் படிச்சேன்....சிரிப்புத்தான் வருது,......படத்த பாத்து இல்ல,......படத்துக்கு நீங்க எழுதுன comments அ பாத்து,.......அதாவது ஒருத்தர் இதுல் comments போட்ருக்காரு,...(நந்தலாலா என்கிற படம் கிகிஜிரோ என்கிற /கொரிய/ மொழிபடத்தின் அப்பட்டமான காப்பி)ன்னு அந்த படத்துல் sex ரீதியா எதாவது தப்பா காட்டிட்டாரா ,...இல்ல தாகாத________ பத்தி சொன்னாரா,....அது எப்டி பட்ட படம்......kkkkk..(BOSS நீங்க அந்த கொரியன் movie பாக்கலன்னு அப்பட்டமா தெரியுது),.......................காரிகன்னு ஒருத்தர் என்ன நா மிஷ்கின் ஒரு 100% fack maker ன்னு சொல்ராரு,....எதோ ,.....அவரு OSCAR வாங்கி குமிச்ச மாதிரி,.........பேசுராரு,..(ஒரு producer அ பிடிச்சு கதை சொல்லி,படத்துல் நடிக்குர வங்கள பிடிச்சி கதை சொல்லி,...அவங்கள நடிக்க வச்சி,..அத சென்ஞு இத சென்ஞு முழு படத்தை,.,.எடுத்து ரீலீஸ்பன்னா cool
A/c படம் பாத்துட்டு அது சரியில்ல இது சரியில்லன்னு சொல்ரீங்க,....இவ்ளோ சொல்றீங்களே,.......இப்டி சொல்ரீங்களே நீங்க வந்து படம் பன்ன வேண்டியது தான(கேட்டா அது எங்க வேலை இல்லை யேன்னு சொல்றது)அப்படிப்பாத்த இந்த மாதிரி comments நீங்க குடுக்கக் கூடாது,.....இந்த மாதிரி எழுதுறதுக்கு வேர ஆள் இருக்காங்க,......நீங்க சொல்ல வேண்டியது இல்லாம்,...படம் பத்தி மட்டும் தான் படம் படம் மட்டும் தான்<><><>?<> சும்மா வாய்லே வட சுடுர வேலைலாம் வேண்டாம்<><><><>BLOG இருக்குதுன்னு சும்மா எழுதாதிங்க<><><><><><>இன்னோரு தடவ பாருங்க அதுல எப்படி டெக்னிக் use பண்ணிருக்காங்க அதலாம்,....கேக்குரது இல்ல,.....ஒரே shot ல எத்தன scence அ முடிச்சுருக்காரு,....முக்கியமா ஒரு இந்தியர் அதுலையும் ஒரு தமிழ்நாட்டு காரரு(ஒரு LEGNT அதாவது bruce lee க்கு சமர்ப்பணம்)ன்னு சொல்லும் போதே,.....தெரிய வேணாமா இதுல உள்ள fight sence லாம் முக்கியத்துமானதுன்னு அத யெப்டி எடுத்துருக்கங்காளம் பாக்ரதுள்ள சும்மா அடிச்சுர்ரது,.....(கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன் படத்தோட பாட்டு மூனு
ஆனா மத்தலாம் musics)நீனச்சா இரண்டாம் பாதீல பாட்டப் போட்டு நிரப்பிருக்கலாம் வய்காத போதே தெரிய வேண்டாமா,............அவரு கரக்ட்டாதான் போராருன்னு,.........ஆனா ஒன்னு நம்மதான்யா ஒரு கலைங்கனும்,...வளர விடமாட்டுக்கோம்<><><><><><>
soooper machi....
ஓ! ஷகிலா படங்களில் இருந்து கூடக் காப்பி அடிக்கிறார்களா?
//இது ஒரு சூப்பர் ஹீரோயிச, ரொமான்டிக், டிடெக்டிவ், காமெடியான, சென்டிமென்ட் ஓவரான, த்ரில்லரில் அடங்கிய, ஆன்மீக, எம்ஜிஆர் போட்ட குங்பூ வித் மிக்ஸிங் ஆஃப் தி ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் அன்ட் பேட்மேன் இன்ட்டூ கிறிஸ்டோபர் நோலன் பார்த்தா தூக்குல தொங்குவான் திரைப்படம்.//
:))))))))))))))))))))))
அஞ்சரைக்குள்ள வண்டி படம் ஷகீலா நடித்தது அல்ல
இந்திரன் சந்திரன் ஜெயலலிதா நடித்தது
நாளையே இந்தப் பதிவு கல்லூரியில்/ நியு யார்க் பலகலையில் ஆராய்சிக் கட்டுரையில் பயன் படுத்தப் படும்.
தகவல் & வரலாற்றுப் பிழை வந்து விடக் கூடாதே என்ற கவ அலையுடன்
வழக்கம் போல் சிரித்து கொண்டே வாசித்து முடித்தேன்
பதிவு நல்ல நகைசுவையாக இருந்தது !!
மிஷ்கினை நிற்க வைத்து நாம் தான் வரிசையாக சென்று .......... கொடுக்க வேண்டும்.
கலக்கல்...
நீங்க சொல்ற அளவுக்கு படம் மோசம் இல்ல... தமிழ் சினிமால ஒரு புது முயற்சி... படத்துக்கு குங்பு வ யூஸ் பண்ணிட்டாங்க... அதுவுமே ஓவரா இல்லாம அளவா தான் இருக்கு.... சில இடத்துல கொஞ்சம் ஓவர் ரியாக்சன் காமெடி இருக்க தான் செய்யுது.... ஆனாலும் நீங்க சொல்ற அளவுக்கு மோசம் இல்ல....
ஒன்னு உங்களுக்கு படம் பாக்க தெரியல இல்லனா உங்களுக்கும் மிஸ்கின் கும் ஏதோ ஒரு பழைய பகை...
ur review is seriusly gud ! :)i agree dat the movie is worst ! completely waste of 162 mins ! but the way u talk about director mysskin is seriusly indecsent .... he is one of d finest filmmakers in tamil cinema ... there is no movie can be made widout an inspiration ... n u talkd about nandalala .. yes it is inspired from kikujiro... how many of u kno kikujiro before nandalala was made ??? we need these kind off movies to b made accordin to our environment ! n u mark dat NANDALALA was a flop ! the mopvie dint get its recognition! epa paaru item song , 200 pera ore aal adikramari padam paakaravangaluku.. mysskin oda yudham sei , anjaaathe , chithiram pesudhade ellam paakradhku apde dha irkum ! oru director a paaaratradhku yaarum varamatanga ,... kora solradhnaa 100 peru kelambidvanga ! mysskin is great director , great thinker , great actor!
ur review is seriusly gud ! :)i agree dat the movie is worst ! completely waste of 162 mins ! but the way u talk about director mysskin is seriusly indecsent .... he is one of d finest filmmakers in tamil cinema ... there is no movie can be made widout an inspiration ... n u talkd about nandalala .. yes it is inspired from kikujiro... how many of u kno kikujiro before nandalala was made ??? we need these kind off movies to b made accordin to our environment ! n u mark dat NANDALALA was a flop ! the mopvie dint get its recognition! epa paaru item song , 200 pera ore aal adikramari padam paakaravangaluku.. mysskin oda yudham sei , anjaaathe , chithiram pesudhade ellam paakradhku apde dha irkum ! oru director a paaaratradhku yaarum varamatanga ,... kora solradhnaa 100 peru kelambidvanga ! mysskin is great director , great thinker , great actor!
மொக்கை படத்துக்கு
அருமையான நகைச்சுவை பதிவு
"அதிஷாSaturday, September 01, 2012 6:50:00 PM
ஜாக்கி மிக அருமையான டெக்கினிக்கலி குட் விமர்சனம். திருஷ்டி போல ஒரு இடத்தில் மட்டும் சிறிய பிழை.
//கண்டிப்பாக ஒரு டாஸ்மார்க் கடை ஷாட்//
அது டாஸ்மாக் கடை சீன் என்று வந்திருக்க வேண்டும். தவறுதலாக ஷாட் என்று எழுதியிருக்கிறீர்கள். மற்றபடி நிறைய சினிமா வார்த்தைகள். அனைத்தும் அருமை. "
அதிலும் இந்த பின்னூட்டம் உங்கள் பதிவை விடவும்
உச்ச கட்ட காமெடி
நன்றி
இந்தப்படத்தை வெறும் சூப்பர் ஹீரோ படம் என்கிற ஒற்றை பரிமாணத்தில் அணுகுதல் தவறு. இது ஒரு சூப்பர் ஹீரோயிச,ரொமான்டிக்,டிடெக்டிவ்,காமெடியான,சென்டிமென்ட் ஓவரான ,த்ரில்லரில் அடங்கிய, ஆன்மீக, எம்ஜிஆர் போட்ட குங்பூ வித் மிக்ஸிங் ஆஃப்தி ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் அன்ட் பேட்மேன் இன்ட்டூ கிறிஸ்டோபர் நோலன் பார்த்தா தூக்குல தொங்குவான் திரைப்படம். டோன்ட் மிஸ் இட்!///
இதை எப்படி யோசிச்சு எழுதி இருபீங்கனு நினச்சி இன்னும் சிரிச்சிகிட்டே இருக்கேன் mudiyalai
Mr. அதிஷா,
மிஷ்கின் பல நாட்டு திரைப்படங்களை காப்பி அடித்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படம் எடுக்கிறார். நீங்களோ விமரிசனம் எழுதுகிறேன் என்று கைக்கு வந்ததை கிறுக்கி வைத்திருக்கிறீர்கள். முதலில் திரைப்பட விமரிசனம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எழுதியதைப் பார்க்கும் போது உங்களின் நோக்கம் மிஷ்கினைத் திட்டுவது மட்டும்தான் என்று தெரிகிறது.
அவர் பாட்டெழுதி பேர் வாங்குகிறார் (கொஞ்சம் காப்பி அடித்தாலும்). நீங்கள் குற்றம் கண்டுபிடித்துக்கூட அல்ல, அவரை திட்டியே பேர் வாங்க வேண்டும் என்று முயற்சி செய்கிறீர்கள்.
உங்கள் விமரிசனம் குறித்த என் விமரிசனம் — மகா மட்டம்.
இவுங்களை எல்லாம் அடக்க யாராவது சூப்பர் மேன் வந்தால் நல்லாயிருக்கும்.
Charuthana maana padam ithu. Ilakkiya ulagil thanakku thaan yelam theriyum yenbadhu pola thirai pada iyakkunargalil Miskin. Nalla velai charukkum miskinukkum ladaai. Illaina inneram charuvin adhivisuvasiyana neengal inneram soda moodiyaii aga sirantha padam yendru yeluthi irupeerkal.
Thani manidha kalpunarchi adhigamagivitta kalam idhu
தயவு செய்து ஆபிசில் இந்த பதிவை படிக்க வேண்டாம்னு ஒரு டிஸ்க்ளைமர் போடமாறு கேட்டு கொள்கிறேன்.
பக்கத்துக்கு சீட்ல இருந்து எட்டி பார்த்து "ஏன் இப்படி சிரிகிரிங்க" னு கேட்கறாங்க!!
விவிசி.
அதிஷா...
இந்த சீரீஸ்லயே.... கழுவி ஊத்தினதுலேயே ...நீர்தான்யா பெஸ்ட்..!!
ஜூப்பரு!
super review
அருமையான் விமர்சனம்
அருமையான் விமர்சனம்
அதிஷா இந்தப் பதிவை யாவரும்.காமில் பயன்படுத்திக்கொள்ளலாமா? 9952089604 தொடர்புகொள்ளுங்கள். மிஸ்கினின் டவுசரைக் கழட்டிவிட்டீர்கள். சிரிப்பு தாங்கமுடியவில்லை உங்கள் நையாண்டியில்.
அதிஷா இந்தப் பதிவை யாவரும்.காமில் பயன்படுத்திக்கொள்ளலாமா? 9952089604 தொடர்புகொள்ளுங்கள். மிஸ்கினின் டவுசரைக் கழட்டிவிட்டீர்கள். சிரிப்பு தாங்கமுடியவில்லை உங்கள் நையாண்டியில்.
அதிஷா இந்தப் பதிவை யாவரும்.காமில் பயன்படுத்திக்கொள்ளலாமா? 9952089604 தொடர்புகொள்ளுங்கள். மிஸ்கினின் டவுசரைக் கழட்டிவிட்டீர்கள். சிரிப்பு தாங்கமுடியவில்லை உங்கள் நையாண்டியில்.
நல்ல பதிவு நண்பரே வாழ்த்துகள்
நான் பாதி படம் பார்த்துகொண்டு இருகும்போத் உங்கள் ஞபகம் தன வந்தது...எப்படி இதை கிழிக்க போகிறீர்களோ என்று....ஏமாற்ற வில்லை அருமையான விமர்சனம் ...ஹிஹிஹி ..
நான் பாதி படம் பார்த்துகொண்டு இருகும்போத் உங்கள் ஞபகம் தன வந்தது...எப்படி இதை கிழிக்க போகிறீர்களோ என்று....ஏமாற்ற வில்லை அருமையான விமர்சனம் ...ஹிஹிஹி ..
//இது ஒரு சூப்பர் ஹீரோயிச,ரொமான்டிக்,டிடெக்டிவ்,காமெடியான,சென்டிமென்ட் ஓவரான ,த்ரில்லரில் அடங்கிய, ஆன்மீக, எம்ஜிஆர் போட்ட குங்பூ வித் மிக்ஸிங் ஆஃப்தி ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் அன்ட் பேட்மேன் இன்ட்டூ கிறிஸ்டோபர் நோலன் பார்த்தா தூக்குல தொங்குவான் திரைப்படம். டோன்ட் மிஸ் இட்!//
செம செம.. சிரிச்சி முடியலை
unga vimarsanam misskyn davusara kazhattuchinna unga followers comments innum konjam deep ....the below comments are really hilarious....
இது எதுக்கு நாங்க மிஷ்கினை திட்டிடுவோம்னா?
அஞ்சரைக்குள்ள வண்டி படம் ஷகீலா நடித்தது அல்ல
இந்திரன் சந்திரன் ஜெயலலிதா நடித்தது
தயவு செய்து ஆபிசில் இந்த பதிவை படிக்க வேண்டாம்னு ஒரு டிஸ்க்ளைமர் போடமாறு கேட்டு கொள்கிறேன்.
நான் பாதி படம் பார்த்துகொண்டு இருகும்போத் உங்கள் ஞபகம் தன வந்தது...
இந்த படம் சூப்பர் ஹீரோ ஸ்கூப் மூவினு சொல்லீருந்த நல்லா ஓடும்
நான் மகாலேட்டு போல..பட்டாசான விமர்சனம்..
FINAL TOUCHING SUPERO SUPER BOSS
FINAL TOUCHING SUPERO SUPER
படம் போர் என்பது உண்மை; ஃபாண்டசியா எடுக்கலாமா ரியாலிடியா எடுக்கலாமான்னு ஒரு குழப்பத்திலேயே படத்த எடுத்து முடிச்சிட்டாரு. ரிலீசுக்கு முன் மிஷ்கின் ரொம்ப பந்தா பண்ணினார் என்பதும் உண்மை. `ஒரு வேளை ஜீவா இந்த படத்துக்கு ஒத்துக்கலைன்ன, வேற யாரைக் கூப்பிட்டிருப்பீங்க' ன்னு ஒரு கேள்விக்கு, `I made him an offer he can't refuse' னு காட்பாதர் டயலாக்கை மிஷ்கின் அடிச்சதை நானும் எரிச்சலோடு பார்த்தேன்.
`பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்' என்பது முக்கியம்தான்.. தெளிவில்லாம பெயர்க்கும்போது, குழப்பமா ஆய்டுது..
இந்தப் பதிவுகள் (சினிமா விமா்சனங்கள்) மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீா்கள் என்பது புரியவில்லை. இதற்குப்பதில் ஏதேனும் பயனுள்ள செய்திகளை பதிவு செய்யலாம். படத்தையும் பார்த்து, அதற்கு விமா்சனமும் செய்யும் நேரத்தை ஏதேனும் ஆக்கப்பூா்வமனா செயல்களுக்கு பயன்படுத்துங்கள்.
Post a Comment