01 August 2013

கால்சென்டர்களில் கலையும் கனவுகள்ஊர்க்கார பையன்கள் சிலர் சென்னைக்கு வந்து தங்கி வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள். எல்லோருமே சென்ற ஆண்டு பொறியியல் படிப்பை முடித்தவர்கள். வெவ்வேறு கல்லூரிகளில் மெக்கானிக்கல்,ஈசிஈ,எலக்ட்ரிகல் படித்தவர்கள். நல்ல மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காமல் வாழ்வின் மீது முழுக்க முழுக்க அவநம்பிக்கையை சுமந்தபடி சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களில் எனக்கு மிக நெருங்கிய நண்பனின் தம்பியும் ஒருவன். அவனுக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறதென்றும் அதை கொடுக்கவும் நண்பன் சொல்லியிருந்தான். பணம் கொடுப்பதற்காக தம்பியின் அறைக்கு சென்றிருந்தேன். அந்த பையன்களோடு சில மணிநேரங்கள் பேசியபோது மிகுந்த மனவருத்தத்தோடு பேசினர்.

கடந்த ஒரு வருடமாக வேலை தேடிக்கொண்டேயிருக்கிறார்கள் இந்த பையன்கள். இன்னும் எங்கும் உருப்படியான வேலை கிடைத்தபாடில்லை. சில சாஃப்ட்வேர் கோர்ஸ்களை படித்துவிட்டு சாஃப்ட்வேர் கம்பெனிகளிலும், ஒருசிலர் துண்டுதுக்கடா கால்சென்டர்களில் சொற்ப சம்பளத்துக்கு வேலை பார்க்கிறார்கள். மற்ற நண்பர்களும் கூட கால்சென்டர்களில்தான் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள். சாஃப்ட்வேர் கம்பெனிகளில் சுத்தமாக வேலைக்கு ஆளே எடுப்பதில்லை என்பதுபோல பேசினர்.

இணையம்தான் இவர்களுக்கான தேடுதலுக்கான இடமாக மாறிப்போயிருக்கிறது. இரவுபகல் பாராமல் இணையத்தில் வேலை தேடுகிறார்கள்! எப்போதும் ஃபேஸ்புக்கிலேயே பழியாய் கிடக்கின்றனர். தினமும் எங்காவது வாக் இன் இன்டர்வியூவில் கலந்துகொள்கிறார்கள். தினமும் ஹிந்துபேப்பர் மற்றும் வோர்ட் பவர் மேட் ஈஸி வாங்கி படித்து ஆங்கில அறிவை அவசரமாக வளர்க்க நினைக்கிறார்கள். ஆனாலும் வேலை கிடைத்தபாடில்லை.. என்னப்பா ஆச்சு என விசாரித்தேன்.

கால்சென்டர்களில் இப்போதெல்லாம் நன்றாக படித்து மதிப்பெண் பெற்றவர்களை வேலைக்கு எடுப்பதில்லை என்றனர். ஒரு பிரபல பிபிஓ நிறுவனம் 70சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களைதான் வேலைக்கு எடுத்துக்கொள்கிறார்களாம். அரியர்ஸ் இருந்தால் உங்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கிறார்களாம் சில நிறுவனங்கள். பத்து அரியர்ஸ் இருந்தால் உடனே அப்பாயின்மென்ட் ஆர்டரை கொடுத்துவிடுகிறார்களாம்!

நல்ல மதிப்பெண் பெற்ற பையன்கள் ஆறுமாதம் ஒருவருடத்தில் ஓடிவிடுவதால் இப்படி ஒரு ஏற்பாடு என்றான் ஒருதம்பி. ஒவ்வொரு கம்பெனியிலும் எபவ் செவ்ன்டி பர்சென்ட்லாம் கிளம்பலாம்னு சொல்லும்போது எவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சி மார்க் வாங்கினோம் என்ன பிரயோஜனம்னு தோணும்ண்ணா சமயத்துல அழுகையே வந்துடும் என்று சோகமாக சொன்னான் ஒரு தம்பி. ப்ளஸ்டூ படித்திருந்தால் கூட சில நிறுவனங்கள் போதும் என்று என்ஜினியரிங் படித்தவர்களை விரட்டிவிடுகிறார்களாம்.

சில நிறுவனங்களில் நைட்ஷிப்ட்டுக்கென ஆண்டுக்கணக்கில் கான்ட்ராக்ட் போட்டு ஆளெடுக்கிறார்கள். எப்படித்தெரியுமா அசல் சான்றிதழ்களை வாங்கிவைத்துக்கொண்டு இரண்டாண்டு மூன்றாண்டு என கான்ட்ராக்ட் போட்டுக்கொண்டுதான் வேலை கொடுக்கப்படுகிறதாம்.
அப்படி என்னதான் இந்த கால்சென்டர்களில் சம்பளம் குடுக்கறாங்க என்று விசாரித்தால் வெறும் ஐந்தாயிரமும் ஆறாயிரமும்தான் கிடைக்கிறது.

சரி துறைசார்ந்த வேலைகளுக்கு போனால்தான் என்னவாம்? ஊர் உலகத்தில் கால்சென்டரை விட்டால் வேறு வேலையே இல்லையா?
‘’எல்லா இடத்துலயும் மினிம்ம் டூத்ரீ இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் கேகறாங்க.. அப்படியே வேலை கிடைச்சாலும் அதுலலாம் க்ரோத் ரொம்ப ஸ்லோனா... கோயம்புத்தூர்லயே மெக்கானிக்கல்க்கு சில வேலைகிடைக்கும்.. நாலாயிரம் ரூவாதான் குடுப்பாங்க.. இரண்டு வருஷம் ஆகும் பத்தாயிரம் ரீச் பண்ண.. அதே கால்சென்டர் சாஃப்ட்வேர்னா இரண்டுவருஷத்துல ட்வென்ட்டி ஃபைவ் கிராஸ் பண்ணிடலாம்’’ என்றான் ஒருபையன். அவன் சொல்வதற்கிணங்க அறையில் ஒரு பையன் எட்டாயிரம் சம்ளத்தில் வேலைக்கு சேர்ந்து குறைந்தகாலத்தில் இன்று பதினாறாயிரம் பெறுகிறான்!

எல்லோருக்கும் துறைசார்ந்த வேலைகளை தேடுவதில் ஒரு சலிப்பும் எரிச்சலும் இருக்கிறது. அதோடு துறை சார்ந்த வேலைகளை பூதக்கண்ணாடி வைத்துதான் தேடவேண்டியதாகவும், அனுபவமில்லாதவர்களுக்கான வாய்ப்புகள் குறைவாகவுமே உள்ளன. எங்கும் நிறைந்திருக்கிற கால்சென்டர்களில் வேலை தேடுவது சுலபமாக இருக்கிறது. கொஞ்சம் ஆங்கிலம் மட்டும் தெரிந்திருந்தால் வேலை கிடைத்துவிடுகிறது. இதுபோக அழகான பெண்கள், நிறைய பணம், நுனிநாக்கு ஆங்கிலம், லைஃப் ஸ்டைல் என வேறு காரணங்களும் கடந்த பத்தாண்டுகளாக தொடரும் கால்சென்டர் மோகத்துக்கு காரணமாக நீடிக்கிறது. தம்பியின் நண்பர்களில் சிலர் ஊரில் இருக்கிற பொறியியல் கல்லூரிகளிலும் பாலிடெக்னிக்குகளில் லெக்சரராக பணியாற்றுகிறார்கள். ஆனால் சம்பளம் சாதாரண எல்கேஜி டீச்சர்களுக்கு கொடுக்கப்படுவதைவிடவும் மிகமிகக் குறைவு!

இவர்களுடைய குடும்பங்களை பர்சனலாகவே நான் அறிவேன். எல்லோருமே லோயர் மிடில்கிளாஸ் குடும்பங்களை சேர்ந்தவர்கள். எல்லோருமே மிகுந்த கஷ்டங்களுக்கு நடுவே கடன்வாங்கியும் நகைகளை அடகுவைத்தும் கல்விக்கடன் வாங்கியும் அலுவலகத்தில் லோன்போட்டும் என்ஜினியரிங் படிக்க வைத்திருக்கிறார்கள். எல்லோருக்குமே பையனை எப்படியாவது மிகப்பெரிய பணக்காரனாக்கிவிடும் கனவு நிறைந்திருக்கிறது. அந்த கனவுகளையே இந்த பையன்களும் சுமந்தபடி திரிகிறார்கள்.

கஷ்டப்பட்டு படிக்க வைக்கிற பெற்றோர்கள் பையன்கள் படித்து முடித்ததும் சம்பாதிக்க தொடங்கிவிடுவான் கடன்களை அடைத்துவிடுவான் என எதிர்பார்க்கின்றனர். வீட்டில் பையன்களை தொடர்ந்து நச்சரிக்கவும் ஆரம்பித்துவிடுகிறார்கள். பாரு அந்த பையன் எவ்ளோ சம்பாதிக்கிறான் இவன் எவ்ளோ காசு அனுப்பறான் என தொல்லை தாங்கமுடியாமல் பையன்கள் உடனடி உபாயமாக இந்த கால்சென்டர்களில் விட்டில் பூச்சிகளைப்போல வந்து விழுவதை பார்க்க முடிகிறது. வீட்டில் வெட்டியாக இருப்பதைவிட இந்த வேலை கொஞ்சம் டீசன்டாகவும் அதேசமயம் ஜாலியாகவும் இருப்பதாகவே கருதுகின்றனர். ஒருமுறை இந்த கால்சென்டனர்களில் காலெடி எடுத்து வைத்தவன் பிறகு அவன் படித்த துறைசார்ந்த வேலைக்கு போகவேமாட்டான் என்பதே வரலாறு. இருந்தும் உடனடி நிவாரணியாக இந்த கால்சென்டர்களே கைகொடுக்கின்றன.

இந்த பையன்களிடம் என்ஜினியரிங் குறித்த வெறுப்பு மனது முழுக்க நிறைந்துகிடக்கிறது. அதில் எடுத்த மதிப்பெண்ணும் அதற்காக கொட்டிய உழைப்பும் வீண் என்று கருதுகின்றனர். அதில் உண்மை இருக்கவே செய்கிறது. தன் தங்கைக்கு கவுன்சிலிங்கில் சீட் கிடைத்தும் வீட்டில் சண்டைபோட்டு ஆர்ட்ஸ் அன் சைன்ஸ் கல்லூரிக்கு அனுப்பியிருக்கிறான் ஒரு தம்பி. அப்படி ஒருவெறுப்பு என்ஜினியரிங்கின் மேல்! இதே என்ஜினியரிங் கல்லூரிகளில் என்ஜினியரிங் முடித்து அதற்குமேல் லட்சங்களை கொட்டி எம்பிஏ முடித்துவிட்டு மார்க்கெட்டிங்கில் சொற்ப சம்பளத்துக்கு மாடாக உழைக்கிறவர்களின் கதை தனி!

‘’இந்த வருஷமும் கவுனிசிலிங்குல மெக்கானிக்கல்தான் அதிகபேர் எடுத்திருக்காங்கண்ணா.. பாவம் என்ன பண்ணப்போறாங்களோ’’ என்று வருத்தப்பட்டான் ஒரு தம்பி. அவனும் மெக்கானிக்கல் படித்தவன்தான்.

குறுக்குவழியில் பணக்காரராக வெறிபிடித்தாற்போல லட்சக்கணக்கில் காசைக்கொடுத்து வீடுதோறும் வளர்க்கப்பட்ட ஈமுகோழிகளை நினைவூட்டுகின்றனர் இந்த பையன்கள். இன்று ஏமாந்துபோய் தலையில் துண்டைப்போட்டுக்கொண்டு வளர்த்துவிட்ட ஈமுவை கொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கிற அதே நிலையில்தான் இந்த இன்ஜினியர்களின் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.
21 comments:

Anonymous said...

core engineering படித்த மாணவர்களுக்கு கேம்பஸில் வேலை கிடைக்கவில்லை என்றால் எந்த ஒரு பெரிய நிறுவனமும் தற்போது புதியவர்களுக்கு வாய்ப்பு தருவது இல்லை...சிறிய கம்பெனியி இரண்டு ஆண்டு வேலை செய்து தொழில் கற்று கொள்ளும் ஆர்வம் இல்லை...சிறு நிறுவனங்களில் சம்பளம் குறைவு வசதிகளும் குறைவு....ஆனால் இவர்கள் ஏசி மற்றும் ராஜ தோரணை வேலை பார்க்கலாம் என்ற கனவில் வந்தவர்கள்...first GAIN EXPERIENCE AND THEN GAIN FROM THE EXPERIENCE...THIS IS THE MANTRA...சப்வேர் கம்பெனிகளை விட கோர் இன்ஞ்னியர்களும் நல்ல சம்பளம் வாங்குகிறார்கள்...இவர்களுக்கு தேவை சற்று பொருமை,அர்பனிப்பு..கடின உழைப்பு...இருந்தால் கன்டிப்பாக ஜெயிக்கலாம்...நல்ல பதிவு வாழ்த்துக்கள்....@jokinjey

கலியபெருமாள் புதுச்சேரி said...

neeya naana nigazhchiyil kooda orunaal intha topic than pesinaargal..evvalavu naal ippadiye pogum enru paarkkalam..

அமுதா கிருஷ்ணா said...

எப்போது தான் இந்த மக்களுக்கு இஞ்சினியரிங் மோகம் போகுமோ. தெரியலை.

Arun Kumar said...

Well said @amuda. TN is oversaturated with engg colleges. After graduation i have no idea where they will go if they did't selected in campuss interview.

phantom363 said...

very profound and impacting post. i hope you don't mind i shared it elsewhere (after acknowledging your authorship ofcourse). good one. i dont know frankly what the solution is....

Dev said...

பெரும்பாலும் இந்தியர்களுக்கு தங்கள் பெறுமதி தெரிவதில்லை. இங்கே மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பான்மை நன்கு படித்த இந்தியர்கள் மற்றைய நாட்டினரை விட குறைந்த சம்பளமே பெறுகின்றனர். அதுவும் வருடக்கணக்காக சம்பள உயர்வு எதுவுமின்றி. இதனால் பாதிக்கப்படுவது அவர்கள் மட்டுமன்றி அந்தந்த துறையை சேர்ந்த பலதரப்பட்டவர்களுமே.
போராட்ட குணம் ரொம்பவே குறைந்து ஏதோ கிடைப்பது கிடைத்தால் போதும் என்று தங்கள் தராதரம் தெரியாமலேயே இருக்கிறார்கள்.......

விஜயகுமார் said...

இப்பொழுது பெஸ்ட் காலேஜ் இல் இருந்து மட்டுமே கம்பனிகள் ஆள் எடுக்கிறார்கள்

இராய செல்லப்பா said...

மிகச் சரியானதொரு தலைப்பில் எழுதியிருக்கிறீர்கள். கால்செண்ட்டர்களும் சிறு மென்பொருள் கம்பெனிகளும் தான் எஞ்சினியரிங் முடித்து வருபவர்களின் இலக்காக இருக்கிறது. இதன் முதல் காரணம், கஷ்டப்பட்டு உழைக்க யாரும் தயாராக இல்லை என்பது தான். இரண்டாவது காரணம், ஏ.சி. அறையில், வேளைக்கு காப்பி, டீ, பிஸ்கட், ஸாண்ட்விச், இலவசமாக இணைய வசதி, உற்சாகமூட்ட தன் வயதொத்த இளம்பெண்கள்- இரண்டு வருடம் அனுபவம் கிடைத்து விட்டால் எப்படியும் 15 முதல் 20 ஆயிரம் நிச்சயம் கிடைக்கும் என்ற உறுதி – இவைகளின் கூட்டு. (நீங்களே கூறியிருக்கிறீர்கள்). அதே நேரம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஆட்டு மந்தை போல வெளிவரும் லட்சக்கணக்கான எஞ்சினியர்களுக்கு வேறு எந்தத் துறையில் இவ்வளவு வேலை வாய்ப்புகள் இருக்கின்றன?

Anonymous said...

Let us do a 5-why analysis (as usual a Japanese technique).

Q. Why no/less campus recruitment?
A. Demand is less.

Q. Is the demand really so low?
A. Well not really but is coming down.

Q. Tell me the intake planned for this year.
A. Well it won't be in 30K, 40K that the TCS, Infys and Wipros use to take earlier. It may be in 2K by each of these companies.

Q. But, are they are not supposed to bring freshers to reduce cost.
A. Look it is 2 parts. #1. Engg college graduate supply is overwhelmingly more than what the industry demand is. This year 80K seats are vacant in TN alone. #2. Customer is squeezing the balls of IT service providers to cut cost. Gone are the days of yearly billing increase. Hence companies are forced to replace high cost engg graduates with low cost B.Sc/B.Com /diploma students.

Q. But, aren't they hi-tech work that needs engineers?
A. Look again in 2 parts. #1. The *predominant* work in service companies are not *rocket science*. It is predictable,repeatable work. #2. The engg. graduates churned out nowadays are more mechanics than engineers. Why to pay premium of engineers price to mechanics?

Q. But, aren't these folks suppose to have high knowledge, aptitude and hard-working?
A. Look, let us focus on knowledge and aptitude first. Just check how many of these engineers can explain simple things. No.. not how computer works but how a car engine works (to a mech) or how a DC is different from AC (to a EEE) or how a signal goes from one cell to another (to an ECE). Simple na? but many candidates fumble and mumble on their core engineering. And a comp.sci engineer would not know how to add a RAM chip in additional slot inside his desktop in his entire 4 year. Hard-work? Least said the best.

Q. But, are these chaps to be fully blamed?
A. Not really. Parents egg them to join engg *thinking* IT field will suck them and pay handsomely. Next, whole education system makes them to be sheeps rather than horses or tigers. Of course there are few outliers, but.. they are just outliers.

Q. No fault with students?
A. With lakhs of guys looking for *real project*, are there enough companies that an offer real practical work. Well, almost all *buy* bounded project work (with no remorse) or the implications. Sad but true.

Q. So do you see no fault with IT companies? Are they not blamed at all?
A. Well they do have their share of screw-ups. They treat BE(C.S), M.C.A and M.Sc (C.S) in that order. So pure science gets low priority. All of them study the same (well almost) Ops Sys, (R)DBMS, Dat Struc, Digit Elect, Discre Math, Networking, Simulation, Comp Grap, OOAD, C++(or Java or C#) etc.

And these guys are put into coding
projects and non-computer folks are put into packaged products like SAP, CRM, SOA, BPM, PCM, naanga-pudusu or neenga-palasu. Now these *niche technologies* are paid better than regular C#/Java/COBOL/C++/Oracle folks. See what nonsense is this?

Q. How about just recruiting BE(C.S), M.C.A and M.Sc (C.S) folks?
A. Nah. Neither the service industry nor the education industry will allow. Companies need neither a brittle nor a clay. They need somebody like a plastic that can be bend with little heating.

Desingh said...

கால் சென்டரில் அதிகம் நடக்கும் ஒரு விஷயம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்... எதோ ஒரு ஊரில் இருந்து டிகிரி முடித்து விட்டு பணத்திற்காக BPO கம்பெனிகளில் நுழைகிறார்கள். ஆண்களை விடுங்க, ஆனா பெண்கள் பாவம் அவர்களின் வாழ்க்கை தரம் குறைந்து முற்றிலும் வேறு பாதையில் மாறிவிடுகிறது. 99% இந்த மாதிரி கம்பெனிகளில் அதிகம் நடக்கிறது, அதற்கான வாய்ப்பும் எளிதாக கிடைகிறது. தவறான பாதை என்று தெரிந்தும் சரியாக அதே பள்ளத்தில் விழுகிறார்கள்.
இந்த மாதிரி கால் சென்டர் கம்பெனிகள் இந்தியாவிலிருந்தே தூக்க வேண்டும்.
இது மட்டும் இல்லை, சரியான சம்பளம் தருவதில் தாமதம்.
பெண்கள் கட்டாயமாக சுற்றுலா வரவேண்டும்.
ஊர் சுற்ற வேண்டும். சினிமா செல்ல வேண்டும். இல்லை என்றால் அது ஒரு கௌரவ பிரச்சனையாக சொல்கிறார்கள்.
இதே எல்லாம் என் அனுபவத்தில் சொல்கிறேன்.

Ibrahim A said...

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அல்லது படிக்க விரும்புபவர்களுக்கு சில அட்வைஸ்

1. கேம்பஸ்ல் கம்பனிகளை வரவழைக்கும் கல்லூரிகளாக பார்த்து சேர வேண்டும் (பணம் கொடுத்தாவது...,வேறு வழியில்லை) .பின்னாளில் இதற்க்கு நல்ல பலன் உண்டு. கேம்பஸில் ஆட்களை எடுப்பது இப்போது குறைந்து விட்டது எனினும் தேர்வாகும் வாய்ப்புகள் அதிகமே.
கேம்பஸில் தேர்வாகுபவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்பது உப செய்தி.

2.அது போல கம்ப்யூட்டர் சயின்ஸ்,IT யை கல்லூரியில் தேர்வு செய்தால் சாப்ட் வேர் துறைக்கு மட்டும் தான் போக முடியும் ஆனால் ECE,EEE யை தேர்வு செய்தால் சாப்ட் வேர் மட்டுமல்லாமல் நெட்வொர்கிங் முதலான கோர் துறைக்கும் போக முடியும்.இதில் இரண்டு வாய்ப்புகள் உள்ளன.

3.சரி வேலை இல்லாமல் வெளியே வந்தால் என்ன செய்வது?

--முதலில் நம் படிப்பு சம்பந்தமான அறிவை நன்கு பெருக்கிக்கொள்வது.Interview வரவில்லையே என்று ஏங்குவதை விட,ஏதாவது ஒன்றே ஒன்று வந்தால் அதில் தேர்வு பெறும் திறன் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
--நிறைய job sites அதில் உருப்படியாக இருக்கும் ஒன்றிரண்டில் பணம் கட்டி பதிந்து வைப்பது. Naukri,Monsters,Timesjobs,Freshersworld etc.
--நம்முடைய படிப்புக்கு சம்பந்தமுடைய எதாவது ஒரு கோர்ஸ் படிப்பது உதாரணமாக ECE படித்தவர்கள் Networking,CCNA,Protocol Testing இப்படி ஏதாவது ஒன்றை படிப்பது.
--பசியோடு கூட இருக்கலாம் எந்த காரணம் கொண்டும் கால் சென்டரில் கால் வைக்காமல் இருக்க வேண்டும்.வாழ்கையை மிக மோசமானதாக மாற்றி விடக்கூடும் அது.
--course படிப்பதாக இருந்தாலும்,இன்ஜினியரிங் கல்வி சம்பந்தமாக எதை படிப்பதாக இருந்தாலும் பனிரெண்டாம் வகுப்பு மாணவனை போல வெகு தீவிரமாக படிக்க வேண்டும்.
--அது போல எந்த கம்பெனி எப்போது எங்கு இண்டர்வியூவிற்கு அழைத்தாலும் தயங்காமல் போய் நிற்க வேண்டும்.உதாரணமாக சென்னையில் இருக்கும் உங்களுக்கு பெங்களூரில் ஒரு சிறு கம்பனியிடமிருந்து கால் லெட்டர் வந்தால் தவிற்காமல் போய்விட வேண்டும்.ரூமெடுத்து தங்கி வேலை தேடும் இளைஞர்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனை சோம்பேறித்தனம் தான்.அதை விட்டொழிக்க வேண்டும்.
--படிப்புக்கு தகுந்த வேலை மட்டும் கிடைத்தால் போதும் சம்பளம் எவ்வளவு என்றேல்லாம் பார்க்ககூடாது.ஆரம்பத்தில் நாய் படாத பாடு பட்டால் நிச்சயம் நன்றாக இருக்கலாம்.அது போல உலக அளவில் economy ரொம்பவும் படுத்து விட்டது,அதனால் வேலை வாய்ப்புகள் ரொம்பவும் குறைந்து விட்டது ,இந்த நிலை தான் இனி தொடரப் போகிறது என்கிறார்கள்.

--வேலையில் இருக்கும் நண்பர்கள்,உறவினர்கள்,நண்பர்களின் அண்ணன்கள்,உங்கள் கல்லூரி சீனியர்கள் இவர்களின் தொடர்பிலேயே இருக்க வேண்டும்.கூச்சப்படாமல் அடிக்கடி அவர்களை தொடர்பு கொண்டு வேலை வாய்ப்பை பற்றி கேட்கவேண்டும்.ஏனென்றால் இப்போது நிறைய கம்பனிகள் செலவை மிச்சம் பண்ண walk-in,campus என்று போவதில்லை,reference படியே ஆட்களை எடுத்துக்கொள்கின்றார்கள்.
உதாரணமாக ஒரு xyz கம்பெனியில் , abc டிபார்ட்மென்டில் ஒரு ஜூனியர் எஞ்சினீர் தேவைப்படுவதாக வைத்துக்கொள்வோம் ,கம்பனி நிர்வாகம் அதே டிபார்ட்மென்டில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அறிவிப்பு செய்து அவர்கள் ரெபர் செய்யும் ஆட்களை எடுத்துக்கொள்ளும்.இதனால் கம்பனிகளுக்கு பெரும் செலவு மிச்சம்.

நன்றி
இப்ராஹீம்
பெங்களூர்.

Anonymous said...


சத்தியம் ! சத்தியம் !! சத்தியம் !!!

Dr.Hemalatha M Arch,
Sr.Professor,
DSAJ College & University.

Anonymous said...

முகமூடியின் அவசியத்துடன் கருத்திடுவதர்க்கு மன்னிக்கவும்!


சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பே இன்றைய நிலையினை கணித்து என்னை ஆலோசிக்க வரும் அனைத்து குடும்ப நண்பர்களின் சகோதரர்களுக்கும் மகன்களுக்கும் நான் சொன்னது இது .... கடந்த எட்டு வருடங்களாக பெரும் கார்பரேட் நிறுவனங்களின் ஆலோசகராகப்பநிபுரிகிறேன்!!!

கூடிய விரைவில் கடந்த ரெசசனைக் காட்டினிலும் மிகப் பெரிய ஒன்று நமது பணிசூலளைத் தாக்கும் என்பது நிச்சயம் இப்பொழுதே மிகப் பெரும் கார்பரேட் நிறுவனங்களில் பதினைந்து சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பனி இல்லாது பெஞ்ச்சில் அமர்ந்துள்ளனர், அதுமட்டும் இல்லாது இந்த வருடம் பெரும்பான்மையான கார்பரேட் நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்கு மொத்தமே ஒன்றிலிருந்து இரண்டு சதவீத ஊதிய உயர்வே அதாவது சுமார் 1000 ரூபாயிலிருந்து 2500 அதிகபட்ச்ச்சமாக ஊதிய உயர்வினை அளித்து உள்ளனர்.......

என்னுடைய எதிர்பார்ப்பின்படியும் கணிப்பின் படியும் அநேகமாக இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டிற்குள் 2015 கணிப்பொறித் திரை சார்ந்த அனைத்து கார்பொரேட் நிறுவனங்களும் மிகப் பெரும் வீழ்சியை சந்திக்கும்.... விளைவுகள் மிக மிக மோசமாக நமது கற்பனைக்கு மிகவும் அப்பாற்பட்டதாக இருக்கலாம்!!! மீண்டும் ஒரு தலைமுறை விவசாயம் மற்றும் குடும்பத் தொழில் சார்ந்த பணிகளுக்குத் திரும்ப நேரிடும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

For IT Opening in chennai, please call me(Fresher/Experience)

9791036735
sramesh@emdsys.com

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எந்த ஒரு பெரிய நிறுவனமும் தற்போது புதியவர்களுக்கு வாய்ப்பு தருவது இல்லை..//

சின்ன கம்பனியில் ஓரளவு நல்ல சம்பளம் தருகிறோம். ஆனால் வர்ரவனெல்லாம் எடுத்தவுடனே 40000 கேட்டா enga போவது?

.சிறு நிறுவனங்களில் சம்பளம் குறைவு வசதிகளும் குறைவு.//

யார் சொன்னது? ஒருசில கம்பனி அப்படி இருக்கலாம். இங்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் அதிகம். பெரிய கம்பனியில் அந்த வாய்ப்புகள் குறைவு

Umesh Srinivasan said...

நாங்க படிக்கிற காலத்தில சரியா வழி காட்ட ஆளில்லாம எதையோ படிச்சு எப்படியோ முட்டி,மோதி மேல வந்தோம். இப்பதான் எல்லா பத்திரிக்கையிலயும் மாற்றுவழிகளை சொல்லித்தராங்களே, எந்தத் துறைக்கு demand இருக்குன்னு அதை எடுத்துப் படிச்சா இந்த மாதிரி கூட்டத்தில சிக்கி சின்னாபின்னமாக வேண்டாமே.

Raashid Ahamed said...

ஒரு உண்மையை சொல்லட்டுமா ? எல்லாரும் கார்பெண்டர்,எலக்ட்ரீசியன், பிளம்பிங் வேலைகளை தெரிஞ்சி வைத்தால் பெரிய ஆள் தான். ஏன்னா இதுபோன்ற வேலைகளுக்கு தான் ஆள் கிடைப்பதில்லை. தேவைப்படுபவர்கள் எவ்வளவு கூலியும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். எந்த வேலையும் செய்ய தயார் என்று இருப்பவன் கண்டிப்பாக வெற்றியடைவான். எஞ்சினியரிங் படித்துவிட்டு மல்டி நேஷனல் கம்பெனிக்கு தான் போவேன் என அடம் பிடிப்பவன் வெற்றியடைய வாய்ப்புகள் மிக குறைவு. நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் தொகை இனி வேலையின்மையை மிகவும் அதிகரிக்கும்.

mannar&co said...

நல்லவன் ரமேஷ் சொல்வது சத்தியமான உண்மை.. இந்தத் தலைமுறை நோகாம நொங்கு திங்க மட்டும்தான் ரெடியா இருக்கு..ஐடி கம்பெனின்னா 10 மாடி கண்ணாடி பில்டிங்கும் கார்ல இருந்து கக்கூஸ் வரை ஏசி பண்ணி இருக்கணும்னு நெனைக்கிறாங்க..ஐடி-yil நீண்டு நிலைத்து நிற்க நல்ல பலமான டெக்னிகல் அடித்தளம் தேவை ..அது எங்கு கிடைத்தாலும், குறிப்பாக ஸ்டார்டப் -களில் கிடைக்கும் என்பதே பெரும்பாலோருக்குத் தெரியவில்லை...

எதையும் தீவிரத்தன்மையோடு கற்கும் மனமே பலருக்கு இல்லை..80% மார்க்குகள் எடுத்திருப்போரும் ஒரு கணிப்பொறி மொழியில் மேம்போக்கான அறிவையே பெற்றுள்ளனர்..அதற்கு மேல் முயன்று கற்கும் ஆர்வம் இல்லை..மேற்சொன்ன " 10 மாடி கண்ணாடி பில்டிங்கும் கார்ல இருந்து கக்கூஸ் வரை ஏசி" கனவு மட்டுமே எல்லோருக்கும் ...

அவர்களை சொல்லி என்ன செய்ய? அவர்களுக்கு அப்படித்தான் சொல்லிக் கொடுக்கபட்டிருக்கிறது..பெருமை பீற்றுவதில் மட்டுமே நம் மக்களுக்கு உண்மையில் ஆர்வம்..உண்மையான திறமைகளிலோ, கற்பதிலோ இல்லை..

Nat Sriram said...

Sad state of affairs really..

MV SEETARAMAN said...

//குறுக்குவழியில் பணக்காரராக வெறிபிடித்தாற்போல லட்சக்கணக்கில் காசைக்கொடுத்து வீடுதோறும் வளர்க்கப்பட்ட ஈமுகோழிகளை நினைவூட்டுகின்றனர் இந்த பையன்கள்//
The tamilnadu is suppose too be a Advanced State in India , This is seen not getting Technicians like plumber, Electrisian,AC mechanics etc easily for engaging in every town & villages, There is no properly trained FARM equipments operators, Maintenance people.
even Hotels waiter, helper n are from JARKAND & Bihar. what is this trend :Tamilnadu educational level ie, people who have educated above class 10 , 12 are quite igh,some percetage of students rightly opting for ITI and politechnic , get absorbed in technical fields either in Tamilnadu, other states, or even West Asia.
hence vauum in the independent service providers at village/town level. hence there is indeed a large oppurtunity to fill up the GAP by the educated(BE/Btech ) but not able to get employed as the economical situation is not encouraging

no engg graduate should CRY
no one think that CALL CENTRE hob is the lost resort, that is ment for intermediary level of people where only English/ or any spoken Language fluency matters.

well advice for parents from lower middle class segment:
1. do not take heavy loan and push your children to useless private Engg College
2.study the general aptitude of the BOY and prepare him to take appropriate course of action purly based on the intelligent level and physical/ psychological personality of the WARD.
3.For GIRLS : be careful, she needs education to evaluate the behaviour of the world around her. primarily GIRL will become mother and future preparative of good next generation of children.
4. hence proper marriage of the girl at the appropriate age with proper education and seeking good Match ( Husband)with the help of Parents.
5.As an senior level Manager in a engg/ Process company, Engg education is not at all suitable for Girls.
6. Subjucts suitable for GIRLS:
a)ARTS BA: economics etc
b) Bcom etc
c)Bse : in any pure science
d) Nursing
e)Doctor
f)LAW/ ompany Law
with all these TEACHING is the right profession.
in this order exceptionally academic person can choose Research
Looking for MBA type or IAS type managerial jobs will ROB the Girl's feminity and that will be much worse than the CALL CENTRE type of JOBS.

hence comming to BOYS
unless the boy take good care in grooming his life from class 8 by inteacting with his teachers, parents, friends and / parents put in lot of consultation on the boy's progress the future will not be in a growth path.

only HARDWORK and intelligently groomed BOY can shape his future and make himself happy.

parents should never only have DREAMS ! richness is not the buss word ,"sustained normal living" should be the mantra.

Roots and Values of Tamilnadu cannot be forgotten.

manoharan said...

All:

This is common. Everyone one needs to come across this situation in life. Especially for first job. Though you placed at MNC if you does not survey they will kick you out. so don’t worry. As someone said gathering technical information at startup companies is good. If work for few years at small companies you can easily place in MNC. This exp will shape you. You can survey at any disaster

Also, Presence of mind is must. does not matter if you scored 99.99% at all subjects.

Thanks,