வலியில்லா வலி பாகம் 2
காலையிலிருந்து இதுவரைக்கும் நான் எதுவுமே சாப்பிடவில்லை . பசிக்கவில்லை , இது காதலால் வந்த பசியின்மை எல்லாம் ஒன்றும் இல்லை . இரவு கொஞ்சம் அதிகம் வேலை செய்யும் தவறுக்கு தண்டனை . அது நமக்கு தேவை இல்லை இப்போழுது . அதை பின்பு பார்ப்போம் , எனக்கு என்றுமே என் உடைகளை பற்றியோ என் உடல் முக அழகை பற்றியோ கவலை இருந்ததே இல்லை . இன்று கொஞ்சம் அதை பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கிறது . இருந்தாலும் அவள் என் மனதை தானே காதலிக்கிறாள் அவளுக்கு தெரியாதா மெக்கானிக் வேலை செய்பவன் எப்படி இருப்பான் என்று அதனால்தான் இத்தனை நாளும் என்னை பார்த்து புன்னகையும் கடைக்கண் பார்வயையும் காட்டி வந்தாள் என நானே என்னை தேற்றிக்கொண்டேன் .
அந்த சைக்கிள் வெகு தொலைவில் வருவது தெரிந்தது . அதன் பின்னே ஒரு லாரியும் வளைந்து வளைந்து வருவது நன்றாக தெரிந்தது . சுற்றிலும் வயல்வெளி என்பதால் அவள் அணிந்திருந்த சிவப்பு உடை கூட அழகாக தெரிந்தது . அவள் இப்பொழுது என்னை நோக்கி மெல்லியதாக சிரிப்பாள் , அதுதான் சமயமென்று அவளிடம் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் என கூறி என் காதலை சொல்லி விட வேண்டியதுதான் .என் மனது இன்னும் ஏதேதோ அவளிடம் பேச திட்டம் போடுவதை என்னால் தடுக்க முடியவில்லை. எனக்கு அது கூட பிடித்திருந்தது .
என் மனம் என்றுமே இது போல் இருந்ததில்லை ,அவளும் அந்த லாரியும் அருகருகே வருவதை பார்க்கையில் மனதின் உள்ளே வருகின்ற வலியை உணர முடிந்தது . என் வாழ்விலேயெ அன்றுதான் நான் மனதின் வலியை உணர்கிறேன் . ஆனாலும் அவளை பார்க்க நினைக்கும் என் ஆவல் அதையும் மறக்கடிக்கிறது .
இதோ 30 அடி தூரத்தில் என் தேவதை , என்னால் அவளை இப்போது நன்றாக பார்க்க முடியவில்லை என்றாலும் , நான் என்னையும் அறியாது மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக உறைய ஆரம்பித்திருந்தேன் . என்னால் என்னை சுற்றி இருப்பவை எதையுமே உணர முடியவில்லை , நான் எங்கு நிற்கிறேன் என்று கூட ஞாயபகத்திற்க்கு வரவில்லை . இந்த பிரபஞ்சமே இருளானது போன்றும் அங்கே அவள் மட்டும் மங்கா ஒளி தரும் நட்சத்திரம் போன்றும் எனக்கு தெரிகிறது .
சட்டெனெ சைக்கிளை நிறுத்திவிட்டு தனது புத்தகப்பையிலிறுந்து அந்த சிறிய போனை எடுத்து ஒரு முறை பார்த்து விட்டு அதை காதில் வைத்து பேச ஆரம்பித்திருந்தாள். என் மனம் இப்போது இன்னும் அதிகமாக வலிக்க ஆரம்பித்திருந்தது . இதயம் படபட என அடிப்பது எனக்கு மேலும் பயத்தை அதிகரித்திருந்தது . அங்கே அவள் அந்த போனில் பேசி கொண்டிருக்க பின்னால் அந்த லாரி மிக வேகமாக அவளை நோக்கி வர........................................... ஆஆஆஆஆஆஆஆஆஆ.......................
தொடரும்...................................................................
இக்கதையின் முடிவு அடுத்த மூன்றாம் பாகத்தில் , உங்கள் மனதில் இக்கதையை எப்படி முடிப்பது என எண்ணம் தோன்றினால் பின்னூட்டதில் தெரிவிக்கலாமே!!!!