Pages

05 December 2008

முஸ்லீம்கள் நாட்டைவிட்டு விரட்டப்படவேண்டியவர்களா?
நேற்று காலை ஒரு மிக நெருங்கிய நண்பரான வினோத்குமார் என்பவரிடமிருந்து ஒரு பார்வர்டு மின்னஞ்சல் வந்தது . பொதுவாகவே இது போன்ற பார்வர்டு மெயில்களில் (எனக்கு) அஜால் குஜால் படங்களோ , கதைகளோ அல்லது புகைக்கடத்தொகுப்போ அல்லது சூனியம் வைக்கும் மெயில்களாகவோதான்(இப்பலாம் பில்லி சூனியம்லாம் கூட மின்னஞ்சலில் வைக்க ஆரம்பித்து விட்டார்கள் ) வரும் . இம்முறை வந்தது ஒரு பிரச்சார மெயில்.

கோயபல்ஸ் பிரச்சாரம் என்று ஒருவகை பிரச்சாரம் இருக்கிறது . அது என்னவென்று எனக்கு விளக்க தெரியவில்லை . அது ஹிட்லர் இரண்டாம் உலகப்போரில் மக்களிடையே பொய்யான தகவல்களை பரப்ப உபயோகித்த பிரச்சார வகை . இன்னும் விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டுமானால் ஜெயலலிதாவிடம் கேட்டால் சொல்லலாம் . இது அவ்வகையை சேர்ந்தது . முதலில் அந்த மெயிலை ஒரு பார்வை பார்த்துவிட்டு கருத்துக்கு செல்வோம் .

( ஆஸ்திரேலிய பிரதமரின் அறிக்கை )

The views of Patriotic Australian Prime Minister

Does India Need A Leader Like This ???

Prime Minister John Howard - Australia

Muslims who want to live under Islamic Sharia law were told on Wednesday to get out of Australia , as the government targeted radicals in a bid to head off potential terror attacks.
Separately, Howard angered some Australian Muslims on Wednesday by saying he supported spy agencies monitoring the nation's mosques. Quote: 'IMMIGRANTS, NOT AUSTRALIANS, MUST ADAPT. Take It Or Leave It. I am tired of this nation worrying about whether we are offending some individual or their culture. Since the terrorist attacks on Bali , we have experienced a surge in patriotism by the majority of Australians.'
'This culture has been developed over two centuries of struggles, trials and victories by millions of men and women who have sought freedom'
'We speak mainly ENGLISH, not Spanish, Lebanese, Arabic, Chinese, Japanese, Russian, or any other language. Therefore, if you wish to become part of our society . Learn the language!'
'Most Australians believe in God. This is not some Christian, right wing, political push, but a fact, because Christian men and women, on Christian principles, founded this nation, and this is clearly documented. It is certainly appropriate to display it on the walls of our schools. If God offends you, then I suggest you consider another part of the world as your new home, because God is part of our culture.'
'We will accept your beliefs, and will not question why. All we ask is that you accept ours, and live in harmony and peaceful enjoyment with us.'
'This is OUR COUNTRY, OUR LAND, and OUR LIFESTYLE, and we will allow you every opportunity to enjoy all this. But once you are done complaining, whining, and griping about Our Flag, Our Pledge, Our Christian beliefs, or Our Way of Life, I highly encourage you take advantage of one other great Australian freedom, 'THE RIGHT TO LEAVE'.'

'If you aren't happy here then LEAVE. We didn't force you to come here. You asked to be here. So accept the country YOU accepted.'

Maybe if we circulate this amongst ourselves, Indian citizens will find the backbone to start speaking and voicing the same truths.

-- Regards,

XXXXXXXXXXXXXXX


இப்படி ஒரு மெயில் வந்தால் , ஒரு சராசரி இந்துவின் மனதில் என்ன தோன்றும் . எனக்கு கூட அப்படித்தான் தோணியது . அடப்பாவி முஸ்லீம்களா என்றும் , உங்களையெல்லாம் ஊருக்குள்ளேயே விடக்கூடாது என்றும்தான் . அப்படி ஒரே மூச்சில் முடிவெடுத்துவிடக்கூடாது எதையும் நாம்தான் ஆராய்ந்துதான் ஒரு முடிவுக்கு வருவது நல்லது என்று ,

இது குறித்து அறிந்து கொள்ளும் ஆவலோடு ( சராசரி தற்குறித்தமிழனின் அல்லது தற்குறி இந்துவின் மனதோடு) சில மூத்த மற்றும் அரசியல் அறிவு கொண்ட பதிவர்களை அணுகினேன் . அதில் ஒருவர் (பெயர் வெளியிடவிரும்பவில்லை ) இதில் என்ன தவறு , அவர் சரியாகத்தானே கூறியிருக்கிறார் என்றார் . எனக்கு பக்கென்றிருந்தது . அவரிடம் அதற்கான காரணத்தை கேட்டேன் . அப்போது அவர் முஸ்லீம்கள் எப்போதுமே தங்களுக்கென ஒரு சட்டைத்தை இயற்றிக்கொண்டு , மற்றவர்களிடமிருந்து பிரிந்து ஒரு குழுமனப்பான்மையோடே வாழ்பவர்கள் . இந்தியாவில் கூட அவர்களுக்கு தனி சிவில் சட்டம்தான்(ஷரியா சட்டம்) ஆனால் தனி கிரிமினல் சட்டம் கிடையாது என்றும் கூறினார் . எனக்கும் அது ஏன் என்று அடுத்த கேள்வி எழுந்தது . அதற்கு அவர் சிவில் சட்டம் அவர்களுக்கு எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்ய அனுமதி அளிக்கிறது ஆனால் கிரிமினல் சட்டம் வன்மையானது கண்ணுக்குகண் மாதிரி என்றார் . அட ஆமாம்ல இது கரெக்டுதான என்று மனதில் தோன்றியது .

சரி ஒரு தரப்பிடம்தானே கேட்டிருக்கிறோம் என இன்னுமொரு அரசியல் அறிவுள்ள பதிவரை அணுகினேன் . அவர் இதற்கு வேறு ஒரு விளக்கமளித்தார் . இந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளது முதலில் ஆஸ்திரேலிய அதிபரின் பேட்டிதானா என்பதே தெரியாமல் நாம் எதுவும் பேசுவதற்கில்லை என கூறினார் .


பின் http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4731878.stm இங்கே அதற்கான ஆதாரம் இருந்தது . உண்மையில் ஆஸ்திரேலிய பிரதமர் அப்படித்தான் பேசியிருந்தார் .

இதை பார்த்த அப்பதிவரின் பதில் இதோ...

பிஜேபீயின் பிரதமர் வேட்பாளரான அத்வானி ஒரு வேளை பிரதமரானால் பொது சிவில் சட்டம் கொண்டுவரலாம் . இப்போது ஆஸ்திரேலிய அதிபரைப்போலவே (அவர் கிறித்துவர்கள் என்று கூறியிருக்கும் இடத்திலெல்லாம் இந்து மற்றும் ஹிந்தி என்று நிரப்பினால் என்ன வருமோ அதையே கூறலாம் ) . அவரைத்தவிர இது போல யாராலும் இது குறித்து மதவாத மனப்பான்மையோடு பேச இயலாது . ஆட்சிக்கு வரும் முன்பே சிறுபான்மையினர் மீதான தாக்குதலை தொடங்கியிருக்கும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் யூதர்களுக்கெதிராக நடந்த கொடுமைகள் இங்கே முஸ்லீம்களுக்கும் நடக்கலாம் . இது ஒரு மோசமான இனவாதம் . வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல முஸ்லீம்களின் மீதான வன்முறைக்கு இப்போதே வித்திடுகிறது பிஜேபீ என்று நறுக்கென்று முடித்தார் .
இந்த அறிக்கையை ஆஸ்திரேலிய பிரதமருடையதே என்பதற்கான ஆதாரம் ; http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4731878.stm

ஒரு சராசரி இந்து இம்மின்னஞ்சலை மேலோட்டமாக படித்தால் அவனது மனதில் முஸ்லீம்கள் குறித்து என்னவெல்லாம் தோன்றும் . (எனக்கும் அப்படித்தான் தோன்றியது ) . அதனாலேயே அதை பதிவிட எண்ணினேன் . இப்பதிவின் மூலம் ஓரளவுக்கேனும் தெளிவேற்பட்டால் மகிழ்ச்சியே .எனக்கு மட்டுமல்ல , தற்குறி இந்துக்களுக்கும் சேர்த்தே .