Pages

12 May 2009

சும்மா டைம் பாஸ் மச்சி!! ( 2 )


1.மழை பெய்யும் இரவில்

நாயகனும் நாயகியும் தனிமையில் அடாத மழை விடாது பெய்ய இருவரும் தொப்பலாய் நனைந்து ஒருவரை ஒருவர் ஏக்கமாய் பார்த்தனர். வாசகன் ஆர்வமாய் மேலும் வாசித்தான். பின் அவரவர் வீட்டுக்கு சென்றனர்.


2.இதழில் கதை எழுதும் நேரமிது

இதுதான் முதல்முறை. கைபடாத இதழை விரலால் தடவி , முகர்ந்து பார்த்து ஆசையோடு அதன் அருகில் போய் தன் பெயரை படித்தான் , அ...தி...ஷா அவன் எழுதிய கதையின் மேல் பெயர் வந்திருந்தது ஆனந்த விகடனில்.


3.அப்படினா நான்?

செல்லம் ஏன்டி நேத்து போன் பண்ணல! இல்லடா என் போன் ராஜ் வீட்டிலயே வச்சிட்டு வந்துட்டேன். அப்புறம் வசந்த் எடுத்துட்டு வந்து குடுத்தான். ஓஓ! ஆமா ராஜ் வசந்த்லாம் யாரு? . ராஜ் என்னோட புருஷன். அப்போ வசந்த் . அவன் என்னோட இன்னொரு புருஷன்.


4.எப்போதும் போல

எப்போதும் போல் பூத்துக்கு சென்றான் , பெயரை பதிந்தான், வாக்களித்தான் . வீட்டிற்கு வந்தான். எப்போதும் போல வீட்டில் இலவச டிவி இருந்தது. எப்போதும் போல கலைஞர்டிவியில் இன்றும் சிறப்புத்திரைப்படம். எப்போதும் போல கரண்ட் இல்லை.


5.காதுல பூ

காலை உணவு முடிந்ததும் உண்ணாவிரதம் துவங்கியது . மக்கள் கொந்தளித்தனர். கொழுத்தும் வெயிலில் கூச்சலிட்டனர். மதியம் 12.30க்கு முடிந்தது. மக்கள் கலைந்து சென்றனர்.

6.என் ஓட்டு

சார் ஓட்டுப்போடணும் .உங்க பேரு . வரதராஜன். எத்தன வாட்டி போடுவீங்க. என்னது என் ஓட்ட போட்டுட்டாங்களா! ஓகே அப்படினா என் பேரு சுந்தர்ராஜன்.


7.ரிசசன்

யோவ் வாட்ச்மேன் ! நான் இந்த கம்பெனி வைஸ் பிரசிடென்ட்யா என்னை உள்ள வுடுய்யா! எதா இருந்தாலும் முதலாளிகிட்ட போன்ல பேசிப்பீங்களாம்.


8.புதுசா புதுசா ஒரு சாட்டிங் ( CHATTING )

hi - hi - hw r u - fine u? - fine asl pls - wat asl - age sex location - 25 male chennai u asl? - same here - oh - ok bye - why bye - dei moodittu poda.. _________ . - thank u bye - seruppala adi the...payya - avvvv adhaan bye sollittenla payyana porandhadhu oru kuthama...


9.சுண்டல் தின்று!

சார் சுண்டல் சாப்பிட்டிட்டே கன்டிணியூ பண்ணுவோமா !

டே சின்னப்பையா இங்க வா எவ்ளோ !

மூணு குடு!..

நண்பர்களே குழந்தைதொழிலார்களை காப்பதற்காக கூடியிக்கக்கூடிய நாம ... என்று சுண்டலை கொறித்தபடிப் பேச துவங்கினார்.


10. காதல் கக்கூஸ்

மாமா காதல்ங்கறது கக்கூஸ் போற மாதிரிடா நாம என்ன திங்கறமோ அதுமாதிரிதான் நமக்கு ஆயும் போகும். அது மாதிரிதான் காதலியும் நாம எப்படி செலக்ட் பண்றமோ அப்படித்தான் வாழ்க்கையும் இருக்கும்!. மாமா அவளோட சேராதனு சொன்னேன் கேட்டியா இப்போ புரியுது ஏன் நீ பாத்ரூம் போன மட்டும் ஊரே நாறுதுனு.11.ஆமா இதெல்லாம் என்ன ஏன் இந்த கொலை வெறி!

சும்மா டைம்பாஸ் மச்சி!மக்களே நாளைக்கு எலெக்சன் அதனால அனைவரும் இரட்டைஇலை சின்னத்திலும் மாம்பழ சின்னத்திலும் இன்ன பிறச்சின்னங்களிலும் வாக்களித்து அஇஅதிமுக கூட்டணியை வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பிரபல திமுக பதிவர் அதிமுக வெற்றிப்பெற்றால் எனக்கு டிரீட் தருவதாக வாக்களித்துள்ளார் என்பதையும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.


*************