Pages

07 July 2009

பிரபல நடிகர் சாம் ஆண்டர்சன்!யாரிந்த டெரர் ஹீரோ
அவர் நடித்த படம் யாருக்கு யாரோ
சாம் ஆண்டர்சன்
நீ ஒரு மைக்கேல் ஜாக்சன்
தமிழ் சினிமாவில் ஒளிவீசும் சன்
கட்டபொம்மனிடம் வட்டி கேட்டான் ஜாக்சன் துரை
வாங்கித்தந்தாயே நாய்க்கு பொரை
நீ செவ்வாயின் மர்லன் பிராண்டோ
அர்னால்டும் ஜாக்கிசானும் உன் பிரண்டோ
டவுசர் கிழிஞ்சாலும் குறையாது உன் ஸ்டைலு
அதைப் பார்த்து மயங்குமே அழகு மயிலு
கவுந்தடிச்சு எட்டி உதைப்பியே உன் காலால
ஊருக்குள்ள ஆயாலாம் சாவுது உன் படமென்னும் பால் ஆல


சாம் ஆண்டர்சன் இந்தப் பெயர் உங்களுக்கு அத்தனை பரிச்சயமில்லாததாக இருக்கலாம். அப்படித்தான் இருந்தேன் ஆறு கோடி தமிழர்களில் ஒருவனாய். இதெல்லாம் அவர் நடித்த அகில உலகப்புகழ் '' யாருக்கு யாரோ ஸ்டெப் நீ '' படம் பார்க்கும் வரை.

உலகசினிமாவே ஒரு நிமிடம் மூக்கில் விரல் வைத்து உள்ளே கைவிட்டு நோண்டி குடாய்ந்து பிரமித்துப் போன அத்திரைக்காவியம் தமிழ்த் திரையுலகிற்கு மீண்டும் ஒரு உலக நாயகனைப்பெற்று தந்திருக்கிறது என்று.

என்ன பொடலங்கா ஜே.கே.ரித்திஷ் குமார். இவரது நடிப்பைப்பார்த்த பின் இனி ஜே.கே.ஆரின் மீதான என் மதிப்பு வெகுவாய் குறைந்து போனது. அதற்கான காரணம் அவரது ஸ்டைலா? அவரது சுமைலா? அல்லது அவரது எழிலான நடையா? ஆளை மயக்கும் உடையா? இப்படி ஒரு நாயகனைத்தானே இத்தனை காலமாய் தேடிக்கொண்டிருந்தோம்.

அடிக்கும் மின்னலும் அஞ்சும் கண்கள். பார்த்தாலே குமட்டும் சிரிப்பு ( குமட்டில் வரும் சிரிப்பு). ஹாலிவுட்டுக்கு ஒரு பிராட் பிட்டு. நீதானே எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி தரும் விட்டு.

சமீபகாலமாக இணையமெங்கும் இவர் பெயர்தான் மந்திரமாய் ஒலிக்கிறது.

இப்படி ஒரு ஸ்டாரை.. பிரபஞ்ச ஸ்டாரை.. விளக்கமாத்து நாரை ஏனோ வலையுலகம் வரவேற்கவில்லை.

இப்பதிவின் மூலம் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறோம் ( ஏன்னா நாங்கள் தனி ஆள் அல்ல ) . இனி விஜய் அஜித் சூர்யா விக்ரம் எல்லாம் வேறு வேலை ஏதாவது செய்து பிழைத்துக்கொள்ளலாம். இவர்தான் தமிழ்சினிமாவின் நம்பிக்கை.

மற்றபடி இப்பதிவின் நோக்கம் இந்த வாரம் ஜீ தமிழ்த்தொலைக்காட்சியில் நமது சாம் ஆண்டர்சனின் ''யாருக்குள் யாரோ ஸ்டெப்நீ திரைப்படம் ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பார்த்து பிள்ளை குட்டிகளோடு சாவுங்க..!

அவர் நடித்த படத்திலிருந்து காட்சிகளின் வீடியோ இணைப்பு. வீடியோ இணைப்பைப் பார்த்து மகிழ்ந்து ஜீடிவியில் முழுப்படமும் பாருங்க.

Statutory Warning : அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு பார்க்கவேண்டாம் உங்கள் வெடிச்சிரிப்பு உங்கள் வேலைக்கே வெடிவைக்கலாம்.இந்த வீடியோவைப் பார்த்தும் நீங்கள் உயிரோடிருந்தால் ஓட்டும் பின்னூட்டமும் இட்டு நமது அகில உலக ஆஸ்கார் நாயகன் சாம் ஆண்டர்சன் தலைமை கழகத்தில் உறுப்பினராகலாம். அல்லது ஆயிரத்து ஒன்று சந்தா கட்டினால் அவரது அடுத்த படத்தை வீட்டிலேயே வந்து சக நடிக நடிகைகளுடன் நடித்துக் காட்டுவார் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.


இப்படிக்கு

வருங்கால முதல்வர் சாம் ஆண்டர்சன் ரசிகர் மன்றம்
நெதர்லாந்து