Pages

22 August 2009

கந்த(ல்)சாமி!
ஏழைங்கன்னாலே நெம்ம தமிழ்சினிமா காரவீகளுக்குத்தான் ரொம்ப பிரியம். எப்படியாவது அவங்க கண்ணீர தொடச்சி அவங்க வாழ்க்கைல ஒரு டார்ச் லைட்டையாவது அடிக்கோணும்னு ரெம்ப காலமா கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க. அறுபது வருஷத்துக்கு மொன்னால வந்த மலைகள்ளன்ல தொடங்கி ரெண்டு வருஷம் முன்னால வந்த சிவாஜி வரைக்கும் ஏழைங்க ஏன் ஏழைங்களா இருக்காங்கனு சொல்லிட்டே இருக்காங்க. இந்த ஏழைங்களுக்கு பிலிம் காட்டியே பல சினிமாக்காரங்க பணக்காரங்க ஆகிருக்காங்க.

அந்த வரிசைல நேத்தும் ஒரு படம் ரிலீஸாகிருக்கு. கந்தசாமி. கறுப்பு பணத்தையெல்லாம் கொண்டு போய் வெளிநாட்டுல பதுக்கி வக்கிறாங்க அதான் இந்தியா ஏழை நாடா இருக்கு. அதெயல்லாம் இங்க கொண்டு வந்துட்டா போதும் எல்லாஞ்சரியாகிடுமாம். பணக்காரங்க கிட்ட இருக்கற காசெல்லாம் ஏழைக்கு கிடைச்சிட்டா போதும் நாட்டுல எல்லாரும் சமம்தானு தாணு பல நூறு கோடி செலவளிச்சு சொல்லிருக்காரு. பாவம் தாணு பரம ஏழை போலருக்கு.
ச்சே என்னே உயர்ந்த உள்ளம். ஏழைங்க மேல என்னே பரிவு.. ச்ச்ச்சுச்சுசுசுசு..

ஒரே இஸ்கூல்ல படிச்ச பயலுவ வேற வேற அரசாங்க உத்தியோகத்தில இருந்துகிட்டு அது மூலமா நாட்டையே ஆட்டிப்படைக்கிற பெரிய பணக்காரங்க... ஓகே ஓகே கூல் நீங்க ரமணானு மனசுக்குள்ள நினைக்கிற எனக்கு கேக்குது. அதேதான்.

அந்த பணக்காரங்க கிட்டருந்து எடுத்த காச ஏழை மக்களுக்கு குடுக்கறாரு. அதுக்கு டெக்னிக் என்னானா போருர் முருகன் கோயில் மரத்துல உங்க கொறைய எழுதி போட்டா போதும். கந்தசாமி உங்க பிரச்சனைய சோல்வ்,... ஓகே ஓகே கூல் இது அந்நியன் மாதிரி இருக்கா.. அதான் இல்ல ஏன்னா அதுல வெப்சைட்ல போடுவாங்க இதுல கைல எழுதி மரத்துல கட்டுவாங்க டிபரன்ஸ் புரியுதா!

அப்புறம் ஸ்பைடர்மான்,பேட்மான் அதாங்க சிலந்தி மனிதன் , வௌவால் மனிதன் மாதிரி இவரு ஒரு சேவல்மான் (COCK-MAN ). இங்கிலீசுல சொன்னா அமெரிக்காகாரன் சிரிப்பான். விக்ரம் சேவலாட்டமே கொக்கரக்கோனு நல்லா காமெடியா பண்றாரு.. லேடீஸ் கெட்டப்ல வந்து டேன்ஸ்லாம் ஆடறாரு. நடிக்கதான் அவ்ளோவா வாய்ப்பில்ல. சும்மா விக்ரம் நிறைய உழைச்சாருனா என்னத்தா உழைச்சாருனுதான் தெரியல. ஒரு வேள நாலு வருஷம் ஒரு படத்தில நடிக்கறதுக்கு பேரு உழைப்பாருக்கும் போல.

சுரேயானு ஒரு பொம்மனாட்டி. நல்லா படம் பூரா பாப் கட்டிங் பண்ணிகிட்டு நெஞ்சு இடுப்பு வயிறு தொப்புள்னு ஏழைகளுக்கு ஹெல்ப் பண்றாங்க. சாரி ஏழைகளுக்கு ஹெல்ப் பண்ற விக்ரம லவ் பண்றாங்க. ஆனா பாவம் அவங்களயும் அவங்க குரலையும் சிங்க் பண்ணா ஏதோ பிளஸ்டூ பையன கூட்டியாந்து லேடிஸ் வேசம் போட்டு நடிக்க வச்ச மாதிரி இருக்கு.
சுசி கணேசன் சின்னதா ஒரு பாத்திரத்தில வராரு. சின்ன பாத்திரம்னா கிண்ணம் , ஸ்பூன் , டம்ளர் மாதிரி. பாவம்!

வடிவேலு எப்பவும் போல நல்லா அடிவாங்குறாரு. பாவமா இருக்கு.

அவரோட இயக்கம்? அவருக்கு படம் எடுக்கவரலைனு எவன் சொன்னான். அவருக்கு படம் எடுக்க வரும் ஆனா வராது. பாவம்ங்க கொஞ்சம் ஓவரா படம் எடுத்துட்டாரு. மொக்கையா ஒரு கதை , அதுக்கு பல கோடி ரூவா பட்ஜெட்டு. மனசுக்குள்ள ஷங்கருனு...!. அதுக்காக ஷங்கர் படத்தோட கதையவேவா படமா எடுக்கணும். சுசி கணேசன் பாவம்.

படம் பூரா கேமரா நம்ம முகத்தில பிளாஷ் அடிச்சுகிட்டே கிடக்குற எஃபெக்ட்டு. எடிட்டிங்னு ஒரேடியா ஒரு ஒரு சீனையும் ஓவரா எடிட்டிடாடய்ங்க போல. ஆனாலும் பின்னாடி சீட்டு ஆயாவுக்கு கண்ணு அவிஞ்சி போற அளவுக்கா. பாவம்யா மக்க பொழச்சு போகட்டும் விட்டுருங்க!

படம் பூரா செம மியூஜிக். தேவி சிரி பிரசாத் நல்லா பண்ணிருக்காப்ல. ஆனா வேற படத்துக்கு இப்படி பண்ணிருக்கலாம். இந்த படத்துல இது ஓட்டல.

போனவாரம் உலகப்படம் பார்த்து கெட்டுப்போன ஒருத்தர் படம் பாத்து நொந்தேன். இந்தவாரம் ஹாலிவுட் படம் பார்த்து கெட்டுப்போன ஒருத்தர் படம் பார்த்து... ம்ம் விதி வலியது.

படம் பார்த்துட்டு வெளிய வரும்போது கேர்ள்பிரண்டு திட்டிகிட்டே வந்துச்சு. ஏன்மா இப்படி திட்ற பாவம் எவ்ளோ காசு செலவழிச்சு கஷ்டப்பட்டு உழைச்சு படம் எடுத்துருக்காய்ங்கனு சொன்னேன். உழைச்சிட்டா போதுமானு கேட்டா..! ஐயாம் கப்சிப்.

இதே ரேஞ்சுல இன்னும் மூணே படம். தமிழ்சினிமாவ ஆண்டவானலயும் காப்பத்த முடியாது. அம்புட்டுதான்.

கந்தசாமி - ஹிஹி.. பாவம் தாணு!


பின் குறிப்பு - மத்தபடி கலைப்புலி தாணுவுக்கு எங்கருந்துதான் இவ்ளோ பணம் வருதோ தெரியல. எவ்ளோ அடி வாங்குனாலும் தாங்குறாரு. ஏற்கனவே பல பேருகிட்ட வாங்கியும் புத்தியில்லாத மனுசன். ரொம்ப்ப்ப்ப்ப நல்லவரு போல.. ம்ம்..