26 May 2008

உண்மைத்தமிழனின் '' புனிதப்போர் '' : குறும்பட விமர்சனம்

இன்றைய ஊடங்கங்களில் பெண்ணியம் பேசும் ஆண்கள் மிகச்சிலரே , அப்படிப் பேசினாலும் அவன் தனிமைப்படுத்தபடுகிறான் . அப்படிபட்டதொரு சமூகத்தில் பெண்ணியத்தை பறைச்சாற்றும் ஒரு ஆணின் உணர்வுகளையும் அவனை இவ்வாணாதிக்க சமுதாயம் எப்படி எதிர்கொள்கிறது என மிக மிக குறைந்த நேரத்தில் ( 10 நிமிடம் என எண்ணுகிறேன் ) அழகாகவும் மிக நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் .

ஆரம்ப காட்சி ஒரு மேடையிலிருந்து துவங்குகிறது , அங்கே ஆறு ஆண்கள் வந்து அமர படம் துவங்குகிறது . முதலில் ஒருவர் ( யார் கண்ணன் ) பேச துவங்குகிறார் , அவர் நாட்டில் பெண்ணியம் பேசுவோர் அதிகரித்துவிட்டதாகவும் , அவர்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்றும் , ஆண்களே உயர்ந்தவர்கள் என்றும் , அதற்காத்தான் இங்கே நாம் கூடியுள்ளோம் எனக் கூறி அமர்கிறார் . அடுத்தடுத்து வருபவர்களும் அதை முன்மொழிவதோடு பெண்கள் மூட்டைப்பூச்சிகள் , நசுக்கப்படவேண்டியவர்கள் , அவர்களுக்கு பாவம் பார்த்தால் நம்மை அழித்து விடுவார்கள் , பெண்கள் எப்போதும் ஆண்களை விட தாழ்ந்தவர்கள், நம் துன்பங்களுக்கு அவர்களே காரணம் என ஒருவர் பின் ஒருவராக பேசி அமர்கின்றனர் . இவ்வாறு ஒவ்வொருவராக பேசி அமர அவர்களுக்கு முறையே மோர்,இளநீர்,பெப்சி,கோக் தரப்படுகிறது . அந்த வரிசையில் கடைசியாக ஒருவர் பேசுகிறார் , அவர் பெண்களை பற்றி உயர்வாக பேசுகிறார் , பெண்கள் சிறந்தவர்களென்றும் அவர்கள் நமக்கு சமமானவர்கள் என்றும் பேச சக பேச்சாளர்கள் அதிருப்தி அடைகின்றனர் , அவர் தன் பேச்சை முடித்துக்கொண்டு அவரது இருக்கையில் அமர அவர் முன்னால் சில பாட்டில்கள் வைக்கப்படுகிறது , '' மவனே இப்டியே பேசின உனக்கு ஆசிட்தான் '' என கூட்டத்திலிருந்து ஒரு ஒலி கேட்க , படம் முடிகிறது .

இப்படத்தின் சிறப்பம்சமாக நான் கருதுவது படத்தில் யாருடைய முகமும் காட்டப்படவில்லை , நடிகர்களது உடலசைவுகளும்,அவர்களது வாயும் மட்டுமே காட்டப்படுகிறது . படம் பார்த்த எல்லோருக்குமே அது பிடித்திருக்கும் என எண்ணுகிறேன் . அதே போல் ஒவ்வொரு முறை குளிர்பானங்கள் வைக்கும் போதும் நம் மனதிலொரு சிறிய சஸ்பென்ஸ் இழையோடுவது மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது . அந்த முகமறைப்பு ஒளிப்பதிவு யுக்தியும் அருமை .இப்படத்தின் பெரிய குறை அதிகப்படியான வசனங்கள் , சொல்ல வந்த கருத்தை அதிகம் ஒலிக்க செய்ததைவிட சிறிது ஒளிக்கவும் செய்திருக்கலாமெனத்தோன்றுகிறது . அந்த ஆசிட் காட்சியும் ஏனோ கதையோடு ஒட்டவில்லை ( அந்த முடிவு பலரை நகைக்க வைக்கலாம் )மற்றபடி படம் அருமையாக உள்ளது . உண்மைத்தமிழனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் .

எந்த ஒரு கலைஞனுக்கும் சரியானதொரு களம் அமையும் வரை அவனது திறமைகள் வெளியுலகிற்கு தெரிவதில்லை .

நம் சக பதிவரின் குறும்படத்தை வெளியிட்ட மக்கள் தொலைக்காட்சிக்கு பதிவுலக நண்பர்கள் சார்பாக நன்றிகள்

27 comments:

முரளிகண்ணன் said...

அவர் பதிவுகளைப்போலவே வசனம் அதிகம். ஆனாலும் பயன்படுத்திய உத்திகள் நன்றாக இருந்தது. வாழ்க இயக்குநர் உண்மைத்தமிழன். வளர்க மக்கள் தொலைக்காட்சி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா விமர்சனம் எழுதியிருக்கீங்க. முதல்ல போட்ட இள நரை படம் ஒழுங்காத் தெரிஞ்சுது - அடுத்தது இந்தப் படம் சரியாத் தெரியல (வீட்டுல டிஷ் கனெக்‌ஷன் - ராத்திரி நேரத்துல மக்கள் தொலைக் காட்சி சரியா தெரிய மாட்டேங்குது).

நண்பர் உண்மைத் தமிழனுக்கு வாழ்த்துகள்.

குசும்பன் said...

பதிவாக குறும்படத்தின் கதையை போட்டதுக்கு மிக்க நன்றி

துளசி கோபால் said...

அட! நம்ம உண்மைத்தமிழரின் படமா?

இங்கே எங்களுக்கு அதைப் பார்க்க வாய்ப்பு இல்லை(-:

அதை வலை ஏற்றினால் மகிழ்வோம்.

உ.த. அவர்களுக்கு பாராட்டுகள்.

Unknown said...

// துளசி கோபால் said...
அட! நம்ம உண்மைத்தமிழரின் படமா?

இங்கே எங்களுக்கு அதைப் பார்க்க வாய்ப்பு இல்லை(-:

அதை வலை ஏற்றினால் மகிழ்வோம்.

//

உ த வலையேற்றுவேனு சொல்லிருக்காரு பார்போம்

உண்மைத்தமிழன் said...

Thanks Athisha..

I unable to post the tamil comment because 'suratha.com' is not working.

Please wait..

I will give my answers for your comments..

Thanks Murali.. Sundar.. Kusumban.. Thulasi Madam..

Anonymous said...

அவர் பதிவுதான் ரொம்ப நீளம் னா , அவர் படம் அதுக்கும் மேல.

Anonymous said...

படம் பார்த்தேன், ரொம்ப மொக்கை. உ.த. இதுமாதிரி படம் எடுத்தால் தயாரிப்பாளர் போண்டி தான்.

SP.VR. SUBBIAH said...

////படம் பார்த்தேன், ரொம்ப மொக்கை. உ.த. இதுமாதிரி படம் எடுத்தால் தயாரிப்பாளர் போண்டி தான்.////

தயாரிப்பாளர் போண்டியென்றால்
படம் நல்ல கலைப்படம் என்று பொருள்!
நல்ல கலைப்படம் ஒன்றைக் கொடுத்த உண்மைத்தமிழரை
(நம்) தலைசாய்த்து வணங்குவோம் / வாழ்த்துவோம்!

Unknown said...

//
படம் நல்ல கலைப்படம் என்று பொருள்!
நல்ல கலைப்படம் ஒன்றைக் கொடுத்த உண்மைத்தமிழரை
(நம்) தலைசாய்த்து வணங்குவோம் / வாழ்த்துவோம்!
//

சுப்பையா சார் நீங்க படம் பார்த்தீங்களா??

Anonymous said...

//சுப்பையா சார் நீங்க படம் பார்த்தீங்களா??//

பார்த்திருந்தா இவ்வளவு தெனாவட்டா பேசியிருப்பாரா? புனிதப்போரை பார்ப்பதை விட குருவி படத்தை நூறு முறை பார்த்துவிடலாம்.

Anonymous said...

oooooooooooo unmaithamilan idhellam panrara

உண்மைத்தமிழன் said...

நண்பர் அதிஷா அவர்களுக்கு எனது மன்னிப்புடன் கூடிய நன்றிகள்..

காலதாமதத்திற்குப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்..

எனது புனிதப்போர் பற்றிய உங்களது தனிப்பதிவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்..

//இப்படத்தின் பெரிய குறை அதிகப்படியான வசனங்கள் , சொல்ல வந்த கருத்தை அதிகம் ஒலிக்க செய்ததைவிட சிறிது ஒளிக்கவும் செய்திருக்கலாமெனத்தோன்றுகிறது.//

செய்திருக்கலாம்தான்.. ஆனால் கதை மேடையில் நடப்பது போலவும், ஒரு கூட்டம் போலவும் இருப்பதால் வசனங்கள் தவிர்க்க முடியாமல் போய்விட்டது.

மேலும் நான் ஒன்று எடுக்க நினைத்து முயல.. அன்றைக்கு நடந்த பலவேறு குழப்பங்களால் அது முடியாமல் போய் ஏதோ ஒன்றாகிவிட்டது.. எல்லாம் முருகன் செயல்.

அதற்காக என் தவறில்லை என்று தப்பிக்க முயவில்லை. இன்னும் நல்லவிதமாகச் செய்யவும் நினைத்திருந்தேன். கால, நேரமில்லாமல் மாட்டிக் கொண்டேன்.. அதுதான் காரணம்..

இது பற்றித் தனிப்பதிவு போட இருக்கிறேன்.. அப்போது முழுத் தகவலையும் சொல்கிறேன்..

//அந்த ஆசிட் காட்சியும் ஏனோ கதையோடு ஒட்டவில்லை ( அந்த முடிவு பலரை நகைக்க வைக்கலாம்)//

நகைப்புக்கு காரணம் இவ்ளோதானா என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம்.. ஏனெனில் இது சாதாரண ஒரு விஷயத்தை சாதாரணமாக கொடுக்கின்ற ஒரு அனுபவம் என்று எனக்கே தெரியும்.. ஸோ.. இந்த நகைப்பு நான் எதிர்பார்த்ததுதான்..

நுணுக்கமாக, மிகச் சரியாக இந்த பாயிண்ட்டை குறித்தமைக்கு எனது பாராட்டுக்கள்.

உண்மைத்தமிழன் said...

//முரளிகண்ணன் said...
அவர் பதிவுகளைப் போலவே வசனம் அதிகம். ஆனாலும் பயன்படுத்திய உத்திகள் நன்றாக இருந்தது.//

நன்றி முரளிகண்ணன்..

வசனங்கள் அதிகம் தேவைப்பட்ட கதை இது என்பதால் தவிர்க்க முடியவில்லை.

உண்மைத்தமிழன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நல்லா விமர்சனம் எழுதியிருக்கீங்க. முதல்ல போட்ட இள நரை படம் ஒழுங்காத் தெரிஞ்சுது - அடுத்தது இந்தப் படம் சரியாத் தெரியல (வீட்டுல டிஷ் கனெக்‌ஷன் - ராத்திரி நேரத்துல மக்கள் தொலைக் காட்சி சரியா தெரிய மாட்டேங்குது). நண்பர் உண்மைத் தமிழனுக்கு வாழ்த்துகள்.//

எனது படத்தில் ஒலிப்பதிவில் சிறு பிரச்சினை.. கடைசி நிமிடம்வரை படம் மாற்றப்படலாம் என்றே எனக்குச் சொல்லப்பட்டது.. இறுதியில் ஏதோ என் மீது பரிதாபப்பட்டு திரையிட்டுவிட்டார்கள்..

அதனால் என்ன நண்பரே.. நேரில் பார்க்கும்போது சிடி தருகிறேன்.. பாருங்கள்..

உங்களது வாழ்த்துக்கு நன்றி..

உண்மைத்தமிழன் said...

//குசும்பன் said...
பதிவாக குறும்படத்தின் கதையை போட்டதுக்கு மிக்க நன்றி.//

குசும்பா.. உமக்கு குசும்புத்தனமில்லாமல் கமெண்ட்ஸ் போடவே முடியாதே.. தாங்கலப்பா..

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
அட! நம்ம உண்மைத்தமிழரின் படமா? இங்கே எங்களுக்கு அதைப் பார்க்க வாய்ப்பு இல்லை(-: அதை வலை ஏற்றினால் மகிழ்வோம். உ.த. அவர்களுக்கு பாராட்டுகள்.//

ரீச்சர்.. நன்றி..

விரைவில் வலை ஏற்றுகிறேன்..

மக்கள் தொலைக்காட்சி நியூஸிலாந்தில் தெரியவில்லையா.. ஆச்சரியமாக உள்ளது.. உலகம் முழுக்கத் தெரியுது என்கிறார்களே..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
அவர் பதிவுதான் ரொம்ப நீளம்னா , அவர் படம் அதுக்கும் மேல.//

வெறும் 12 நிமிஷம்தான ஸார்.. இதுவே அதிகமா? காமெடியா இல்ல..?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
படம் பார்த்தேன், ரொம்ப மொக்கை. உ.த. இத ுமாதிரி படம் எடுத்தால் தயாரிப்பாளர் போண்டிதான்.//

நன்றி அனானி..

கமெண்ட்டை வெளிப்படையாக வைத்துவிட்டு பெயரை போலியாக வைத்ததற்கு எனது கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

///SP.VR. SUBBIAH said...
//படம் பார்த்தேன், ரொம்ப மொக்கை. உ.த. இதுமாதிரி படம் எடுத்தால் தயாரிப்பாளர் போண்டிதான்.//
தயாரிப்பாளர் போண்டி யென்றால் படம் நல்ல கலைப்படம் என்று பொருள்! நல்ல கலைப்படம் ஒன்றைக் கொடுத்த உண்மைத்தமிழரை (நம்) தலைசாய்த்து வணங்குவோம் / வாழ்த்துவோம்!///

வாத்தியார்னா நீங்கதான் வாத்தியார்.. சிஷ்யனுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.. நன்றிகள் ஐயா..

இது குறும்படம்தான்.. இரண்டரை மணி நேரத்தில் சொல்வதை 12 நிமிடத்தில் சுருக்க வேண்டுமெனில் ஏதாவது நகாசு வேலைகள் செய்துதான் ஆக வேண்டும்.. பிடிக்காதவர்கள் நிறைய பேர் இருக்கத்தான் செய்வார்கள். வேறென்ன சொல்வது..?

உண்மைத்தமிழன் said...

///அதிஷா said...
//படம் நல்ல கலைப்படம் என்று பொருள்! நல்ல கலைப்படம் ஒன்றைக் கொடுத்த உண்மைத்தமிழரை (நம்) தலைசாய்த்து வணங்குவோம் / வாழ்த்துவோம்!//
சுப்பையா சார் நீங்க படம் பார்த்தீங்களா??///

நிச்சயம் பார்த்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன் அதிஷா. ஐயா அவர்கள் வந்தது அவருடைய சிஷ்யன் என்ற ரீதியில் தார்மிக ஆதரவளிக்க மட்டுமே..

நல்லவைகளைத்தான் எடுத்திருப்பான் சிஷ்யன் என்ற நம்பிக்கை அவருக்கு..

அவர்தான் எனது மரியாதைக்குரிய வாத்தியாராச்சே.. வந்ததில் என்ன ஆச்சரியம்..?

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//சுப்பையா சார் நீங்க படம் பார்த்தீங்களா??//
பார்த்திருந்தா இவ்வளவு தெனாவட்டா பேசியிருப்பாரா? புனிதப்போரை பார்ப்பதை விட குருவி படத்தை நூறு முறை பார்த்துவிடலாம்.///

பாருங்க சாமிகளா..? யாரு வேணாம்னு சொன்னது..?

உண்மைத்தமிழன் said...

//unmai thamizhan rasigar manram said...
oooooooooooo unmaithamilan idhellam panrara..//

இதை மட்டும்தான் பண்றேனுங்கோ..

Unknown said...

உ.த அண்ணா நீங்க நெறய பின்னூட்டம் போடுவீங்கனு தெரியும் ஆனா இப்படியா....ஸ்ஸஸ்ஸஸ்ஸஸப்பா ,

இரண்டாம் சொக்கன்...! said...

//இப்படத்தின் பெரிய குறை அதிகப்படியான வசனங்கள் //

ஒரு மாசம் மணிரத்னம் கிட்ட சேர்த்துவிட்டா சரியாயிருவார்....யார்னு மட்டும் என்கிட்ட கேட்ராதீங்க...ஹி..ஹி..

வாழ்த்துகள் உண்மைதமிழரே...சீக்கிரம் வலையேற்றுங்கள், பிரித்து மேய தயாராய் காத்திருக்கிறோம்.

Unknown said...

வாங்க இரண்டாம் சொக்கன் ,

படத்தை உத அடுத்த வாரமாவது வலை ஏற்றுகிறாரா என பார்ப்போம்

வருகைக்கு நன்றி இ.சொ

சென்ஷி said...

//இரண்டாம் சொக்கன்...! said...
//இப்படத்தின் பெரிய குறை அதிகப்படியான வசனங்கள் //

ஒரு மாசம் மணிரத்னம் கிட்ட சேர்த்துவிட்டா சரியாயிருவார்....யார்னு மட்டும் என்கிட்ட கேட்ராதீங்க...ஹி..ஹி..

வாழ்த்துகள் உண்மைதமிழரே...சீக்கிரம் வலையேற்றுங்கள், பிரித்து மேய தயாராய் காத்திருக்கிறோம்.
//

நான் இப்பத்தான் பிரிச்சு மேஞ்சுட்டு வந்துருக்கேன்.

மன்னிச்சுக்குங்க அதிஷா :)

http://senshe-kathalan.blogspot.com/2008/06/blog-post_06.html