06 June 2008

ஜீன் 15ல் வலைப்பதிவர் சந்திப்பு தமிழ்மண நிர்வாகிகளுடன்...

தமிழ்மண நிர்வாகிகளான சொர்ணம்சங்கரபாண்டியும், தமிழ் சசியும் சென்னையில் பதிவர்களை சந்திக்க விரும்புவதால்.. இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில்.. விருந்தினர்களாக..
சொர்ணம் சங்கரபாண்டி
தமிழ்சசி
மற்றும்
சங்கத்து சிங்கம் இளா
ஆகியோர் கலந்து கொள்வதாக சொல்லி இருக்கிறார்கள். இக்கூட்டத்தில் அஜெண்டா உண்டு!
1. தமிழ்மணம்- நிறை, குறைகள் புதியவடிவம், பல காரியங்கள் அறிவிப்புக்களோடு நின்று போவது, பின்னூட்ட உயரெல்லை நீக்கப்பட்டது போன்று எது பற்றியும் பேசலாம். நிறைகள் குறித்து மட்டுமல்லாது.. குறைகளையும் சொல்லலாம். தமிழ்மணத்தினை இன்னும் பிரபலப்படுத்தும் நோக்கில் என்ன என்ன செய்யலாம் என்று எதைப் பற்றியும் பேசலாம்.
2. பூங்கா- செய்தவைகளும், செய்யவேண்டியவையும் பூங்கா இதழ் உண்மையில் எப்படி இருந்தது. அது பதிவர்களுக்கு எவ்வளவு உற்சாகத்தை கொடுத்தது. பூங்க இதழ் தொடர்ந்து வர என்ன செய்யலாம், 24மணிநேரத்தில் இயங்கும் படியான பதிவர்கள் ஆசிரியர்களை நியமிக்கலாம். அவர்களையும் சுற்றில் கொண்டு வரலாம்.. என்பது போன்ற கருத்துக்களை பதிவு செய்யலாம்.
மேற்சொன்னது வெறும் சாம்பிள்.. இன்னும் தோன்றும் எல்லாவிதமான கேள்விகளோடும் வரலாம், உரையாடலாம்.
மூன்று மணி நேரம் நடக்கும் இந்த சந்திப்பு நடக்கும் இடம் பதிவர்கள்
பலருக்கும் அறிமுகமான பார்வதி -மினி ஹால் தான்.

நாள்: 15 ஜூன் 2008
நேரம்: மாலை 5.30 முதல் 8.30 வரை
இடம் : ஸ்ரீ பார்வதி -மினி ஹால், 28/160 எல்டாம்ஸ் ரோடு, சென்னை-18
லோக்கேசன்-
எல்டாம்ஸ் ரோட்டில் இருக்கும் “மியூசிக் வேர்ல்ட்” கடைக்கு அருகிலும், “கிழக்குபதிப்பகம்”, “ஸ்டேட் பேங்க் ஆப் திருவிதாங்கூர்” எதிரில் இருக்கிறது நம் சந்திப்பு அரங்கம்.

இப்பெருவிழாவிற்கு முத்தாய்ப்பாக ஏற்கனவே அறிவித்தது போல வரும் ஜீன் 8 ஆம் தேதி நம்ம மெரினால இருக்கற நம்ம காந்தி சிலைக்கு பின்னால சாயங்காலம் 5.30 க்கு மொக்கை சந்திப்பு ஏற்பாடு பண்ணிருக்கோம் , அதுலயும் வலையுலக கண்மணிகள் தவறாம கலந்துக்கணும்னு வேண்டி விரும்பி கேட்டுகுறோம் .

இந்த சந்திப்புகளுக்கு வலைப்பதிவர்கள் , வலைப்பதிந்தவர்கள் , வலைபதிய இருப்போர் , வலையுலாவிகள் , தமிழறிஞர்கள் , பின்னூட்ட சுனாமிகள் மற்றும் பினாமிகள் என அனைவரையும் வரவேற்கிறோம் . உங்கள் வருகையையும் சந்தேகங்களையும் இங்கே தெரிவிக்கலாம் .

மேலதிக உதவிக்கு தொடர்பு கொள்ள ; பால பாரதி - 9940203132

அதிஷா - 9941611993

11 comments:

siva said...

தோழா மகிழ்சியான செய்தி வாழ்த்துகள்
டோண்டுக்கு டிஜிடல் பேனர் வைக்கவும்.

புதுவை சிவா.

ஜிம்ஷா said...

தாங்கள் கலந்து கொள்வீர்களா அதிஷா நண்பரே!

dondu(#11168674346665545885) said...

//டோண்டுக்கு டிஜிடல் பேனர் வைக்கவும்.//

Why?

Regards,
Dondu N. Raghavan

முரளிகண்ணன் said...

வந்துர்றோம்

அதிஷா said...

சிவா சந்திப்புக்கு கட்டாயம் வரவும் ,

ஜிம்ஷா நான் இல்லாமா சந்திப்பா நிச்சயம் வருவேன்

டோண்டு சார் நீங்க வந்துருவீங்க

முரளி வாங்க வாங்க

Anonymous said...

டோண்டுவுக்கு கட்டவுட் வைக்கவும்!

ஜிங்காரோ ஜமீன் said...

சுற்றம், நட்பு புடைசூழ அவசியம் வந்து கலந்துக்கிட்டு சிறப்பிக்கிறோம்.

அதிஷா said...

ஜிங்காரோ கட்டாயம் வாங்க ,

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
OSAI Chella said...

//மொக்கை, சப்பை, மண்டைக்கணம் இல்லாத ஒரு திரட்டியாக இனிமேலாவது மாற என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்!

அன்புடன்
ஓசை செல்லா//

நண்பரே, மேலே ஒரு அனானி என் பெயரை வம்புக்கு இழுக்கிறார் என்றே நினைக்கிறேன்! நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்மணம் என்ற வியர்வையாலும் கோட்களாலும் (அண்ணன் காசியால்) உருவாக்கப்பட்ட அந்த முன்னோடி முயற்சியை நான் நிச்சயம் மேற்கண்டவாறு எழுதமாட்டேன் என்பதை எனையறிந்த நண்பர்கள், பதிவர்கள் அறிவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்! எனது மறுப்பை அவசியம் வெளியிடவும்!

அன்புடன்...
”உண்மையான” ஓசை செல்லா

அதிஷா said...

மன்னிக்கவும் ஓசை செல்லா,

அந்த பின்னூட்டம் நீக்கப்பட்டது.