23 June 2008

15 ஆண்டுகள் லீவு எடுக்காத அபூர்வ ஈரோடு மாணவி

முதலில் செய்தி ; http://dinamalar.com/fpnnews.asp?News_id=1106&cls=row4
மேலே கொடுக்கபட்டுள்ள சுட்டியை சொடுக்கி அந்த செய்தியை படித்துவிட்டு மேலே தொடரலாம் .

இன்றைய தினமலரில் இப்படியொரு செய்தி , பார்த்தும் அதிர்ச்சியாக இருந்தது , விடுமுறை எடுப்பது தவறான காரியமா , விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு செல்லுதல் சாதனையா என்பன போன்ற கேள்விகள் மனதில் எழுந்தன .

இம்மாணவியை அமைச்சர் ராஜா மற்றும் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ பழனிச்சாமியும் அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று பாராட்டியும் உள்ளனர் . அந்த பெண்ணின் சாதனை நிச்சயம் பாராட்டதக்கதே இருப்பினும் , அந்த பெண் , தான் இது போன்றதொரு சாதனையை செய்ய தன் தாயின் தூண்டுதலே காரணம் என்கிறார் .

இது போன்றதொரு செய்தி மற்ற பெற்றோரும் தத்தமது குழந்தைகளையும் இது போல ஒரு சாதனைக்கு தூண்டலாம் . இதனால் குழந்தைகள் பெற்றோரின் ஆர்வத்திற்கு பலியாகும் வாய்ப்புள்ளது . ஏற்கனவே பக்கத்து வீட்டு குழந்தை முதல் ரேங்க் வாங்கினால் தன் மகனோ மகளோ அதே போல் முதல் ரேங்க் வாங்க வேண்டும் என்கிற மனோபாவம் இன்னும் எல்லா பெற்றோருக்கும் இருந்து வருகிறது . அதை யாரும் மறுக்க இயலாது .

நம் வாழுவின் சில தருணங்களில் குழந்தைகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் , அப்போதுதான் நம் வாழ்க்கை முறையும் கலாச்சாரமும் சமுதாய மாற்றங்களும் அவர்களுக்கு தெரியவரும் . 15 வருடங்கள் என்பது அக்குழந்தையின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு , அதை நான்கு சுவற்றின் உள்ளேயே கழிக்கின்ற துன்பம் நம் அனைவரும் அநுபவித்ததே . அதற்காக விடுமுறை எடுப்பது சரியென்று கூறவில்லை , நம் வாழ்வின் மிக முக்கிய தருணங்களில் குழந்தைகள் நம்மோடு கட்டாயம் இருக்க வேண்டும் . அத்தருணங்களில் விடுமுறை தவறல்ல .

இது என் தனிபட்ட கருத்தே .

38 comments:

SathyaPriyan said...

உங்கள் கருத்துடன் முழுதும் உடன் படுகிறேன் அதிஷா. "Living this moment" என்பது இந்தியர்களுக்கு வேப்பங்காயாகவே இருக்கின்றது. அது ஏதோ பெரிய பாவம் என்றே நினைக்கிறார்கள்.

நேற்று என்பதும், நாளை என்பதும் நம் கையில் இல்லை. இன்று இந்த நிமிடம் மட்டுமே நமக்கு சொந்தமானது. அதில் 15 ஆண்டுகாலம் என்பது மிகவும் அதிகம்.

அந்த செய்தியில் தனது பாட்டி உடல் நலம் குன்றி இருந்த காலத்திலும் தான் பள்ளிக்கு சென்றதாக பெருமையாக கூறி இருக்கிறார். இதில் என்ன பெருமை இருக்கிறது?

15 ஆண்டு காலம் விடுப்பு எடுக்காமல் அவர் சாதித்தது என்ன? தனது 15 ஆண்டு கால வாழ்வில் பள்ளி தவிர வேறு நினைவுகள் இல்லாமல் பாழாக்கியது தான் சாதனையா? நண்பர்கள், உறவினர்கள் வீட்டு விழாக்கள், துக்க நிகழ்வுகள் என்று எங்குமே போகாமல் இருப்பதினால் என்ன இடைத்தது? நாளிதழில் புகைப்படமும், அமைச்சரின் பாராட்டுக்களும் அவரது 15 ஆண்டுகால வாழ்வினை மீட்டு தருமா?

Wasted money could be gained back. But wasted time?

ஒன்றும் சொல்வதற்கில்லை. சுத்த பைத்தியக்கரத்தனம் இது என்பதை தவிர.

இது ஒரு நாளைக்கு 16 மணிநேரம் படிப்பேன், இரண்டு மணி நேரம் தான் தூங்குவேன். TV கிடையாது, சினிமா கிடையாது, விளையாட்டு கிடையாது. அதனால் மாநில அளவில் 1200 க்கு 1199 மதிப்பெண்கள் பெற்றேன் என்று கூறு அரை லூசுகளுக்கும் பொருந்தும்.

Sorry, if it sounds harsh. I do not mean to hurt anyone.

MyFriend said...

அட. நானும்தாங்க ஒரு 15 வருடமாக பள்ளிக்கு ஒரு நாள் கூட லீவு எடுக்காமல் சென்றேன். சனி, ஞாயிறு வகுப்பு இருந்தாலும் விடாமல் போவேன். உடம்பு சரியில்லைன்னாலும் எப்படியாவது போயிடுவேன். இதெல்லாம் ஒரு சாதனையா? ஆனால், இந்த 15 வருட பழக்கம் நமக்குள் ஒரு நல்ல குணத்தை கொண்டு வரும். வேலைக்கு போனாலும், தேவையில்லாமல் லீவு எடுக்கணும் என தோணாது. வருடா வருடம் என் வ்வருட லீவுகள் அப்படியே burn ஆகுது. :-))))

MyFriend said...

மாணவி சரண்யாவுக்கு என் வாழ்த்துக்கள். :-)

Unknown said...

வாங்க சத்யா
\\அந்த செய்தியில் தனது பாட்டி உடல் நலம் குன்றி இருந்த காலத்திலும் தான் பள்ளிக்கு சென்றதாக பெருமையாக கூறி இருக்கிறார். இதில் என்ன பெருமை இருக்கிறது\\

இது கூட ஒரு வகையான மன நோயாகவே படுகிறது . திணிக்கப்பட்ட மனநோய்

Unknown said...

மை ஃபிரண்ட்

முதலில் இந்த சாதனையை செய்து அதை இன்னும் தொடர்வதால்
உங்களுக்கு வாழ்த்துக்கள்

இதனால் நீங்கள் அடைந்தது என்ன
இழந்தது என்ன அதையும் கூறலாமே??

VIKNESHWARAN ADAKKALAM said...

அய்யய்யே... என்ன பழக்கம் இது... நான் படிக்கும் போது நான் எடுக்கும் விடுமுறைய தாங்காம என் வாத்தியார் வீட்டுக்கு தேடிக்கிட்டு வருவாரு... இருப்பமா நாம... நான் தான் மீன் பிடிக்க கூட்டாலிகள் கூட போயிடுவேனே... பிறகு என்ன மறு நாள் பள்ளிக்கு போய் நாலு அறை வாங்கிக்குவேன்...

வெண்பூ said...

சராசரி இந்தியனோட மனப்பான்மை இது.. ஐ.டி.கம்பெனிகளில் கூட 30 லீவு 40 லீவு என்று பேலன்ஸ் வைத்துக்கொண்டு வருடக் கடைசியில் அது உபயோகப்படுத்தாமல் எலாப்ஸ் (elapse) ஆகுற கேஸையெல்லாம் நான் நிறைய பார்த்திருக்கிறேன். இது ஒரு விதமான மனநோய்தான்...

rapp said...

நெம்ப சரியாக கூறியுள்ளீர்கள். உங்களின் கருத்துக்களை அப்படியே வழிமொழிகிறேன். ஏற்கனவே இப்பொழுதெல்லாம் நிஜமான மெடிக்கல் லீவு வேண்டுமென்றால் கூட, நீ ஏன் போன மாசமே உனக்கிந்த மாசம் ஜான்டீஸ் வரும்னு சொல்லலங்கர ரேஞ்சில் பேசுறாங்க, இன்னும் நாலு பேரு இப்படிக் கெளம்பினா சூப்பரா இருக்கும் நெலம.

சரண் said...

பதிவரின் கருத்தும், பின்னூட்டமிட்டவர்களின் (குறிப்பாக சத்யப்ரியன்) கருத்துக்களும் மிகச்சரி.
பள்ளிக்காலம் என்பது கிடைத்தற்கரிய பொற்காலம். அந்தப்பெண் அவை எல்லாவற்றயும் இழந்திருக்கிறாள்.ஈரோட்டைச் சேர்ந்தவன் என்பதால் இன்னொன்றயும் சொல்கிறேன். அந்தப் பெண், தங்கப்பதக்கமெல்லாம் வாங்கிப் படித்தாலும், நல்ல(?) வரன் கிடைத்ததும் திருமணம் செய்து விடுவார்கள், பின்னர் வீட்டில் இருந்து சமைத்துப்போட்டும், குழந்தைப் பெறும் இயந்திரமாகவும் தான் இருக்கப் போகிறாள். இது என் உறவுகளில் நடந்த நிகழ்ச்சி!

தாரணி பிரியா said...

//VIKNESHWARAN said...
அய்யய்யே... என்ன பழக்கம் இது... நான் படிக்கும் போது நான் எடுக்கும் விடுமுறைய தாங்காம என் வாத்தியார் வீட்டுக்கு தேடிக்கிட்டு வருவாரு... இருப்பமா நாம... நான் தான் மீன் பிடிக்க கூட்டாலிகள் கூட போயிடுவேனே... பிறகு என்ன மறு நாள் பள்ளிக்கு போய் நாலு அறை வாங்கிக்குவேன்...//


நானும் விக்னேஷ்வரன் கட்சிதான். லீவுக்காக இல்லாத உறவுகளை சாகடிக்கற தப்பெல்லாம் செஞ்சிருக்கேன். (அப்ப அறியாத வயசு) லீவு போடறதெல்லாம் தப்பே இல்லை. படிக்கற நேரத்தில சரியா படிச்சு பாடத்தை புரிஞ்சிட்டாலே போதும். அப்புறம் முதல் மார்க் எடுக்கணும் நினைக்கிற கொடுமை. எல்லோருமே முதல் மார்க் எடுத்தா அப்புறம் அதுக்கு என்ன மதிப்பு.

அகரம் அமுதா said...

இப்படியெல்லாம் மாற்றிமாற்றித் தங்களின் கருத்துக்களைச் சொல்கிறோம் என்கிற ரீதியில் அம்மாணவியைப் போட்டு வறுத்தெடுப்பானேன்? இது பல பள்ளிகளிலும் நடப்பது தானே! ஆண்டின் இறுதியில் பள்ளிக்கு முழுக்குப்போடாமல் வரும் மாணவ மாணவிகளுக்குப் பள்ளி நிர்வாகம் பரிசுகள் வழங்குவதில்லையா?

Unknown said...

வாங்க அகரம் அமுதா

// அம்மாணவியைப் போட்டு வறுத்தெடுப்பானேன்? //

இங்கு வறுத்தெடுக்கப்படுவது அந்த மாணவியை அல்ல ,

அந்த மாணவியின் செயலையே

வருடா வருடம் கிடைக்கும் சிறிய பரிசுக்காக எதையெல்லாம் நாம் இழக்கிறோம் . அந்த செய்தியை ஒரு முறை படித்து பார்க்கவும் .

அந்த செய்தியில் தனது பாட்டி உடல் நலம் குன்றி இருந்த காலத்திலும் தான் பள்ளிக்கு சென்றதாக பெருமையாக கூறி இருக்கிறார்.

நம் நாட்டின் குழந்தைகள் ஏற்கனவே நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் இழந்து வரும் இக்காலகட்டத்தில் , நம்மிடையே நடக்கும் நிகழ்ச்சிகளில் அது மகிழ்ச்சியாகவோ அல்லது துக்கமாகவோ எதுவாக இருப்பினும் கட்டாயம் அவர்களை பங்கேற்க செய்ய வேண்டும் என எண்ணியே இந்த பதிவு .

விடுமுறை எடுக்காமல் செல்வதால் மட்டுமே குழந்தைகள் நன்கு படிக்க வாய்ப்புள்ளதாகவும் கூற இயலாது ,

விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு பெற்றோரின் கட்டாயத்தால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் , சிறைக்கைதிகளுக்கு ஒப்பானவர்களே

Unknown said...

வாங்க விக்கி , வருகைக்கு நன்றி ,

ரொம்ப நல்ல பையனா இருந்துருப்பீங்க போல இருக்கே .

ஆனா அது கூட தப்புதான்

தேவையில்லாம லீவு எடுப்பது , தேவையிருந்தும் லீவு எடுக்காம இருக்கறது ரெண்டுமே தப்புதான் ..

இந்த பிரச்சனை இல்லாம நான் படிச்ச பள்ளில அரை நாள்தான் வகுப்பே ( நான் லீவே எடுத்ததில்ல )

Unknown said...

\\
சராசரி இந்தியனோட மனப்பான்மை இது.. ஐ.டி.கம்பெனிகளில் கூட 30 லீவு 40 லீவு என்று பேலன்ஸ் வைத்துக்கொண்டு வருடக் கடைசியில் அது உபயோகப்படுத்தாமல் எலாப்ஸ் (elapse) ஆகுற கேஸையெல்லாம் நான் நிறைய பார்த்திருக்கிறேன். இது ஒரு விதமான மனநோய்தான்...

\\

வாங்க வெண்பூ , நல்லா சொன்னீங்க
ஆனா IT கம்பெனில லீவு எடுக்காம போனா காசுதான் குடுப்பாங்கனு கேள்ள்வி பட்ருக்கேன்

ராமலக்ஷ்மி said...

தலைப்பைப் பார்த்ததும் ஏது பாராட்டி எழுதிய பதிவோ என நினைத்தேன். நல்லவேளையாக நான் மற்றும் பலர் போலவே உங்கள் கருத்தும்.

//தேவையில்லாம லீவு எடுப்பது , தேவையிருந்தும் லீவு எடுக்காம இருக்கறது ரெண்டுமே தப்புதான் ..//

வழிமொழிகிறேன்.

Unknown said...

வாங்க ராப்பு

\\இன்னும் நாலு பேரு இப்படிக் கெளம்பினா சூப்பரா இருக்கும் நெலம.\\

இப்போதைக்கு ஒருத்தர்தான்

;-)

Unknown said...

வாங்க சூர்யா..

\\
பின்னர் வீட்டில் இருந்து சமைத்துப்போட்டும், குழந்தைப் பெறும் இயந்திரமாகவும் தான் இருக்கப் போகிறாள். இது என் உறவுகளில் நடந்த நிகழ்ச்சி!
\\

நிச்சயாமாக நடக்காது அந்த பெண்ணின் குடும்பம் மற்றும் அவளது சூழ்நிலைகளை வைத்து பார்க்கையில் அது போல நடப்பதற்கு வாய்ப்பு மிக குறைவு

தன் வாழ்வின் மூன்றில் ஒரு பங்கு பள்ளி எனும் நான்கு சுவற்றின் உள்ளே கழித்த அந்த பெண் நிச்சயம் தன் மீதமுள்ள வாழ்நாளை சுதந்திரமாகத்தான் கழிப்பாள் . அப்படித்தான் நடக்க வேண்டும் என்பதே என் ஆசை . ( அப்பெண்ணிற்க்காக நிச்சயம் நான் பிரார்த்திப்பேன் )


முதல் வருகைனு நினைக்கிறேன் என் மற்ற பதிவுகளை பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே

Unknown said...

வாங்க தாரணி பிரியா ,
( என் முதல் தங்கை பெயர் கூட பிரியாதான் , என் புரொபைல் போட்டோ கூட அவளது வாரிசுதான் )


\\
எல்லோருமே முதல் மார்க் எடுத்தா அப்புறம் அதுக்கு என்ன மதிப்பு.
\\

இந்த முதல் மார்க் என்பதே மிகத்தவறான விடயமாகும்

இது மாணவர்களிடையே மட்டுமல்லாது அவர்தம் பெற்றோரிடையேயும் பொறாமையை ஏற்படுத்த வல்லது

Anonymous said...

wats the problem with you people?

கிரி said...

//தேவையில்லாம லீவு எடுப்பது , தேவையிருந்தும் லீவு எடுக்காம இருக்கறது ரெண்டுமே தப்புதான் ..//

வழிமொழிகிறேன்

வால்பையன் said...

நானெல்லாம் அலுவலகத்துக்கே வாரத்துல ரெண்டு நாள் லீவு போடுவேன்

வால்பையன்

Unknown said...

வாங்க கிரி..நன்றி ;-)

______________________________

வாங்க வாலு

அப்ப இஸ்கூலுக்கு .......?

ராமலக்ஷ்மி said...

நான் உள்ளே வந்ததே தெரியல போலிருக்கே:((!

Unknown said...

ஆஹா ராமலட்சுமி உங்கள எப்படி விட்டேன்

மன்னிக்கனும் வாங்க வாங்க
உங்கள் வரவு நல்வரவாகுக

அப்புறம் என் கருத்தை வழிமொழிந்ததற்கு மிக்க நன்றிங்க

ராமலக்ஷ்மி said...

அட்டன்டன்ஸ் மார்க்ட். நன்றி.:)!

லேகா said...

நிச்சயமாய் இதை சாதனை என கூற முடியாது..பெற்றோரால் நடத்த பட்ட அடக்கு முறை..விடுமுறை எடுக்காமல் பள்ளி சென்றதால் ஒன்றும் அம்மாணவி முதல் மதிபெண் பெற்றுவிடவில்லையே..பாட்டிக்கு உடம்பு முடியாத பொழுது பள்ளி சென்றதை பெருமையாய் கூறி இருக்கிறார்..வேதனை....

நன்றி,
லேகா
http://yalisai.blogspot.com/

Unknown said...

வாங்க லேகா

எங்கேங்க ரொம்ப நாளா ஆளயே காணல

\\ பெற்றோரால் நடத்த பட்ட அடக்கு முறை..\\

நிச்சயமாக

மிக்க நன்றிகள் பல உங்களுக்கும் உங்கள் கருத்துக்கும்

Jackiesekar said...

அந்த பொண்ணோட அம்மா , குமட்டுல குத்தி ஸ்கூலுக்கு அனுப்புவாங்க, போல

Unknown said...

வாங்க ஜாக்கிசேகர்
(குமட்டுல குத்தி)
:))))

இப்பலாம் அதிகம் பேரு அப்படிதான் அனுப்பறாங்க

வெண்பூ said...

// வாங்க வெண்பூ , நல்லா சொன்னீங்க
ஆனா IT கம்பெனில லீவு எடுக்காம போனா காசுதான் குடுப்பாங்கனு கேள்ள்வி பட்ருக்கேன்
//

சரிதான்.. ஆனா அது அந்த பொண்ணுக்குக் கொடுத்த தங்கப்பதக்கம் மாதிரிதான். நாம் வேலைக்குப் போய் சம்பாதிப்பதே வாழ்க்கையை வாழ்வதற்குத்தான் என்பது கூட புரியாத ஜென்மங்கள்.

Anonymous said...

அதிஷா,

5 பாடத்திலும் 100/100 மேலும் மொத்தம் 12 முறை 100/100 வாங்கிச் சாதித்த மாணவி பற்றிய ப்திவு பார்க்கவும்.

http://vadakaraivelan.blogspot.com/2008/06/5-100100.html

அகரம் அமுதா said...

////விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு பெற்றோரின் கட்டாயத்தால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் , சிறைக்கைதிகளுக்கு ஒப்பானவர்களே////


ஆம். அருமையாகச் சொன்னீர்! வாழ்த்துக்கள்

தமிழ் பொறுக்கி said...

நான் படித்த ஒரு கவிதை
" ஒரு நாள் கூட
விடுப்பு எடுக்காமல்
பள்ளிக்கு சென்றான்....
மதிய உணவு அங்கே மட்டும் தான்
கிடைக்கும் என்று.."
அப்படி இருக்குமோ..

முகுந்தன் said...

இது ரொம்ப தவறான பழக்கம். சில ஆண்டுகளுக்கு முன் எங்கள்
flat இல் ஒரு குடும்பம் வசித்தது.
அதில் இருந்த ஒரு பையன் இப்படி தான் லீவ் எடுக்காமல் எந்நேரமும் படிப்பான்.

plus 2 எக்ஸாம் எழுதும்போது மன அழுத்தம் ஜாஸ்தி ஆகி , 40% தான் வாங்கினான்.
அந்த கவலையில் பிரமை பிடித்தாற்போல் ஆகிவிட்டான்.. இது தேவையா?

கயல்விழி said...

இந்தியாவில் இருந்தவரை நானும் இதை எல்லாம் "நல்ல பழக்கங்கள்" என்று நினைத்திருந்தேன். இப்படி உடலையும், மனதையும் வருத்திக்கொண்டு படிப்பதோ, வேலை செய்வதோ worthless. மனச்சிதைவை தான் தோற்றுவிக்கும்.

புதுகை.அப்துல்லா said...

நீங்க சொல்றது ரொம்பச் சரி அதிஷா!
ஆனா இப்படியெல்லாம் சொன்னா நம்பள லூசு பயன்னு சொன்னாலும் சொல்லுவாய்ங்க

Unknown said...

\\
நாம் வேலைக்குப் போய் சம்பாதிப்பதே வாழ்க்கையை வாழ்வதற்குத்தான் என்பது கூட புரியாத ஜென்மங்கள்.
\\
வெண்பூ

எனது இந்த பதிவில் இதைக்குறித்தான எனது கருத்தும் ஒரு குட்டி கதையும் .

இங்கே
http://athisha.blogspot.com/2008/02/blog-post_05.html
___________________________________

வடகரைவேலன்

பார்த்துவிட்டேன் நல்ல முயற்சி

நன்றி
___________________________________

அகரம் அமுதா
நீங்கள் மட்டும்தான் மாற்றுகருத்தை முன் வைத்தீர்கள்
இப்படி வாழ்த்து சொல்லிவிட்டீர்களே

___________________________________

தமிழ் பொருக்கி

கவிதை சூப்பர் . என் பால்யத்தை நினைவூட்டியது

___________________________________

வாங்க முகுந்தன்

நன்றி
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்

___________________________________

வாங்க அப்துல்லா
\\
லூசு பயன்னு சொன்னாலும் சொல்லுவாய்ங்க
\\

ஹிஹி

;-)

Several tips said...

நல்ல பதிவு