23 June 2008

கருணா v/s ராமு : தளபதி Part-2



காட்சி 1 : இடம் : கருணாவின் வீடு ,

கருணாவின் வலது கை வீரா ஒடி வருகிறார். காட்சி துவங்குகிறது.
வீரா : தல! தல! வெளிய வா தல! (உள்ளிருந்து கருணா வெளியே வருகிறார்)
கருணா : இன்னாடா....!!
வீரா : இத்த பாரு தல.......
(அலைப்பேசியால் ஓடிய அந்த காட்சியை பார்த்ததும் கருணாவிற்கு கோபம் வருகிறது )
கருணா : இன்னாடாது இன்னாதிது............ராமு ஆளு இப்டி பேசுறான் அதும் நம்ம ஏரியாலயே இருந்துகினு,
வீரா : ஆமா தல உன் கைல வச்சுகிறதே , ராமுவுக்கும் அவன் ஆளுங்களுக்கும் வேலயா பூடுச்சி....... இதுக்கு எதுனா பண்ணனும் தல...உடனே ஒரு முடிவெடு தல...வேற வழ்யே இல்ல
கருணா : முடிவெடுக்கர்துக்கு கரீட்டான டயம் வந்திருச்சி......................

காட்சி முடிகிறது.........ஃபிளாஸ்பேக் துவக்கம்............

காட்சி 2 : ஏரியா தாதாக்கள் கூட்டம் , ராயபுரம் பழைய பங்களா


தாதா 1 : இங்க பாரு கருணா ஓன் கைல 90 பசங்கதான் இருக்கான்ங்க , உனக்கு இந்த ஏரியால மாமூல் வசூல் பண்ண 120 பேருணா வேணும் , அத்தனால இந்த ஏரியாவ உனக்கு குடுக்க முடியாதுப்பா..இன்னாபா ...............மத்தவங்க இன்னாபா ....சொல்றீங்க
(மற்ற பெரிய தாதாக்கள் ஆமாம் என்பது போல தலையை ஆட்ட கருணா தலை குனிகிறார் )
(சால்னாகடை ஜெயாக்கா இந்த போட்டியில் கருணாவின் முக்கிய எதிரி...)
ஜெயாக்கா : இன்னா அதான் சொல்லிட்டாங்கள்ள , இன்னும் இன்னாத்துக்கு அங்கேயே நின்னுகினுகீறே..இட்த்த காலி பண்ணு..தோடா பீலிங்கஸ்.....கெளம்பு கருணா காத்து வரட்டும்
(கருணா சோகமாக அங்கிருந்து கிளம்புகிறார் , பின்னாலில் இருந்து ஒரு குரல் அது ராமு )
ராமு : இன்னா கருணா என் கைல ஒரு வர்த்த சொல்லிருந்த ....என் பசங்கள உனக்காக அனுப்பிருப்பனே...இப்ப ஒரு வார்த்த சொல்லு நம்ம புள்ளைங்கள உட்னே அனுப்பறேன்...இன்னா கருணா ...ஒனுக்கு ஓன்னினா....
( கருணா மகிழ்ச்சியால் கண்கலங்கி ராமுவை கட்டி அணைக்கிறார் , ஜெயாக்கா கோபத்துடன் கிளம்புகிறார் . கருணாவும் ராமுவும் இணைந்து நட்பு பாடல் பாடுகின்றனர் தேஜாஸ்ரீ நடனத்துடன்!!!!! )

காட்சி 3 : ராமு வீடு , ராமுவின் வலது கை குருவும் அவரும்

குரு : அண்ணா எத்தினி நாளைக்குதாணா நீ கருணாக்கு அல்லக்கையாவே இருப்ப...நீ கருணா கணக்கா எப்பணா ஆவ்றது , நம்ம புள்ளங்கலாம் பாவம்ணா , ரொம்ப பாவம்ணா , அவங்களும் நாலு காசு பாக்க வேணாமாண்ணா.... இன்னாணா
ராமு : குரு , கருணாகிட்ட மொதறது நமக்கு நல்லதில்ல... நாம அட்டாக்க வேற மாதிரி பண்ணுவோம்... குரு.....................................................................(பிளான் சொல்லுகிறார் வசனமில்லாமல் இசை மட்டும் )


காட்சி 4 : கருணாவின் சின்ன வீடு , கருணாவும் அவர் மகன் அழகுமலையும்

அழகு : நைனா!!! இன்னா நைனா இந்த ராமுவோட செம்ம கரைச்சலா இக்குதே, இதல்லாம் கேக்கமாட்டியா...
கருணா : இப்ப இன்னாடா அவன் உனக்கு டார்ச்சர்ர் குத்தான்...ஏன் காலைலியே வந்து கூவறே..
அழகு : நைனா, நம்ம மாமூல் வாங்கறதுக்காக வெளியூர்லரந்து இட்டாந்தமே கடைக்காரனுங்கோ அவங்கள தொழில் பண்ண வுட மாட்டேன்றான் , கேட்டா லோக்கல் பசங்க எங்க போயி தொழில் பண்டறதுனு தெர்லன்றான் ,
கருணா : விட்றா கொஞ்ச நாள் கத்துவான் அப்பால அடுத்த வேல பாக்க போயிருவான்
அழகு : இல்ல நைனா அவனலாம் வளரவுடக்கூடாது , அவன் நம்ம சாராயக்கடை மேட்டர்லயும் கை வைக்கன்றான் தெர்மா.. எதோ நான் ஊரற சங்க ஊதிட்டேன் அப்பால உன் பாடு அவன் பாடு ,


காட்சி 5 : குரு கருணாவின் சாராயக்கடையில் ரகளையிலீடுபட வீரா குருவுடன் சண்டையிடுகிறார்

குரு : டேய் வீரா நீ யார் ஆளு மேல கைய வச்சின தெர்யுமா... ராமுக்கண்டி இது தெர்ஞ்சிது அவ்ளோதான் ...
வீரா : யார்ரா ராமு தம்மாதுண்டு தாமாக்கோலி அவனான் ___த்து துண்ட்ற எச்சிதானடா நீ..கருணாகண்டி இந்த மேட்டரு தெரியாட்டும் த்தா அவ்ளோதான்
குரு : யார்ரா கருணா அவன் இன்னா பெரிய ___ஆ , வந்தாண்னா கண்ண நோண்டி காக்கவுக்கு போட்டுருவேன் சொல்லி வை..
(வீரா தன் அலைப்பேசியில் படமாக்கி கொள்கிறார் )
வீரா : இர்ரா உனக்கும் உன் தலைவனுக்கும் ஆப்படிக்கிறேன்
(கோபத்துடன் கிளம்புகிறார் )
( ஜெயாக்காவின் சால்னா தொழில் படுத்து விட , கோபத்தில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு தன் ஆட்களை அனுப்பி கருணாவின் ஆட்களை அடித்துவிட்டு பழியை ராமு மேல் போட்டுவிடுகிறார் )
( கருணா,ராமு இடையேயான நட்பு உடைகிறது )
( கருணா , ராமுவின் ஆட்களை திருப்பி அனுப்புகிறார் , அந்த ஏரியா பழைய தாதா மனைவி சோனியிடமிருந்து ஆட்களை இறக்கிக்கொள்கிறார் )
ஃபிளாஸ்பேக்கும் முடிகிறது .

கிளைமாக்ஸ் 1 :

கருணா ராமுவின் ஏரியாவிற்குள் தனியாக செல்கிறார். அங்கே ராமு,குரு அவரது ஆட்கள் சீட்டாடி கொண்டிருக்கின்றனர்.
ராமு : இன்னா தல இவ்வளோ தூரம் இன்னா...... சீட்டு ஒரு கை போட்றியா....
கருணா : நிருத்து அல்லாத்தயும் நிருத்து
ராமு : முடியாது எதையும் நிருத்த முடியாது ...
கருணா : ஏன்.....
ராமு : விளம்பரம் வெட்டி விளம்பரம்... எத்தனி நாள் நான் இப்டியே அல்லக்கேயா இக்கிறது...ஆவணும் நானும் தலைவன் ஆவணும்
குரு : ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா நிருத்துங்கப்பா முடியல...
கருணா : டேய் டுபுக்கு.... யார்ரா இங்க குரு ....
குரு : நான்தான் இப்ப இன்னா.. ராமு உம் னு சொல்லு நான் இவன இங்கயே கண்டம் பண்ணிறேன்
கருணா : ஏண்டா நேர்ல பார்த்தா கண்ண நோண்டி காக்காய் போட்ருவேனு சொன்னியாமே , இதா நானே வந்துர்க்கேன் வாடா ஆம்பளையா இருந்தா வந்து கைய வச்சி பார்ரா...
(அங்கிருந்த அனைவரையும் அடித்து துவம்சம் செய்கிறார் கருணா , ராமுவை மட்டும் பாவமென்று மன்னித்து விடுகிறார் , )
(ராமு மீண்டும் சால்னாக்கடை ஜெயாக்கவிடமே தஞ்சமடைகிறார் )

கிளைமாக்ஸ் 2 :

குருவின் பேச்சு ராமுவுக்கு தெரியவர குபீரென வெகுண்டெழுந்த ராமு அவரை அடித்து துவைத்து ஏரியாவை விட்டே விரட்டி அடிக்கிறார் , அதை அறிந்த கருணா ராமுவின் உயரிய உள்ளம் அறிந்து மகிழ்ச்சி கொண்டு , அவரை அழைத்து விருந்து வைக்கிறார் மானாட மயிலாட குழுவினரின் நடனம் அரங்கேருகிறது . அந்த வேளையில் சால்னா கடையில் ஜெயாம்மா கருணாவையும் ராமுவையும் தீர்த்து கட்ட ஆட்களுடன் கிளம்புகிறார் , அங்கே பாடல் முடிய ஜெயாவின் ஆட்கள் உள்ளே நுழைய சண்டை துவங்குகிறது . சண்டையின் இறுதியில் கருணாவை கத்தியால் குத்த ஜெயா பாய அதை கண்ட ராமு நடுவில் பாய கத்தி ராமுவின் வயிற்றில் பாய்கிறது , இதனை சற்றும் எதிர்பாராத ஜெயா அங்கிருந்து ஓட்டமெடுக்கிறார் , ராமு மயக்கமாகி கருணாவின் மடியில் சாய கருணா ராமுவின் தியாகத்தே நினைத்து கதறி கண்ணீர் சிந்துகிறார், ஓவென கத்தி அழுத படி ராமுவை தன் கைகளில் ஏந்திய படி மருத்துவமனைக்கு ஓட........திரை இருள்கிறது.....!!!!!!!!!!!!!

____________________________________________________________________________________
இக்கதையில் வரும் சம்பவங்களும் , பாத்திரங்களும் கற்பனையே .
இஷ்டபட்ட கிளைமாக்ஸ படிச்சிட்டு கஷ்டப்படாம உங்க கருத்த(திட்டோ!!! பாராட்டோ !!!!!) பின்னூட்டத்தில தெரிவியுங்க அப்பதான் இனிமேலும் இது மாதிரி பதிவு போடலாமா வேண்டாமானு தெரியும் .

____________________________________________________________________________________

20 comments:

வெண்பூ said...

அதிஷா.. கிளப்பீட்டீங்க..சான்சே இல்லை. நல்ல கற்பனை (?)

அதிஷா said...

வாங்க வெண்பூ...முதல் வருகைனு நினைக்கிறேன் என்னோட மத்த பதிவுகளையும் பார்த்து உங்க கருத்த சொல்லுங்க

ராம் said...

// கற்பனையே.//

ஓஹோ.

Anonymous said...

உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை.
இந்த கற்பனை சிரிப்புக்கு பதில் அருவருப்பையே தருகிறது .

அகரம்.அமுதா said...

பொழுது போக்கான செய்திகளைச் செய்வது தவறில்லை. அதைப்படிப்பவர்களுக்கு அதனால் பயன் என்ன என்பதை சிந்தித்து எழுதவும். உங்களின் இடுகையைப் படிப்பவர்களுக்கு அதன் தொடர்ச்சியாக சிந்திக்கத் தகுந்த கற்பனைகள்தோன்ற வேண்டும். அதுபோல் ஆக்கப் பூர்வமானவற்றைச் செய்யவும். நன்றி

அதிஷா said...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அகரம் அமுதா மற்றும் அனானி நண்பரே. உங்களுக்காவது சுட்டி காட்ட தோன்றியதே

இந்த பதிவிற்கு கிடைத்திருக்கும் வரவேற்ப்பை பார்கையில் எனக்கும் அப்படி ஒரு எண்ணமே ஏற்படுகிறது

இனி என் வலைப்பக்கங்களில் இது போன்ற பதிவுகள் இடம் பெறாது. நன்றி

அகரம்.அமுதா said...

///இனி என் வலைப்பக்கங்களில் இது போன்ற பதிவுகள் இடம் பெறாது. நன்றி///

தவறாக நினைத்துக்கொள்ளாமைக்கு நன்றிகள். இனி வரும் இடுகைகளில் நிறைய எதிர்பார்க்கிறேன்.

Anonymous said...

\\\இனி என் வலைப்பக்கங்களில் இது போன்ற பதிவுகள் இடம் பெறாது. நன்றி
\\\

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க
உங்களை போன்ற ஒருவரின் பதிவில் இதை எதிர்பார்க்கவில்லை என்று தானே சொன்னேன்

by
அதே அனானி

அதிஷா said...

\\தவறாக நினைத்துக்கொள்ளாமைக்கு நன்றிகள். இனி வரும் இடுகைகளில் நிறைய எதிர்பார்க்கிறேன்.
\\
நன்றி தோழி
உங்களைப்போன்றோரின் ஊக்கமே என்னை வழிநடத்துகிறது
இனி வரும் இடுகைகளில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவு விசயம் இருக்கும்

அதிஷா said...

அனானி ஐயா

இனி வரும் பதிவுகளில் நிச்சயம் நகைச்சுவை இருக்கும் ஆனால் அருவருக்கதக்கதாய் இருக்காது

உங்கள் பெயரை கூறியிருக்கலாம்

Balajee said...

அதிஷா

நல்ல கற்பனை

தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள்

அதிஷா said...

வாங்க பாலாஜி வாழ்த்துக்கு நன்றி

உங்கள் ஆதரவிற்கு நன்றி

நிச்சயம் தொடருவேன்
(வேற மாதிரி)

Anonymous said...

:-)

கயல்விழி said...

ஏன் எப்போதுமே ஹெவியாக சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும்? சில சமயம் இப்படி லைட்டான பதிவுகளை தான் படிக்க பிடிக்கிறது. நல்ல முயற்சி அதிஷா அவர்களே.

அதிஷா said...

வாங்க கயல்விழி
உங்கள் பாராட்டுக்கு நன்றி ,

\\சில சமயம் இப்படி லைட்டான பதிவுகளை தான் படிக்க பிடிக்கிறது.\\

படிக்கமட்டுமல்ல எழுதவும் பிடிக்கிறது.

என் மற்ற பதிவுகளையும் படித்தது உங்கள் மேலான கருத்துக்ககளை தெரிவிக்கலாமே

Rahul said...

சத்தியமாக சிரிப்பு வரவில்லை ,
சில இடங்களில் எரிச்சலூட்டுகிறது.

முரளிகண்ணன் said...

நச்சுன்னு இருக்கு

அதிஷா said...

ராகுல் உங்க கருத்துக்கு மிக்க நன்றி
அடிக்கடி வாங்க

அதிஷா said...

முரளிணா நெசமாத்தான் சொல்லிறீங்களா

இங்க வந்த பின்னூட்டங்கள (moderate பண்ணது தனி )வச்சு பாக்கும் போது அப்படி தோணல

arunpriyan said...

kasmaalam , inna kathada ithu ... koomutai'ya amblete pota mathiri.

There was an error in this gadget