27 June 2008

மடிக்கணினி வாங்க போகிறீர்களா....உங்களுக்கு சில டிப்ஸ்
இன்றைய கணினி உலகில் நம் அனைவருக்குமே சுயமாக ஒரு கணினி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் பெருகிவருகிறது . அதிலும் அதிகமானோர்க்கு மடிகணினிகளின் மீதான மோகம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது . இந்தியாவில் மடிகணினிகளின் விற்பனை கடந்த 2 ஆண்டுகளில் இமாலய வளர்ச்சியை எட்டியுள்ளது . இதனால் சந்தையில் பல விதமான வகைகளில் இம்மடிகணினிகள் விற்கப்படுகின்றன , அதில் எது நமது தேவைக்கு ஏற்றது , உத்திரவாதமானது , பிரச்சனை தராதது என கண்டறிவது என ஆராய்வோம் .1. வாங்குவது என முடிவெடுத்த பின் நாம் முதலில் முடிவு செய்ய வேண்டியது பட்ஜெட். காசுக்கேத்த தோசை என்று ஒரு சொல்வழக்கமுண்டு அது போலத்தான் நாம் முதலீடு செய்யும் பணத்திற்கேற்றாற் போல்தான் கணினிகளின் தொழில்நுட்ப பயன்பாடுகளும் அமையும் .2. பட்ஜெட்டை முடிவு செய்தபின் , உங்களால் அதிகமாக இதற்காக செலவிட இயலும் என்கிற பட்சத்தில் HP,sony அல்லது Dell போன்ற பன்னாட்டு தயாரிப்பாளரின் மடிக்கணினிகளை தேர்வு செய்யலாம் , குறைந்த அளவு பணத்துடன் வாங்க எண்ணுபவர்கள் HCL,Acer,Zenith,Toshiba போன்ற உள்நாட்டு தயாரிப்புகளை முயற்ச்சிக்கலாம் . (toshiba மட்டும் வெளிநாட்டு தயாரிப்பு ) . அதற்கு காரணம் தொழில்நுட்பம் , ஒரே தொழில் நுட்ப வசதிகள் இந்திய மற்றும் பன்னாட்டு தயாரிப்பாளர்களிடம் வெவ்வேறு விலைகளில் கிடைப்பதே ஆகும் . ஆனால் ஆடம்பர தொழில்நுட்பங்கள் பன்னாட்டு தயாரிப்புகளில் அதிகம் , அது இந்திய பொருட்களில் குறைவு . அதுதவிர brand image எனப்படுகிற ஒரு விடயமும் இவ்விடயத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று . ஏன்னெனில் இன்று பலரும் மடிகணினியை ஒரு தனிப் பெருமையாக பார்க்கும் நிலை உள்ளது (brand image) .3.அடுத்து நாம் கவனிக்க வேண்டிய விடயம் , எதற்காக இந்த கணினியை நாம் வாங்கப்போகிறோம் , நாம் எவ்வாறு பயன்படுத்த இருக்கிறோம் என்பதை ஆராயவும் , எப்படி எனில் நீங்கள் பல இடங்களுக்கும் பயணிப்பவர் எனில் எடை குறைந்த உறுதியான , பாதுகாப்பு அம்சங்கள் அதிகமானவையாகவும் , அதிக நேரம் பேட்டரியால் இயங்கக்கூடியதாகவும் வாங்கலாம் . வீடு மற்றும் அலுவலகத்தில் மட்டும் உபயோகிக்க கூடியதாக இருப்பின் மேற்சொன்ன காரணங்களில் எடை தவிர்த்து மற்ற காரணிகளை எடுத்து கொள்ளலாம் . இது தவிர நம் பயன்பாடுகள் மிக முக்கியம் . நாம் இந்த கணினியில் எந்த வகையான பணிகளை செய்ய இருக்கிறோம் , பிற்காலத்தில் என்ன செய்யலாம் என்பதை பற்றியும் , எந்த வகை மென்பொருட்களையும் பயன்படுத்த இருக்கிறோம் என்பதை பற்றியும் அறிந்து கொள்வது நல்லது . ஏனெனில் அதற்கேற்றாற் போல நமக்கு தேவையான configuration ஐ முடிவு செய்யலாம் . தேவையில்லாமல் இணைய பயன்பாட்டிற்கு high configuration கணினியை அதிக செலவில் வாங்க வேண்டியதில்லை .4. configuration மிக முக்கியமான ஒன்று , நீங்கள் வாங்கும் config. னின் முழு விபரத்தையும் வாங்கி கொள்ளவும் அது கீழுள்ள மாதிரியில் இருப்பது போல பெறவும்a. processor -(processor type , Processor speed, FSB speed , chipset)

b.RAM or memory-

c.Hard disk drive-

d.Optical disk drive - Preferably a DVD writer

e.Connectivity - (wifi , pcmcia port , bluetooth)

f.Screen Size ( what kind of display and which type) -

g.Weight-

h.Operating systems -

i.additional features-

j.video and audio features -

k.price -மேற்சொன்ன விடயங்களை பல மாடல்களிலும் பல தயாரிப்புகளிலும் வாங்கி ஆராய்ந்து பிறகு உங்கள் மடிக்கணினியை தேர்ந்தெடுக்கவும் .4. மேற்சொன்ன விடயங்கள் தவிர கவனிக்க வேண்டிய சில

அ. பல கடைகளுக்கும் சென்று விலை விபரமும் config.ம் விசாரியுங்கள் .

ஆ.தயவு செய்து பழைய மடிக்கணினிகளை வாங்க வேண்டாம்

இ.நீங்கள் வாங்க இருக்கும் கணினியை விற்கும் கடை எப்படி என விசாரித்து வாங்கவும்

ஈ.முக்கியமாக service and support எப்படி என விசாரித்து வாங்கவும்.

உ.விலை , பேரம் பேசி வாங்கவும் .இவை அனைத்தும் சரியாக செய்தால் நிச்சயம் உங்களுக்கு குறைந்த விலையில் உங்கள் உபயோகத்திற்கேற்ற நல்ல ஒரு மடிகணினி அமையும் . இன்னோரு பதிவில் மடிகணினியை எப்படி பேணுவது என்பது குறித்து பார்போம்.மேலதிக விபரங்களுக்கு பின்னூட்டம் அல்லது dhoniv@gmail.com என்கிற எனது மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும் .சில உபயோகமான வலைப்பக்கங்கள்

http://www.hp.co.in/

http://www.dell.co.in/

http://www.sony.co.in/

http://www.acer.co.in/

http://www.zenith-india.com/

http://www.hclinfosystems.com/

http://www.amd.com/

http://www.intel.com/

___________________________________________________________________ஒரு மடிகணினி செய்தி :நேற்று நமது முதல்வர் கலைஞர் அவர்கள் , 10 வகுப்பு தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற 1100 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின்கீழ் 1100 பேரில் முதல் 10 மாணவர்களுக்கு மடிகணினிகளை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார் . இந்த நல்லத்திட்டத்தின் செயல்ப்படுத்துதலில் அடியேனின் பங்கும் உண்டெண்பதையும் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் . ( நான் பணியாற்றும் நிறுவனத்தால் கிடைத்தது ) . பல வருடங்களாக கிடப்பில் இருந்த இந்த திட்டத்தை விரைவாக தொடங்கி அதை செயல்படுத்தி காட்டிய முதல்வருக்கு சிறப்பு நன்றிகள் ( என் டார்கெட்டை முடித்து கொடுத்தமைக்கும் எனக்கு என் நிறுவனத்தில் நல்ல பெயர் வாங்கி தந்தமைக்கும் சேர்த்து )____________________________________________________________________

29 comments:

ஜிம்ஷா said...

கேள்வி கேட்டது நானு. பதில் மட்டும் எல்லாருக்குமா?

☆ சிந்தாநதி said...

பயனுள்ள தகவல்கள், தொடுப்புகள்...நன்றி

திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...

//( என் டார்கெட்டை முடித்து கொடுத்தமைக்கும் எனக்கு என் நிறுவனத்தில் நல்ல பெயர் வாங்கி தந்தமைக்கும் சேர்த்து )//
இதைத் தான் "ஆட்டையும் மேய்ச்சுரலாம்.அண்ணனுக்கும் பொண்ணு பார்த்துரலாங்"கிறது.
டார்கெட்டை முடித்தமைக்கு வாழ்த்துகள்

திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...

//( என் டார்கெட்டை முடித்து கொடுத்தமைக்கும் எனக்கு என் நிறுவனத்தில் நல்ல பெயர் வாங்கி தந்தமைக்கும் சேர்த்து )//
இதைத் தான் "ஆட்டையும் மேய்ச்சுரலாம்.அண்ணனுக்கும் பொண்ணு பார்த்துரலாங்"கிறது.
டார்கெட்டை முடித்தமைக்கு வாழ்த்துகள்

அதிஷா said...

வாங்கோ ஜிம்ஷா

ஹிஹி

உங்களுக்கு குடுக்கற பதில் எல்லாருக்கும் உதவுமில்ல

அதிஷா said...

வாங்க சிந்தாநதி மிக்க நன்றி

அடிக்கடி வாங்க

அதிஷா said...

\\"ஆட்டையும் மேய்ச்சுரலாம்.அண்ணனுக்கும் பொண்ணு பார்த்துரலாங்"\\

;-)))))))

வாங்கணா ... எங்க ரொம்ப நாளா ஆளயே காணல

லக்கிலுக் said...

வாழ்த்துக்கள் அதிஷா.

ஷகிலா மடி போன்ற ஒரு மடிக்கணினி தேவை. உங்களால் ஏற்பாடு செய்யமுடியுமா?

அதிஷா said...

\\ஷகிலா மடி போன்ற ஒரு மடிக்கணினி தேவை. உங்களால் ஏற்பாடு செய்யமுடியுமா?
\\

;-))))))))

கொஞ்சம் கூட செலவாகும்.....

வேணும்ணா
உங்க ஆபீஸ் server இன்னொன்னு ஆர்டர் பண்ணி வாங்கி மடியில் வைத்து உபயோகிக்கவும் ,

ஏன்னா நீங்க கேக்கறது சூப்பர் கம்ப்யூட்டர் , மெய்யாலுமே சூப்பர் கம்ப்யூட்டர் பா!!!!!!

கிஷோர் said...

AMD Processor எப்படி? பலர் அதை பரிந்துரைப்பதில்லையே! ஆனால் விலை குறைவாக உள்ளது

ARUVAI BASKAR said...

இது டோண்டு சாருக்கு உண்டான பதிவா ?
நேற்று அவர் தான் மடி கணினி வங்க இருப்பதாக கேள்வி பதிலில் எழுதினார்
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

முகவை மைந்தன் said...

கணினித்துறை சாராதவர்களுக்கான(!) பயனுள்ள பதிவு. எளிதாக புரியும்படி தந்திருக்கிறீர்கள்.

வாழ்த்துகள்.

மோகன் கந்தசாமி said...

////http://www.hp.co.in/////
முதல்ல இருக்க இந்த லிங்க் -அ எடுத்த கொஞ்சம் கடைசியில போற்றுங்களேன், ப்ளீஸ்

Ramya Ramani said...

பயனுள்ள பதிவு!Lenovo(IBM)மடிக்கணினி நன்றாக இருக்குங்க.இது என்னோட experience :)

அதிஷா said...

\\
AMD Processor எப்படி? பலர் அதை பரிந்துரைப்பதில்லையே! ஆனால் விலை குறைவாக உள்ளது

\\

வாங்க கிஷோர்,

AMD processorகள் மடிகணினிக்கு உகந்ததாக எனக்கு தோன்றவில்லை

AMD processors எளிதில் சூடாக கூடியவையாக இருப்பதும் , அதனால் அதிக மின்பயன்பாடு ஏற்படுவதாலும்
battery backup நேரம் வாங்கிய சில நாட்களிலேயே குறைந்துவிடும் அபாயம் உள்ளது .

முக்கியமாக reliability போன்ற பிரச்சனைகளும் உண்டு

அதிஷா said...

\\
இது டோண்டு சாருக்கு உண்டான பதிவா ?
\\

வாங்க அருவை பாஸ்கர்

இது ஜிம்ஷா என்ற நண்பருக்கான பதிவு . இந்த விடயத்தை அனைவரிடமும் பகிர்ந்தால் அவர்மட்டுமல்லாது அனைவரும் பயனடைவர் என்பதற்காகவே இந்த பதிவு

அதிஷா said...

\\
கணினித்துறை சாராதவர்களுக்கான(!) பயனுள்ள பதிவு. எளிதாக புரியும்படி தந்திருக்கிறீர்கள்.

வாழ்த்துகள்.

\\

நன்றி முகவை மைந்தன் வாழ்த்துக்கும் வருகைக்கும்

அதிஷா said...

\\
முதல்ல இருக்க இந்த லிங்க் -அ எடுத்த கொஞ்சம் கடைசியில போற்றுங்களேன், ப்ளீஸ்
\\

வாங்க மோகன் ,

ஏன்னு சொன்னிங்கன்னா மற்றவர்களுக்கும் உபயோகமா இருக்கும்

அதிஷா said...

\\
Lenovo(IBM)மடிக்கணினி நன்றாக இருக்குங்க.இது என்னோட experience :)
\\
வாங்க ரம்யா ரமணி
வருகைக்கு நன்றி

lenovo மடிகணினி நன்றாக இருந்தாலும் வாங்கும் இடம் பார்த்து வாங்கவும் , service support சமயங்களில் கழுத்தருப்பாக இருக்கும் .

Arun said...

நீங்க மடிக்கணினி விற்பவரா?

முரளிகண்ணன் said...

very useful information

லேகா said...

Nice info..thanks a lot..

With regards,
Lekha
http://yalisai.blogspot.com/

ராஜ நடராஜன் said...

சில விசயங்களை தெளிவுபடுத்துங்கள்.

பன்னாட்டு தயாரிப்பு என்பதில் எந்த எந்த நாட்டு தயாரிப்புக்கள் அடக்கம் என்பதை விவரியுங்கள்.காரணம் இங்கே எல்லாமே சீனாவின் இறக்குமதி.பெயர்ப்பலகை எந்த நாட்டினைச் சார்ந்து இருந்தாலும்.

அடுத்து பேரம் பேசி வாங்குங்கள் என்பதில் பயனீட்டாளர்களை ஏமாற்றும் விளையாட்டு ஒளிந்திருப்பதாகத் தெரிகிறது.

கலைஞர் தேர்தல் வாக்குறுதியாக தொலைக்காட்சி பெட்டிகளுக்குப் பதிலாக கணினிகளை அறிவித்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.(அந்த காலகட்டத்தில் சன் தொலைக்காட்சி சண்டைகள் வேறு வடிவத்தில் நடந்திருந்தால் ஜெ க்கு முன்பே முந்தியிருப்பாரோ என்னவோ?)

உங்கள் விற்பனை சாதனைக்கு வாழ்த்துக்கள்.

அதிஷா said...

வாங்க அருண்

நான் மடிகணினி விற்பனை செய்பவன் அல்ல ,

அதிஷா said...

மிக்க நன்றி முரளிணா..
வருகைக்கு நன்றி

அதிஷா said...

வாங்க லேகா வாழ்த்துக்கு மிக்க நன்றி

அதிஷா said...

வாங்க ராஜ நடராஜன்

\\

பன்னாட்டு தயாரிப்பு என்பதில் எந்த எந்த நாட்டு தயாரிப்புக்கள் அடக்கம் என்பதை விவரியுங்கள்.காரணம் இங்கே எல்லாமே சீனாவின் இறக்குமதி.பெயர்ப்பலகை எந்த நாட்டினைச் சார்ந்து இருந்தாலும்.

\\

HP Dell lenovo
போன்ற நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை பல நாடுகளிலும் செய்கின்றன , உதாரணமாக Dell நிறுவனத்தின் தயாரிப்பு தொழிற்சாலை நம் சென்னையிலேயே உள்ளது போல , இதில் நாம் வாங்கும் பொருள் சீனாவில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் கொரியாவில் தயாரிக்கபட்டிருந்தாலும்
அந்த மடிக்கணினியின் தொழில்நுட்பமும் உள்ளிடப்பொருள்களும் ஒன்றுதான் , அதில் வேறுபாடுகள் என நாம் கண்டறிவது மிக குறைவே .அதனால் இம்மடிகணினிகள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது என்பது முக்கியமற்றதே என்பது அடியேனின் கருத்து .

இது தவிர இங்கு இறக்குமதி ஆகின்ற எல்லாமே சீனாவில் இருந்தே இறக்குமதி ஆகிறது என்பதும் தவறான கருத்தாகும். நம் நாட்டில் இறக்குமதி ஆகின்ற மடிக்கணினிகள் பல நாடுகளில் இருந்தும் ( இந்த பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் இருந்து) இறக்குமதி செய்ய படுபவை . அது குறித்து 2-3 நாட்களில் உங்களுக்கு விரிவான விடை தருகிறேன் .


\\
அடுத்து பேரம் பேசி வாங்குங்கள் என்பதில் பயனீட்டாளர்களை ஏமாற்றும் விளையாட்டு ஒளிந்திருப்பதாகத் தெரிகிறது.
\\

பயனீட்டாளர்களை ஏமாற்றும் விளையாட்டு இதில் மட்டுமல்ல மேல்தட்டு மக்கள் பயன்படுத்தும் எல்லா பொருள்களிலுமே உண்டு

பொதுவாக மடிகணினி வாங்க செல்பவர்கள் பேரம் பேசுவது மிக குறைவு , அதனாலேயே அந்த கருத்து அறிவுறுத்தப்பட்டது .
பேரம் பேசினால் மட்டுமே உங்களால் சரியான விலைக்கு அந்த பொருளை வாங்க முடியும் , அதற்கு முன் மடிகணினி குறித்த விலை விபரங்களை சேகரித்து கொள்வது நல்லது

\\ கலைஞர் தேர்தல் வாக்குறுதியாக தொலைக்காட்சி பெட்டிகளுக்குப் பதிலாக கணினிகளை அறிவித்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.(\\

நிச்சயமாக எங்கள் நிறுவனத்தில் இது குறித்து அரசிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அது இயலாமல் போனது , ஆனால் அடுத்த தேர்தலில் இலவச கணினியை நீங்கள் எதிர் பார்க்கலாம்

\\
உங்கள் விற்பனை சாதனைக்கு வாழ்த்துக்கள்.
\\

இதில் நான் எதையுமே விற்கவில்லை ஐயா . இந்த திட்டத்தின் நடைமுறை படுத்துதலிலேதான் என் பங்கு . என் பணி அது போன்றது .

இன்னும் எவ்வளவு சந்தேகம் இருப்பினும் தயங்காமல் கேளுங்கள்

சினிமா நிருபர் said...

மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே...! நன்றி!

கம்ப்யூட்டர் தகவல்கள் said...

நல்ல பயனுள்ள தகவல்.

நன்றி....