30 June 2008

டிபன் பாக்ஸ் வெடிகுண்டு !


'' ஒரு நாளாவது வீட்லருந்து

பொண்டாட்டி குடுத்தனுப்பற

டிபன்பாக்ஸ் சாப்பாட சாப்பிடறீயா

தினமும் ஓட்டல்ல சாப்பிடறீயே

அதுல என்னதான்டா இருக்கு''

உணவு வேலையில் சரியாக வேலை

பார்க்கும் அலுவலக நண்பன்


வழக்கம்போல

புன்னகையோடுமறுதலித்தபடி..

ஓட்டலுக்கு கிளம்புகிறேன்,

அவனுக்கு தெரியாது

........

........

........

........

........

........

........

........

........

........

........

........

........

........

........

........

........

........

........

........


என் வீட்டில்

என் பொண்டாட்டி எங்க சமைக்கறா

நான்தான் சமைப்பேனு......


ச்சும்மா லக்கிலுக்கின் இந்த பதிவில் தந்த டிபன் பாக்ஸில் குண்டு வைக்கலாமென....


;-)

24 comments:

ச்சின்னப் பையன் said...

ஆஹா.. நான் இன்னும் கதையை படிக்கலே. ரத்னா கபேயை பாத்தவுடன் அப்படியே நின்னுட்டேன்... அவ்வ்வ்வ்... தினமும் அந்த சாம்பாருக்காவே (கொஞ்சம் இட்லியுடன்) அங்கே போவோம்.... ம்.......ம்...

rapp said...

ஆஹா, சூப்பரானப் பதிவுங்க. இத இத இதத்தான் எதிர்பார்த்தேன். பேஷ் பேஷ் ரொம்ப நல்லாருக்கு.

Anonymous said...

:-))))))))

நல்ல தமாஷ் கவுஜ

பேரெல்லாம் சொல்ல முடியாதுடா said...

லக்கி போட்டதே ஒரு மொக்கை பதிவு
அத கொஞ்சம் மாத்தி போடற நீ எவ்வளவு பெரிய மொக்கையா இருப்பே..

மங்களூர் சிவா said...

நல்ல எதிர் கவுஜ!!

Anonymous said...

கவுஜ எழுதிப் பேர் வாங்கும் பதிவர்கள் இருகிறார்கள். எதிர்க் கவுஜ எழுதிப் பேர் வாங்கும் நீர் எந்த வகையைச் சார்ந்தவர்?

அதிஷா said...

ச்சின்ன பையன்
ரத்னா கபேன்னாலே சாம்பார்தான் தி பெஸ்டு

விலையும் அடக்கமா...!!!

அதிஷா said...

\\
பேஷ் பேஷ் ரொம்ப நல்லாருக்கு.
\\

நன்றி ராப்...
இந்த பாராட்டுக்கெல்லாம் சொந்தகாரர் லக்கிதான்ங்க

அதிஷா said...

பேரை சொல்ல முடியாத
பெருந்தகையே
வருகைக்கு மிக்க நன்றி

அதிஷா said...

நன்றி மங்களூர் சிவா..
வருகைக்கும் பாரட்டுக்கும்

அதிஷா said...

\\ எதிர்க் கவுஜ எழுதிப் பேர் வாங்கும் நீர் எந்த வகையைச் சார்ந்தவர் \\

வடகரை வேலன்

பிட் அடித்து பேர் வாங்கும் தருமி புலவர் பரம்பரை

Anonymous said...

nice.

:-)

புதுகைத் தென்றல் said...

ரத்னா கபே. அயித்தான் ஊரு. (டிரிபிளிகேன்) பார்த்தா சந்தோஷப் படுவாரு.
இருங்க இந்தப் பதிவை அவருக்குக் காட்டிட்டு வர்றேன்.

narsim said...

neenga romba nallavanga....akka...

ராஜ நடராஜன் said...

அது என்ன ரத்னா க FE பே ன்னு கண் சிமிட்டுது படத்தில்?

லக்கிலுக் said...

ரத்னா கஃபே என்றதுமே எனக்கு டோண்டு சாரும், போண்டாவும் எனக்கு உடனடியாக நினைவுக்கு வரும்.

கயல்விழி முத்துலெட்சுமி said...

நன்றி அதிஷா இப்போது பதிவின் நிறம் அத்தனை உறுத்தவில்லை..
நல்ல சீரியஸான பதிவு இது.. :)

பரிசல்காரன் said...

அடப்பாவிகளா.. அவரு எவ்ளோ பீலிங்கா எழுதினதப் போட்டு இப்படித் தாக்கிப்புட்டிங்களே.. இப்ப டிபன்பாக்ஸ்ன்னா இந்த கவுஜதான் நெனவுக்கு வரும்போல..

என்னமோ போங்க!

(நாம யோசிக்காம விட்டுட்டோமே-ங்கற ஆதங்கம்தான்!)

அதிஷா said...

\\ ரத்னா கபே. அயித்தான் ஊரு. (டிரிபிளிகேன்) பார்த்தா சந்தோஷப் படுவாரு.
இருங்க இந்தப் பதிவை அவருக்குக் காட்டிட்டு வர்றேன். \\

வாங்க புதுகைதென்றல்

காட்டிட்டிங்களா....உங்க அயித்தான் எங்க ஊருதானா??

;-)))

அதிஷா said...

\\ neenga romba nallavanga....akka...\\

நர்சிம் அக்காவா யாரு...??

முதல் வருகைனு நினைக்குறேன்
என்னோட மத்த பதிவுகளையும் பார்த்து உங்க கருத்த சொல்லிட்டு போங்க

வருகைக்கு மிக்க நன்றி

அதிஷா said...

\\
அது என்ன ரத்னா க FE பே ன்னு கண் சிமிட்டுது படத்தில்?

\\

வாங்க ராஜ நடராஜன்

அதுதான் அந்த படத்தோட ஸ்பெசலே

அதிஷா said...

\\
ரத்னா கஃபே என்றதுமே எனக்கு டோண்டு சாரும், போண்டாவும் எனக்கு உடனடியாக நினைவுக்கு வரும்.

\\

லக்கி,

டோண்டு சாருக்கும் போண்டாவுக்கும் என்ன தொடர்பு. அத எனக்கு மட்டும் தனியா சொல்லமுடியுமா??

அதிஷா said...

\\
நன்றி அதிஷா இப்போது பதிவின் நிறம் அத்தனை உறுத்தவில்லை..
நல்ல சீரியஸான பதிவு இது.. :)

\\

அப்பாடா இப்பதாங்கக்கா நிம்மதியாருக்கு

இங்க யாருக்குமே இந்த பதிவோட சீரியஸ்னஸ் புரியவே இல்லக்கா..
உங்களுக்காவது புரிஞ்சுதே..

மிக்க நன்றி....

;-))))

அதிஷா said...

\\ அடப்பாவிகளா.. அவரு எவ்ளோ பீலிங்கா எழுதினதப் போட்டு இப்படித் தாக்கிப்புட்டிங்களே.. இப்ப டிபன்பாக்ஸ்ன்னா இந்த கவுஜதான் நெனவுக்கு வரும்போல.. \\

வாங்க பரிசல் ரொம்ப நாளா ஆளயே காணல

அவருதானா சீரியஸா எழுதினாரு நான் கூட அப்படித்தான் எழுதிருக்கேன்
lable அ பாருங்க தல...


;-)))))