தமிழ்மணத்தில் கலக்கல் பகுதி : நிர்வாகிகளுக்கு நன்றி
>> 28 July 2008
இன்று நம் பதிவர்களினூடே பல எழுத்தாளர்களும் மறைமுகமாக உருவாகி வரும் ஒரு சூழல் நிலவி வருகிறது , இது போன்ற வேளையில் இப்புதிய பதிவர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் நம் தமிழ்மணம் , பதிவர் புத்தகங்கள் எனும் புதிய பகுதியை துவக்கியுள்ளனர் , அப்பகுதியில் இப்போதைக்கு 3 புத்தகங்கள் குறித்த விபரங்களும் அதைப்பற்றி மற்ற பதிவர்களின் கருத்துக்களும் கொடுக்கப்பட்டுள்ளன , இனி வரும் நாட்களில் இது போல பல பதிவர்களும் எழுத்தாளர்களாக வளரும் சூழல் நிலவும் என்பதே அனைவரது நம்பிக்கையும் . இன்றைய எழுத்தாளர்கள் பதிவர்களை மிகவும் இழிவாக நினைக்கும் இக்காலக்கட்டத்தில் நம் பதிவர்களில் இருந்தும் பல மிகச்சிறந்த எழுத்தாளர்கள் உருவாகி வருவது பதிவுலகத்தின் ஆரோக்கியமான வளர்ச்சியை காட்டுவதாகவே கருதுகிறேன் .
இந்த புதிய பகுதியை தமிழ்மணத்தில் இணைத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும் அதற்கு காரணமான சக பதிவர் நண்பர்களுக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் .

6 கருத்துக்கள்:
அடுத்த புத்தகம் அதிஷாவுடையதுதான்
உங்க வாய்ல சக்கரை போடணும் என்னைக்காவது அப்படி ஒண்ணு நடந்தா உங்களுக்கு முதல் பிரதி இலவசமா தந்துடறேன்
\\உங்களுக்கு முதல் பிரதி இலவசமா தந்துடறேன்\\
நான் பணம் குடுத்துத்தான் வாங்குவேன். நம்ம தலை புக்கவே அப்படித்தான் வாங்கியிருக்கேன்
ஆமாம் மிகவும் நல்ல பகுதிதான்.
அண்ணே நான் உங்க புக்கு 100 வாங்கி எல்லாருக்கும் குடுக்குறேன்.
நான் அதிஷாவின் புத்தகத்தை 1001 வெள்ளி கொடுத்து வாங்கிக்கிறேன்...
Post a Comment