30 July 2008

சில்க்,ஷகிலா,நமீதா மற்றும் கிருஷ்ணன்பிள்ளை
''ஏன்னா , எப்பண்ணா வருவேள் , சித்த வந்துட்டு போங்கோணா , ப்ளீஸ்ணா!!! '' காட்டுத்தனமாய் கதறினாள் சில்லு .


''ஏன்டிமா , கொஞ்சம் பொருத்துக்க படாதா !!! நேக்கு கொஞ்சம் வேலை இருக்குடி!! வந்துடறேன்டிமா '' இவளுக்கு இதுவே வேலையா போயிடுத்து , கொஞ்சம் கூட ரெஸ்டே இல்ல , என்ன மனுசன்னு நினைச்சாளா இல்லை வேறெதும்னா?


வணக்கம்ணா நான் சீதாபதி ஸார்ட்டா "சீது"னு கூப்பிடுவா , இப்ப என்ன கூப்பட்டாளே அவ என்னோட ஆத்துக்காரி சரியான குடைச்சல் , ஏன்தான் கட்டிண்டமோனு நான் அழாத நாள் இல்லை , நான் பத்து வருஷமா நம்ம கிருஷ்ணப்பிள்ளை அலைஸ் கிட்டு மாமாகிட்ட வேலை பார்த்தேன் , நல்ல மனுசன் , அறிவாளி , விட்டிருந்தா இன்னொரு அப்துல் கலாமா வர வேண்டியவர் , அவர பாத்தா வீ எஸ் ராகவணாட்டமா கம்பீரமா இருப்பார்!!!!!


அவருக்கு எல்லாமே நான்தான் தெரியுமோ!!

ஏன்னு கேக்கறேளா , அவருக்கும் எனக்கும் அப்படி ஒரு உறவு , அவராண்டை போயி கேட்டு பாருங்கோ என்ன பத்தி , பத்தி பத்தியா புகழ்வார் , ஏன்னா அவரும் நானும் 25 வருஷப்பழக்கம் .


அப்ப எனக்கு 6 வயசிருக்கும் அப்ப கிட்டு மாமா எங்க பக்கத்தாத்துலணா இருந்தார் , நான் சிறுவர் மலர் படிக்கறதுக்கா அவர் வீட்டாண்டை போவேன் , அப்படியே ரெண்டு பேரும் நல்ல பிரெண்ட்ஸ் ஆகிட்டோம் அப்ப அவருக்கு 30 வயசு .

மாமா கட்டை பிரம்மச்சாரி, சரியான அப்பிராணி , அவரும் நானும் முத முத வெளிய போனது அப்ப புதுசா வந்த ஜம்பு படத்துக்கு , அவருக்கு ராஜ்கோகிலானா உசிரு , அந்த காலத்து கர்ணன் படங்கள்ள வக்கிற கேமிரா ஏங்கிள பாக்கிறதுக்குன்னே போறேன்டானு சொல்வார் .


எனக்கு அந்த கேமிரா ஆங்கிள் பத்தி அப்ப புரியலை ஆனா இப்பதான் புரியறது , மாமாவுக்கு ஏன் ராஜ்கோகிலாவ மன்னிக்கனும் கேமிரா ஆங்கிள்னா பிடிச்சதுனு . அதும் அந்தம்மா நடிச்ச ரிவால்வர் ரீட்டா படத்த ஒரே நாள்ல 4 ஷோவும் பாத்து தியேட்டர் காரனையே மிரல வச்சவரு,

அவருக்கு தொழில்னா ஆராய்ச்சிதான் , எதையாவது எதையோடையோ கலக்கின்டே இருப்பார் , என்ன மாமா இதுலாம்னு கேட்டா , பாருடா ஒரு நா என் பேரு பேப்பர்ல வரும் நேக்கு நோபல் பரிசு கிடைச்சிடுத்துனு , நேக்கு அதலாம் புரியாது , ஏதாவது எடுபிடி வேலை செய்ய போயி அப்படியே அவரோடை இருந்து நானும் கொஞ்சம் கொஞ்சம் கத்துண்டு பியூசி முடிச்சுண்டு அவரோட அஸிஸ்டெண்ட் ஆகிட்டேன் .


ராஜ்கோகிலா படங்கள் ( அந்தம்மா ரிடையர்டு ஆனப்பறம் )சில காலமா வரமா இருந்தப்ப மாமா பித்து பிடிச்சுண்டு அவா படத்தை வச்சுண்டு பைத்தியமாட்டம் புழம்பிட்டு ஆராய்ச்சி கூட பண்ணாம லூசாட்டம் சுத்திடுருந்தார் .


அப்பதான் சில்க் சுமிதானு ஒரு புயல் மாமா வாழ்க்கைல வசந்தமாட்டமா வீசுச்சு , மறுபடியும் வேதாளம் முருங்கை மரமேறின மாதிரி அவருக்கு மறுபடியும் வாழ்க்கைல ஒரு பிடிப்பு ஒரு துடிப்பு வந்து ஒட்டிணுடுத்து.

அதுக்கப்பறம் மாமா மறுபடியும் பம்பரமாட்டாம் சுழண்டு சுழண்டு வேலை பண்ண ஆரம்பிச்சார் , அப்ப வந்து சில்க் சில்க் சில்க் படத்த 50 வாட்டியாவது பாத்திருப்பார் , நான் போன ஜென்மத்தில என்ன பாவம் செஞ்சேணோ நானும் அந்த கருமத்தை , எத்தனை வாட்டினு சொன்னேன் , ம்ம் 50 வாட்டி பாத்து தொலைய வேண்டி இருந்துது .


என்னண்ணா பண்ண சொல்றேள் , வவ்வாலாண்டை ஜோலி பாத்த தலைகீழா தொங்கித்தான பாத்தாகணும் , அப்படித்தான் வேண்டா வெறுப்பா பாக்க ஆரம்பிச்சேன் , சில்க்குக்காக தன் உயிரையும் தர தயாராயிருந்தார் .

மூன்றாம்பிறை படத்துல நடிச்சதுக்காக சிலுக்குக்கு தேசிய விருது கிடைக்கும்ணு எதிர்பார்த்த ஒரே இந்தியர் அவரு மட்டுந்தாண்ணா , சிலுக்க ஒருநா பாக்க போயி அந்தம்மா குடிச்ச காபி கப்ப வீட்டில கொண்டாந்து வச்சிண்டு அவரு விட்ட அலம்பல பாத்து நேக்கு அதாலயே கிழத்த அடிச்சி கொன்னுடலாமாணு தோணித்து அப்படி ஒரு அலம்பல்


அவருக்கு முதல் பொண்டாட்டி வேலைதான் ஊரே பத்தி எரிஞ்சாலும் இவரு மாத்திரம் அமைதியா ஹைட்ரோ குளோரிக் ஆசிட்ட சின்தெடிக் ரப்பரோட இணைச்சு வச்சு கும்மாளம் அடிச்சுண்டிருப்பார் .


இவரு பாட்டுக்கு எதையாவது பண்ணின்டே இருப்பாரு , நேக்கு வேலைவெட்டி இருக்காது , நானும் எத்தன நாழிதான் தேமேனி பாத்தின்டுருப்பேன் , என்னை ஆத்துக்கும் போக விடமாட்டார் , எனக்கு அப்பல்லாம் எரிச்சலாய் வரும் , பேசாமா கிழவனுக்கு மூக்கு பொடியில விஷம் வச்சு கொன்னுடலாமானு !!!

என்ன செய்றது நேக்கு போலிஸ்னாலே பயம் , அப்படியே அடக்கிப்பேன் டவுசர கிழிச்சிண்டு வர கோவத்தை , என்னடா லோகம்னு நொந்துண்டு விட்டத்த பப்பரப்பானு பாத்துண்டு உக்காந்துப்பேன் .

இப்படியே அறுந்து போன பட்டமாட்டமா போயிட்டிருந்த மாமாவோட வாழ்க்கைல மறுபடியும் கொதிக்கிற காபிய காதுல ஊத்தினா மாதிரி ஆகும்னு நினைக்கவே இல்லை ,

ஆமான்ணா

திடீர்னு ஒருநா சில்க்கு செத்துண்டானு தலைய மழிச்சிண்டு வந்து நிக்கறார் .
என்ன மாமா என்னாச்சுனு கேட்டா சில்க்கு செத்துட்டா அவளை என் ஆத்துகாரியாட்டமாதான் நினைச்சிண்டிருந்தேன்னாரு பைத்தியக்கார மனுசன் , அவரோட வாழ்க்கைல 15 வருஷம் வண்டில போடுவாளே ஆஆஆன் இன்ஜின் ஆயில் அதாட்டம் அவருக்கு சில்க்கு .

மனுசன் வாழ்க்கை மறுபடியும் முருங்கைமரத்துல ஏறிண்ட வேதளமாட்டம் ஆகிடுத்து , கிழவன் தேவதாசட்டம் பெரிய தாடி வளத்துண்டு பாக்க பரங்கிமலை சித்தராட்டாமா தத்துவம் பேசிண்டு ஊருக்குள்ள புதுசா முளைச்ச சாமியாராட்டம் ஆகிட்டார் . நேக்கும் 6 மாசமா வேலை இல்லைணு , எங்க காஞ்சிபுரம் தாத்தா வீட்டுக்கு போயிட்டேன்.


கிழவர் உயிரோடதான் இருக்காரா இல்ல போயிடுச்சானு பாக்கலாம்னு வந்து பாத்தா ஆசை அஜித்குமாராட்டம் பளபளன்னு ஷேவிங்கலாம் பண்ணின்டு தலைமயிருக்குலாம் கலர் பூசிண்டு அலம்பல் பண்ணின்டு திரியறது கிழம் , என்ன ஏதுன்னு விசாரிச்சா , பரங்கிமலை சாமியார் ஷகிலாவை பாத்ததும் பரவசநிலை அடைஞ்சிடுத்துனு.

கிழம் ஷகிலா படம் ஒண்ணு விடமா பாத்துரும் அதும் பாத்தபடத்தையே எத்தனை தடவை பாத்துதுனு கணக்கு வழக்கில்லாம , ஊருக்குள்ள ஒரு தியேட்டர் விடாது , நேக்கு எப்படியோ கிழம் மறுபடியும் பார்முக்கு வந்துடுச்சேனு மனசுக்குள்ள குபுக்குனு குதுகலம் குந்திடுத்து , இருக்காதா பின்ன அவரோட ஜோலி பாத்தா ஒரு நாளைக்கு ஆயிரம் இரண்டாயிரம் தேறும் அதான் வேறோன்னுமில்லை.

அதோட ஆராய்ச்சியும் மறுபடியும் ஆரம்பிச்சிடுத்து , முதமுத அவரு குளோனிங்ல ஒரு கொசுவ உருவாக்கினார் , மாமாக்கு சந்தோசம் தாங்கல , வாடா சீது கொண்டாடலாம்னு என்னை கூட்டிண்டு போனார் மாமா , நான்கூட மாமா எதோ ட்ரீட் வைக்கப்போறாருனு பாத்தா ,


கிழம் போயும் போயும் அந்த கிழத்தோட அகண்ட பாரதத்தின் அழகு மங்கை ஷகிலாவோட தங்கத்தோணி படத்த ஊருக்கு ஒருக்குபுறமா இருக்குற அந்த கண்றாவி தியேட்டர்ல முத வரிசைல உக்காரவச்சி என்னோட ஆசைல கபடி விளையாண்டுடுத்து கிராதகன் .

ஷகிலா படம் வரத்து குறைய ஆரம்பிச்சிது , மாமாக்கும் ஷகிலா மேல சலிப்பு வந்துடுத்து , இந்த முறை முழுமூச்சா ஆராய்ச்சில இறங்கிட்டார் , அவரோட அடுத்த லச்சியம் சில்க்கு சுமிதாவோட குளோனிங் அதுக்காக கிழம் முன்னாலயே சேகரிச்சு வச்சிருந்த அந்த பொம்மனாட்டியோட மயிரை வச்சிண்டு ஆராய்ச்சில இறங்கிடுத்து .


விசுவாமித்திர முனிவர் தவமிருந்த மாதிரி ஆராய்ச்சி பண்ணின்டு இருந்த மாமா வாழ்க்கைல அகலிகை மாதிரி வந்து தொலைஞ்சா நமிதா , என்ன பேரோ !! மாமா மனசு அலை பாஞ்சுது , மாமா கொஞ்ச கொஞ்சமா வழுக்கி கொஞ்ச கொஞ்சமா வழுக்கி திடீர்னு ஒருநா மொத்தாமா நமிதாவோட அந்த சின்ன................................

என்ன வோய் முறைக்கிறேள் !!

அந்த சின்ன சிரிப்புல சிதைஞ்சு போயிட்டாருனு சொல்ல வந்தேன்ண்ணா , மாமா வாழ்க்கைல வீசின கடைசி வசந்தம் நமிதாதான் , நமிதா படம்ணா மாமாக்கு உசிராச்சு , நமிதான்ற அந்த மந்திரச்சொல் அவரோட இருண்ட வாழ்க்கை அகண்ட விளக்காச்சு .

ஆனாலும் மாமாவோட பரந்து விரிஞ்ச விசாலமான மனசில நிரந்தரமா துண்டு போட்டு இடம் பிடிச்சதென்னமோ சிலுக்குதான் , அதனால நமிதா பத்தின ஆசைகளுக்கு மத்தியிலயும் தன்னோட சிலுக்கு குளோனிங் ஆராய்ச்சிய விடாம பிடிச்சிண்டு , ராப்பகல் பாக்காமா கண்முழிச்சு கூர்க்காவாட்டம் காவல் காத்து ஒருநா முழுசா சிலுக்க படைச்சிருச்சு கிழம் .


நேக்கு நம்பவே முடியல அந்த மெஷினுக்குள்ளருந்து முழுசா பதினெட்டு வயசுல ஒடம்புல ஒட்டுதுணி இல்லாம ஐயோ சாமி நேக்கு வெக்கமாருக்கு , இந்த கிழவனுக்குள்ளயும் என்னமோ இருந்துருக்கு பாரேன்னு நினைச்சிண்டேன்.

ஆனா பாருங்கோ அந்த சிலுக்கு பொண்ண அந்த பெரிய சைஸு குடுவைக்குள்ளருந்து வெளிய எடுத்து குளிப்பாட்டி உடம்புல துணிமாட்டி உக்காரவச்சா லூசு மாதிரி சிரிச்சுண்டே இருந்துச்சு ,


நேக்கு உடம்புக்குள்ள குலுகுலுனு குச்சி ஐஸ குமட்டுல வச்ச மாதிரி இருந்துச்சி , மாமா சொன்னார் அந்த பொண்ணு மண்டைல ஒன்னுமில்ல அந்த பொண்ணுக்கு சில விசயங்கள புரோகிராம் பண்ணி மூளைல ஏத்தணும் அப்பதான் அவளால நம்மலாட்டமா பேச முடியும்னு சொன்னார் , நேக்கு ஒண்ணும் புரியலை .


அந்த பொண்ணை மல்லாக்க படுக்க வச்சிண்டு அது மண்டைல உடம்பிலெல்லாம் வயருல்லாம் சொருகி அதை கம்யூட்டர்ல இணைச்சுண்டு மாமா என்னாண்டை , அவரு சொல்றதை டைப்படிக்க சொன்னார் .

நானும் அடிச்சேன் அடிச்சேன் அடிச்சேன் மூணு நாளு விடாம ,கண்ணு முழிச்சு கை தேயறவரைக்கும் அடிச்சேன் .

மயக்கத்திலருந்த அந்த மர்ம மங்கை மண்டைலருந்த வயர பிடுங்க சொன்னாரு , சொல்லிட்டு அடுத்த நாள் விடியகாலை அஞ்சு மணிக்கு வந்துட்றா சீதுனு கடிஞ்சார் , நானும் மாடு மாதிரி மண்டைய ஆட்டிண்டு அடுத்த நாள் அங்க போனா, தலைல கைய வச்சிண்டு மோடிமஸ்தான் குரங்காட்டம் உங்காந்துருக்கார் , என்ன மாமானா நீயே போயி பாருண்றார் .


நானும் தைரியத்தை வரவழைச்சிண்டு உள்ள போயி பாக்கறேன் , அந்த சிலுக்கு பொண்ணு என்ன பாத்து கண்ண்டிச்சிண்டு என்னாண்டை வந்து மாமா என்ன மாமா அப்படி பாக்கறேள் நான்ந்தான் உங்க ஆத்துக்காரி நோக்கு ஞாயபகமில்லயானு கேக்கறா, நேக்கு மனசுக்குள்ள ஒரு மாதிரி ஜிலோமாவா இருந்துச்சு , அவளை கூட்டிண்டு மாமாவாண்டை போனா மாமா என் கண்ணையே ஒன்கிட்ட ஒப்படைக்கிறேன் இதுல ஆனந்த கண்ணீரத்தான் பாக்கணும்னு எங்க கைய சேத்து வச்சிண்டு கிட்டு மாமா நாமெல்லாம் போக முடியாத இடத்துக்கு போயிட்டாரு ,

'' என்னது செத்து போயிட்டாரா ''

ஐயோ அப்படிலாம் பேசதேள் பாவம் கிட்டு மாமா எங்கயோ தேசாந்திரம் போயிட்டார் , கிட்டு மாமாக்கு என்ன சோகமோ அந்த ஆண்டவனுக்குதான் தெரியும் , போறப்ப ஒண்ணு சொன்னார் அதாவது கிடைக்கறது கிடைக்காது, கிடைக்காம இருக்கறதுதான் கிடைக்கும்னு எனக்கு ஒண்ணும் புரியலை .

இதோ இப்ப அங்க ஏக்கமா என்னை கூப்பிடறாளே என் ஆத்துக்காரி அவதான் அந்த சிலுக்கு பொண்ணு , அவரோட சொத்துக்களையும் எனக்கே குடுத்துட்டாரா , நல்ல சேமமா இருக்கேன் , வந்ததிலருந்து ஒண்ணும் பேசாம இருக்கேளே , காப்பி சாப்பிடறேளா ? '' ஏன்டி சில்லுமா சாருக்கு காபி குடு '' நான் என்ன சொன்னாலும் அப்படியே கேப்பா கீ குடுத்த பொம்மையாட்டம் , உங்கள கொல்ல சொன்னாக்கூட , வேணா ஒருவாட்டி சொல்லட்டுமா..........
வினோவுக்கு பீதியில் விழிபிதுங்கியது '' மிஸ்டர் சீதாபதி அப்படி என்னதான் ஆச்சி அந்த பொண்ணுக்கு ஏன் உங்கள பாத்து புருஷன்னு சொன்னாங்க ''

அதுவா அது ரகசியம்ணா , இருந்தாலும் உங்களாண்டை மட்டும் சொல்றேன் , தயவு பண்ணி இத பத்திரிக்கைல போட்றாதேள் , சில்லு மண்டைல வயர போட்டு அவளுக்கு எல்லாத்தையும் புரோகிராம் பண்ணறப்போ நான்தான எல்லாத்தையும் டைப் பண்ணேன் அப்பதான் அவரு பேரு வரவேண்டிய இடத்தில எல்லாம் என் பேர டைப் பண்ணிட்டேன் , நான் இத வேணும்ணு பண்ணலை , அவ மண்டைல ஓரு முறை பண்ண புரோகிராம் மறுபடியும் மாத்த முடியாதாக்கும் .

அவா அவா பிராப்தம் , அன்னைக்கு நான் தெரியாம பண்ண தப்பு இப்ப என்ன இப்படியும் கிட்டு மாமாவ அப்படியும் வச்சிருக்கு . இதெல்லாம் உங்க பத்திரிக்கைல போடமாட்டேளே , பின்னால என்னோட பரஸ்பர உத்தமமான தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கும் அதான்.......


இப்படியாக சீதாபதியின் வாழ்க்கை சுபமாய் இல்லற சுகத்தோடு இன்பமாய் தொடர்ந்தது .

கிருஷ்ணப்பிள்ளை இமயமலையில் நயன்தாராவை ரஜினிகாந்துடன் இருவரும் தியானத்தில் இருந்த போது பார்த்து அந்த மாதின் மீது மையல் கொண்ட பிரும்ம ராக்ஷனைப்போல அவளுக்காய் திரும்பி சென்னை வந்து தனது புதிய ஆராய்ச்சியை ஆரம்பித்தார் இம்முறை குளோனிங்கில் சில்க் அல்ல நயன்தாரா....... கிழவனின் வாழ்க்கையில் தென்றல் அடிக்கடி வீசுவது போல மறுபடியும் காட்டுத்தனமாய் வீசத்தொடங்கியது .

31 comments:

கோவி.கண்ணன் said...

கலக்கல் நகைச்சுவை நடை, ஆக சில்கை மறக்காமல் இருப்பவர்களில் நீங்களும் ஒருவர்,

சில்க் நடித்த போலிஸ் போலிஸ் போலிஸ் என்னுடைய 17 வயதில் பார்த்து இருக்கிறேன். அப்போதெல்லாம் சில்க் எந்த திரைப்படத்தில் வந்தாலும் விசில் பறக்கும். சில்க் நடித்ததில் எனக்கு பிடித்த படம் ரஜினி காந்தின் 'பாயும் புலி' ஆடி மாசம் காத்தடிக்க... பாடலை அவ்வளவு விரைவாக மறக்க முடியுமா ?

Anonymous said...

நீ நம்மவாளா ஓய்?

Tech Shankar said...கண்டிப்பா உங்கள் பதிவு டாப் 10ல் வந்துவிடும். சந்தேகம் வேண்டாம்.

Unknown said...

கோவி அண்ணா
மிக்க நன்றி

போலிஸ் போலிஸ் படம் நான் கூட பார்த்துருக்கேன்
அது அறியாத வயசு அந்த படத்தோட நுண்ணரசியல் அப்ப புரியல
இப்ப பாக்கணும்னு ஆச பட்ட DVD கிடைக்க மாட்டேங்குது

Anonymous said...

ஏன்டா அம்பி,உனக்கு காமெடி பண்ண நம்மவாதான் கிடைச்சாளா?

முரளிகண்ணன் said...

லக்கிலுக்குக்கு வாரிசு வந்துருச்சு போல

Unknown said...

முரளி அண்ணா ...

லக்கிலுக் வாரிசா ? நானா?

அவ்வ்வ்

நான் போக வேண்டிய தூரம் இன்னும் நெறய இருக்குண்ணா

Anonymous said...

அடேய் கிராதகா!

VIKNESHWARAN ADAKKALAM said...

கதை நல்லா இருக்கு... பிராமண பாஷையில் எழுதி இருப்பதால் படிக்க கொஞ்சம் கஷ்டமாகிவிட்டது... நகைச்சுவையாக கொடுத்து இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்...

manikandan said...

நல்லா எழுதி இருக்கீங்க ஆதீஷா. கலக்கலான dialect. நீங்க சீக்கிரமாவே பத்திரிகைல எழுத ஆரம்பிச்சுடுவீங்க. வாழ்த்துக்கள்.

லக்கிலுக் said...

அதிஷா!

போலிஸ் போலிஸ் டிவிடி கிடைத்தால் எனக்கும் ஒன்று ஆட்டையை போட்டு வைக்கவும். பாக்யராஜின் அவசரப்போலிஸிலும் நம்ம சிலுக்கு கலக்கு கலக்குன்னு கலக்கியிருப்பார் :-)

கான்ஸ்டபிள் ஒருவர் ஏட்டான பாக்யராஜிடம் சொல்லும் டயலாக்கு : “சார் மதியானம் செம்ம காட்டு காட்டிட்டீங்க”

பாக்யராஜ் மனதுக்குள் “வீட்லே நாம காட்டு காட்டுன்னு காட்டுனது இவனுக்கு எப்படி தெரியும்?” இந்த பாக்யராஜின் மனைவி சிலுக்கு.

உண்மையில் இன்னொரு பாக்கியராஜ் அதே மத்தியானம் ஒரு ரவுடியை செம்ம காட்டு காட்டியிருப்பார்.

Unknown said...

வாங்க விக்கி வருகைக்கு நன்றி.

பிராமண பாஷை புரியலையா???

Unknown said...

தமிழ்நெஞ்சம் வாங்க வருகைக்கு நன்றி

டாப் 10 ஆ அது என்ன

Thamira said...

என்னிது இது.. சயின்ஸ் .:பிக்ஷனா? அல்லது பிட்டு புராணமா? எப்பிடினாலும்.. நன்னாருக்குதுபா..

Unknown said...

எங்க ஊர்''கனவுக் கன்னி"க்கு பிறந்த நாள் வாழ்த்த வாங்க!!

Anonymous said...

ஓய் நல்லா பார்த்தீரா ரெண்டுபேரும் தியானத்தில்தான் இருந்தாங்களானு

Anonymous said...

எத்தன பேரு வந்தாலும் சில்க் சில்க் தான்.

ராஜ்கோகிலாவிலருந்து நேரா சில்க்குக்கு வந்துட்டிங, நடுவுல ஜெயமாலினின்னு ஒரு 'பெரிய' ஆள மறந்துட்டிங்களே?

Anonymous said...

//பேசாமா கிழவனுக்கு மூக்கு பொடியில விஷம் வச்சு கொன்னுடலாமானு //

பாவிகளா, என்ன ஒரு டெக்னிக்?

வெண்பூ said...

//அகண்ட பாரதத்தின் அழகு மங்கை ஷகிலா//

இதை இப்படி அப்படி இல்லாமல் எல்லா திசையிலும் ரிப்பீட்டுகிறேன்..

நல்ல ஹியூமர் அதிஷா... ஆனாலும் நயன்தாராவை இந்த லிஸ்ட்ல சேத்திருக்க வேண்டாம்.

PPattian said...

Constant Husband="கிட்டு மாமா" ன்னு எழுதுறதுக்கு பதிலா Constant Husband="சீது"ன்னு எழுதிட்டாரா :)

நல்லாருக்கு கதை.. இந்த கதைக்கு அவா பாஷை தேர்ந்தெடுத்ததற்கு ஸ்பெஷல் காரணம் உண்டா?

Anonymous said...

என் கதைய அனுமதி இல்லாமல் வெளியிட்ட அதிஷாவை வன்மையாக கண்டிக்கிறேன்

Anonymous said...

do you know Meena is Rajagokila's sister(Raj Maliga) daughter

Subu

கயல்விழி said...

உலகத்திலேயே நீங்களும் லதானந்தும் மட்டுமே சில்க் சுமிதாவை மறக்காமல் இருக்கிறீர்கள் :)

நல்ல பதிவு.

Unknown said...

வாங்க லக்கி நான் கூட அந்த படத்த பல தடவ பார்த்திருக்கேன்

போலிஸ் டிவிடி மாட்டினா எங்களுக்கொண்ணு பார்சல் அனுப்பறேன்

Unknown said...

\\
என்னிது இது.. சயின்ஸ் .:பிக்ஷனா? அல்லது பிட்டு புராணமா? எப்பிடினாலும்.. நன்னாருக்குதுபா..

\\

வாங்க தாமிரா இது பிட்டு சயின்ஸ் பிக்சன் வாழ்த்துக்கு நன்றி

___________________________________

வாங்க புதுகை சாரல் வருகைக்கு நன்றி

Unknown said...

\\
எத்தன பேரு வந்தாலும் சில்க் சில்க் தான்.

ராஜ்கோகிலாவிலருந்து நேரா சில்க்குக்கு வந்துட்டிங, நடுவுல ஜெயமாலினின்னு ஒரு 'பெரிய' ஆள மறந்துட்டிங்களே?

\\

வாங்க வடகரை வேலன்

;-)

Unknown said...

நன்றி வெண்பூ...வருகைக்கும் வாழ்த்துக்கும்
-----------------------------

நன்றி அவனும் அவளும் வருகைக்கும் வாழ்த்துக்கும்
______________________________

நன்றி புபட்டியன் வருகைக்கும் வாழ்த்துக்கும்

________________________________

Unknown said...

வாங்க கயல்விழி
அவங்க சாதரணமா மறக்க கூடிய ஆளா!!!

___________________________

பின்னூட்டமிட்ட எல்லா அனானி நண்பர்களுக்கும் மிக்க நன்றி

முரளிகண்ணன் said...

சிறில் அலெக்ஸ்ஸோட சிறுகதைப்போட்டிக்கு தானே இந்த அறிவியல் சிறுகதை?

Unknown said...

\\ சிறில் அலெக்ஸ்ஸோட சிறுகதைப்போட்டிக்கு தானே இந்த அறிவியல் சிறுகதை? \\

போட்டிக்கு அனுப்பலைணா ...

இந்த கதைல சயிண்ஸ் கொஞ்சம் கம்மி அதான் அனுப்பல

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team