01 August 2008

ரஜினிகாந்த்,உண்மைத்தமிழன்,பகிரங்க மன்னிப்பு

ரஜினிகாந்த் நேற்று கருநாடக மக்களிடம் கேட்ட மன்னிப்பில் அவரது ரசிகர்கள் அவரை திட்டுவதா இல்லை அவரது குசேலனுக்கு போவதா இல்லை மொத்தமாக ரஜினியை வெறுத்து விடுவதா என பெரும் குழப்பத்திலும் மன உலைச்சலிலும் இருப்பதால் அவர்களுக்காவும் ,

இரண்டு நாட்களுக்கு முன் எனது வலைப்பக்கத்தில் வெளியான சில்க்,ஷகிலா,நமிதா மற்றும் கிருஷ்ணபிள்ளை பதிவை படித்து என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வருத்தங்களை தெரிவித்து கொண்ட என் வலையுலக ஆசான் உண்மைத்தமிழன் அண்ணாவிடம் மன்னிப்பு கேட்கும் பொருட்டுமே இந்த பதிவு .

இப்பதிவு , லூசுத்தனமாக வாயைவிட்டு மாட்டிக்கொள்ளும் ரஜினிகாந்த் அவர்களுக்கும் , இவ்வளவு நடந்தும் திருந்தாத ரஜினி ரசிகர்களுக்கும் , என் ஆசானே என்னை தவறாக புரிந்து கொள்ளும்படி நடந்து கொண்ட எனக்கும் நல்ல அறிவை எல்லாம் வல்ல அந்த முருகப்பெருமானே அருளவேண்டும் என வேண்டிக்கொண்டு , இப்பதிவோடு இணைக்கப்பட்டுள்ள கந்த சஷ்டி கவசத்தையும் அனைத்து ரஜினி ரசிகர்களும் , ரஜினிக்கும் உங்களுக்கும் மற்றும் எனக்கும் நல்ல அறிவு தர வேண்டியும் படித்து பயன் பெறவும் .

இம்மாதத்தின் முதல் பதிவான இப்பதிவை அதுவும் திருமுருகனின் கந்த சஷ்டி கவசத்தை என்னை எழுத தூண்டிய உண்மைத்தமிழன் அண்ணாவிற்கே இப்பதிவையும் சமர்பிக்கிறேன் .பழனி பாலதண்டாயுதபாணியின் இப்படத்தின் மேல் சொடுக்கி இந்த மெகா சைஸ் படத்தை நீங்களும் தரவிறக்கி கொள்ளலாம்.

கந்த சஷ்டி கவசம் ;

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்சஷ்டி கவசம் தனை.
அமர ரிடர்தீர அமரம் புரிந்தகுமரனடி நெஞ்சே குறி.

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்துவரவர வேலா யுதனார் வருகவருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்றமந்திர வடிவேல் வருக வருக!வாசவன் முருகா வருக வருகநேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருகநீறிடும் வேலவன் நித்தம் வருகசிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!சரவண பவனார் சடுதியில் வருக
ரவண பவச ர ர ர ர ர ர ரரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரிவிபச சரவண வீரா நமோநமநிபவ சரவண நிறநிற நிறென
வசுர வணப வருக வருகஅசுரர் குடிகெடுத்த ஐயா வருகஎன்னை ஆளும் இளையோன் கையில்பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்கவிரைந்தெனைக் காக்க வேலோன் வருகஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!
ஆறு முகமும் அணிமுடி ஆறும்நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகுகுண் டலமும்ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்துநன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்பரி நூலும் முத்தணி மார்பும்செப்பழ குடைய திருவயி றூந்தியும்துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
இறுதொடை யழகும் இணைமுழந் தாளும்திருவடி யதனில் சிலம்பொலி முழங்கசெககண செககண செககண செகணமொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகெனடிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுணரரரர ரரரர ரரரர ரரரரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடுடகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகுவிந்து விந்து மயிலோன் விந்துமுந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வமைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்லாலா லாலா லாலா வேசமும்லீலா லீலா லீலா வினோ தனென்று
உன் திருவடியை உறுதியென் றெண்ணும்எந்தலை வைத்துன் இணையடி காக்கஎன்னுயிர்க் குயிராம் இறைவன் காக்கபன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்கபொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்ககதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்கவிதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்கபேசிய வாய்தனைப் பெருவேல் காக்கமுப்பத் திருபல் முனைவேல் காக்கசெப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்கஎன்னிளங் கழுத்தை இனியவேல் காக்கமார்பை ரத்ன வடிவேல் காக்கசேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்கபிடரிக ளிடண்டும் பெருவேல் காக்கஅழகுடன் முதுகை அருள்வேல் காக்கபழுபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்கசிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்கநாணாங் கயிற்றை நல்வேல் காக்கஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்கபிட்ட மிரண்டும் பெருவேல் காக்கபணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்கவட்டக் குதத்தை வல்வேல் காக்கஐவிரல் அடியினை அருள்வேல் காக்ககைகளி ரண்டும் கருணைவேல் காக்க
முன்கையி ரண்டும் முரண்வேல் காக்கபின்கையி ரண்டும் பின்னவள் இருக்கநாவில் சரஸ்வதி நற்றுணை யாகநாபிக் கமலம் நல்வேல் காக்கமுப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்கஅடியேன் வதனம் அசைவுள நேரம்கடுகவே வந்து கனகவேல் காக்கவரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்கஅரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்கதாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்ககாக்க காக்க கனகவேல் காக்கநோக்க நோக்க நொடியில் நோக்கதாக்க தாக்க தடையறக் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபடபில்லி சூனியம் பெரும்பகை அகலவல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்அல்லற் படுத்தும் அடங்கா முனியும்பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிடஇரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்தண்டியக் காரரும் சண்டாளர் களும்என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பா வைகளும்பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்பாவைக ளுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்காசும் பணமும் காவுடன் சோறும்ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திடமாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிடகாலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிடஅஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிகெட் டோடபடியினில் முட்ட பாசக் கயிற்றால்கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டுகட்டி உருட்டு கைகால் முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டுமுட்டு முட்டு விழிகள் பிதுங்கிடசெக்கு செக்கு செதில் செதிலாகசொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்பற்று பற்று பகலவன் தணலெரிதணலெரி தணலெரி தணலது வாகவிடு விடு வேலை வெகுண்டது வோடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோடதேளும் பாம்பும் செய்யான் பூரான்கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்கஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதிபக்கப் பிளவை படர்தொடை வாழைகடுவன் படுவன் கைத்தாள் சிலந்திபற்குத் தரணை பருஅரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்நில்லா தோட நீஎனக் கருள்வாய்ஈரேழு உலகமும் எனக் குறவாகஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்உன்னைத் துதிக்க உன் திரு நாமம்சரவண பவனே சைலொளி பவனேதிரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொளி பவனேஅரிதிரு மருகா அமரா வதியைக்காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனைஇடும்பனை யழித்த இனியவேல் முருகாதனிகா சலனே சங்கரன் புதல்வாகதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பாலகு மாராஆவினன் குடிவாழ் அழகிய வேலாசெந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயாசமரா புரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலால் கலைமகள் நன்றாய்என்நா இருக்க யானுனைப் பாடஎனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்பாடினேன் ஆடினேன் பரவச மாக
ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியைநேச முடன்யான் நெற்றியில் அணியபாச வினைகள் பற்றது நீங்கிஉன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமுந்மெத்தமெத் தாக வேலா யுதனார்சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்கவாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்கவாழ்க வாழ்க மலைக்குரு வாழ்கவாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்கஎத்தனை குறைகள் எத்தனை பிழைகள்எத்தனை அடியேன் எத்தனை செயினும்பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமேபிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்துமைந்தனென் மீதும் மனமகிழ்ந் தருளித்தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பியபாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்காலையில் மாலையில் கருத்துடன் நாளும்ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேசமுடன் ஒரு நினைவது வாகிக்கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டுஓதியே செபித்து உகந்துநீ றணிய
ஓதியே செபித்து உகந்துநீ றணியஅஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்திசைமன்ன ரண்மர் சேர்ந்தங்கு அருளுவர்மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்ரு சங்கா ரத்தடிஅறிந்தென துள்ளும் அஷ்ட லட்சுமிகளில்வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்சூரபத் மாவைத் துணித்தகை யதனால்இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்சின்னக் குழந்தை சேவடி போற்றி!எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள் சேன பதியே போற்றி!குறமகள் மனமகிழ் கோவே போற்றி!திறமிகு திவ்விய தேகா போற்றி!இடும்பா யுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி கந்தா போற்றி!வெட்சி புனையும் வேளே போற்றி!உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!மயில்நட மிடுவாய் மலரடி சரணம்!
சரணம் சரணம் சரவண பவஓம்சரணம் சரணம் சண்முகா சரணம்!முழுமையாக படித்த நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றி .

பதிவின் பாதியிலேயே கடைசி வரிக்கு வந்த அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி .

51 comments:

ஜெகதீசன் said...

//
பதிவின் பாதியிலேயே கடைசி வரிக்கு வந்த அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி .
//
எனக்கு நன்றி சொன்னதுக்கு நன்றி...
:))

சரவணகுமரன் said...

//பதிவின் பாதியிலேயே கடைசி வரிக்கு வந்த அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி .


இது ரொம்ப நல்லா இருக்கு...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அன்பின் அதிஷா தம்பி..

இதமிழ்மணத்தைத் திறந்தவுடன் முதலில் கண்ணில் பட்டது இப்பதிவே..

அப்பன் முருகனின் அருள் உனக்கும், தமிழ்மணத்திற்கும் என்றென்றும் உண்டு..

பாடல் முழுவதையும் கடைசிவரையிலும் படித்தேன்..

ஒரு குறை..

பாடலை படிப்பது போல் வார்த்தைகளுக்கு இடம்விட்டு, செய்யுள் போல செப்பனிட்டு கொடுத்திருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கும்..

செய்யுள்போல படித்துதான் அனைவருக்கும் பழக்கமாயிருக்கும்..

கோவணான்டியின் புகைப்படம் உனது வலைத்தளத்தில் இடம் பெற்றதால் உனது வலைத்தளத்திற்கு இன்றைக்கு பஞ்சாமிர்தம் சாப்பிட்டதைப் போல பெருமை கிடைத்திருக்கிறது.

தொடர்ந்து விபூதி கொடுப்பது போலவே, தெய்வீகமாக பின்னூட்டங்களையும் அமைத்துக் கொண்டால் பதிவின் நோக்கம் இன்னமும் சிறப்படையும்.

வாழ்க வளமுடன்

லக்கிலுக் said...

மொக்கை மொக்கை பெரிய மொக்கை :-(

ஏதாவது உருப்படியா எழுத ட்ரை பண்ணுப்பா!!!

அதிஷா said...

வாங்க ஜெகதீசன்
நன்றிக்கு நன்றி

தானிக்கு தீனியா தீனிக்கு தானியா

அதிஷா said...

சரவணக்குமரன் நீங்க கூட முழுசா படிக்கலையா

அதிஷா said...

மிக்க நன்றி உண்மைத்தமிழன் அண்ணா

இந்த மாதத்தன் முதல் நாளே உங்களை போல ஒருவரின் ஆசிர்வாதம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சிண்ணா

அதிஷா said...

\\
மொக்கை மொக்கை பெரிய மொக்கை :-(

ஏதாவது உருப்படியா எழுத ட்ரை பண்ணுப்பா!!!

\\

எது மொக்கை கந்த சஷ்டி கவசமா இல்லை என் பதிவா

லக்கி உங்களுக்கு முருகனே மொக்கைதான் இந்த பதிவு மொக்கையா தெரிஞ்சதுல தப்பில்ல

அதிஷா said...

முருகா நம்ம லக்கிக்கும் நல்ல அறிவ குடுப்பா, குழந்தை தெரியாம அப்படி பேசிருச்சு மன்னிச்சுரு ,
அவருக்காக நான் கவசத்தை இன்னொருவாட்டி படிச்சிடறேன்

முரளிகண்ணன் said...

athisaa neeyum mokkai pooda aarambichchachachaa?

poy pillai kuttiya padikka vaingkappa

VIKNESHWARAN said...

அதிஷா நேற்று என்னை சொல்லிட்டு நீங்க ஆரம்பிச்சுடிங்களா... நானும் நேரா கடைசி வரிக்கு போயிட்டேன்...

ARUVAI BASKAR said...

முருகனின் அருள் பெற வாழ்த்துக்கள் !

வால்பையன் said...

அந்த கவசத்தை நீங்களே முழுவதும் தட்டச்சு செய்தீர்களா?
ரொம்ப கஷ்டம்.

ஒரு சந்தேகம், முருகன் தமிழ் கடவுள் தானே, பிறகு ஏன் அந்த கவசம் வட மொழி எழுத்துக்களோடு இருக்கிறது.

வால்பையன்

அதிஷா said...

\\ poy pillai kuttiya padikka vaingkappa \\

முரளிண்ணா
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை

வால்பையன் said...

//சஷ்டியை நோக்கச்//

விஷயம் என்பதை விடயம் என்று சொல்கிறோம்.
சஷ்டி என்பதை சட்டி என்று சொல்லலாமா

வால்பையன்

அதிஷா said...

\\ அதிஷா நேற்று என்னை சொல்லிட்டு நீங்க ஆரம்பிச்சுடிங்களா... நானும் நேரா கடைசி வரிக்கு போயிட்டேன்... \\

விக்கி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

அதிஷா said...

மிக்க நன்றி அருவை பாஸ்கர்

நீங்களாவது முழுசா படிச்சீங்களா

அதிஷா said...

\\ அந்த கவசத்தை நீங்களே முழுவதும் தட்டச்சு செய்தீர்களா? \\

வாங்க வால்பையன்
ஆமாங்க முருகனுக்காக இது கூட செய்யலாணா என்னாவறது

கவசத்தில நிறைய சமஸ்கிருதம் வந்ததுக்கு
சமஸ்கிருதம் தேவ பாஷை ன்றதால இருக்கலாம்

வால்பையன் said...

//செககண செககண செககண செகணமொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகெனடிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுணரரரர ரரரர ரரரர ரரரரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடுடகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகு//

இதற்கு சரியான விளக்கம் சொல்பவர்களுக்கு இனிமேல் நான் கடவுள் நம்பிக்கையோடு இருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.

வால்பையன்

rapp said...

////
பதிவின் பாதியிலேயே கடைசி வரிக்கு வந்த அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி .
//
எனக்கு நன்றி சொன்னதுக்கு நன்றி...
:))
//
வழிமொழிகிறேன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/முரளிண்ணா
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை/

இதுக்கும் புள்ளகுட்டிகளைப் படிக்க வைப்பதற்கும் ஏதாவது தொடர்புள்ளதா ? :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
/முரளிண்ணா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை/
இதுக்கும் புள்ளகுட்டிகளைப் படிக்க வைப்பதற்கும் ஏதாவது தொடர்புள்ளதா?:)//

இதைப் படிக்கின்றபோது முரளிகண்ணன் எதை மனதில் வைத்து கேட்டார் என்று பொதுவானவர்களுக்கு சட்டென்று பொதுவான காரணமாக எது எழுகிறதோ, அதற்கு நேரான பதில் இதுதான்னு நான் நினைக்கிறேன்.

அவனும் அவளும் said...

*******இதைப் படிக்கின்றபோது முரளிகண்ணன் எதை மனதில் வைத்து கேட்டார் என்று பொதுவானவர்களுக்கு சட்டென்று பொதுவான காரணமாக எது எழுகிறதோ, அதற்கு நேரான பதில் இதுதான்னு நான் நினைக்கிறேன்************

எப்போதுமே இவ்வளவு தெளிவா தான் பேசுவீங்களா ? இல்லாங்காட்டி இன்னிக்கு மட்டும் தானா ?

சென்ஷி said...

//அதிஷா said...
முருகா நம்ம லக்கிக்கும் நல்ல அறிவ குடுப்பா, குழந்தை தெரியாம அப்படி பேசிருச்சு மன்னிச்சுரு ,
அவருக்காக நான் கவசத்தை இன்னொருவாட்டி படிச்சிடறேன்
//

எனக்கும் இப்போ அறிவு இல்லைன்னு பேச்சு இருக்குது.. எனக்காகவும் மறுக்கா ஒருதபா படிச்சுக்கோங்க :))

அதிஷா said...

\\
இதற்கு சரியான விளக்கம் சொல்பவர்களுக்கு இனிமேல் நான் கடவுள் நம்பிக்கையோடு இருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.

வால்பையன்
\\

சத்தியமா இதுக்கு மீனிங் எனக்கு தெரியாது பல பண்டிதர்கள் உலவும் நம் தமிழ்மணத்தில் யாரேணும் உதவலாம்

அதிஷா said...

வாங்க ராப்
வருகைக்கு நன்றி
ரீப்பிடுக்கு மிக்க நன்றி

அதிஷா said...

\\
இதுக்கும் புள்ளகுட்டிகளைப் படிக்க வைப்பதற்கும் ஏதாவது தொடர்புள்ளதா ? :)
\\

சுந்தர் அண்ணா ஏன் இப்படிலாம் ...

வருகைக்கு நன்றி

அதிஷா said...

உ.த அண்ணா நல்லா புரியற மாதிரி கேட்டிங்க

அதிஷா said...

வாங்க அவனும் அவளும் உங்களுக்கு அண்ணன் சொன்னது உங்களுக்கு புரிஞ்சிருச்சா

அவ்வ்வவ்

அதிஷா said...

\\
எனக்கும் இப்போ அறிவு இல்லைன்னு பேச்சு இருக்குது.. எனக்காகவும் மறுக்கா ஒருதபா படிச்சுக்கோங்க :))
\\

நீங்களே படிச்சி கூட அறிவ வளத்துக்கலாம்

இருந்தாலும் பாவமா இருக்கீங்களேனு நானே படிக்கறேன்

விஜய் ஆனந்த் said...

அடுத்து என்ன...கந்த புராணமா???

அதிஷா said...

\\
அடுத்து கந்த புராணமா
\\

வாங்க விஜய் ஆனந்த்

அட இது கூட நல்ல ஐடியாவா இருக்கே

ஸ்ரீபாலதண்டாயுதபாணி c/o பழனிமலை said...

எனது அருள் உனக்கும் உன் ஆசானுக்கும் எப்போதும் உண்டு நீ தயவுசெய்து இது போல் பதிவுகள் போட்டு என்னை வைத்து காமெடி செய்யாதே!

SP.VR. SUBBIAH said...

/////பாடலை படிப்பது போல் வார்த்தைகளுக்கு இடம்விட்டு, செய்யுள் போல செப்பனிட்டு கொடுத்திருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கும்..

செய்யுள்போல படித்துதான் அனைவருக்கும் பழக்கமாயிருக்கும்..////

வழிமொழிகிறேன்!

குரங்கு said...

மனுசங்கள பத்தி ஒன்னுமே புரியல... :(

தலைப்பு ஏன் "ரஜினிகாந்த்,உண்மைத்தமிழன்,பகிரங்க மன்னிப்பு"???

விளக்குவிரா அதிஷா?

ஏண்ட காட்ட விட்டு வந்தோம்னு இருக்கு.. :(

அதிஷா said...

\\
செய்யுள்போல படித்துதான் அனைவருக்கும் பழக்கமாயிருக்கும்..////

வழிமொழிகிறேன்!
\\\

சுப்பையா சார் , நான் அப்படிதான் டைப் பண்ணேன் வலையேத்தறப்போ
அது பிஞ்சு பிஞ்சு வந்துருச்சு

அதிஷா said...

\\
ஸ்ரீபாலதண்டாயுதபாணி c/o பழனிமலை said...
எனது அருள் உனக்கும் உன் ஆசானுக்கும் எப்போதும் உண்டு நீ தயவுசெய்து இது போல் பதிவுகள் போட்டு என்னை வைத்து காமெடி செய்யாதே!
\\

பழனிமலை சாமி ...இப்ப அமெரிக்காவுல என்ன பண்ணுது..
ஜார்ஜுபுஸ்ஸுக்கு அருள்பாலிக்குதா

அதிஷா said...

\\
புரியல... :(

தலைப்பு ஏன் "ரஜினிகாந்த்,உண்மைத்தமிழன்,பகிரங்க மன்னிப்பு"???

விளக்குவிரா அதிஷா?

ஏண்ட காட்ட விட்டு வந்தோம்னு இருக்கு.. :(
\\

ரஜினி மன்னிப்பு கேட்டு மாட்டிகிட்டார்
அதிஷா மாட்டிகிட்டதால மன்னிப்பு கேட்கிறார் (உண்மைதமிழன்கிட்ட)

விளக்கம் ஓகேவா குரங்கு சார்

உருப்புடாதது said...

கடைசி போனி ஆஜர் ஸார்..
(நாங்க பதிவ படிக்க மாட்டோம் ஆனா பின்னூட்டம் மட்டும் இடுவோம்))

வால்பையன் said...

//அதிஷா said...
முருகா நம்ம லக்கிக்கும் நல்ல அறிவ குடுப்பா, குழந்தை தெரியாம அப்படி பேசிருச்சு மன்னிச்சுரு ,
அவருக்காக நான் கவசத்தை இன்னொருவாட்டி படிச்சிடறேன்
//

அத படிச்சா அறிவு வருமா?
அப்போ பள்ளிக்கூடத்தை எல்லாம் மூடிரலாமா?

வால்பையன்

வால்பையன் said...

//அதிஷா said...
முருகா நம்ம லக்கிக்கும் நல்ல அறிவ குடுப்பா, குழந்தை தெரியாம அப்படி பேசிருச்சு மன்னிச்சுரு ,
அவருக்காக நான் கவசத்தை இன்னொருவாட்டி படிச்சிடறேன்
//

அத படிச்சா அறிவு வருமா?
அப்போ பள்ளிக்கூடத்தை எல்லாம் மூடிரலாமா?

வால்பையன்

ராஜ நடராஜன் said...

குசேலா!வேண்டாம்!கைவலிக்குது...அழுதிடுவேன்:)

மதுவதனன் மௌ. said...

//ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்கபிட்ட மிரண்டும் பெருவேல் காக்கபணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க//

எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும், பிட்டம் இரண்டு, தொடை இரண்டு ஓகே, ஆண்குறி இரண்டா...புரியலியே...

இன்னொரு சந்தேகம், சஷ்டி கவசம் பொண்ணுங்க பாடப்படாதா?

மதுவதனன் மௌ.

கயல்விழி said...

//கவசத்தில நிறைய சமஸ்கிருதம் வந்ததுக்கு
சமஸ்கிருதம் தேவ பாஷை ன்றதால இருக்கலாம்
//

அப்போ தமிழ் என்ன மனிதர் பேசும் பாஷையா? மனிதர்கள் பேசுவது பாவம் கடவுளுக்கு புரியாது போல.

அதிஷா said...

வாங்க உருப்படாதது..வருகைக்கு நன்றி

அதிஷா said...

\\
அத படிச்சா அறிவு வருமா?
அப்போ பள்ளிக்கூடத்தை எல்லாம் மூடிரலாமா?

\\

இத பத்தி நான் டெல்லில பேசறேன்

அதிஷா said...

வாங்க ராசநடராசன்

விடுங்க பாஸ்..இதுக்குலாம் போயி அழுதுகிட்டு..

அவ்வ்வ்வ

அதிஷா said...

\\
இன்னொரு சந்தேகம், சஷ்டி கவசம் பொண்ணுங்க பாடப்படாதா? \\

கந்தர் சஷடி கவசம் அனைவரும் பாடலாம் இதில் பாலின வேறுபாடுகள் கட்டாயமில்ல

வருகைக்கு நன்றி மதுசூதனன்

அதிஷா said...

\\ அப்போ தமிழ் என்ன மனிதர் பேசும் பாஷையா? மனிதர்கள் பேசுவது பாவம் கடவுளுக்கு புரியாது போல. \\

கடவுள் என்ன ஔவையார் ஆரம்ப பாடசாலைல அ ஆ இ ஈ யா படிச்சாரு , அவருக்கு பாவம் யாரோ நம்மவா சமஸ்கிருதம் மாத்திரம் கத்து கொடுத்துருக்கார்

மதுவதனன் மௌ. said...

அதிஷா அண்ணன்,

என்னதான் என்னோட பெயரில் மாயம் இருக்கோ தெரியல. மதுவதனன் ஆகிய எனது பெயரை மதுசூதனன் என்று சொல்கிற ஐந்தாவது நபர் நீங்க...

அதிஷா said...

\\
அதிஷா அண்ணன்,

என்னதான் என்னோட பெயரில் மாயம் இருக்கோ தெரியல. மதுவதனன் ஆகிய எனது பெயரை மதுசூதனன் என்று சொல்கிற ஐந்தாவது நபர் நீங்க...

\\

மன்னிக்கணும் மதுவதனன் சார் .
நீங்கதான் 50 வது பின்னூட்டம் ;-)