02 August 2008

சீதை தேடிய ராமன் - 100 வார்த்தைகளில் ஒரு கதை முயற்சி

'' சீதா , இன்னும் எவ்ளோ நேரம்தான் அங்கேயே உக்காந்துருப்பே!! '' முதுகை தடவியபடி ராஜி.


'' இல்ல ராஜி இன்னைக்காவது என் ராம் என்னை பாக்க வரமாட்டானானுதான் , காத்திருக்கேன் '' , கண்களில் நீருடன் நட்சத்திரங்களை பார்த்தபடி சீதா .


'' பைத்தியாமாடி நீ!! ''


'' அவன் கட்டாயம் வருவான்டி , ப்ளீஸ் என்ன தனிய இருக்க விடு, ''


'' ஆறு வருஷமா வராதவன் இன்னைக்கு வரப்போறானா , அவன் இந்நேரம் எவளையாவது கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்ந்திட்டிருப்பான் ''

'' அப்படிலாம் சொல்லாதடி அவனுக்கு என்ன பிரச்சனையோ என்னவோ !! கட்டாயம் வருவான் , இந்த ஆறு வருஷமும் ஒரு விநாடி கூட அந்த நம்பிக்கை எனக்கு குறையல , ஆனா இன்னைக்கு மனசுக்குள்ள அவனுக்கு என்னாச்சோனு ஒரே பயமாருக்கு '' அவள் கண்களின் ஓரம் ஈரம் ,

'' அப்புறம் உன் இஷ்டம் , இந்த முதியோர் இல்லத்தில இருக்குற பாதிபேருக்கு இந்த நம்பிக்கை மட்டும் என்னைக்குமே குறையறதில்ல , உன் புள்ளைல விட்டுக் கொடுப்பியா '' .


பல்லாயிரம் ஒளிஆண்டுகளுகப்பால் வழி தவறிய ராக்கெட்டில் தன் உதவி ரோபோவிடம் தன்னை கொல்ல உத்தரவிட்டான் ராமன் .





பி.கு. : இந்த கதையில் ஒண்ணு ரெண்டு வார்த்தை கூட குறைய வந்திருந்தால் மன்னிக்கவும் நான் கணக்கில் கொஞ்சம் வீக்கு ;-) . அடுத்து வர கதைகள்ள அக்குறை நிவர்த்தி செய்யப்படும்

7 comments:

முரளிகண்ணன் said...

நல்ல டுவிஸ்ட்

ARUVAI BASKAR said...

நல்லா இருக்கு !

VIKNESHWARAN said...

அதிஷா... கலக்கல்.... சூப்பரா இருக்குங்க... மேலும் தொடர வாழ்த்துக்கள்...

அதிஷா said...

நன்றி முரளி அண்ணா

நன்றி அருவை பாஸ்கர்

நன்றி விக்கி

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வெண்பூ said...

நல்ல முயற்சி அதிஷா.. வாழ்த்துக்கள். கதையின் இரண்டு திருப்பங்களுமே எதிர்பாராதவை..

அதிஷா said...

நன்றி வெண்பூ
இந்த கதை குமுதத்தால் நிராகரிக்கப்பட்ட கதை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்

;-(((((

Anonymous said...

நல்ல டுவிஸ்ட்