23 September 2008

விஜயகாந்த் v/s வடிவேலு - என்னங்கடா நடக்குது - தற்குறிதமிழனின் அலசல்

விஜயகாந்த் v/s வடிவேலு என்னங்கடா நடக்குது - ஒரு தற்குறி தமிழனின் பார்வையில் அலசல் :
புரட்சி தலைவர் விஜயகாந்த் என்றாலே காமெடி தானா , இரண்டு நாட்களாக வடிவேலு மற்றும் விஜகாந்த் உடனான சண்டைகளை பார்க்கையில் வடிவேலு இதை வேண்டுமென்றே செய்ததாகவே தோன்றுகிறது , சமீபத்திய கலக்கபோவது,அசத்தபோவது,நசுக்க போவது என்று பல காமெடி நிகழ்ச்சிகளிலும் விஜயகாந்த் அடைந்திருக்கும் அளவ்வில்லா புகழையும் எங்கே இன்னும் சில நாட்களில் வடிவேலுவுக்கு போட்டியாக விஜயகாந்த்ம் இது போன்ற காமெடி படங்களில் தனி டிராக்கில் காமெடி பண்ணலாம் என்கிற அச்சமும் அவரை அப்பாவி விஜயகாந்த் மீது இது போன்ற ஒரு தாக்குதலை நிகழ்த்த காரணமாயிருக்கிறது ,

தற்காலங்களில் வெளியாகும் பெரும்பாலான இந்த காமெடி நிகழ்ச்சிகளில் வடிவேலுவின் மிமிகரியை விட விஜகாந்த் மிமிகரிக்கே மக்கள் ஆதரவும் வாக்குகளும் குவிவதை கண்டு ஏற்பட்ட அச்சம் தனக்கு தானே இது போன்ற ஒரு சம்பவத்தை அரங்கேற்ற காரணமாயிருக்கலாம் . அது தவிர சமீபத்தில் வெளியான விஜயகாந்தின் அரசாங்கம் திரைப்படம் வடிவேலுவின் முந்தைய படமான இந்திரலோகத்தில் அழகப்பன் படத்தை காமெடியிலும் மக்கள் ஆதரவிலும் விஞ்சியதால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி அல்லது காண்டாக இது இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. ஏற்கனவே அவருக்கு போட்டியாக விஜய்,பரத்,நிதின், ஜேகே.ரித்திஷ என பலரும் வந்துவிட்டதால் உடனடியாக தனது இருப்பை நாட்டில் பதிவு செய்ய வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இப்படி லூசுத்தனமாக அவர் இப்படி செய்திருக்கலாம் .

காமெடியில் விஜயகாந்தை தோற்கடிக்க இயலாது என்பதால் , விஜயகாந்திற்கு துளியும் சம்பந்தமில்லாத அரசியலில் அவரை தோற்கடிக்க வடிவேலு எடுக்கும் முயற்சியாகவே இச்சம்பவம் இருக்கிறது ,வடிவேலு அவர்களே உங்களுக்கு தைரியமிருந்தால் எங்கள் அண்ணாவை காமெடியில் வெல்ல முடியுமா , அவரது காமெடிக்கு மக்கள் ஆதரவு அதிகமா அல்லது உங்கள் காமெடிக்கு மக்கள் ஆதரவு அதிகமா என்று பார்த்துக்கொள்வோமா ???எங்கள் ஆசான் விஜயகாந்த் அவர்களே இது போன்ற துக்கடா காமெடியர்களின் வீண் வாய்ச்சவடால்களுக்கெல்லாம் பயந்து விடாதீர்கள் உங்களால்தான் இன்று பல கோடி தமிழர்கள் வீடுகளிலும் மக்கள் சிரித்து மகிழ்கிறார்கள் தொடரட்டும் உங்கள் நகைச்சுவை பணி!!! , நேற்று முதல்வர் மீது இப்பழியை தூக்கிப்போட்டு தூர்வாரிய காமெடியை கண்டு பக்கத்து வீட்டு தாத்தா சிரித்து சிரித்து மண்டையை போட்டுவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் , இது போல இன்னும் பல ஆயிரம் காமெடிகளை சோகமயமான கரண்ட்இல்லாத தமிழகத்திற்கு தந்து மக்களை மகிழ்ச்சியடைய வைக்க வேண்டும் .

காமெடியில் நீங்கள்தான் எப்போதும் முதல்வர் இதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது ஐயா...

____________________________________________________________________

23 comments:

விஜய் ஆனந்த் said...

:-))))...

நல்ல அலசல்...

பல மேட்டர்கள் இப்போதான் தெளிவா புரியுது!!!

வெண்பூ said...

//காமெடியில் விஜயகாந்தை தோற்கடிக்க இயலாது என்பதால் , விஜயகாந்திற்கு துளியும் சம்பந்தமில்லாத அரசியலில் அவரை தோற்கடிக்க வடிவேலு எடுக்கும் முயற்சியாகவே இச்சம்பவம் இருக்கிறது ,
//

இது சூப்பரு...

ஆனா வடிவேலு ஜெயிச்சிட்டாருன்னேன்.. அவரு "நான் எலக்ஷன்ல நிப்பேன்" அப்ப‌டின்னு சொல்லி எல்லாரையும் விழுந்து விழுந்து சிரிக்க வெச்சிட்டாருல்ல. 2011 ல நாந்தான் முதல்வர்னு விஜயகாந்து சொன்னதுக்கு கூட நானெல்லாம் அப்படி சிரிக்கலப்பா!!!!

பரிசல்காரன் said...

நீங்க நல்லவரா கெட்டவரா?

சரவணகுமரன் said...

:-)

rapp said...

me the 4th

Namma Illam said...

சூப்பர் ஆராய்ச்சிக் கட்டுரை.. ;)

Namma Illam said...

///பரிசல்காரன் said...

நீங்க நல்லவரா கெட்டவரா?////

அதே கேள்வி தான் எனக்கும் தோணுது

ஜெகதீசன் said...

:))))))

துரை said...

எப்படி காமெடிக்கு என்றே தனி அலைவரிசை தொலைகாட்சியில் தொடங்கபட்டதோ, அதுபோல அரசியல் காமெடிக்கு என்றே தொடங்கபட்ட கட்சிதான் நம்ம விஜயகாந்தின் தே.மு.தி.க
விரிவாக்கம் ;
தே.மு.தி.க - தேசிய முழுநேர தித்திக்கும் காமெடி கழகம்
என்ன எதுனு தெரியாம தாறுமறா ஆதாரம் இல்லாம் பேசுவதுதான் இந்த கட்சியின் கொள்கை

நையாண்டி நைனா said...

"தேவையில்லாமல் முடிந்தவரை திட்டும் கழகம்" என்றும் கொள்ளலாமே...

SK said...

:-) :-) :-)

குசும்பன் said...

//காமெடியில் விஜயகாந்தை தோற்கடிக்க இயலாது என்பதால் , விஜயகாந்திற்கு துளியும் சம்பந்தமில்லாத அரசியலில் அவரை தோற்கடிக்க வடிவேலு எடுக்கும் முயற்சியாகவே இச்சம்பவம் இருக்கிறது//

இது மேட்டரு:)))

narsim said...

//விஜயகாந்த் அடைந்திருக்கும் அளவ்வில்லா புகழையும் எங்கே இன்னும் சில நாட்களில் வடிவேலுவுக்கு போட்டியாக விஜயகாந்த்ம் இது போன்ற காமெடி படங்களில் தனி டிராக்கில் காமெடி பண்ணலாம் என்கிற அச்சமும் //
அதிஷா.. யாரோ சுதிஷ்னு போன் பண்ணாரு.. உங்க அட்ரஸ் வேணுமாம்.. அவங்க கைல கல்லுலாம் இல்ல.. குடுக்கவா??


நர்சிம்

Anonymous said...

supper...

Anonymous said...

supper...

VIKNESHWARAN ADAKKALAM said...

:)

Tech Shankar said...

Vadivelu Vs Vijay appadinnu vaicchu irukkalaam. adhile oru kaanth mix aagi miss aagirucchu..

manikandan said...

:)- நேத்திக்கு கலைஞர் டி வில ஒரு 5 நிமிஷ செய்தியா காட்டினாங்க. TRP பிச்சிகிட்டு போயிருக்கும்.

Anonymous said...

Ungaluku Enga Black MGRa partha commedya thonutho.

Chinna pulla thanamalla irukku

Haiyo haiyoo

Anonymous said...

வருத்தப்படாத வாலிபர்க்கழகம் துவக்க விழா


நேற்று இரவு வருத்தப்படாத வாலிபர் சங்கம் அவசரக்கூட்டம் கூட்டப்பட்டது .. இதற்கு அண்ணன் கைப்புள்ள தலைமை தங்கினார்.
கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :

"சிவனேன்னு தன்வழியே போயிட்டு இருந்த சிங்கத்தை சீண்டி உசிப்பி உட்டதால ...அரசியல் எதிரிகளை அரசியல் அரங்கிலே அடித்து விரட்ட ... அண்ணன் கைப்புள்ள தலைமையில் செயல்பட்டு வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் இன்று முதல் வருத்தப்படாத வாலிபர் கழகமாக செயல் படும்".
பொதுச்செயலராக நாய் சேகர் நியமிக்க பட்டுள்ளார்..பொதுக்குழு கூட்டத்தில் எடுக்க பட்ட சில முக்கிய தீர்மானங்கள் :

* மூத்திர சந்தில் கூபிட்டு அடித்து வீரத்தை காட்டாமல் ..வீட்டில் கோளைதனமாக கல்லேரிந்ததை கண்டித்தும்.

* சின்னபுள்ளை தனமா அண்ணன் விட்ட சவடாலுக்கு எதிர் சவடால் விட்டு அண்ணனை அசிங்கப்படுதியதர்க்கும் .

கண்டனம் தெரிவிக்கப்பட்டது .

Anonymous said...

you don't know how to analyse. you kept your mind against vijayakanth and start writing on this. try to understand the problem then think and write.

Subash said...

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க
:)

ஸ்வாதி said...

இப்படியெல்லாம் எழுத எங்கே ஐயா அறை எடுத்து தங்குவீர்கள்? சொன்னால் நாங்களும் உங்கள மாதிரி எழுத முயற்சிக்கலாம் அல்லவா?