Pages

29 November 2008

வந்துட்டானுங்க ஆட்டிட்டு.......... தூ.....!

நான் கோவையிலிருந்து சென்னை வந்த பிறகு இரண்டாம் முறையாக என்னை பிரமிக்கவைத்த மழை. கடந்த நான்கு நாட்களாக சென்னையின் முக்கால் வாசி மக்கள் தொகையை ஹவுஸ் அரெஸ்ட் செய்துவிட்ட மழை . ரோடெங்கும் வெள்ளம் முழங்காலுக்கும் மேலே. இன்னும் சில இடங்களில் கழுத்து வரைகூட வெள்ளம் சென்றதாக கேள்வி. அம்பத்தூரிலிருந்து அண்ணாநகர் ரவுண்டானா வரை படகு சவாரி செய்ய வல்ல நீர் வரத்து. எங்கும் மின்சாரம் இல்லை . அத்யாவசிய பொருட்கள் தட்டுப்பாடு. இன்னும் பல.

மருந்துப்பொருட்கள் கிடைக்கவில்லை , மளிகைக்கடைகள் திறக்கவில்லை , பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை , டாஸ்மாக்கில் பீரும் ஜின்னும் ஆறாய் ஓடியது , பீர் லேகர்தான் கிடைத்தது . அனைத்து டாஸ்மாக்குகளும் கொட்டும் மழையிலும் இயங்கின . தமிழக அரசு வாழ்க . திமுக வாழ்க . தமிழகத்தில் எதற்கு தட்டுப்பாடு வந்தாலும் எம்குடிமகனின் தாகத்தை என்றும் தீர்க்கும் குடிமகன்கள் குடிகாத்த கோமகர் கலைஞர் வாழ்க வாழ்க .

நேற்று கொட்டும் மழையிலும் டீ்ககடை திறந்து வைத்திருந்த ஒரு புண்ணியவானுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். மூன்று வேளை சோறு போட்ட தெய்வமல்லவா . முகப்பேர் போன்ற ஒரு ஊரில் அல்லது ஏரியில் வசிப்பதின் அருமை அங்கே குடியேறிய ஒரு வாரத்தில் முகத்தில் அறைந்ததது. ஏரியில் வீடு கட்ட அனுமதித்தவர்கள் வாழ்க . அங்கே குடியேறிய குடியேறும் நல்லவர்கள் வாழ்க.

ரோட்டில் குப்பை போடாத சென்னை குடிமகன்கள்(தமிழ் குடிமகன்கள் ) நம்மில் எத்துணை பேர் . பிளாஸ்டிக் பைகளை அப்படியே குப்பையில் கொட்டுவது , குப்பைத்தொட்டி இருந்தாலும் சாக்கடையில் திணிப்பது , இதைத்தானே நமது கலாச்சாரமாய் ஆண்டாண்டு காலமாய் நாமும் நம் பிள்ளைகளுக்கு கற்றுத்தந்து வந்திருக்கிறோம் . நமது சாக்கடைகளையே நம்மால் சரியாக காக்க இயலாத போது ...? . பொது மக்கள் வாழ்க , ஏரியில் நிலம் கிடைத்தால் வாங்கிப்போட்டு குடியேறும் பொது ஜனம் வாழ்க வாழ்க .

ஒரு வெள்ளக்காடான ஒரு பகுதியில் ஒரு திராவிட உடன்பிறப்பு படை , அனைவருக்கும் பிரியாணி வழங்கியது . அதில் ஒரு பெரியம்மா தூ என்று துப்பி , வெள்ளத்த தடுக்க துப்பில்ல வந்துட்டானுக ஆட்டிட்டு என்று . நம் மக்களுக்கு ஒரு பிரச்சனை வந்து விட்டால் துப்புவதற்கு அரசியல்வாதிதான் முதலில் கிடைப்பான் . அரசியல்வாதியும் லேசுப்பட்டவன் அல்ல செய்வதெல்லாம் செய்து விட்டு(ஐ மீன் ஊழல்) வெள்ளம் புயல் என்றால் பிரியாணி பொட்டலத்துடன் வந்துவிடுவான் .

ஸ்டாலின்களும் பன்னீர் செல்வங்களும் இனி வெள்ளப்பகுதிகளில் முட்டிவரை ரப்பர் ஷூக்களை போட்டுக்கொண்டு பார்வையிட்டு வேட்டிசேலைகள் வழங்கலாம் . பாப்புலாரிட்டி பிரியாணி வாழ்க , கிழிந்து தொங்கும் வேட்டிசேலைகள் வாழ்க , கட்சியிடம் வாங்கிய நிவாரண நிதியில் பாதியை குடித்தழிக்கும் உடன்பிறப்புகளும் ரத்தத்தின் ரத்தங்களும் வாழ்க வாழ்க . (மூன்று நாட்களாக டாஸ்மாக்குகளில் நல்ல வருமானமாம் ஒரு டாஸ்மாக் நண்பரின் தகவல் ) . இவர்கள் பார்வையிடுவதால் ஒன்றும் ஆகி விடப்போவதில்லை . மடிபாக்கத்திற்கு ஸ்டாலின் வந்தால் அவரால் முழுமடிப்பாக்கத்தையும் பார்வையிட்டு அங்குள்ள (வெள்ளத்தால் வந்த ) பிரச்சனைகளை தீர்க்க இயலுமா ! , அப்படி முழுமடிப்பாக்கத்தையும் அவர் சுற்றிபார்க்க வருகிறார் என்றால் மற்ற பகுதிகளை யார் கவனிப்பது .

இனி நமது ஆளும் அரசு உடனடியாக பல நூறு கோடிகளை நிவாரண நிதியாக கேட்டுப்பெரும் . அப்பணத்திற்கு கணக்கு ஏற்கனவே காந்தி எழுதிச்சென்றுவிட்டாராமே . வாழ்க காந்தி , வாழ்க காந்திக்கணக்கு . அப்பணமும் மீண்டும் டாஸ்மாக்குகளின் மூலம் அரசையே சென்றடைவதையும் இனி காணலாம் .

இனியாவது அரசு விழித்துக்கொண்டு பாலங்கள் கட்டி அதில் தன் பெயரை பொறித்துக்கொள்ளும் உத்திகளை தவிர்த்து , தங்கள் பெயர்களை பொன்னெழுத்தில் பொறிக்க இயலாத , சரியான நீர்வடிகால்களையும் , ஏற்கனவே இருக்கிற நீர்நிலைகளை தூர்வாருவது போன்ற வேலைகளையும் , பாலங்கள் கட்டினாலும் அதிலிருந்து மழைக்காலங்களில் அங்கே தேங்கி நிற்கும் நீர் சரியான வழியில் வெளியேறுமாறு திட்டமிடலும் தான் இப்போது தேவை . உங்கள் பிரியாணி பொட்டலங்களும் வேட்டிசேலைகளும் அல்ல , அதைக்காட்டி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் தமிழனை பைத்தியக்காரனாய் இருப்பானோ தெரியவில்லை .

பொதுமக்களும் எல்லாவற்றையும் அரசே முன்னின்று தனது பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்றில்லாமல் , தாமாக முன்வந்து இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க முயல வேண்டும் . எந்த ஒரு அரசும் மக்களின் சரியான உதவியின்றி நல்லாட்சி அமைக்க இயலாது . நேற்று முகப்பேரில் ஊருக்குள் தண்ணீர் புகுந்து விட்டது, சாக்கடை அடைப்பு , அதை சரி செய்து தர வேண்டும் என்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் . அந்த ஐம்பது பேர் நினைத்திருந்தால் அவர்களாகவே அப்பிரச்சனையை சரிசெய்திருக்க இயலும் , ஆனால் எல்லாவற்றிக்கும் அரசும் அரசுசார் துறைகளும் வரவேண்டுமென்றால் அது எத்தனை மூடத்தனம் . இன்று ஆங்காங்கே மழைநீர் சாக்கடைகளில் அடைத்துக்கொண்டு ரோட்டிற்குள் வர என்ன காரணம் , நாம் நேற்றுவரை குப்பையோடு குப்பையாக போட்ட மக்காத குப்பைகளின் மறுவடிவமல்லவா இது . இனியாவது விழித்துக்கொண்டு நாமும் மாறவேண்டும் . ஒவ்வொருவரும் .

************************************************************************************************

மூன்று நாட்களாக மழையால் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டியிருந்தது , அதுவும் தனியாக , புதிதாக குடியேறிய வீடென்பதால் பக்கத்து வீடுகளிலும் யாரும் முகம் கொடுத்து பேசுவதில்லை (பேச்சிலர் பேய்! ) . 60 மணிநேரத்தில் தோழர் லக்கியும் நண்பர் கென்னும் மட்டும்தான் எனக்கு சமயங்களில் அலைப்பேசி மூலம் துணையாக இருந்தனர் . அவர்களுக்கு மிக்க நன்றி .

இங்கே முன்னால் எழுதிய சில விடயங்கள் சுயபச்சாதாபத்தை உண்டாக்குவதாக சில நண்பர்கள் கூறுவதால் அவை நீக்கப்படுகின்றன . நன்றி .

************************************************************************************************

26 November 2008

மீண்டும் ஒரு பேய்க்கதை....!! (18+)




மழைப்பெய்யும் நள்ளிரவு . பேய்க்கதைகளுக்கு அதை விட சிறந்த வானிலை தேவையா . நான் மழையில் நடந்தபடி ஓடிக்கொண்டிருந்தேன் , முழுதுமாய் நனைந்திருந்தேன் . காற்று சூறாவளி போல அடித்ததது . தினமும் இரவில் அந்த சாலையில் போகும்போதும் வரும் போதும் அந்த பாழடைந்த பங்களாவை பார்க்க நேரிடும் .


எனக்கு பாழடைந்த பங்களாக்கள் மீது எப்போதும் ஒரு ஈர்ப்பு , வாழ்வில் என்றாவது ஒரு தருணத்தில் எனது மீதிவாழ்க்கையை இப்படி ஒரு வீட்டில் தனியாக கழிக்கவேண்டும் என்று அடிக்கடி எண்ணம் வருவதுண்டு . அதற்கான வேளை இன்னும் வரவில்லை என்று ராபர்ட் மாமா கூறுவார் .


''ரோஜா....! நீ இன்னும் வளரணும்.. அதுக்குலாம் வயசிருக்குமா.. உனக்கு முதிர்ச்சி பத்தாது அதுவும் நீ தனியா இருந்தா ஆபத்துதான் ''


ராபர்ட் மாமா கூறிய அந்த வார்த்தைகளை என்னால் என்றுமே மறக்க இயலாது . அவரால்தான் இன்று நான் ஒழுங்காய் இருக்கிறேன் . எனக்கு ரோஜா என்று பெயர் வைத்தது கூட அவர்தான் .


அந்த பங்களாவை கடக்கும் போது அங்கிருந்து ஒரு அலறல் சத்தம் . ஆஆஆஆஆஆஆவென . அந்த ஓலி என்னவோ செய்தது . ஆனால் அந்த வீட்டிற்குள் நுழைய பயம் . தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கருப்பு கேட்டை திறந்து அந்த அகண்ட பங்களாவின் வாயிலில் மெதுவாக நடந்து சென்று கதவருகில் நின்றேன் . மீண்டும் அலறல் சத்தம் . ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓவென .


இம்முறை எனக்கு வயிற்றில் புளித்த கரைசல் உண்டாகியிருக்க வேண்டும் . கதவை தட்டினேன் . காலிங் பெல்லை காணவில்லை . கதவை பலமாகதட்டினேன் . தட் தட் தட் . யாருமில்லை . மேலும் தட்டினேன். கதவு திறந்து கொண்டது . மெதுவாக அடியெடுத்து வைத்து உள்ளே நுழைந்தால் உள்ளே ஒரு வயதான பெரியவர் மட்டும் தனியே அமர்ந்து கொண்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தார் . டிவியில் ஒரு கற்பழிப்புக்காட்சி, கோலங்கள் சீரியலில் . நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன் . அப்போதெல்லாம் நான் தேவயானியின் அதி தீவிர ரசிகையாய் இருந்தேன் . இன்னுமா இந்த பாழாய் போன நாடகம் முடியவில்லை . கிழவன் என்னை பார்த்ததும் எழுந்து நின்று அவசர அவசரமாக தனது வேட்டியை சரிசெய்து கொண்டான் .


''யாருமா.. நீ ..........என்ன வேணும் ஏன் உள்ள வந்த '', பேய்ப்படங்களில் வரும் கிழவன் போன்ற தொணியில் பேசினான் . எனக்கு நடுங்கியது . இதுதான் முதல்முறை இது போன்ற சந்தர்ப்பத்தை அனுபவிப்பது . அலறல் கேட்டு வந்தேன் என்றால் எங்கே திட்டிவிடுவானோ என பயந்து போய்..... அமைதியாய் நின்றேன் . அவனுக்கு பற்கள் கரிய நிறத்தில் , முகமெல்லாம் அம்மைத்தளும்புகள் , ஆள் பார்க்க ஆறடி உயரத்தில் ராட்சசன் போல இருந்தான் கிழவன் . அவனது முகத்தில் ஒரு கள்ள சிரிப்பு வேறு பயமுறுத்தியது . தவறான இடத்தில் மாட்டிக்கொண்டோமோ என்கிற பயம் வேறு .


''யாரைப்பார்த்தும் பயப்படாதே, உன்னை பாத்துதான் உலகம் பயப்படணும் , நீ குழந்தை இல்ல , உன்னை பயமுறுத்தும் உலகத்தை நீ பயமுறுத்து ''


ராபர்ட் மாமா சொன்னது மீண்டும் ஒரு முறை காதில் ஒலித்தது .


''சார் மழை அதிகமா பெய்யுதேனு இப்படி ஒதுங்கினேன் , நாலஞ்சு ரவுடி பசங்க துரத்தினாங்க அதான் உள்ளே வந்துட்டேன் சார் ! ''


''ஓஓஓ ....... '' என்றபடியே மழையில் நனைந்திருந்த எனது ஆடைகளினூடே மெலிதாக தெரிந்த எனது சேலையை மீறி உள்ளாடை இல்லாத ரவிக்கையின் உள்ளே அவனது கண்கள் பரவத்துவங்கியிருந்தது .

என் கைகளால் என் மார்பை மறைத்துக்கொண்டேன் .

''சரிமா கொஞ்ச நேரம் இருந்துட்டு போயிடு '' என்றான்.

அவன் கண்கள் மார்பிலிருந்து இடுப்புக்கு வந்திருந்தது . இன்னும் விட்டால் அவன் இடுப்புக்கு கீழேயும் பார்க்க நேரிடலாம் என்று அங்கிருந்து அருகில் இருந்து அறையின் நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டேன் .

''இந்தாம்மா துடைச்சுக்கோ ..... துணியெல்லாம் நனைஞ்சிருக்கு பாரு.. இந்தா இந்த நைட்டிய போட்டுக்க ''

''சார் இந்த வீட்ல நீங்க மட்டும்தான் இருக்கீங்களா !! '' என்றபடியே துண்டை வாங்கிக்கொண்டேன் . குளிர ஆரம்பித்ததால் நைட்டியையும் வாங்கிக்கொண்டேன் .

''ஆமா.. நான் மட்டும்தான் ''

''சார் நீங்க கொஞ்சம் வெளிய போனா நான் , டிரஸ் மாத்திப்பேன் ''

''ஓ மாத்திக்கோயேன்... '' கிழட்டுச்சிரிப்பு , காமச்சிரிப்பு , எரிச்சலூட்டும் சிரிப்பு .

தலையை நன்கு துவட்டிவிட்டு , எனது சேலையை விலக்கி விட்டு , ஜாக்கெட்டுகளின் ஊக்குகளை கழட்ட முயல்கையில் ஒருசந்தேகம் அவன் எட்டி பார்க்கிறானோ என்று , கதவருகில் மெல்ல மெல்ல அடியெடுத்து வந்து துவாரத்தில் பார்த்தேன் . ஒரு சின்ன ஃபைலால் அவன் தனது கத்தியை கூர்படுத்திக்கொண்டிருந்தான் . எனக்கு மீண்டும் பயம் தொற்றக்கொண்டது .
எல்லா உடைகளையும் களைந்துவிட்டு சாவகாசமாய் எல்லாவற்றையும் கழட்டிவிட்டு . நிர்வாணமாகி , நைட்டியை அணிந்து கொண்டு கதவை திறந்தால் , கதவருகில் கிழவன் . புன்முருவலிட்டான் . பயம் வயிற்றை கவ்வியது .

''என்னம்மா , டிரஸ் மாத்திட்டியா !! ''

''மாத்திட்டேன் சார் ''

''சரிவா டீ சாப்பிடு ''

''வேண்டாம் சார் உங்களுக்கு ஏன் சிரமம் ''

''பரவால்லம்மா , என்னை உன் அங்கிள் மாதிரி நினைச்சுக்கோ '' , அந்த கிழவனுக்கு என் தாத்தாவை விட ஆறு வயது அதிகமிருக்கும் . அங்கிளாம்.

அவன் கொடுத்த டீயை பருகினேன் . அது மிகவும் கசப்பாக இருந்தது , எதையோ கலந்திருக்க வேண்டும் . இருவரும் ஹாலில் அமர்ந்து கொண்டிருந்தோம் .டிவி சேனல் மாறிக்கொண்டே இருந்தது . டிவியில் மிக ஆபாசமான காட்சிகள் திடீரென வரத்துவங்கியது . கிழவன் கையில் ரிமோட் . முகத்தில் ஆபாசமான ஒரு புன்னகை . எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை .

அவன் என் அருகில் வந்து அமர்ந்து கொண்டு எனது தொடைகளின் மீது கையை வைத்தான் .

''சார் வேண்டாம் சார் தப்பு சார் '' வாய் வேண்டாம் என்றாலும் உடல் சரியென்றது . இதற்காகத்தான் இத்தனை நாளாய் காத்திருந்ததைப் போல .

கண்ணிமைக்ககும் நேரத்தில் அவன் தனது கைகளால் என் கழுத்தைசுற்றி அவனருகில் இழுத்து , வெறியோடு கன்னத்தில் முத்தமிட , கன்னத்திலிருந்து உதடு , உதட்டிலிருந்து கழுத்து , கழுத்திலிருந்து , மார்பு என உதடுகள் கபடி ஆடத்துவங்கியிருந்தது.

''சார் ப்ளீஸ் என்ன விடுங்க '' வாய் மட்டும் கூறினாலும் , உடல் அங்கேயே இருந்தது , அந்த கிழவனின் அணைப்பில் . எனது நைட்டியின் மேல் பட்டன்களை களைய முயல ,அதை தடுக்க மனம் நினைத்தாலும் கைகள் வெறுமனே வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தது . என் உடலில் ஏதோ மாற்றம் . ஏன் என் உடல் மனதோடு ஒத்துழைக்கவில்லை . தெரியாது . சூனியத்திற்கு கட்டுப்பட்டது போல அப்படியே அவனது சேட்டைகளை ரசித்துக்கொண்டிருந்தது .

''சா...............ர்ர்.............. வேண்டாம்.............. ப்.......ளீஸ் ''

என்னையும் அறியாமல் கிழவனை இப்போது நானும் கட்டியணைத்திருந்தேன் . எனது திறந்த மார்புகள் கிழவனின் மார்போடு அழுந்தியிருந்தது . ஒரு புதிய உணர்வு மற்றும் உடலில் ஏற்படும் மாற்றத்தையும் என்னால் உணர முடிந்தது . அளவில்லா இன்பம் ஆர்ப்பரித்தது . கிழவனின் காதுகளில் முத்தமிட்டபடி அவனது கழுத்தில் முத்தமிட்டேன் .

முத்தம் அழுத்தமாக ஆக ஆக ....... எனக்கு பல் முளைத்தது . கழுத்தில் கடித்து ரத்தத்தை உறிந்தேன் . எனது கால்கள் மறைய துவங்கின . இன்னும் அழுத்தமாய் கழுத்தின் துவாரம் வழியாக கிழவனின் ரத்தத்தை உறிய உறிய எனக்கு கால்கள் மறைந்து நான் ஓரளவுக்கு முழுமையான ரத்தக்காட்டேறியாய் மாறினேன் . கிழவன் செத்து விழுந்தான் . அந்த இடம் முழுவதும் ஜில்லிடத்துவங்கியது . காதுகளில் பிணங்களின் அலறல் இன்னிசையாய் ஒலிக்க துவங்கியது . நான் மிதக்கத் துவங்கினேன் . இன்னும் ஒருவரை இது போல கொன்று விட்டால் இறக்கைகளும் முளைத்து விடுமாம் பின் பறக்கலாம் எங்கும் எப்போதும்.......................

''சாதாரண கொள்ளிவாய் பிசாசான நீங்களும் குட்டிப்பிசாசுகளும் மோகினிப்பேய்களும், ரத்தக்காட்டேறியாய் மாறவேண்டுமென்றால் , உன் முதல் வேட்டை நீ அறியாமல் நடந்தால் மட்டுமே உனக்கு கொலைப்பற்கள் முளைக்கும் , அடுத்த கொலையை முடித்த உடன் இறக்கைகள் முளைத்து விடும் '' என ராபார்ட் மாமா நான் ஐந்து வருடங்களுக்கு முன்னால் இறந்து குட்டிப்பிசாசான புதிதில் சொல்லிக்கொடுத்தது இப்போது நினைவுக்கு வந்தது .

24 November 2008

தற்பெருமைகளும்....தற்கொலைகளும்.....


நம் வாழ்வின் என்றாவது ஒரு நாளிலோ அல்லது ஒரு நிகழ்விலோ நாம் தற்கொலை செய்துகொள்வதைப்பற்றி ஒரு விநாடியேனும் சிந்தித்திருப்போம் . இன்று இக்கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் யாரும் அதைக்குறித்து சிந்தித்திருக்கக்கூடும் . அம்முயற்சியை உடனேயோ , யோசித்தோ அல்லது சாவினை குறித்த பயத்தினாலோ கைவிட்டவராய் இருக்க கூடும் .

தகவல்தொழில்நுட்பத்துறையில் இன்று அதிகம் தற்கொலைகள் நிகழ்வதாக பல ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன . இது தவிர இந்தியாவின் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒருவர் தற்கொலைக்கு முயல்வதாகவும் தெரிவிக்கின்றனர் .

தற்கொலை எண்ணம் ஏன் ஏற்படுகிறது? இதற்கான காரணம் என்ன? அப்படிப்பட்ட சூழலில் என்ன செய்யலாம்? தற்கொலைகள் தவறா ? தற்கொலை செய்யுமளவுக்கு ஒரு மனிதனின் மனநிலை ஏன் எப்படி மாறுகிறது என இப்படி பல கேள்விகள் நம்மில் பலரது மனதிலும் எழலாம் . ஆனால் அவையனைத்திற்கும் ஒரே வார்த்தையில் சொல்லப்படும் பதில் தோல்வி. தோல்வியிலிருந்து விடுதலை என்றுச்சொல்லலாம்.

தற்கொலைகள் பெரும்பாலும் தோல்விகளாலும் அது தரும் மன அழுத்தம் மற்றும் அதனால் ஏற்படும் சமூகத்தின் பழிச்சொற்களை ஏற்க திராணியின்றியும் ஏற்படுகிறது . தோல்விக்குப்பின் நமது சமூகத்தை எதிர்கொள்ள அஞ்சி பலரும் அம்முடிவை எடுப்பது வாடிக்கையான ஒன்று .

ஆரம்பநிலைப் பள்ளிப்பருவங்களில் பெரும்பாலும் தேர்வுகளில் தோல்வியுறும் மாணவர்கள் தங்களது பால்யத்தில் வீட்டைவிட்டு ஓடுவது மாதிரியான சிறுசிறு முயற்சிகளில் ஈடுபடுவர். ஆனால் தற்கொலை அளவிற்கு யாரும் முயல்வதில்லை . அதற்குரிய மனவளர்ச்சியோ அறிவோ அக்குழந்தைகளுக்கு இருப்பதில்லை . இப்படி சிறுவயதில் ஏற்படுகிற இம்மனச்சிதைவு அல்லது அதிகமான மன அழுத்தம் அக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது அவர்களை சமூகத்தின் சிக்கலான பிரச்சனைகளை எதிர்கொள்ள வலிமையில்லாதவர்களாகவும் மூர்க்கமானவர்களாகவும் மாற்றியமைக்கிறது . இப்பிரச்சனைக்கு முழுமையான தீர்வு சிறுகுழந்தைகளிடையே ஆரம்பநிலையிலேயே போட்டி மனப்பான்மையையும் , தோல்வி பயத்தையும் தவிர்க்கும் வண்ணம் ஆரம்பக்கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரலாம் . நாமும் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிடுவதையும் நிறுத்த வேண்டும் . ஒப்பிடுதலே குழந்தைகளின் மனதில் முதன்முதலாய் பதியும் தாழ்வுமனப்பான்மையின் விதை . நீங்கள் ஒப்பிட்டு பழக்கப்படுத்த ஆரம்பிக்க அது பிற்காலத்தில் தன்னைத்தானே மற்றவருடன் ஒப்பிட்டு தன்னை தாழ்த்திக்கொள்ளும் மனநிலையை வளர்க்கவும் ஏதுவாக அமையலாம் .

இளம்பருவத்தில் தேர்வுகளில் தோல்வி , காதல் தோல்வி , தன் புற அழகின் மீதான பார்வை , சக தோழர்களுடனான ஒப்பீடு , தாழ்வு மனப்பான்மை இன்னும் நிறைய மனது மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகள் தற்கொலைக்கு தூண்டுதலாய் அமைகின்றன. இவ்வயதில் கட்டுக்கடங்காமல் அலைபாயும் மனதை சரியான வழிகாட்டுதலால் மட்டுமே சரியாக அமைக்க இயலும் . இவ்விளம் பருவத்தில் பெரும்பாலும் மனமும் உடலும் காமம்,வன்முறை என திசைமாறிச்செல்ல எத்தனிக்கும்.

நம் சமூகத்தில் அப்படி ஒரு சூழலில் சாதாரண ஒரு இளைஞனை அவனது சமூகமும் அவனது குடும்பமும் அடக்கி வைக்க பழக்கப்படுத்துகிறதே அன்றி அதனை சரியான வழியில் வெளிப்படுத்த ஒரு வடிகால் அமைத்து தரத்தேவையில்லை , அது போன்ற சமயங்களில் அது குறித்த சரியான அறிதலை நம் சமூகமும் நம் கல்விமுறையுமே வழங்க இயலும் . தேர்வுகளில் தோல்வியுறும் போது இனி நம் குடும்பத்தையும் சமூகத்தையும் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்கிற அச்சம் தற்கொலைக்கு ஒரு காரணமாக இருக்கிறது , அதற்கு ஆணிவேர் ஒவ்வொரு குழந்தையின் ஆரம்பகால வாழ்க்கையில் இருக்கும் . வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்ட பெற்றோர்கள் தன் மகனோ மகளோ எதிலும் வெற்றி மட்டுமே பெற வேண்டும் என்றும் , அக்குழந்தைகளுக்கு தோல்வி குறித்த பயத்தையும் தோல்விகள் வாழ்வின் முடிவு என்பது போன்ற பாவனையையும் அளிக்கவே நமது குடும்பங்களும் சமூகமும் கல்வி அமைப்பும் கற்றுத்தருகிறது .
முதல் ரேங்க் வாங்கும் மாணவனையும் , ஓட்டப்பந்தயத்திலும் பிற விளையாட்டிலும் வெற்றி பெரும் மாணவனையுமே முன்னிலைப்படுத்தி பிறரை ஒதுக்கி வைக்கும் முறையால் , ஒதுக்கப்பட்ட அக்குழந்தை வளரும் போது எல்லா சூழலிலும் அத்தாழ்வும்மனப்பான்மையோடு சமூகத்தை எதிர்கொள்ளும் . தோல்விகள் உச்சத்தை அடையும் போதெல்லாம் அக்குழந்தை வளர்ந்த பின்னும் அதை எதர்த்து போரிட வலிமையின்றி தற்கொலை வரை அதன் தாழ்வுமனப்பான்மையும் தனிமையாக்கப்பட்ட அதன் அறிவும் இட்டுச்செல்லுகிறது . காதல் தோல்விகள், காதலில் தோற்றாலே சாவு ஒன்றுதான் முடிவு என்பது போன்ற ஒரு மாயையை நம் சமூகம் அதன் ஊடகங்கள் வழியே ஏற்படுத்தியிருக்கிறது . காதலில் தோற்றால் வாழ்வில் தோற்றது போல ஒரு பிம்பம் எப்படி உருவானது என்று தெரியவில்லை . காலப்போக்கில் இக்குணம் நம் சந்ததியினரிடையே இருந்து மறையலாம்.

மத்யம வயதில் 30 வயதுக்கு மேல் தற்கொலை செய்து கொள்ளும் பலரும் கடன் தொல்லை , திருமண வாழ்வில் தோல்வி , ஏமாற்றம் , கள்ள உறவுகள் என சில காரணங்களால் மட்டுமே அம்முடிவை எடுக்க துணிகின்றனர் . சரியான திட்டமிடல் மற்றும் வாழ்க்கையின் மிகச்சிறிய பிரச்சனைகளையும் சந்திக்க துணிவின்றி முடிவில் தற்கொலைகளுக்கு முயல்கின்றனர் . நம் வாழ்க்கையின் எஜமானர்கள் நாம்தான் , நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் நாம்தான் எதிர்கொள்ள வேண்டும் , அதில் மேடுபள்ளங்களை சந்திக்க பழகிக்கொள்ள வேண்டும் . தற்கொலை போன்ற ஒரு பாதகச்செயலுக்கு துணியும் மனம் , கடன்தொல்லைகளை சமாளிக்க இயலாமல் போவது ஆச்சர்யமே!
பெண்களில் பெரும்பாலும் பாலியல் துன்புறுத்தல் , தன்மீதான வன்முறையிலிருந்து விடுதலை , குடும்பவாழ்வில் திருப்தியின்மை , அழகு குறித்த கவலை , தான் குண்டாக இருக்கிறோம் என்று வருந்தியும் தான் கருப்பாக இருக்கிறோம் என்றெண்ணியும் தற்கொலை செய்துகொள்ளும் எத்தனையோ பெண்களை நாம் அன்றாடம் காணலாம் . பெண்களுக்கு பொதுவாகவே தாழ்வு மனப்பான்மை மிக அதிகம் . அது நம் ஆணாதிக்க சமூகம் அவர்களது உயிரணுக்களில் விதைத்த வித்துக்களின் பலன் . பெண்கள் இது போன்ற தருணங்களில் அப்பிரச்சனைகளில் இருந்து விலகியோ அல்லது சரியான தீர்வுகளை ஆராய்ந்தோ அல்லது சமூக நல ஆர்வலர்களின் உதவியையோ நாடலாம் .

தலையில் முடியில்லை , சிகப்பாக முகமில்லை , படிப்பு ஏறவில்லை , என மிகச்சிறிய பிரச்சனைகளுக்கே தற்கொலை என்றால் உலகில் யாருமே உயிர் வாழ இயலாது , கண்ணின்றியும் காலின்றியும் வாழ்வினை எதிர்த்து போராடும் எத்தனையோ பேரை நாம் அன்றாடம் காண்பதில்லையா . அவர்கள் தன் உடலின் ஒரு பாகமின்றி வாழ்நாள் முழுக்க வாழ்வதில்லையா .

இதற்கும் மேல் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லை மீரும் போது நிச்சயம் நீங்களோ அல்லது தற்கொலைக்கு முயல்பவரோ ஒரு நல்ல மனநலமருத்துவரை அணுகி இது குறித்து ஆலோசிக்கலாம் . இதுபோன்ற மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஒரு ஒரு பக்கப்பதிவில் தீர்வுகளை கூறிவிட இயலாது . ஆனால் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வொருக்கு உதவ ஸ்நேகா இந்தியா என்கிற தொண்டு நிறுவனம் உதவி வருகிறது .

இது குறித்து மேலும் விபரங்களுக்கு.. http://www.snehaindia.org/

ஸ்நேகா இந்தியா என்கிற தொண்டு நிறுவனம் இது போன்ற காலங்களில் செய்ய வேண்டியவை என்ன , நம்மைத்தவிர நமது நண்பரோ அல்லது உறவினரோ இது போன்ற காரியங்களுக்கு ஆயத்தமானால் அதை எப்படி எதர்கொள்வது மற்றும் நேரில் மற்றும் தொலைப்பேசியிலும் கவுன்சிலிங் போன்ற சேவைகளை இலவசமாக செய்து வருகிறது . நிச்சயமாக மதமாற்ற நிறுவனம் அல்ல !. தற்கொலைகள் செய்யாதிருப்பதோடு நில்லாமல், அதற்கு முயல்வோரையாவது தடுக்கலாமே..

வாழும் வரை போராடு - வழியுண்டு என்றே பாடு.......
*****************

இன்பக்கதைகள் இன்ஃபினிட்டி......(1)



முரட்டு இன்பம் -

மகளிர் காவல் நிலையத்தில் என்றாவது ஒரு நாள் முழுக்கவும் ஆடவராகிய நம்மால் கழிக்க இயலுமா என்றால் நிச்சயம் இயலாது . அங்கே சக ஆண்களுக்கு எதிரான பெண் காவலர்களின் வன்முறைகள் மிக அதிக அளவில் நிகழுவதாக சில நண்பர்கள் கூற கேட்டதுண்டு . பெண் காவலர்கள் குறித்து வெகுஜன ஊடகங்களும் நமது சிற்றறிவும் மிக அசாத்திய எண்ணங்களை பதிவு செய்துள்ளன.

நமது கதையின் நாயகன் வினோவும் அது போலத்தான் நினைத்துக்கொண்டிருந்தான் நித்யாவை சந்திக்கும் வரை . நித்யா நமது கதையின் நாயகி பெண் காவலாளி தமிழில் லேடி கான்ஸ்டபிள்.

அன்புள்ள நித்து டார்லிங்

உன்னை இனிமேல் என்னால் அப்படி கூப்பிட இயலுமா தெரியவில்லை ,
என்னை மன்னித்துவிடு எனக்கு வேறு வழி தெரியவில்லை , நான் உன்னை என் உயிரினும் மேலாகத்தான் நேசித்தேன் ஆனால் சூழ்நிலை இன்று நம்மை பிரிக்க முயல்கிறது , சூழ்நிலைக்கைதியாய் நான் அதற்கு அடிபணிந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் . இனி நாம் பேசுவதோ பழகுவதோ முறையாகாது , மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் , ஒரு முறை அல்ல ஆயிரம் முறை கூட சொல்வேன் ஐ யம் சாரி ஐ யம் சாரி , உன்னை விட்டு பிரிந்தாலும் , என் உள்ளத்தில் என்றும் உன் நினைவுகளோடே வாழ்வேன் ,

இப்படிக்கு உன் காதலன்(?)

வினோ......

இந்த காலேஅரைக்கால் கடிதம்தான் வினோ நித்யாவிற்கு கடைசியாக எழுதிய கடிதம் , அக்கடிதத்தை ஆர்.கே.சாலையில் மேம்பாலம் அருகில் காவலுக்கு நின்று கொண்டிருந்த விமலாவிடம்(இன்னுமொறு கான்ஸ்டபிள் ) கொடுத்துவிட்டு , அங்கிருந்து வெகு வேகமாக சென்று விட்டான் வினோ . விமலா அக்கடிதத்தை நித்யாவிடம் தந்த போது அவளோ பூமி அதிர சிரித்தாள் , '' லூசாப்பா அவன் '' என்று கண்ண்டித்தாள் , அடுத்தவர் கடிதம் என்றும் பாராமல் அக்கடிதத்தை படித்து விட்டிருந்த விமலாவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை .
வினோவும் நித்யாவும் முதன்முதல் சந்தித்தது மிக நகைச்சுவையான ஒரு சம்பவத்தில் , வினோ பணிபுரியும் தானியங்கி நீர் சுத்திகரிப்பு சாதனம் விற்கும் கம்பெனியின் அலுவலகம் எத்திராஜ் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் பச்சை நிற அடுக்குமாடி கட்டிடத்தின் நான்காம் மாடியின் வலது புறத்தில் மூன்றாவது அறையில் இருந்தது , மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவான இவன் , அலுவலத்தில் இருக்கும் நேரத்தை விட வீடு வீடாகச்சென்று வாடிக்கையாளர் பிடிக்க அலையும் நேரமே அதிகம் .

ஒரு சுபமுகூர்த்த சுபயோக சுபதினத்தில் , காலை 11 மணிக்கு நல்ல எமகண்டத்தில் , காயிதே மில்லத் கல்லூரியை தாண்டி இடது புறம் திரும்பினால் அண்ணா சிலைக்கு செல்லும் சாலை , அது ஃபிரீ லெப்ட் கிடையாது , அங்கே விழும் சிக்னலுக்கு கட்டாயம் காத்திருந்துதான் செல்ல வேண்டும் , இவனும் சிக்னலுக்கு காத்திருந்தான் , இவனது விலைமதிப்பற்ற பஜாஜ் பாக்ஸர் ( 1998 மாடல் வண்டி) சிகனலில் ஆஃப் ஆகி விட பச்சை விழுந்து மீண்டும் சிகப்பு விளக்கு எரிய ஆரம்பித்திருந்தது , அந்த சாலை திரும்புமிடத்தில் காவலுக்கு நின்று கொண்டிருந்த நித்யா இவனை கவனித்தபடி இருக்க , எதிர்பக்கத்தில் இருந்த போக்குவரத்து காவலாளி நேராக இவனை நோக்கி வந்தார் , '' தம்பி லைசன்ஸ் , ஆர்சி புக்லாம் எடுங்க , '' எடுத்து காட்டினான் , ''இன்சூரன்ஸ்?'' அதையும் நீட்டினான் ,

''ஸைடு மிரர் எங்கே ? ''

''சார் அது வீட்டில இருக்கு ''

''எதுக்கு சிரைக்கரதுக்காகவா வச்சிருக்க ''

''ஆமா சார் , அம்மாதான் சொன்னாங்க அதுல சேவிங் பண்ணா முகத்தில நல்லா சிரைக்கலாம்னு ''

''என்னப்பா கிண்டலா ''

''ஸைடுல மிரர் இல்ல, வண்டி சாவிகுடுங்க , எதுவா இருந்தாலும் ஐயா கிட்ட பேசிக்கோங்க ''

''சார் , இதுலாம் ஒரு தப்பா சார் , அதான் எல்லா டாகுமெண்ட்ஸ்ம் இருக்கல , ஹெல்மெட் கூட போட்டிருக்கேன் அதுவும் ஐஎஸ்ஐ ''

''ஐயா இங்க ஒருத்தன் ரொம்ப ரூல்ஸ் பேசறான் , நீங்களே பாத்து கவனிங்க ,''
வினோவின் வண்டியை நித்யாவின் அருகில் நிறுத்திவிட்டு , அங்கிருந்து அண்ணாசாலையின் மிகப்பெரிய சிக்னலை நடந்தே கடந்தான் . நித்யா அவனை பாவமாய் பார்த்தாள் . நித்யா நல்ல அழகு , தேவதை போல் அவனுக்கு தோன்றினாள் .

''என்னப்பா ஃபைன் ஆயிரம் ரூபா இங்க கட்டறியா , இல்ல கோர்ட்லயா '' ஐயா கேட்டார் ,

''சார் , என்ன சார் நான் தப்பு பண்ணேன் , ஸைடு மிரர் இல்ல அது ஒரு தப்பா ''

''தம்பீ ஓவர் ஸ்பீட் , டிராபிக் வயலேசன் , அப்புறம் ஸைடு மிரர் இல்ல , உங்க லைசன்ஸ் போட்டோல இருக்கறது உங்கள மாதிரி வேற இல்ல ''

''சார் என் வண்டி எவ்ளோ வேகமா போனாலும் 50 கி.மீ தாண்டாது , நான் ஒழுங்கா சிக்னலுக்கு நின்னது டிராபிக் வயலேசனா ''

''சரிங்க தம்பி , இவ்ளோ ரூல்ஸ் பேசறீங்கல்ல , நாளைக்கு வந்து கோர்ட்ல வண்டிய வாங்கிக்கங்க ''

'' சார் அவர விட்டுருங்க சார் , எனக்கு வேண்டப்பட்டவரு , ஊர்க்காரரு , ரொம்ப நல்லவரு , ப்ளீஸ் '' நித்யா சம்பந்தமே இல்லாமல் சாலையின் மறுபுறத்தில் இருந்து ஓடி வந்து உதவினாள் .

''ரொம்ப தேங்க்ஸ்ங்க , நீங்க மட்டும் உதவலனா , ஏன் வண்டியும் நானும் கண்டமாகிருப்போம் ''
''பரவால்லைங்க , உங்கள பாத்தாலே பாவமா இருக்கு , அப்பாவியா இருக்கீங்க , பப்பி மாதிரி! , உங்ககிட்ட போயி , அந்தாளுக்கு யாருகிட்ட எப்படி நடந்துக்கணும்னே தெரியாது ,ஏக்ச்சுவலி நாங்கதான் உங்ககிட்ட ஸாரி கேக்கணும் '' என்றபடி அவனது கண்களையே பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தாள் , உதட்டில் சிறிய புன்னகை , வினோவை அது என்னமோ செய்திருக்க வேண்டும் .

வினோவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை , தன்னிடம்தான் பேசுகிறாளா , அதுவும் ஒரு பெண் போலீஸ் இத்தனை சாந்தமாக , கனிவோடும் அளவில்லா அன்போடும் , என சுற்றும்முற்றும் பார்த்து உறுதி செய்து கொண்டான் . இவன் வண்டியை எடுத்துவிட்டு அங்கிருந்து திரும்பும் போது அவளை பார்த்தான் , அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் , அவன் மறையும் வரை .
அன்புள்ள வினோ குட்டிக்கு ,

நித்யா எழுதிக்கொள்வது , ஒரு மாதமாக உன்னை காணாமல் கலங்கி போயிருக்கிறேன் ,நீ உனது அலுவலகத்திற்கு கூட வருவதில்லை என கேள்விப்பட்டேன் , உனது மொபைல் எப்போதும் ஆஃப்லேயே இருக்கிறது , என்னை பார்க்காமல் உன்னால் இருக்க முடிகிறது போல , என்னால் முடியலடா... ராஸ்கல் , ப்ளீஸ் எங்கிருந்தாலும் உடனே வாடா , உன்னை பார்க்கணும் , பேசணும் ,உன்னை இறுக்க கட்டியணைத்து உன் உதடுகள் சிவக்க அழுத்தமாய் ஒரு முத்தமிடனும் , ஏன்டா என்னை இப்படி கொல்ற , எங்கடா இருக்க.... குட்டிமா ப்ளீஸ்டா.. நான் ஏதாவது தப்பு பண்ணிருந்தா மன்னிச்சுடுறா...ப்ளீஸ்...

இப்படிக்கு..

அன்பு முத்தங்களுடன் ,

நித்யா.....

நித்யா வினோவிற்கு தருவதற்காக கடைசியாய் எழுதிய கடிதம் , இன்று வரை அக்கடிதம் பற்றி அவனுக்கு ஒன்றுமே தெரியாது .............
**********
முடிவில்லா இன்பம் தொடரும்.....

20 November 2008

சென்னையில் கீற்று வாசகர் சந்திப்பு .....




கீற்று இணையதளம் குறித்து அனைவருக்கும் தெரிந்திருக்கலாம் . தெரியாதவர்கள் இங்கே பார்க்கவும் http://www.keetru.com/ . நமது தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் போல தமிழில் வெளியாகும் பல தமிழ் சிற்றிதழ்களை ஒரே இடத்தில் தொகுத்து தரும் அட்சயபாத்திரம் கீற்று இணையதளம் .

ஞாநியின் தீம்தரிகிட இதழ் இணையத்தில் வரத்துவங்கிய காலக்கட்டத்தில் அவை கீற்று இணையதளம் மூலமாகவே கிடைத்து வந்தது , தீம்தரிகிட இதழ் மூலமாகவே எனக்கு கீற்று அறிமுகமானது , அதன் பிறகு அங்கே வெளியாகும் அணங்கு,கதைசொல்லி ,புரட்சிப்பெரியார் முழக்கம் போன்ற சிற்றிதழ்கள் ஆனந்த விகடனும் குமுதமும் மட்டுமே தெரிந்த எனக்கு இன்னொரு உலகினை அறிமுகப்படுத்தியது . புத்தகங்கள் தமிழில் கிடைக்க அரிதான வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் இவ்விணையதளம் ஒரு வரப்பிரசாதமாய் திகழ்கிறது .

இவ்வாரம் இவ்விணையதளம் தனது நான்காம் ஆண்டை துவக்குகிறது .

மிக அருமையாக நடந்துவரும் இவ்விணைய தளத்தின் வாசகர்கள் சந்திக்கவும் உரையாடவும் இவ்வாரம் சென்னையில் ஒரு வாசகர் சந்திப்பை அவ்விணையதள நண்பர்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர் . இச்சந்திப்பில் வாசகர்கள் கலந்து கொண்டு தங்களது, கீற்று தளம் குறித்த உங்கள் நிறைகுறைகளையும் அதனை மேம்படுத்த உங்களது ஆலோசனைகளையும் வழங்கலாம் . உங்களுக்கு ஏதேனும் அவ்விணையதளம் குறித்த சந்தேகங்கள் இருப்பின் அதனையும் கேட்டு தெரிந்து கொள்ள ஏதுவாய் இச்சந்திப்பு அமையும்.


வலைப்பதிவர்கள் மற்றும் கீற்று வாசகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் .


நாள்: 30-11-2008, ஞாயிற்றுக் கிழமை


நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


இடம்: BEFI Hall, நரேஷ் பால் சென்டர், தேனாம்பேட்டை, சென்னை (காமராஜர் அரங்கம் எதிரில்)


மேலதிக விபரங்களுக்கு - http://keetru.com/editorial/readers_meet.php


இவ்விழாவில் கலந்துகொள்ள எந்தவித கட்டணங்களும் கிடையாது , அதுபோல இவ்விழாவில் கீற்று வாசகர்கள் தவிர அவ்விணையதளம் குறித்து அறிய விரும்பும் யாரும் கலந்து கொள்ளலாம் . இதில் நமது வலைப்பதிவர்கள் பலரும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது .


*********************************

அவளோதான்பா........ ;-)

*********************************

19 November 2008

பீர் (BEER) குறித்த குறிப்புகள் சில....



பீர் அருந்துதல் இன்று நம் நாட்டில் பரவலான ஒரு விடயம் . தமிழ்நாட்டில் டாஸ்மாக்குகளில் அதிகம் விற்கப்படும் பானமாக பீர் இருக்கிறது .பீர் அருந்துவோர் எண்ணிக்கையும் பீருக்கான சந்தையும் இந்தியாவில் நாளுக்குநாள் வளர்ந்து வரும் ஒன்று . நம் நாட்டில் அக்காலத்தில் பீர் இல்லையென்றாலும் சோமபானம் சுரா பானம் போன்ற வஸ்துக்கள் இருந்து வந்திருக்கிறது இவை பீரை போன்று இருந்திருக்கலாம்.
பிறகு வெள்ளையர்களின் ஆட்சியில் பீர் அருந்தும் பழக்கம் தொற்றியிர்ரருக்கூடும் , 70களில் பீர் தமிழ்நாட்டில் பெருவாரியாக நுழைந்திருக்கலாம் . இன்றும் புதிதாக மது அருந்த பழகுகிற ஒவ்வொரு குடிகாரனும் முதலில் தொடங்குவது பீரிலிருந்தே . இளைஞர்களை மட்டுமின்றி இளைஞிகளையும் வெகுவாக கவர்ந்து வரும் இப்பீரைப்பற்றி ஆயிரமாயிரம் கதைகளும் சிறுசிறு தகவல்களும் வியக்கவைக்கின்றன .
இன்று பப்களிலும் பார்களிலும் டாஸ்மாக்குகளிலும் பீர் மிக முக்கிய பங்கு வகுக்கிறது . பீர் குடிப்பதால் தொப்பை உண்டாகும் என்பது ஒரு தவறான கருத்தாகும் பீர் குடித்தபிறகும் குடிக்கையிலும் எடுத்துக்கொள்ளக்கூடிய உணவு மற்றும் நொறுக்குதீனிகளாலேயே அவை உண்டாகிறதென்றும்ம் குடித்தபின் கிடைக்கும் தூக்கமும் ஜீரணக்கோளாறுமே என ஆய்வுகள் கூறுகிறது . அது தவிர 3.5 சதவீதமே ஆல்கஹால் அடங்கிய பீர் குடிகாரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் மட்டுமல்ல அளவோடு எடுத்துக்கொண்டால் உடலுக்கு நன்மை பயக்குமென மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இனி பீர் குறித்த முதன்மை குறிப்புக்கள் :

*உலகின் முதல் சமையல் குறிப்பு பீருக்காகவே எழுதப்பட்டது .

*பீர் குறித்த சரியான ஆரம்ப காலத்திய வரலாறு என்று எதுவும் கிடையாது , ஆனால் 10000 ஆண்டுகளுக்கு முந்தைய மெசப்படோமிய நாகரீகத்திலேயே பீரைப்போன்ற ஒரு பானம் அருந்தப்பட்டதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

*சுமேரிய நாகரீகத்திலேயே முதன்முதலாக கோதுமையிலும் பார்லியிலும் செய்யப்பட்ட பீர்கள் கண்டறியப்பட்டுள்ளன . சுமேரியர்கள் கோதுமை மற்றும் பார்லியால் செய்யப்பட்ட 8 வகையான பீர்களை அருந்தியுள்ளனர். அதற்கு சாட்சியாக இன்றும் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் பீர்தயாரிக்க பயன்படுத்திய வெசல்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது . இவர்களது எட்டு வகை பீர்களில் இன்றைய நாட்களில் இருப்பது போல STORNG , LAGER போன்ற வகைகள் இருந்தது ஆச்சர்யமூட்டுகிறது . இது தவிர இந்நாகரீகத்தில் அவர்களது பீரை தயாரிக்க பெண்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். இதில் அவர்கள் மதச்சடங்குகளை செய்பவர்களாக இருந்தனர் என்பது மேலும் சுவாரசியம் . பீர்களில் சிலவகைகளை மட்டும் கடவுளுக்கு பிரசாதமாக வழங்கும் வழக்கமும் உண்டு . இன்று பீர் அருந்தும் அனைவரும் நிச்சயம் சுமேரியர்களுக்கு கடமை பட்டவராக இருக்க வேண்டும் .
*அக்கால எகிப்தியர்கள்கூட பீர்கள் பயன்படுத்தியதற்கான குறிப்புகள் அவர்களது பிரமிடுகளில் காணப்படுகிறது . ஆனால் நம்மைப்போலும் சுமேரியர்கள் போல் அல்லாமல் பீருடன் நீரை கலந்து அருந்தும் பழக்கம் கொண்டிருந்தனர்.

*பிற்காலத்தில் எகிப்தியர்கள் மூலமாக கிரேக்கர்களுக்கு இந்த பீர் தயாரிப்பு முறை சென்றிருக்கக்கூடும் என வரலாற்று ஆர்வலர்கள் கருதுகின்றனர். கிரேக்கத்தில் பீர் பயன்பாடு இருந்தாலும் அவர்கள் விரும்பி அருந்தியது வைனையே .

*4000 ஆண்டுகளுக்கு முன்னமே சீனர்களும் ''குய் ( KUI) " என்னும் பீர் அருந்தி வந்திருக்கின்றனர் .


*இது தவிர பாபிலோனிய நாகரீகத்திலும் பீர் பயன்பாடு அதிகமாக இருந்திருக்கிறது . பாபிலோனியர்கள் பல வகையான பீர்களை அருந்தியுள்ளனர் . இவர்கள் தனிதனியாக பீரை அருந்தாமல் பெரிய பாத்திரங்களில் பீரை ரொப்பி அதில் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடிக்கும் விநோத பழக்கம் கொண்டிருந்தனர் . அதிலும் மன்னர் பரம்பரையாக இருந்தால் அவர்களுக்கு தங்க ஸ்ட்ரா..!

*பீர் தயாரிப்பில் RULE OF THUMB என்னும் ஒரு சொலவடை உண்டு , அக்காலத்தில் பீர் தயாரிப்பில் கொதிக்கும் நீரின் வெப்ப அளவை தங்களது கட்டைவிரலால் பார்க்கும் முறை இருந்தது , (அது தெர்மா மீட்டர்கள் இல்லாத காலம் ) ஏனென்றால் தண்ணீரில் ஈஸ்ட்களை கலக்கும் போது நீரின் வெப்பநிலை அதிகமாக இருந்தால் ஈஸ்ட்கள் இறந்து போக வாய்ப்புண்டு அதனால்தான் அக்காலத்தில் அப்படி ஒரு சொலவடை உருவானது .

*1977 ல் பீர் குடிப்பதில் 1.3 விநாடிகளில் 1 லிட்டர் பீரை குடித்ததே இதுவரை கின்னஸில் பதிவுசெய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது .

* உலகிலேயே அதிக விலை கொண்ட பீர் " TUTENKHAMEN " என்கிற இங்கிலாந்து பீரே ஆகும்.. இது கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டியை சேர்ந்த சில மாணவர்களால் NEFERTITI என்னும் பேரழகியின் மம்மி குறித்த அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த சில குறிப்புகளை கொண்டு, அக்கால எகிப்திய முறையில் உருவாக்கப்படும் ஒன்றாகும் . இதன் சமீபத்திய விலை ஒரு பாட்டிலுக்கு 52$கள்( ரூபாய். 2500) ஆகும் . இது மிககுறைந்த அளவே தயாரிக்கபடுவது.

*பெல்ஜியம் நாடு உலகிலேயே அதிக அளவு பீர் பிராண்டுகளை கொண்டுள்ளது . அந்த நாட்டில் மட்டுமே மொத்தம் 400 வகையான பீர்கள் விற்பனைக்கு உள்ளதாம்!

*பெல்ஜிய மதகுருக்கள் பீர்தயாரிப்பில் சிறந்தவர்கள் .

*Cenosillicaphobia என்றால் பீர் அருந்தும் போது நமது கோப்பை காலியாகிவிடுமோ என்கிற அச்சமே ஆகும்.

*கரப்பான்பூச்சிகளுக்கு பீர் மிகவும் பிடிக்கும் ( அதிலிருக்கும் ஈஸ்ட்களால் கவரப்பட்டதால் இருக்கலாம்) உங்கள் வீட்டில் கரப்பான் தொல்லை இருந்தால் ஒரு கப்பில் பீர் வைத்து அதில் கொஞ்சம் எலி விஷம் கலந்து வைத்து விட்டால் போதும் மொத்த கரப்பான்களும் அழிந்து விடும்.

*உலகில் டீக்கு அடுத்து அனைவராலும் விரும்பி அருந்தப்படுகிற பானம் காபி அல்ல '' பீர் ''.



போதை தொடரும்..........


டிஸ்கி - மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு மற்றும் உங்கள் பாக்கட்டுக்கும் கேடு.

*********************

அவ்ளோதான்பா ;-)

**********************

பிகு : இந்தபதிவின் தகவல்கள் பல இடங்களில் இருந்தும் சேகரித்த தகவல்களின் தொகுப்பு , அவை எந்த ஒரு ஆங்கில பதிப்பின் மொழி பெயர்ப்பல்ல . இப்பதிவை வேறெங்கும் மீண்டும் பதிவிடவோ அல்லது மின்னஞ்சலில் அனுப்பினாலோ அல்லது பிறருடன் பகிர்ந்து கொண்டாலோ தயவுசெய்து எனது வலைப்பதிவின் முகவரியை குறிப்பிடவும் . நன்றி

செல்போன் அழகி.....!


செல்போன் அழகி :

உலகில்யாருக்கும் இந்நிலை வந்திருக்கக்கூடாது , அப்படியொரு நிலை ராகவனுக்கு , பாவம் அந்த பிள்ளை அவனும் வயசு(க்கு) வந்த நாள் முதல் பல பிகருகளுக்கு ரூட் விட்டும் ஏனோ ஒரு பிகரும் இவனை திரும்பி கூட பார்ப்பதில்லை . அவனும் போகாத காலேஜ் இல்லை பண்ணாத சேட்டையில்லை . இருந்தாலும் இப்படி ஒரு நிலை .

இந்த உலகம் இருக்கிறதே விசித்திரமானது , ஒருத்தன் பணக்காரன் ஆகிட்டானா அவன் அப்படியே பிக்அப் பண்ணி பணக்காரன் ஆகி போய்க்கொண்டே இருப்பான் . ஆனா ஏழை, அவன் நிலைமை மேலும் மேலும் ஏழையாகிட்டே இருப்பான் . ( ஏன்டா சொறனை கெட்ட சொறி மண்டையா உனக்கு எத்தன தடவ சொல்றது கதை எழுதும் போது கருத்து சொல்லாதேனு )

ராகவனுக்கு இதுவரைக்கும் ஒரு ஃபிகர்கூட செட் ஆகாதது ஏனோ மனசுக்குள் ஒரு நெறிஞ்சிமுள்ளாக துளைத்துக்கொண்டிருந்தது . அவனது நண்பன் கணேஷோ வகைவகையாய் விதவிதமாய் ரகம்ரகமாய் நூற்றுக்கணக்கில் சரவணஸ்டோர் போல இருந்தான் . ஆமாங்க அவனுக்கு மட்டும்எப்படித்தான் பிகர் செட்டாகுதோ தெரியவில்லை . எந்த பெண்ணை பார்த்தாலும் உடனே உஷார்தான் . அப்படியே பிக்அப் பண்ணி டேக்ஆஃப் பண்ணி பறந்துவிடுவான். ராகவனுக்கு அவனை பார்த்தால் பொறாமையாக இருக்கும் .

ஒரு நாள் இப்படித்தான் ராகவன் தன் ஆற்றாமை தாங்கமல் வாயை விட்டு கேட்டே விட்டான்

''மாப்பி................. மாப்பி , கணேஷ் மாப்பி '' கொஞ்சினான் ராகவன்.

''என்னடா''

''நான் ஒன்னு கேப்பேன் தப்பா நினைக்கக் கூடாது''

''என்ன எழவுடா சொல்லு ''

''நீ நிறைய பொண்ணுங்ககிட்ட போன்ல கடலை போடற , உன்ன பாத்தா பொறாமையா இருக்குடா எனக்கும் ஒரு நம்பர் குடுத்தா நானும் பேசுவேன்ல''

''டே ராகவா... பொண்ணுங்க கிட்ட பேசறது ஒரு கலைடா அதுலாம் உனக்கு வராது , அதும் உனக்கு வயசு பத்தாதுடா ''

''டே டே டே பிளீஸ்டா .. நானும் கத்துக்கறேன்டா''

''சரி ரொம்ப கெஞ்சுற , உன்ன பாத்தாலும் பாவமா இருக்கு , இனிதானு ஒரு பொண்ணு இருக்கு , பாத்து பேசணும் , நம்பர் தரேன் யார் தந்தானு கேட்டா என் பேர சொல்லக்கூடாது ''

ராகவன் நம்பரை வாங்கியதும் வானுக்கும் பூமிக்குமாய் குதித்தான் , ஆஹா ''நமக்கும் கேர்ள்பிரண்ட் கிடைத்துவிட்டதடா என் செல்வமே'' என்று . மனதுக்குள் பட்டாம்பூச்சி டைனோசரஸ் ஸைசில் பறந்தது .

சரி நம்பர் வாங்கியாச்சு அடுத்த என்ன பண்ண , அவனுக்கு ஒன்றும் தெரியாது , உக்காந்து யோசிச்சான் , நின்னுகிட்டே யோசிச்சான் , படுத்துகிட்டு யோசிச்சான் , வாழைப்பழத்தில் வழுக்கி விழுந்து யோசிச்சான் , கக்கூஸ் போகும் போது யோசிச்சான் , டக்குனு ஒரு ஐடியா . எஸ்எம்எஸ் அனுப்பலாம்னு முடிவு பண்ணி அனுப்ப ஆரம்பிச்சான் , அதுதான் கீழ இருக்கு .

hi initha how r u

who is this

im ragav from chennai

ok i dont know u

me too

then why are u msgng

i want to frnedshp u

y

i like u

y

i dont know

ok tel me abt u..................................................... இப்படியே அவங்க பிரெண்ட் ஷிப் ஈஸியாபிக்அப் ஆகிடுச்சு ( கதையை படிக்கும் வாசகர்கள் இப்படி முயற்சிகளில் இறங்க வேண்டாம் , messaging is injurious to your health and ofcourse your wealth )

மெசேஜ் அனுப்ப ஆரம்பிச்சு மலர்ந்த நட்பு , போன்ல பேச ஆரம்பிச்சுது ,

ராக : டேய் செல்லம் உன் குரல் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு

இனி ; விட்டா என் தொண்டைய கடுச்சு தின்னுடுவ போலருக்கே

ராக ; போடி

இனி ; நீ ஏன்டா என்ன லவ் பண்ண

ராக ; உன்னோட நல்ல குணம்டா !! நீ ஏன் என்ன லவ் பண்ண

இனி ; நான் நிறைய பசங்ககிட்ட பேசிருக்கேன் , ஆனா நீ ஒருத்தன்தான் அதுல நல்லவன் , ஆமா உன்ன யாராவது லவ் பண்ணிருக்காங்களா

ராக ; ஓஓஓஓ நிறைய ஆனா நான் உன்ன மாதிரி ஒருத்திக்காகத்தான்டா இத்தினி நாளா வெயிட் பண்ணிட்டிருந்தேன்

இனி; ஆனா உன் பிரெண்ட் வினோத் வேற மாதிரி சொன்னானே

ராக ; அவன்கிட்டலாம் நீ ஏன் பேசற , அவனுக்கு நான் உங்கூட பேசறத பாத்து பொறாமை அதான்.

இனி ; அவன உன்கிட்ட பேசறதுக்கு முன்னாடியே தெரியும்டா , டேய் நீ எப்படி இருப்ப

ராக ; நான் சுமாராதான் இருப்பேன்டா , மீடியம் அய்ட், மாநிறம் , ஷார்ட்டா முடி , நீ எப்படிடா இருப்ப

இனி ; நான் நமீதா மாதிரி இருக்கேனு என் பிரெண்ட்ஸ்லாம் சொல்லுவாங்கடா

ராகவன் இந்த வார்த்தையை கேட்டதிலிருந்து குதூகலமாகியிருந்தான் , நமீதா மாதிரி ஒரு பிகரா நமக்கு , இருந்தாலும் இவனோட லெவலுக்கு நமீதா மாதிரி பிகர் ஜாஸ்திதான் என்று எண்ணிக்கொள்வான் .செல்போன் கடலை காதலாகி காதல் காமமாகி காமம் கஸ்மாலமாகியிருந்தது .இப்போதெல்லாம் கணேஷ்கிட்ட கூட பேசறத்தில்லை . அந்த பொண்ணுகிட்ட இவன் எல்லா உண்மையும் சொல்லி பாவ மன்னிப்பு வாங்கிட்டான் ஏன்னா பாருங்க இவன் ரொம்ப நல்லவன் அதான். இனிதாதான் சொல்லிருக்கா அவனோட சேராத அவன் ரொம்ப மோசம் என்று , அவன்ஏன் என்று கேட்டதற்கு அவனும் நானும் முட்டுக்காடு போனப்ப அவன் என்னோட தப்பா நடக்க முயற்சிபண்ணான் நான் அங்கேயே அவனோட நட்புக்கு முழுக்கு போட்டுட்டேனு சொன்னாள் .

கணேஷ் இவனிடம் ஏன்டா என்கிட்ட பேசறதில்லனு கேட்ட போது அவன் இதையெல்லாம் சொன்னான் .

அவனோ மச்சி அவள நீ இன்னும் நேர்ல பாத்ததில்ல , அவள மீட் பண்ணி பேசின இப்படிலாம் எங்கிட்ட பேச மாட்டே பிகருக்காக பிரண்ட்ஷிப்ப கட் பண்ற அளவுக்கு போயிடுச்சா தூ போடா என்று துப்பிவிட்டு போனான் . ராகவனுக்கு சுறுக் என்று இருந்தது .( இதுக்கு மத்தியில் நான் ஒரு விடயத்தை சொல்ல மறந்து விட்டேன் , கதையின் இந்த சீன்வரைக்கும் அவங்க ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கவே இல்லை என்பதையும் அவர்களது காதலுக்கு இதுவரை வயது பதிமூன்று நாட்கள்தான் என்று நினைவில் கொள்க .)

ஒரு நாள் போனில் பேசுகையில் ஆவலோடு இனிதா செல்லம் நான் உன்னை நேர்ல பாக்கணும்டி என்று கேட்டான் , அவளும் சரிடா புருஷா எனக்கும் உன்னை பாக்கணும் போல இருக்குடா , சரி ஞாயித்துகிழமை எனக்கு மெட்ராஸ் யுனிவர்சிட்டில கிளாஸ் அங்க மீட் பண்ணலாம் வரப்போ வெள்ளை டிஷர்ட் கருப்பு பேண்ட் ஓகேவா நான் மஞ்சள் சுடிதார் என்றாள் .

சன்டேக்கு இன்னும் 5 நாள் இருந்தது , அதற்குள் தன்னை அழகு படுத்திக்கொள்ள வேண்டும் என்று சரவணா ஸ்டோர்ஸில் அலைந்து பனியன் டிஷர்ட் ஜட்டி சட்டை என பலதும் வாங்கினான் , AXE CHOCLATE அப்படினு ஒரு புது சென்ட்டு அதையும் வாங்கி கொண்டான் , அதை அடித்துக்கொண்டால் பெண்கள் நம் மேல் விழுந்து பிச்சு பிராண்டுவார்களாமே !!! எனக்கும் தெரியாது அவனுக்கும் தெரியாது . பியூட்டி பார்லருக்கு போய் முகத்தை பிளீச்சிங் பவுடர் போட்டு கழுவிக்கொண்டான்.

அந்த பொன்னாளும் வந்தது , காலையிலே சீக்கிரம் எழுந்து வீதி முக்கு பிள்ளையார் கோவிலுக்கு போய் இனிதா பேரில் அர்ச்சனையெல்லாம் செய்தான் . தன் காதலியை பார்க்கும் ஆவலில் விபூதி என்று நினைத்து குங்குமத்தை வாயில் கொட்டியதெல்லாம் பிள்ளையாருக்கு மட்டும்தான் தெரியும் .

மதியம் 2 மணிக்கு சந்திப்பதாய் முடிவுசெய்து இருந்தனர் . இவனோ காலை 11 மணிக்கே போய் இளவு காத்த கிளி போல பீச்சில் காத்திருந்தான் . அங்கே பல காதலர்கள் தானும் அது போல இன்னும் 3 மணிநேரத்தில் தன் காதலியுடன் குஜாலாக இருக்க போகிறோம் என்கிற ஆவல் அவனுக்குள் அதிகரித்தது .

அந்த கன்னியை(?) சந்திக்கப்போகும் தருணத்தை நினைத்தாலே அவனுக்குள் ஏதோ செய்தது , ஏதோ என்றால் ஏதோ அல்ல இது வேறு ஒரு ஏதோ அதாவது மனசுக்குள் மத்தாப்பு , கண்ணுக்குள் நிலவு போல .( நீங்கள் தவறாக நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல )மணி 2.00 , சென்னை பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம் , எப்படியும் ஒரு நாப்பது பெண்கள் இருந்தனர் .

அவர்களில் அவளை எப்படி கண்டு கொள்வது , கூட்டத்தில் பாதி பெண்கள் ஒரளவுக்கு சுமாராக இருந்தாலும் அதில் பாதி பெண்கள் மகா மட்டமாக இருந்தனர் . மனசுக்கு ஏதோ தவறு நடப்பதாக தோன்றியது .சரி விட்ரா விட்ரா என்று அவளுக்கு போனில் அழைத்தான் , அவள் போனை எடுத்து இருடா ஒரு பத்து நிமிஷம் ரெக்கார்ட் நோட்ல ஸைன் வாங்கிட்டு வந்திடறேன் என்று பதில் வந்தது .

ஐயோ இன்னும் பத்து நிமிடமா மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது . பத்து நிமிடம் மேலும் கற்பனை தொடர்ந்தது .பத்து நிமிடம் கழிந்தது அவள் வந்தாள் . இவனை போனில் அழைத்தாள் , இவனும் பஸ்ஸடாண்டில் இருந்த அந்த மஞ்சள் சுரிதார் பெண்ணிடம் பேசினான் . அவள் அவன் எதிர்பார்த்ததை விட அழகாக இருந்தாள் , ( தேவயானி போல குடும்பப்பாங்காக )இருவரும் கடற்கரைக்கு சென்றனர் . காதலித்தனர் . இப்படியே சில வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டனர் . கணேஷுக்கு வயிறு எரிந்தது . அதன் பிறகு THEY LIVE HAPPILY EVER AFTER தான் .

.........

.......

..........

........

.........

...........

......

.......
..........

...........

.......


இன்னும் என்னங்க கதை அவ்ளோதான் ...... என்னங்க வம்பா போச்சு ...

ஹலோ சார் கதை முடிஞ்சிது கிளம்புங்க .....

என்னது அந்த பொண்ணு அசிங்கமா இருக்கும்னு நினைச்சீங்களா...

யோவ் ஒருத்தன் நல்லாருந்தா உங்களுக்கு புடிக்காதே ....

என்னா வில்லத்தனம்......

அவனே பாவம் பல வருஷத்துக்கப்புறம் ஒரு பிகர உஷார் பண்ணிருக்கான் அதுவும் அசிங்கமா இருக்கணும் நினைக்கிறீங்களே உங்களையெல்லாம் கொண்டு போய் உகாண்டா கருங்குரங்குக்கு கல்யாணம் பண்ணி வச்சு டார்ச்சர் பண்ணனும்யா .
*********************
அவ்ளோதான்பா..... ;-)
******************
பி.கு : இந்தபதிவு ஏற்கனவே வ.வா.ச வில் வெளியானது. இங்கே மீள் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆணிகள் அதிகம். அதனால் இது.

15 November 2008

வாரணம் ஆயிரம் - வீணான உழைப்பு!!


இரண்டு வருட தயாரிப்புக்கு பின் குழந்தைகள் தினமான நேற்று வாரணம் ஆயிரம் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது . இரண்டு ஆண்டுகளாக பலரது உழைப்பையும் கொட்டி படமாக்கி இருக்கக்கூடிய இப்படம் அத்தனை பேரின் உழைப்பையும் மறக்கடிக்க செய்யும் வகையில் மிக மோசமாக வந்திருப்பது வருத்தப்பட வைக்கிறது .

பொதுவாகவே விமர்சனங்களில் திரைப்படத்தின் கதையை எழுதுவதை யாரும் விரும்ப மாட்டார்கள் . இவ்விமர்சனத்திலும் கூட அந்நிலையே . அதற்கு முக்கிய காரணம் இப்படத்தில் கதை என்ற ஒன்று இல்லாது போனதே காரணமாயிருக்கலாம் . இப்படத்தில் கதை என்ற ஒன்று இல்லாமல் , ஒரு தந்தை மகனுக்கிடையேயான சுவாரஸ்யமான சம்பவங்களில் பயணிக்கிறது கதை . புனைவு கதைகளை படமாக்கும் போது எடுத்துக்கொள்ளும் சிரத்தையை விட ஒரு தனிமனிதனது முழு வாழ்க்கையை , அவனது வாழ்வின் மிகமுக்கிய தருணங்களை மூன்று மணிநேரத்தில் ஒரு திரைப்படத்தில் பதிவது மிக கடினமான ஒன்று , அதுவும் சுவாரஸ்யம் குறையாமல் தருவது அதைவிட கடினமானது . இவ்வகை தனிமனித வாழ்க்கையை பதிந்த படங்களில் மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக நாம் கருதும் அட்டன்பரோவின் காந்தி திரைப்படத்தில் கூட விமர்சகர்கள் பல குறைகளையும் மகாத்மாவின் வாழ்க்கையில் இன்னும் பல விடயங்களை தவறவிட்டிருக்கிறார்கள் என்றும் குறை கூறியிருந்தனர் . இது போன்ற திரைப்படங்கள் எடுப்பது மிக கடினமானது , கொஞ்சம் பிசகினாலும் சுவாரஸ்யம் குறைந்து விடக்கூடும் .

இப்படத்தில் நிறையவே பிசகி இருக்கிறது . வதவதவென நிறைய காட்சிகளை சுட்டு தள்ளிஅதை எடிட்டிங் செய்து வெளியிட்டது போல காட்சிகள் அமைந்ததால் கடைநிலை மட்டுமல்லாது முதல்நிலை ரசிகனைக்கூட நெளிய வைக்கிறது இப்படம் .

இத்தனை நாட்களாக கௌதம் மேனனாக இருந்த இப்படத்தின் இயக்குனர் இப்படத்தில் தனது பெயரை கௌதம் வாசுதேவ் மேனன் ஆக்கியிருக்கிறார் , பலரும் இது நியூமராலஜிக்காக மாற்றப்பட்டதாக கருதினாலும் உண்மையில் அவர் இப்படத்தை தன் தந்தைக்காக அர்பணிக்கவே அப்படி ஒரு பெயர் மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறார் . படம் நெடுக சூர்யாவின் முகத்தில் அவரது வாழ்க்கையை பதிய முயன்றிருக்கிறார் . அமெரிக்க பாணியில் படம் எடுக்கும் வித்தை கௌதமிற்கு நன்கு வருகிறது . ஆனால் நாம் பார்க்கும் படம் தமிழ் படம்தானா என சமயங்களில் சந்தேகம் வருமளவிற்கா... ( படத்தை சப்டைட்டில்களுடன் பார்க்கலாம் ... பெருவாரியான வசனங்கள் ஆங்கிலத்தில்... தமிழை கூட ஆங்கிலம் போல் பேசும் கொடுமை வேறு ) . கதை சொல்லும் பாணி தவமாய் தவமிருந்து படத்தில் ஏற்கனவே சேரன் பயன்படுத்திய யுக்திதான் ( படமே தவமாய் தவமிருந்து படத்தின் நகரப்பாணி தழுவல் போலத்தான் இருக்கிறது ... சில விடயங்கள் தவிர்த்து ) . சேரன் காட்டிய தந்தை மகன் உறவில் இருந்த இயல்பு இப்படத்தில் நம்மால் உணர முடியவில்லை , மேல்த்தட்டு தந்தையை உருவகப்பட்டுத்தியதால் இருக்கலாம் . இராணுவ காட்சிகளும் அதற்கு முன் வரும் குழந்தைகடத்தல் மீட்பு காட்சியும் மிக நன்றாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் . அக்காட்சிகளில் தெரிந்த காக்க காக்க கௌதம் மேன்ன் மற்ற காட்சிகளில் காணமல் போகிறார்.

படத்தின் நாயகன் சூர்யா.. படத்திற்காக மிக மிக மித மிஞ்சிய அளவிற்கு உழைத்திருக்கிறார் , அத்தனை உழைப்பு , முடி வளர்த்து , உடல் வளர்த்து , அதை குறைத்து , மீண்டும் ஏற்றி , என படம் நெடுக மிடுக்காக துடுக்காக மென்மையாக மிரட்டலாக அனலாக பல வகைகளில் வருகிறார் படம் முடிந்த பின் அவரது உடற்கட்டு மட்டுமே மனதில் பதிகிறது . நாயகனின் தந்தையாகவும் அவரே .... கரகர குரலில் பேசுகிறார் ... அந்த பாத்திரத்தில் வேறு யாரையாவது நடிக்கவைத்திருந்தால் ந்ன்றாக இருந்திருக்கும் , படம் நெடுக படத்தின் பெரும்பாலான காட்சிகளை அவரே ஆக்கிரமித்தது போல உணர்வு . எரிச்சலூட்டுகிறார் .

படத்தில் மூன்று நாயகிகள் , நாயகனின் அம்மாவாக சிம்ரன் நன்றாக நடித்திருக்கிறார் அலட்டல் இல்லாத நடிப்பு . அது தவிர சமீரா மற்றும் குத்து ரம்யா , சமீரா முகத்தை பார்க்க சகிக்கவில்லை , சமீராவை விட சிறந்த அழகிகளை தியேட்டரிலேயே பார்க்க முடிந்தது , ரம்யாவுக்கு அதிக காட்சிகள் இல்லையென்றாலும் மனதில் நிற்கிறார் அவரது வசனங்கள்தான் கேவலமாக இருக்கிறது ( டப்பிங் படுமோசம் ) . சமீராவை விட சூர்யாவின் தங்கையாக நடித்த பெண்ணுக்கு நல்ல முகவெட்டு மற்றும் உடற்கட்டு .

படத்தின் இசை ஹாரிஸ் ஜெயராஜ் ... தாமரையின் பாடல் வரிகளுக்கு அருமையாய் இசையமைத்திருந்தார் , எல்லா பாடல்களுமே அற்புதம் . அஞ்சலை பாடலுக்கு தியேட்டரே எழுந்து ஆடுகிறது . சபாஷ்.

ரத்னவேலு வின் அபார உழைப்பு படம் நெடுக உணரமுடிகிறது . இந்த படத்தில் மட்டுமே பல வித நிறங்களை பயன்படுத்தியிருப்பார் போல , கால ஓட்டத்தை தனது கேமராவால் அழகாக பதிகிறார் , காட்சி மென்மையாக இருந்தால் இவர் கேமராவும் மென்மையாகி விடுகிறது , காட்சியின் இயல்போடு அவரது கேமராவும் நடித்திருப்பது அருமை. எடிட்டிங்கிற்கு அதிக வேலை இருப்பதால் மானவாரியாக எடிட்டிருக்கிறார்கள் மனதில் ஒட்டவில்லை.

இரண்டு வருட உழைப்பையும் தன் தந்தையின் வாழ்க்கை முழுவதையும் ஒரு மூன்று மணிநேர படத்தில் காட்ட முயன்று அதை ஒழுங்காக காட்ட முடியாமல் போன கௌதம் மேனனை நினைத்து வருத்தமாக இருக்கிறது . இப்படத்தை அவர் அவரது தந்தைக்காக எடுத்திருக்கலாம் . இப்படத்தில் அவர் காட்டியிருந்த இராணுவ காட்சிகளில் தெரிந்த வசீகரம் நிச்சயம் எதிர்காலத்தில் அவரிடமிருந்து உலகம் பாராட்டும் இந்திய படத்தை எதிர்பார்க்கலாம் . (அதையாவது ஆங்கிலபடங்களில் இருந்து சுடாமல் எடுத்தால் சரிதான் )

சூர்யாவைப்போன்ற ஒரு நல்ல உழைப்பாளியின் உழைப்பை , தனது திரைக்கதை சொதப்பலால் வீண்டித்திருக்கிறார் கௌதம் மேனன் என்றுதான் இப்படத்தை பற்றி இரண்டே வரிகளில் சொல்ல இயலும் . ஒரு அப்பா-மகன் கதையில் மொத்த கதையும் அவர்களிருவரை சுற்றி நடக்காமல் ஆட்டோகிராப் பாணியில் அடுத்தடுத்த காதல்களை செருகியதால் படத்தின் முக்கிய பிரச்சனை நீர்த்து போகிறது .

இதுவரை வந்த கௌதம் மேனன் படங்கள் அனைத்தின் சாயலும் ஒவ்வொரு காட்சியிலும் இருப்பது படத்தின் மிகப்பெரிய பிரச்சனை , படம் பார்க்கும் பார்வையாளன் டே இதத்தானடா அந்த படத்திலயும் காட்டினனு சொல்ல ஆரம்பித்து விடுகிறான் .

படத்தின் பிளஸ் - காட்சியமைப்பு ,சூர்யாவின் நடிப்பு , கேமரா , பாடல்கள் .

படத்தின் மைனஸ் - திரைக்கதை , பிண்ணனி இசை , சமீரா , மனதில் ஒட்டாத காதல் காட்சிகள் .

மிக எளிமையாய் ஆர்ப்பாட்டமில்லாமல் எடுக்க வேண்டிய ஒரு படத்தை இத்தனை செலவுகள் செய்து எடுத்திருக்க வேண்டுமா....?
உயர்தட்டு மக்களுக்காக மட்டுமே படம் எடுக்கும் திரு.கௌதம் மேனன் , உங்கள் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் நகரங்களில் மட்டுமே படத்தை வெளியிட படமெடுப்பதில்லை , அது சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருக்கும் மக்களுக்குமானது ...... அதை உங்களது அடுத்ததடுத்த படங்களில் மனதில் வையுங்கள்....
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அவ்ளோதான்பா.... ;-)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

13 November 2008

சட்டக்கல்லூரி மாணவர்களின் வன்முறை


இந்தியாவின் வருங்கால தூண்களாம் இவர்கள்... இவர்கள் கையில் சட்டத்துறையை கொடுத்தால் நாளை இந்தியாவின் நீதித்துறை என்ன கதியாகும் . இவர்களுக்குள் இத்தனை வன்முறை எங்கிருந்து வந்ததது . பொதுமக்களும் பத்திரிக்கையாளர்களும் போலீசும் பார்த்துக்கொண்டிருக்க ஒரு சக மாணவனை ஈவிரக்கமின்றி அடித்து அம்மாணவன் சுயநினைவின்றி கிடக்கையிலும் கூட அவனை விடாமல் இரும்பு கம்பிகளாலும் உருட்டுக்கட்டைகளாலும் அடிக்கும் அளவுக்கு ஏன் இந்த வன்முறை ... அம்மாணவர்களின் கண்களில்தான் எவ்வளவு வன்மம் ... இதை ஏன் சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்த போலீசும் பார்த்துக்கொண்டிருந்தது , அக்கல்லூரி முதல்வர் அந்நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் ...

இப்படி பல கேள்விகள் நேற்று தொலைக்காட்சி செய்திகளை பார்க்கையில் மனதில் எழுந்தது , சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் இரண்டு பிரிவினரிடையே நடைபெற்ற இந்த வன்முறையில் இரண்டு மாணவர்கள் இன்று உயிருக்கு போராடி வருகின்றனர் , ஒரு மாணவனின் காதறுந்து கிடக்கிறான் .

பொதுவாகவே சட்டக்கல்லூரி மாணவர்களிடையே இது போன்ற கோஷ்டி மோதல்கள் சகஜமாக நடப்பது என்றாலும் நேற்றுதான் முதல்முறையாக அது செய்தி ஊடகங்களின் வழியே வெளி வந்திருக்கிறது .

கடந்த 30 ஆம் தேதி ஒரு முக்கிய தேசிய தலைவரின் பிறந்தநாள் விழாவிற்கு போஸ்டர் ஒட்டும் போது தங்களது கல்லூரியின் பெயரை ( டாக்டர்.அம்பேத்கர் சட்டக்கல்லூரி ) என்று முழுமையாக போடாமல் வெறும் சென்னை சட்டக்கல்லூரி என்று போட்டதாகவும் அதனால் இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் மூன்றாம்ஆண்டு மாணவர்களுக்கும் இடையை மோதல் இருந்ததாக கூறப்படுகிறது . இவ்விடயம் நேற்று உச்சத்தை அடைந்து இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் பலர் நேற்று தேர்வெழுத வந்த மூன்றாமாண்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர் . அதில் பல மாணவர்களும் தப்பி ஓடிவிட நான்கு மாணவர்கள் மட்டும் இந்த வெறி கும்பலிடம் மாட்டிக்கொண்டதாக தெரிகிறது . அந்த நால்வரை இரும்புகம்பி,கற்கள்,கத்தி, மண்வெட்டி முதலான ஆயதங்களோடு தாக்கியுள்ளனர் . இச்சம்பவம் நடக்கையில் இப்படி ஒரு பிரச்சனை இன்று ஏற்படுமென தெரிந்து அங்கு வந்திருந்த போலீசார் அந்த மோதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது , அதிர்ச்சயளித்தது .

ஆனால் பொதுவாகவே சட்டக்கல்லூரிகளில் நடக்கும் இது போன்ற பிரச்சனைகளில் தலையிடும் போலீசார் மீதே பிரச்சனையை திசைதிருப்பி விடும் மாணவர்கள் நம் சட்டக்கல்லூரி மாணவர்கள் . இப்பிரச்சனையில் போலீசார் நுழைந்து அதை தடுக்க முயன்றிருந்தால் நமது பத்திரிக்கையாளர்களும் போலீசார் மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் என்று செய்தியை மாற்றியிருப்பார்கள் . சட்டக்கல்லூரி மாணவர்களை அடித்தால் நமது வழக்கறிஞர்களும் ஐயகோ என முறையிட்டு நீதிமன்ற வாயிலில் கொடி பிடித்து உட்கார்ந்து கொள்வர் .

இரண்டாவது இப்பிரச்சனை சாதீயரீதியிலான மோதலாகவும் இருக்கிறது . மாணவர்களிடையே எப்படி பரவியது இச்சாதிவெறி . இன்று சட்டக்கல்லூரிகளில் பயிலும் பெரும்பாலான மாணக்கர்கள் தென்தமிழகத்தை சேர்ந்தவர்களும் ஆதிதிராவிட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருமே ஆவர் . இவர்களில் பலருக்கு பின்னும் பல சாதீய அமைப்புகளின் பின்புலம் இருப்பது அதிர்ச்சியான தகவல் .

நேற்று உண்டான மோதல் கூட ஆதிதிராவிட மாணவர் விடுதியில் தங்கிப்படிக்கின்ற மாணவர்களாலேயே நடத்தப்பட்டதாக தெரிகிறது . இப்பிரச்சனை மேலும் வலுவடையும் பட்சத்தில் இது சாதிப்பிரச்சனையாகவும் உருவாகலாம் . தென்தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று சாதிக்கலவரங்கள் நடைபெறுகிறதென்றால் அதற்கு அவர்களது அறியாமையும் படிப்பறிவின்மையுமே காரணமாக கருதலாம் . ஆனால் இன்று சட்ட கல்லூரியில் பயிலும் இம்மாணவர்களிடையே நிலவும் இச்சண்டைகளும் மோதல்களும் இச்சாதிக்கலவரங்களின் காரணிகளின் ஆணிவேர் வேறெதுவோ என எண்ணத்தூண்டுகிறது .

நாளைய வழக்கறிஞர்களாக ஆக இருக்கும் இம்மாணவர்கள் இப்படி சட்டத்தை சிறிதும் மதிக்காமல் , போலீஸ் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் ஒரு சக மாணவனை இது போல அடித்து நொறுக்குவதை காணும் போது , நமது நீதித்துறையின் எதிர்காலத்தை நினைத்து பார்த்தாலே இருள் சூழ்கிறது .

நமது அரசு இப்படிப்பட்ட பிரச்சனைகளில் தலையிடாமல் மெத்தனமாக இத்தனை ஆண்டுகளாகவும் இருந்து வந்திருக்கிறது . என்றாவது ஒரு நாள் இது போன்ற பிரச்சனையால் ஒரு உயிரிழப்பு ஏற்படும் வரை அது தொடருமோ என்றே தோன்றுகிறது . நமது ஊடகங்களும் கூட உயிரிழப்பு என்ற ஒன்று ஏற்படாதவரை இது போன்ற பிரச்சனைகளை கண்டு கொள்வதே இல்லை . ராகிங் பிரச்சனையிலும் கும்பகோணம் பிரச்சனையிலும் உயிரிழப்புகள் ஏற்ப்பட்ட பிறகே நம் அரசு இதை தடுக்க முன்வந்தது . இப்பிரச்சனையிலாவது இது போன்ற ஒரு சாவு நிகழ்வதற்கு முன் இப்பிரச்சனையில் தமிழகஅரசு தலையிட்டு தீர்வு காணவேண்டும். கல்லூரிகளின் விதிமுறைகள்

இந்நிகழ்வை வேடிக்கைப்பார்த்துகொண்டிருந்த போலீசுக்குத்தான் _______ என்றால் பொதுமக்களாவது கண்முன்னே நிகழும் கொடூரத்தை தடுக்க முயன்றிருக்கலாம் . எது நடந்தாலும் அதை கூடி நின்று சுற்றிப்பார்த்துவிட்டு நகர்ந்து செல்லும் மக்களும் கொஞ்சம் மாறவேண்டும் . சாதீகள் இல்லா சமுதாயம் அமையும் வரை இது போன்ற சாதீய வன்முறைகளும் கலவரங்களும் இருந்து கொண்டுதானிருக்குமோ ...?

10 November 2008

சென்னை பதிவர்கள் சந்திப்பு - 15.11.2008



என் இனிய வலைத்தமிழ் மக்களே,..

உங்கள் பாசத்திற்குரிய அதிஷா மீண்டும் மெரினா பீச்சின் சுண்டல் பாக்கட்களுடனும் மாங்காய் கீத்துக்களுடனும் வந்திருக்கிறேன்.. ( டே நாயே மேட்டர சொல்லு என்று நீங்கள் கேட்பது புரிகிறது ) .

வெகு நாட்களாக சென்னையில் பதிவர்சந்திப்பு நடத்தலாமென ஒரு யோசனை இருந்தாலும் , அதற்கு சரியான நேரம் வாய்க்க காத்திருந்தோம் . ஏனென்றால் பல புதியபதிவர்கள் மற்றும் பிரபல பதிவர்கள் ஒரு சந்திப்பை எதிர்நோக்கி இருப்பது தெரிகிறது . விரைவிர் பிரமாண்டமான பதிவர்பட்டறை அதி விரைவில் நடக்க இருக்கும் சூழலில் , இப்பதிவர் சந்திப்பு மிக முக்கியத்துவம் பெருகிறது .

அதனால் இந்த வார இறுதியில் சென்னையில் ஒரு மாபெரும் பதிவர் சந்திப்பை நடத்த பல மூத்த பதிவர்களின்(அது யாருனுலாம் கேட்டா வீட்டிற்கு ஆட்டோ வரும் ) ஆலோசனைப்படி முடிவு செய்யப்பட்டுள்ளது . இந்த சந்திப்பில் பழம்பெரும் பதிவர் '' பாரி அரசு ''( வரும்போது பழம் கொண்டு வரவும் பெற்றுக்கொள்வார் ) . இவர் சிங்கப்பூரிலிருந்து எழுதிவரும் பதிவர் . நம்மை காண அங்கிருந்து வந்திருக்கிறார்.

இது தவிர நண்பரும் பிரபல பதிவர் மற்றும் எழுத்தாளருமான திரு.பரிசல்காரன் அவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார் .

மேற்ச்சொன்ன பதிவர்கள் தவிர இன்னும் பல பிரபல பதிவர்கள் மற்றும் சில எழுத்தாளர்களும் கலந்து கொள்ளுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது .
இச்சந்திப்பில் அனைத்து பதிவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . புதிய பதிவர்கள் தயக்கமின்றி இச்சந்திப்பில் கலந்து கொண்டு பதிவுகள் குறித்த சந்தேகங்களை கேட்டு பயன்பெறலாம் .

பதிவர்கள் தவிர பதிவுலக வாசகர்களும் கலந்துகொண்டு தங்கள் மனம் விரும்பும் பதிவர்களை நேரில் சந்தித்து உரையாற்ற இது ஒரு பெரிய வாய்ப்பாக அமையும் .

இதுதவிர இச்சந்திப்பில் இதுதான் பேசவேண்டும் என்கிற எந்த விடயமும் குறிப்பாக இல்லை , எது வேண்டுமானாலும் பேசலாம் , விவாதிக்கலாம் .

சந்திப்பு குறித்த விபரங்கள் :

சந்திப்பு தேதி : 15-11-2008 சனிக்கிழமை

நேரம் : மாலை 5.30 லிருந்து - 8.30 வரை (அல்லது அதற்கு முன்பும் முடியலாம் )

இடம் : மெரினா பீச் காந்திசிலை பின்புறம் உள்ள தண்ணீரில்லாத குட்டை அருகில் .
*இச்சந்திப்பு அனைவருக்குமான சந்திப்பு அதனால் யார்வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
வாங்க மக்கா மெரினாவில் சந்திக்கலாம்...

04 November 2008

ஒரு கேரளஅழகியும் ஒரு ரயில்பயண விபரீதமும்....




இன்னும் ரெண்டு நிமிடம்தான் இருந்தது அந்த டிரெயினை பிடிக்க , ஒரு கையில் சரவணாஸ்டோர்ஸ் பை. அது நிறைய விளையாட்டு சாமான் , இன்னொரு கையில் சூட்கேஸ் , இரண்டையும் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு ஒடினேன் .

வண்டி எண் 6704 சென்னையிலிருந்து மங்களூர் வரை செல்லும் விரைவுவண்டி 3ஆவது பிளாட்பாரத்தில் இருந்து உடனடியாக புறப்படும் என இந்த அறிவில்லாத அறிவிப்பாளர் வேறு ஒலிப்பெருக்கியில் அலறினாள் . அறிவுகெட்டவளே இன்னும் ஒரு ஐந்து நிமிடம் பொறுடி என்று முனகியபடியே ஓடினேன் .

மனது திக்கு திக்கு என்று அடிக்க , காலையில் போட்ட பேர் அண்டு லவ்லி முகத்தில் வியர்வையில் என் அழகை அழிந்து அழித்துகொண்டிருந்தது , ஸ்போர்ட்ஸ் பர்பூயும் வேறு வியர்வையில் கரைகிறது , கடுப்பாய் இருந்தது , ஆசையாசையாய் போட்டுக்கொண்டது , வீணாய்ப்போகிறதே என்கிற மன உளைச்சல் வேறு . காலையில் குடித்த காபி வேறு எதுக்களிக்கிறது.

அப்படா ஒரு வழியாய் ஜி7 பெட்டியை பார்த்துவிட்டேன் , நிம்மதி பெருமூச்சு விட மூச்சை உறிஞ்சினால் அதற்குள் வண்டி கிளம்பி விட்டது . வண்டி நகர நகர அதில் ஏறி , 25 ஆம் எண்ணை தேடினேன் , அதில் ஒரு அழகிய யுவதி அல்லது டக்கர் ஃபிகர் அல்லது செம மாலு அமர்ந்திருந்தது அல்லது அமர்ந்திருந்தாள் . (என்ன தவம் செய்தேன் ) . அவளை பார்த்ததுமே தெரிந்து போனது மலையாளி தான் என்று . அவளை பார்த்த சில விநாடிகளில் அதை ஊகித்து கொண்டேன் .

அட நீங்கள் வேறு முகத்தை பார்த்துதான் தெரிந்துகொண்டேன் , நீங்கள் நினைப்பது போல் அல்ல , நெற்றியில் சந்தனமும் , ஈரத்தலையில் போட்ட தேங்காய் எண்ணையும் காட்டிக்கொடுத்தது .

அவளை பார்த்ததும் , அவளது இருக்கைக்கு மேலே வலது மூலையில் இருந்து சிறிய இடத்தில் எனது இரண்டு பெரிய பைகளையும் வைத்துவிட்டு , விறுவிறுவென பாத்ரூம் சென்று முகத்தை அழகாக்க முயன்றேன் . பல முறை முயன்றும் தோல்விதான் , இந்த வழுக்கை வேறு எவ்வளவோ முயன்றும் மறைய மாட்டேன்கிறது . ஒரு வழியாய் சுமாராய் (நிஜமாகவே சுமாராய் ) அழகாகினேன் .

அந்த கோச்சில் மொத்தமாய் பத்துபேர்தான் இருந்தனர் . சிறப்புரயில் என்பதால் யாருக்கும் தெரியவில்லை போல .

''எக்யூஸ்மீ .. தி இஸ் மை சீட் '' என்று புன்னகைத்தேன் .
''ஓஓ ஸாரி , ப்ளீஸ் '' என்று எழுந்து எதிர் பக்கத்தில் அமர்ந்தாள் .

''ஆர் யூ கோயிங் டூ மங்களூர் ''

''ம்ம் '' என்றபடி ஜன்னலை முறைத்தாள் .
அதற்குள் ஒரு 50 வயது மதிக்கத்தக்க பெரியவர் வந்து அவள் பக்கத்தில் அமர அவளோ அச்சா இயாளு என ஏதோ மலையாளத்தில் கூற அவர் என்னைப்பார்த்து புன்னகைத்தார் . எனக்கு ஒரு புண்ணாக்கும் புரியவில்லை . அந்தாள் கட்டாயம் அவள் அப்பனாகத்தான் இருக்கவேண்டுமென தீர்மானித்துக்கொண்டேன் . மலையாளீஸ் கிட்ட எப்படி பேசறது , எனக்கு இங்கிலீசு கூட சுமார்தான் .
ஸோ நான் எப்போதும் போல ஆனந்த விகடனை பிரித்து படிப்பதுபோல திறந்து வைத்துவிட்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன் , நல்ல உடல்வாகு , அழகிய சிரிப்பு , சிரித்தால் குழிவிழும் கன்னம் , மூக்குத்தி , காதில் ஜிமிக்கி , பியூட்டி பார்லருக்கு போகிறவள் போல மேலுதடுக்கு மேல் பூனை முடிகள் இல்லை , புருவத்தை வேறு செம்மையாக்கி செமயாய் இருந்தாள் . அவளது அப்பாவை வைத்துக்கொண்டே அவளை அதிகம் ரசிக்க மனம் இடம் தரவில்லை , பார்ரா உனக்கும் வயசாகி ஒன்பொண்ணோட இதே மாதிரி போறப்ப ஒம்பொண்ண எவனாவது இப்படி சைட் அடிப்பான் என்று மனது பயமுறுத்தியது . புத்தகத்தில்(ஆமா ஆனந்த விகடன்தான் ) மூழ்கினேன் , எனது நண்பனின் கவிதை வந்திருந்தது .
எச்சில் காய்ந்திடாத முத்தத்தின்
ஈரமாய்
உறக்கத்தின் ஆழ்நிலையில் ஊட்டிய‌
உணவாய்
புணர்தலின் முடிவிலான இயக்கத்தின்
நனைதலாய்
தூரலிட்டுப் போயிருக்கிறது
ள்
ளி
வு

ழை

ஒரு எழவும் புரியவில்லை , வெளியில் மழைவேறு . கொஞ்சம்கூட புரியாத மாதிரி எழுதினாதான் கவிதையோ என நண்பனை நாலு நல்ல வார்த்தையில் வைந்தேன் . இவனோடெல்லாம் எப்படி நான் நட்பு வைத்திருக்கிறேன் என எண்ணிக்கொண்டேன் . மனசாட்சி தடுத்தாலும் நடுநடுவே அந்த கேரளத்து பைங்கிளியாளை காணத்தவறவில்லை .
''எக்ஸ்க்யூஸ்மீ !! ஈஸ் திஸ் ஜி7 '' ஜெயம் ரவியை நினைவுபடுத்தும் தோற்றம் கொண்ட ஒருவன் என்னிடம் கேட்க , நிமிர்ந்து பார்த்தால் ஆள் 6.2 இருப்பான்போல , MBA - MASTER OF BAD HABITS என்ற வாசகத்துடன் டிஷர்ட்டும் லெவி ஜீன்ஸுமாய் மிக மேன்லியாக இருந்தான் . நான் முறைத்தபடியே
''எஸ் '' என்றேன் . அழகான ஆண்களை கண்டாலே வயிற்றுக்குள் எரிமலை .
''ஐஆம் 24 '' என்றபடியே எனது விளையாட்டு சாமான் பையை உள்ளே வைத்து தள்ளி அவனது பேக்பேக்கை திணித்தான் . எனக்கு அவனது அழகின் எரிச்சல் வேறு இதில் விளையாட்டு சாமானை உள்ளே அழுத்தியதில் கோபம் தலைக்கேறியது , திட்டிவிட்டேன் .

''சாரி சார் எனக்கு தெரியாது அதான் . மன்னிச்சிருங்க ப்ளீஸ் '' என்று கெஞ்சினான் . எனக்கு ஹாஹாஹா என சிரிக வேண்டும் போலிருந்தது . பின்னே அவனை ஜெயித்துவிட்டோம் என்கிற மமதை இருக்காதா ! ! அதுவும் இதை பார்த்துக்கொண்டிருந்த அந்த கன்னிமான் என்னை பார்த்து சிரித்தால் வராத பின்னே .

வண்டி மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது , இந்த வேகத்தில் போனால் கோவையை அடைய எப்படியும் 10 மணி நேரம் ஆகிவிடும் போலிருந்தது .

''சார் வணக்கம் , நீங்க மங்களூரா !! '' ஜெயம் ரவி , அவள் அப்பாவிடம் கொக்கி போட்டான் .

''ஆமா சார் , நீங்க?'' ... அடப்பாவி நீங்க தமிழ்தெரிஞ்ச மலையாளியா என்று மனம் கொந்தளித்தது.

''நானும் அங்கதான் போறேன் , இது உங்க பொண்ணா சார் ''

''ஆமா சார் , தீபாவளிக்கு அவங்க பாட்டி வீட்டுக்கு கொண்டு போய் விடப்போறேன் ''

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது , அந்த வித்தையெல்லாம் ஏன் எனக்கு கைவர மாட்டேன்கிறது என என்னை நானே திட்டியபடி ஆனந்தவிகடனில் கண்ணையும் அவர்களது பேச்சில் காதையும் வைத்திருந்தேன் .

''சார் நீங்க பெரம்பூரா '' தூண்டில் மேலும் தொடர்ந்தது . ஆண்டவா அவளுக்கு அவனை பிடிக்காமல் போகட்டுமே.

''ஆமா சார் எப்படி கண்டுபுடிச்சீங்க ''

''சார் நீங்க அங்க ரயில்வேஸ்டேஷன் பக்கத்தில டீக்கடை வச்சிருக்கீங்களே , நான் பாத்திருக்கேன் சார் ''

'' அட ஆமா சார் ,''

''நேத்து நைட்டு சென்னை ஃபுல்லா செம டிராபிக் சார் , நைட் பிளைட்ட மிஸ்பண்ணிட்டேன் ''

அவர்கள் ரெண்டு பேரும் பேசும் போது இவளுக்கு என்ன வந்தது , அவளுமா அவனுடன் பேச வேண்டும்

''ஆமாங்க நான் கூட காலேஜ்லருந்து வரப்போ ரொம்ப லேட் ஆகிருச்சு , கத்திப்பாரால மாட்டிகிட்டேன் ''

இவளுக்கு என்ன பெரியவங்க பேசும் போது இடையில் பேச்சு வேண்டி கிடக்கு . அதிகப்பிரசங்கி .

''அட எந்த காலேஜ்,.... எஸ் ஆர் எம்மா''

''ஆமாங்க .. எப்படி கண்டுபுடிச்சீங்க ''

''சும்மா ஒரு கெஸ் பண்ணேங்க '' என்று புன்னகைத்தான் . சிரிக்கும் போது மேலும் அழகாய் இருந்து தொலைத்தது அந்த ராஸ்கலின் முகம் . அதற்கு நடுவில் அவளது அப்பா , சாப்பாடு வாங்க கிளம்பினார் . இப்போதுதான் போக வேண்டுமா.. அவன் அவளிடம் மிக ஜாலியாக சங்கோஜமில்லாமல் கண்டதையெல்லாம் பேசினான் வழிந்தான் . பெண்களென்றால் ஏன்தான் இப்படி அலைகிறார்களோ . ஊர் உலகத்தில் பெண்களா இல்லை . ச்சீ என்ன உலகமடா இது .

அப்பா திரும்பி வந்தார் . '' என்ன தம்பி சாப்படறீங்களா '' என்று ஒரு வடையை திணித்தார் அவன் கைகளில் , அந்த அல்பமும் அதை வாங்கி தின்றது . ''தம்பீ எங்க வேலை செய்றீங்க ''

''நான் ஒரு மார்க்கெட்டிங் எக்ஸுகியூட்டிவ் சார் , அப்புறம் கதாசிரியர் ''

என்னது இந்த நாய் கதை எழுதறவனா , கிழிந்தது லம்பாடி லுங்கி , அதை அவன் சொன்னதும் அப்பனுக்கும் மகளுக்கும் தான் என்ன ஒரு மலர்ச்சி , அவள் ஆர்வமாய் ,

'' நீங்க கதைலாம் எழுதுவீங்களா , உங்க கதைலாம் எதுல வருது ''

'' குமுதம், விகடன்ல வரும் , அப்புறம் சினிமாக்கும் கதை எழுதறேன் ,அப்புறம் கோமதிஆன்லைன்.கோம்னு ஒரு வெப்சைட் கூட இருக்கு , இந்த வாரம் விகடன்ல பாக்கலையா காயாத காயங்கள்னு ஒரு கதை வந்திருக்குமே ''

''ஆமாங்க நான் படிச்சேன் , சிம்ப்ளீ சூப்பர்ப் , நீங்கதான் அந்த கோமதியா , நான் பொண்ணுனு நினைச்சேன் '' இவள் அவனிடம் வழிய துவங்கியிருந்தாள் .

'' தம்பீ , கதைலாம் எப்படி எழுதறீங்க , உங்க கதைலாம் நானும் படிச்சிருக்கேன் , ரொம்ப இயல்பா இருக்கும் , உங்களோட முத்தத்தின் முத்தம் கதை படிச்சி கதறி அழுதிருக்கேன் ''

எனக்கு பற்றி கொண்டு வந்தது , ______________ ( கெட்ட வார்த்தை ) இவன் கதைலாம் அஞ்சுகாசுக்கு தேறாது இவன இப்படி புகழறானுங்களே என்று எரிச்சலாய் இருந்தது , அதனால் பாத்ரூமில் சென்று மறைவாய் ஜன்னலுக்கு புகை போவது போல ஒரு தம்மை போட்ட பின்தான் எரிச்சல் குறைந்தது . நான் தம்மடிக்கும் கேப்பில் அந்த டாபர் நன்கு பழகியிருந்தது .
''சார் கதை எழுதறது ரொம்ப ஈஸி , இதோ பாருங்க இப்போ நாம பேசறதையே ஒரு கதையாக்கிரலாம் ''

''எப்படிங்க '' அதிகப்பிரசங்கி முந்திக்கொண்டு கேட்டது , கண்கள் விரிய , அடடா அந்த கண்களுக்குத்தான் என்ன ஒரு அழகு .

''இதோ உங்களாட்டம் ஒரு பேமிலி , அவங்கள ரயில்ல மீட் பண்ற ஒரு வழிப்போக்கன் ,, அவன் இவங்களோட நல்லா பழகறான் , இதோ இப்போ நான் சொல்ற மாதிரி கதை பத்திலாம் சொல்றான் , அவன் வாங்கி தர பிஸ்கட்ட வாங்கி அவங்க சாப்பிடறாங்க , சாப்பிட்டவங்களுக்கு ஒன்னும் ஆகல ஆனா அந்த கதாசிரியனோட பொருளலாம் காணம போயிடுது அவன் மயங்கி கிடக்கறான் , ஊரு வருது அவங்க கூட வந்த பேமிலய காணல ''

''அடேங்கப்பா சூப்பர் தம்பி , கதை அதுல ஒரு கருத்து , அதுவும் டிரெயினில தெரியாதவங்க குடுக்கறத சாப்பிடக்கூடாதுனு ''

இதெல்லாம் ஒரு கதை இதற்கு ஒரு சூப்பர் வேறு , நல்ல வேளை அதற்குள் சேலம் வந்திருந்தது , இவனே போய் மூவருக்கும் காபியும் பிஸ்கட்டும் வாங்கிவந்தான் , அவர்களோ என்னங்க நீங்க நீங்களே பிஸ்கடு குடுத்து ஏமாத்தற கதை சொல்லிட்டு வாங்கி தரீங்க வேணாங்க என்று மறுக்க , இவனோ சிரித்து விட்டு சார் குடிங்கசார் நானே சொல்லிட்டு நானே பண்ணுவேனா என்று கெஞ்சி அவளிடம் கொஞ்சி அதை கையில் திணித்தான் , என்னை பார்த்தவன் இளக்காரமாய் ஒரு பிஸ்கட்டை எடுத்து என்னிடம் நீட்டி '' சார் , ஒரு பிஸ்கட் சாப்பிடுங்க '' என்றான் , நான் வெறுப்பாய் வேண்டாம் என்றேன் , அவனோ விடாது சார் ப்ளீஸ் ப்ளீஸ் என்று கெஞ்சினான் ,

அதற்குள் அந்த பெண் வேறு '' எடுத்துக்கோங்க '' என்று ஒரு மெல்லிய புன்னகையுடன் கூற அதையும் அவளது புன்னகையையும் எடுத்துக்கொண்டேன் , அவளது உதட்டின் கீழே ஒட்டியிருந்த பாலின் ஆடை அத்தனை அழகாய் இருந்தது . கடித்து தின்ன வேண்டும் போலிருந்தது அந்த பாலாடையை , அதனிடத்திலிருந்தே .

அவன் மேலும் பேசிக்கொண்டே வந்தான் , அவளிடம் நான் ஒருவன் இருக்கிறேன் என்பது கூட கவனிக்காமல் டிரெயின் பற்றிய ஒரு செக்ஸ் ஜோக் வேறு , அவள் தந்தை இல்லாத போது பேசி போன் நம்பர்(பர்சனல் மொபைல்நம்பராம் கூட வாங்கி விட்டான் . எனக்கு மனம் கொந்தளித்து கொப்புளித்தது . பாவி பாவி என்று வைந்து கொண்டே வந்தேன் மனதுக்குள் ,

வண்டி ஈரோட்டை தாண்டியபோது , மெல்லிய உறக்கம் வர கண்ணயர்ந்தேன் .

'' கோவை சந்திப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது , கோயம்புத்தூர் ஜங்சன் ஆப் கா சுவாகத் ஹை , வெல்கம் டூ கோயம்புத்தூர் ஜங்சன் '' அதே அறிவில்லாத அறிவிப்பாளர் , கோவை ரயில் நிலையத்தில் என் தூக்கம் கலைத்தாள் .
விழித்து பார்த்தாள் , அவர்கள் இருவரும் ஆழ்ந்து உறங்கியபடியிருக்க , அவர்களது பெட்டியையும் அந்த கன்னிமானின் காதிலிருந்த ஜிமிக்கியையும் காணவில்லை , கழுத்திலிருந்த செயினையும் காணவில்லை , மோதிரம் இல்லை , நகையில்லாமல் கூட அழகாகத்தான் இருந்தாள் . அவர்களது பெட்டி இல்லை , எனது பெட்டி இருந்தது , சரவணா ஸ்டோர்ஸ் பை இருந்தது , வண்டி கிளம்ப துவங்கியிருந்தது , ஒடும் வண்டியிலிருந்து இரண்டு கைகளிலும் பைகளுடன் குதித்து இறங்கினேன் . அப்படா ஊர் வந்துவிட்டதென . நாளை தீபாவளி .

கோவை காற்றுதான் எத்தனை சுகமானது . இதமாய் குளிர்ச்சியாய் இருந்தது . ஹாஹாஹா என்று சிரிக்க வேண்டும் போலிருந்தது .

ரஜினிகோந்துவிற்கு தற்குறிதமிழனின் கடிதம் !!



பெருமதிப்பிற்கும் பேரன்புக்கும் உரித்தான அண்ணாச்சி ( ஐய்யயோ அது சரத்தா ) , சூப்பர்ஸ்டார் ரஜினிகோந்துக்கு வணக்கம் ,

என்னது கோந்தானு கேக்காதீங்க , கோந்தும் சனியனும்தான் எதுலயாவது ஒட்டிகிச்சுனா விடவேவிடாது , தமிழ்நாட்டோட ஒட்டிகிட்டு அத விடாம புடிச்சுகிட்டு இருக்கறதால அப்படிச் சொன்னேன்.கிகிகி உங்கள போயி சனியன்னு சொல்ல முடியுமா!!

உங்களுக்கு கடிதம் எழுதணும்னு ரொம்ப நாளா ஆசைங்க , ஆனா பாருங்க நீங்க எந்திரன்ல பிஸியாகிட்டீங்க , யார்ரா இவன் நம்மளுக்கு கடுதாசி போடறானு நினைக்காதீங்க , உங்க படத்த மொத நாளே மொத வரிசல 2 ரூபா டிக்கட்ட 20 ரூவாவுக்கு வாங்கி பாத்தவனுங்க , அது மட்டுமில்லாம உங்க கட்டவுட்டுக்கு பாலும் பீரும் ஊத்தி , உங்க மேல வெறி புடிச்சு பல சண்டைலலாம் கலந்துகிட்டு நிறைய விழுப்புண்ணுலாம் வாங்கின ஒரு மட்டமான லோக்கல் ரசிகனுங்க , ஆமாங்க உங்க ரசிகருங்க மன்றத்திலயும் உறுப்பினரா இருந்தேனுங்க முந்தாநாள் வரைக்கும் .

சரி இப்போ எதுக்கு இவ்ளோ அர்ஜன்டா ஒரு கடுதாசினு நீங்க கேக்கறது தெரியுது , அது ஏன்னா இத்தினி நாளா , நீங்களும் அரசியலுக்கு வருவீங்க வருவீங்கனு , புரைக்கு அலையற நாயாட்டம் நாக்க தொங்கப்போட்டுகிட்டு காத்துக்கிட்டு கெடந்தோமுங்க , நாங்களும் கெடந்தோம் கெடந்தோம் .... ம்ம் எங்க பேக்கு பஞ்சரானதுதான் மிச்சம் .

நீங்க 15 வருஷத்துக்கு முன்னால என்ன சொன்னீங்க , முத்து படம் முடியட்டும் சொல்றேன்னீங்க , அப்புறம் அருணாச்சலம் முடியட்டும்னீங்க , அப்பறம் பாபான்னீங்க , அப்புறம் படையப்பானீங்க , அப்புறம் சந்திரமுகி முடியட்டும் பாக்கலாம்னீங்க இதோ முந்தாநாள் எந்திரன் முடியட்டும்ங்கறீங்க , வுட்டா ஒவ்வொரு படம் வரப்பவும் இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி நீங்களும் நல்லா காசு பாத்துட்டீங்க , உங்க நம்பி நாங்களும் உங்க படம் வரும்போதுலாம் , போஸ்டர தின்னு பேதியான கழுதையாட்டம் உங்க மூஞ்சியவே பாத்துக்கிட்டு உக்காந்துருந்தோம் . படம் வரிசை பிழையா இருந்தா மன்னிச்சிருங்க...
நீங்க மட்டும் ஒரு வார்த்தை , தம்பிங்களா எனக்கு அரசியல் தெரியாது , நான் அதுல நுழைய மாட்டேனு ஒரு வார்த்தை சொல்லிட்டா , நாங்கபாட்டுக்கு இருக்கவே இருக்காரு விஜயகோந்து அவருகிட்ட ஒட்டிக்குவம்ல , அத வுட்டுட்டு நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது ஆனா வரப்ப வருவேன்னு 15 வருஷமா சொல்லிட்டு இருக்கீங்க , விட்டா இன்னும் 10 வருஷத்துக்கு அதையே சொல்லிட்டு திரிவீங்க போலருக்கே . எங்களுக்கும் வயசாகுது சாமீ நாங்களும் நாலு காசு சாம்பாதிக்கணும்ல .

என் பிரெண்டு கேட்டான் , ரஜினி அரசியலுக்கு எதுக்கு வரணும்னு நினைக்கிறனு , இங்க இருக்கற மத்த கட்சிலருந்து ஒரு மாற்றம் வேணும் , எம்.ஜி.ஆருக்கு அப்புறம் அந்த மாஸ் உங்க கிட்டதான் இருக்குனும் , நீங்க வந்தாலாவது இந்த லூசு ஜனங்களுக்கு எதுனா செய்ய மாட்டிங்களானு ஒரு ஏக்கம்தானும் , அப்புறம் அவரு அரசியலுக்கு வந்தா நமக்கும் எதுனா வட்டம் மாவட்டம்னு தேரும் நாலு காசுப்பாக்கலாம்லனு சொன்னேன் . அவன் அதுக்கு என்ன பதில் சொன்னான் தெரியுமா உங்களையெல்லாம் செறுப்பால அடிச்சா கூட திருந்த மாட்டீங்கடானு . அது எம்புட்டு நெசம் . அதும் காவேரி பிரச்சனைல நீங்க அடிச்ச கூத்த பாத்து ஊருக்குள்ள அவனவன் _____ ல சிரிக்கறான் .

உங்கள எல்லாரும் கொழப்பவாதி கொழப்பவாதின்றாங்க , நீங்க அப்படிலாம் கெடையாது சாமி , நீங்க ரொம்ப தெளிவாத்தான் இருக்கீங்க , உங்கள நம்பி தேவுடு காத்துகிட்டு கெடக்கற நாங்கதான் மண்ட கொழம்பி போயி , கீழ்பாக்கத்துல அட்மிஷனுக்கு நிக்கறோம் , அதெப்படி புதுசா ஒரு படம் தொடங்கினாலே உங்களுக்கு அரசியல் ஆசை தொபுக்கடீர்னு முளைக்குது . அடடா நம்ம தலைவனோட இந்த படம் நல்லா ஓடும் , அடுத்து அரசியலுக்கு வந்துருவாருனு ஒரு நப்பாசைல நாங்களும் அரும்பாடுபட்டு கைகாசெல்லாம் போட்டு எங்கூரு தியேட்டர்ல ஒரு ஷோவாச்சும் ஓட்டி 200 நாளு 300 நாளுனு கொண்டாடுவோம் , அதுவும் அன்னைக்கு எங்க காசுல ஊருல இருக்கறவங்களுக்கு பிரியாணி வேற ங்கொய்யால . எங்க செலவுல உங்களுக்கு விளம்பரம்!!

நீங்க மயிரா போச்சினு ( அதான் போயிருச்சேனு சொல்லாதீங்க ) படம் முடிஞ்சதும் இமயமலைக்கு எஸ்கேப்பு . இமயமலைக்கு என்ன கருமத்துக்கு போறீங்கனு இன்னும் எவனுக்கும் தெரியாது , தியானம் பண்ணனும்னா அதுக்கு இமயமலைதான் சிறந்த எடம்னு எவன் சொன்னான் .அத எங்க வேணாலும் பண்ணலாமே , அமைதியான இடத்திலதான் தியானம் பண்ணனுமோ ? . ஓஓஓ 2000 வயசு பாபாசி அங்கனத்தான் இருக்கோரோ!! ஒரு வேளை பணக்காரங்களுக்கு சிம்லா,டார்ஜிலிங் மாதிரி உங்களுக்கு இமயமலை போல .

அட உங்க ஆன்மீகமிருக்கே அடடா அத நெனச்சாலே புல்லா அரிக்குதுங்கய்யா , ஆனா ஊனா அந்த சாமி இந்த சாமினு நீங்க மாறி மாறி கும்பிடறதும் , அவங்கள பாலோ பண்ண சொல்லி ரசிகனுங்ககிட்ட சொல்லுறதும் , ஆனா பாருங்க போடறது சாமியார் வேஷம் , முற்றும் துறந்து முனிவர் வேஷம் (நெஜ வாழ்க்கைல ) , ஆனா கோடிக்கணக்கில சொத்து , படத்துக்கு படம் பல கோடி சம்பளம் , தனகு தேவையானத வச்சுக்கிட்டு இல்லாதவனுக்கு குடுக்கறதுதான் உண்மையான ஆன்மீகம்னு இன்னுமா உங்களுக்கு தெரியல . ஏழையோட சிரிப்புல இறைவன காணலாம்னு அண்ணாகூட சொல்லிருக்காருங்க சாமீயோவ் . உங்க பாபா சாமீக்கும் ராகவேந்திரா சாமீக்கும் ரமணமகரிஷிக்கும் எத்தனை கோடி சொத்து இருந்துச்சுங்க சாமீ . சரி நீங்க சம்பாதிக்கறீங்க சொத்து சேக்கறீங்க எனக்கு ஏன் வயித்தெறிச்சல் .

அது சாமீ உங்க படம்னா என்ன குறைஞ்ச செலவுல எடுத்து , கொறஞ்ச வெல டிக்கட்லயா படம் பாக்க முடியுது ? உங்க சம்பளத்திலயே 10 படமெடுத்தறாலம்னு எங்கூரு குப்பன் கூட சொல்றான் . இப்படிலாம் படமெடுத்தா அத வாங்கறவன் அதிக லாபம் வச்சுதான் டிக்கட் விப்பானு கூடவா உங்களுக்கு தெரியாது . எல்லாம் என்னை செறுப்பால அடிக்கணும் வெறிபுடிச்சு போயி 1000ரூபான்னாலும் அம்மா தாலிய அடமானம் வச்சு படம் பாத்தது யார் தப்பு . வீட்டில அரிசி வாங்க காசில்லனாலும் உங்களுக்காக ரசிகர் மன்றம் வச்சு கண்டவங்களுக்கெல்லாம் என் காச குடுத்து துணிமணியும் நோட்டுபுக்கும் வாங்கி குடுத்தன் பாருங்க என்னையெல்லாம் என்ன பண்ணலாம் . கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதைமேல ஊர்வலம் வுட்டாக்கூட திருந்துவனானு தெரியலை .

உங்கள சொல்லி குத்தமில்லை சாமீ , உங்கள நம்பி இத்தினி வருஷமா , எங்க வாழ்க்கைய தொலைச்சு , அஞ்சு பைசாவுக்கு பிரோயசனமில்லாத உங்க மன்றத்தில மயிரு புடுங்கினதுதான் மிச்சம் , இதுக்கு மேலயும் நீங்க அரசியலுக்கு வருவீங்கனு ஒருத்தன் நம்பிட்டு கெடந்தான்னா அவன விட பெரிய்ய கேனா புனா வேற யாரும் இருக்க முடியாது . (கேனாபுனா - கேனபுண்ணாக்கு ) .

அது உங்கள அந்த காலத்திலருந்து ஒரு நடிகனா பாக்காம , எம்.ஜி.ஆராட்டமா ஒரு தலைவனாவே பாத்து தொலைச்சுட்டோமுங்க , நீங்க வந்தாத்தான் தமிழ்நாடு முன்னேறும்னு யாரோ சொன்னாங்கனு நாங்களும் அதையே நம்பிக்கிட்டு திரிஞ்சமுங்க . ஒரு தலைவனுக்கு முடிவெடுக்கற தெறம ரொம்ப முக்கியம் , ஆனா அதுவே உங்க கிட்ட இல்லங்கும்போது உங்களையெல்லாம் தலைவனா நினைக்கவே முடியாதுங்க சாமி . (உங்களவிட கருப்பு எம்சியாரு எவ்ளவோ மேல்... ) , அதும் ஓகேனக்கல் பிரச்சனைல நீங்க அடிச்ச பல்டி அடங்கொங்கமக்கா... பிளைட்டில்லாமயே நீங்க இமயமலைக்கு போயிருக்கலாம்.

நீங்க ஒரு பெரிய நடிகர்தான் சாமீ ஒத்துக்கறோம் , திரைல மட்டுமில்ல நெசத்திலயும் . இல்லாட்டி இத்தனை வருஷமா இத்தனை லட்சம் பேர பைத்தியமாட்டம் உங்க பின்னால திரிய வச்சிருக்க முடியுமா . அரசியலுக்கு வருவனா மாட்டனானு ஒரு விசயத்த மட்டும் வச்சிகிட்டு இத்தின வருஷம் அரசியல் பண்ணின நீங்க ஒரு பெரிய அரசியல்வாதிதான் சாமீ . ஆனாலும் பாருங்க உங்க ரசிகனுங்க எவ்ளோ அடிச்சாலும் வாங்கிப்பாணுங்க ,நாளைக்கே உங்க படம் ரீலிசானா கட்டவுட்டு வச்சு பீரும் பாலும் ஊத்த மட்டும் மறக்கமாட்டாங்க , எந்திரனுக்கு பிறகும் எப்போ அரசியலுக்கு வருவீங்கனு கேப்பான் , அப்பவும் நீங்க அடுத்த படம் 4 வருஷத்தில வந்துடும் அப்புறம் ஆண்டவன் சொல்றான் ரஜினி முடிக்கிறானு மேடை போட்டு பஞ்சு டயலாக் பேசினா கைத்தட்டிட்டு , ஓசி 'பி'ரியாணி தின்னுட்டு , உங்களுக்கு விளக்கு புடிக்க ரெடியாகிடுவான் . நான் சோறு திங்கறவன் சாமீ . என்னால அப்படிலாம் இருக்க முடியாது .

உங்களால ஒரு விசயம் மட்டும் கத்துக்கிட்டோமுங்க , நடிகன நடிகனா பாக்காமா கடவுளாவும் தலைவனாவும் பாத்தா இப்படித்தான் , அவனவன் நான்தான் அடுத்த முதலமைச்சர்னு கெளம்பிருவானுங்க . உங்க பொழப்பு நடிக்கறது.. அது புரியாம நாங்க லூசுத்தனமா உங்க பின்னால வால் புடிச்சிட்டு திரிஞ்சா.. நீங்க வந்துதான் தமிழ்நாடு தழைக்குமுன்னும் பிழைக்குமுன்னும் சொல்லிக்கிட்டு திரிஞ்சா.. என் வீட்டு குண்டால சோறு வந்துருமா...
அவ்ளோதான் சாமி எதோ உங்ககிட்ட சொல்லி அழனும்னு தோனுச்சு சொல்லிட்டேனுங்க . எதாவது தப்பா சொல்லிருந்தா மன்னிச்சுருங்க எனக்கு உங்க அளவுக்கு அரசியல் தெரியாதுங்கோ.... இந்த கடுதாசிகூட நீங்க பேசற மாதிரி குழப்பத்திலயே எழுதினதுதான்.

இப்படிக்கு..

எந்திரன் படம் வந்தால் பொண்டாட்டி தாலிய அடமானம் வச்சாவது பார்க்க துடிக்கும்

மானம் கெட்ட (ஞாபகமறதி ஜாஸ்தி இருக்கற ) , செறுப்பால அடிச்சாலும் திருந்தாத


தற்குறி தமிழ் ரசிகன் .


03 November 2008

சொர்க்கத்தின் குழந்தைகள் - CHILDREN OF HEAVEN



குழந்தைகளின் உலகம் மகிழ்ச்சியானது , கள்ளம் கபடமில்லாதது , வேடிக்கைகளும் வினோதங்களும் நிறைந்தது , அங்கும் பொறாமை, கோபம் , வெறுப்பு , சூழ்ச்சி உண்டு அதன் ஆயுள் குறைவு , மகிழ்ச்சி மட்டுமே அங்கு சாகா வரம் பெற்றது . நம் அன்றாட வாழ்விலிருந்து முற்றிலும் மாறுபட்டது , குழந்தைகளின் உலகம் . நாம் மகிழ்ச்சியடையும் எல்லா நிகழ்வுகளிலும் குழந்தைகள் மகிழ்ச்சியடைவதில்லை , அதேபோல குழந்தைகள் மகிழும் எல்லா தருணங்களிலும் நாமும் மகிழ்ச்சியடைவதில்லை . மகிழ்ச்சி மட்டுமில்லை கோபம் , பயம் , வெறுப்பு என எல்லா விடயங்களிலும் அவர்களின் உலகம் முற்றிலும் மாறுபட்டிருக்கும் . உங்களுக்கு கிடைக்க இருக்கும் ஒரு கோடி ரூபாய் கான்ட்ராகட்டை விடவும் அவர்களுக்கு ஒரு சிறிய சீனி வெடியும் கடலைமிட்டாயும் உயர்ந்தது .

ஒரு சீனி வெடியும் கடலைமிட்டாயும் நமக்கு அற்பமானதாய் இருக்கலாம் , அது அவர்களுக்கு கோடிக்கு சமமானது . பயம் கூட அதை ஒத்ததே . உங்கள் குழந்தை பருவத்தில் எதையாவது தொலைத்து விட்டு அதற்காக பயந்து அதை வீட்டிலும் மறைத்து விட்டு என்றாவது மாட்டிக்கொள்வோமோ என பயந்து பயந்து தினமும் கடவுளிடம் அதை எப்படியாவது கிடைத்துவிட செய் என வேண்டிக்கொண்டதுண்டா . அது நிச்சயம் உங்கள் வாழ்வில் மறக்க இயலாத ஒரு தருணமாகத்தான் இருந்திருக்கும் . அப்படி ஒரு சூழலையும் அதனால் பரிதவிக்கும் இரண்டு குழந்தைகளை பற்றியுமான கதையை அதீத கற்பனையின்றி இயல்பாய் சொல்லியிருக்கும் படம் CHILDREN OF HEAVEN .

ஈரானின் ஒரு சிறிய கிராமத்தில் , ஒரு சிறுவன் தன் தங்கையின் அறுந்து போன ஷூவை தைக்க போய் அதை வரும் வழியில் எதிர்பாராமல் தொலைத்துவிட்டு அதை வீட்டில் தங்கையிடம் சொல்கிறான் . தங்கையும் அவனும் அவனது ஒரு பழைய கேன்வாஸ் ஷூவை மாற்றி மாற்றி அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்ல , அதனால் ஏற்படும் விளைவுகளும் அதனை தொடர்ந்து இச்சிக்கலில் இருந்து அக்குழந்தைகள் எப்படி மீள்கின்றனர் என்பதுமாக சின்ன சின்ன காட்சிகளாக கதை விரிகிறது .

ஒரு சாதாரண கதை , அக்கதையை அக்குழந்தைகளின் பார்வையில் கொண்டு செல்வதும் அக்குழந்தைகளினூடே கதை பயணிப்பதும் , அவர்களின் ஏக்கமும் வலியையும் அடுத்ததடுத்த காட்சிகளால் படம் பார்க்கும் பார்வையாளனை உணரைவைப்பதும் படத்தின் இயக்குனரின் வெற்றி . அது தவிர ஏழைகளின் வீட்டில் வளரும் குழந்தைகளினூடே காணும் விட்டுகொடுக்கும் மனப்பான்மையும் , சகோதரத்துவமும் , தவறுகள் செய்துவிட்டு அதை மறைக்க இருவருமாக சேர்ந்து போடும் திட்டங்களும் , ஏழ்மையின் ஏக்கமுமாக அருமையான திரைக்கதையால் இப்படம் நெடுக படர விட்டிருப்பதும் இப்படத்தின் சிறப்பு ,

படத்தின் வசனங்கள் ( ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க பட்டிருந்தாலும் ) நம்முடைய அன்றாட நிகழ்வுகளில் நாம் காணும் மிக எளிய வகையில் உள்ளது . ஆர்ப்பாட்டமில்லாத இசை , அதற்கேற்ற இயல்பான வெளிச்சத்தில் படமாக்கப்பட்ட காட்சிகள் , அனைத்து கதாபாத்திரங்களின் மிக அருமையான நடிப்பு என இப்படம் முழுமையாக அனைவரும் கண்டுகளிக்கத்தக்க படமாகவும் உள்ளது .
இப்படம் ஈரான் படமாக இருந்தாலும் , அவர்களது வாழ்க்கை முறை நம்நாட்டு மக்களின் வாழ்க்கைமுறையை ஒத்ததாக இருப்பதால் , இப்படம் பார்க்கையில் ஒரு இந்திய படம் பார்ப்பதை போன்ற ஒரு உணர்வே ஏற்படுகிறது .




படத்தின் முக்கிய பாத்திரமான சிறுவனாக ( படத்தில் அவனது பெயர் அலி ) அமீர் பாரா , தனது இயல்பான நடிப்பாற்றலால் வியக்கவைக்கிறான் , அவனது வீட்டில் அப்பா முன்னால் அமர்ந்து கொண்டு தேனீர் அருந்துகையில் தன் தங்கையுடன் தனது நோட்டுப்புத்தகத்தில் எழுதிக்காட்டுவதும் , தினமும் ஷூவினால் பள்ளிக்கு லேட்டாக சென்று தாறுமாறாக பொய் சொல்லிமாட்டிக்கொள்வதும் , பரிசாக கிடைத்த பேனாவை தங்கைக்கு தரும்போதும் , இறுதிக்காட்சியில் தங்கைக்காக முதல் பரிசு வேண்டாம் மூன்றாம் பரிசு வேண்டும் என வேண்டிக்கொண்டு ( மூன்றாம்பரிசுதான் ஷூ ) ஒடுவதுமாக அதகளம் செய்கிறான் .

அப்பாவி தந்தையுடன் விடுமுறைநாளில் நகரத்தின் பணக்காரர்கள் வசிக்கும் காலனியில் தோட்டவேலை செய்ய செல்ல , அங்கே செல்வந்தர்களால் விரட்டப்படுவதும் , சிறுவன் மிக அருமையாய் வீடுவீடாக சென்று தோட்டவேலைகள் தேவையா என்று கேட்பதும் , அதன் மூலம் பெற்ற பணத்தில் தந்தை வீடு வாங்க வேண்டும் , கார் , ஏசி வாங்க வேண்டும் என்று கூற அவனோ தங்கைக்கு ஒரு ஷீ வாங்க வேண்டும் என்று கேட்பதும் மிக இயல்பு .




இது தவிர தங்கையாக நடித்திருக்கும் குழந்தையின் நடிப்பு , தனது காணாமல் போன ஷூவை அதே பள்ளியில் படிக்கும் இன்னொரு மாணவி போட்டிருப்பதை கண்டு அவளிடம் அதை எப்படி கேட்பது என்று புரியாமல் தவிப்பதும் , அவளை பின் தொடர்ந்து சென்று அவளது குடும்பம் இவளதை காட்டிலும் மிக ஏழ்மையில் இருப்பதை அறிந்து , வாடிய முகத்துடன் அங்கிருந்து விலகுவதும் , ஷூக் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஷூக்களை ஏக்கமாய் பார்ப்பதுமாய் தனது அண்ணாவின் பெரிய அளவு ஷூ ஒடும் சாக்கடையில் விழுந்து விட அதை அழுகையுடன் துரத்திக்கொண்டு ஒடுவதும் அது பாதளத்தில் சிக்கி கொண்டு வெளியே வராது நிற்பதால் அதை படுத்தபடி பார்த்து அழுவதுமாய் நம் வீட்டு குட்டி பெண்ணை கண் முன் நிறுத்துகிறார் . அக்குழந்தை படும் பாட்டை கண்டு நாமே அக்குழந்தைகளுக்கு ஷூக்கள் வாங்கி தந்துவிடலாம் என்பது போன்ற காட்சியமைப்பு பிரமிக்க வைக்கிறது .

உலகசினிமா என்பது பெரியவர்களுக்கானது என்பது போன்ற ஒரு எண்ணமும் , அது படித்தவர்களுக்குமானது , சாதாரணமானவர்களுக்கு புரியக்கூடாததும் என்ற கருத்தும் இருக்கிறது . ஆனால் இப்படம் அது போன்ற கருத்துக்களை உடைத்தெறிகிறது .
இது நிச்சயம் உலகசினிமாதான் ... குழந்தைகளுக்கான உலகசினிமா. நம் வீட்டின் குழந்தைகள் கட்டாயம் காண வேண்டிய உலகசினிமா . நம்மிடையேயும் நம் குழந்தைகளிடமும் மறைந்து வரும் சகோதரத்துவத்தை மிக சாதாரணமாய் போகிறபோக்கில் உணர்த்திச்செல்லும் இப்படம் அனைவரும் காண வேண்டிய ஒரு பொக்கிஷம் .

_____________________________________________________________________________________



ஈரானிய திரைப்படமான இப்படம் வெளியான ஆண்டு 1997 , இப்படம் ஆஸ்காரின் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டு தோல்வியடைந்தாலும் , மிக சிறிய பட்ஜெட்டில் ( $ 180,000) தயாரிக்கப்பட்ட இப்படம் உலகமெங்கும் அறியப்பட்டு ஒரு மில்லியன் வரை வசூலில் கலக்கியது . இது தவிர இப்படம் உலக திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை பெற்றுள்ளது . படத்தின் இயக்குனர் மஜீத்மஜீதி இப்படம் மூலமாகவே வெளியுலகில் பிரபலமடைந்தார் . அவர் இப்படத்திற்கு பிறகு திரையுலகின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராகவும் திகழ்கிறார் . இப்படத்தை இந்தியாவிலும் சலாம் பச்சே என்னும் பெயரில் ரீமேக் செய்து அப்படம் பாக்ஸ் ஆபீஸில் பப்படம் ஆனது


***************************

அவ்ளோதான்பா ;-)


****************************