19 November 2008

பீர் (BEER) குறித்த குறிப்புகள் சில....பீர் அருந்துதல் இன்று நம் நாட்டில் பரவலான ஒரு விடயம் . தமிழ்நாட்டில் டாஸ்மாக்குகளில் அதிகம் விற்கப்படும் பானமாக பீர் இருக்கிறது .பீர் அருந்துவோர் எண்ணிக்கையும் பீருக்கான சந்தையும் இந்தியாவில் நாளுக்குநாள் வளர்ந்து வரும் ஒன்று . நம் நாட்டில் அக்காலத்தில் பீர் இல்லையென்றாலும் சோமபானம் சுரா பானம் போன்ற வஸ்துக்கள் இருந்து வந்திருக்கிறது இவை பீரை போன்று இருந்திருக்கலாம்.
பிறகு வெள்ளையர்களின் ஆட்சியில் பீர் அருந்தும் பழக்கம் தொற்றியிர்ரருக்கூடும் , 70களில் பீர் தமிழ்நாட்டில் பெருவாரியாக நுழைந்திருக்கலாம் . இன்றும் புதிதாக மது அருந்த பழகுகிற ஒவ்வொரு குடிகாரனும் முதலில் தொடங்குவது பீரிலிருந்தே . இளைஞர்களை மட்டுமின்றி இளைஞிகளையும் வெகுவாக கவர்ந்து வரும் இப்பீரைப்பற்றி ஆயிரமாயிரம் கதைகளும் சிறுசிறு தகவல்களும் வியக்கவைக்கின்றன .
இன்று பப்களிலும் பார்களிலும் டாஸ்மாக்குகளிலும் பீர் மிக முக்கிய பங்கு வகுக்கிறது . பீர் குடிப்பதால் தொப்பை உண்டாகும் என்பது ஒரு தவறான கருத்தாகும் பீர் குடித்தபிறகும் குடிக்கையிலும் எடுத்துக்கொள்ளக்கூடிய உணவு மற்றும் நொறுக்குதீனிகளாலேயே அவை உண்டாகிறதென்றும்ம் குடித்தபின் கிடைக்கும் தூக்கமும் ஜீரணக்கோளாறுமே என ஆய்வுகள் கூறுகிறது . அது தவிர 3.5 சதவீதமே ஆல்கஹால் அடங்கிய பீர் குடிகாரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் மட்டுமல்ல அளவோடு எடுத்துக்கொண்டால் உடலுக்கு நன்மை பயக்குமென மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இனி பீர் குறித்த முதன்மை குறிப்புக்கள் :

*உலகின் முதல் சமையல் குறிப்பு பீருக்காகவே எழுதப்பட்டது .

*பீர் குறித்த சரியான ஆரம்ப காலத்திய வரலாறு என்று எதுவும் கிடையாது , ஆனால் 10000 ஆண்டுகளுக்கு முந்தைய மெசப்படோமிய நாகரீகத்திலேயே பீரைப்போன்ற ஒரு பானம் அருந்தப்பட்டதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

*சுமேரிய நாகரீகத்திலேயே முதன்முதலாக கோதுமையிலும் பார்லியிலும் செய்யப்பட்ட பீர்கள் கண்டறியப்பட்டுள்ளன . சுமேரியர்கள் கோதுமை மற்றும் பார்லியால் செய்யப்பட்ட 8 வகையான பீர்களை அருந்தியுள்ளனர். அதற்கு சாட்சியாக இன்றும் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் பீர்தயாரிக்க பயன்படுத்திய வெசல்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது . இவர்களது எட்டு வகை பீர்களில் இன்றைய நாட்களில் இருப்பது போல STORNG , LAGER போன்ற வகைகள் இருந்தது ஆச்சர்யமூட்டுகிறது . இது தவிர இந்நாகரீகத்தில் அவர்களது பீரை தயாரிக்க பெண்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். இதில் அவர்கள் மதச்சடங்குகளை செய்பவர்களாக இருந்தனர் என்பது மேலும் சுவாரசியம் . பீர்களில் சிலவகைகளை மட்டும் கடவுளுக்கு பிரசாதமாக வழங்கும் வழக்கமும் உண்டு . இன்று பீர் அருந்தும் அனைவரும் நிச்சயம் சுமேரியர்களுக்கு கடமை பட்டவராக இருக்க வேண்டும் .
*அக்கால எகிப்தியர்கள்கூட பீர்கள் பயன்படுத்தியதற்கான குறிப்புகள் அவர்களது பிரமிடுகளில் காணப்படுகிறது . ஆனால் நம்மைப்போலும் சுமேரியர்கள் போல் அல்லாமல் பீருடன் நீரை கலந்து அருந்தும் பழக்கம் கொண்டிருந்தனர்.

*பிற்காலத்தில் எகிப்தியர்கள் மூலமாக கிரேக்கர்களுக்கு இந்த பீர் தயாரிப்பு முறை சென்றிருக்கக்கூடும் என வரலாற்று ஆர்வலர்கள் கருதுகின்றனர். கிரேக்கத்தில் பீர் பயன்பாடு இருந்தாலும் அவர்கள் விரும்பி அருந்தியது வைனையே .

*4000 ஆண்டுகளுக்கு முன்னமே சீனர்களும் ''குய் ( KUI) " என்னும் பீர் அருந்தி வந்திருக்கின்றனர் .


*இது தவிர பாபிலோனிய நாகரீகத்திலும் பீர் பயன்பாடு அதிகமாக இருந்திருக்கிறது . பாபிலோனியர்கள் பல வகையான பீர்களை அருந்தியுள்ளனர் . இவர்கள் தனிதனியாக பீரை அருந்தாமல் பெரிய பாத்திரங்களில் பீரை ரொப்பி அதில் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடிக்கும் விநோத பழக்கம் கொண்டிருந்தனர் . அதிலும் மன்னர் பரம்பரையாக இருந்தால் அவர்களுக்கு தங்க ஸ்ட்ரா..!

*பீர் தயாரிப்பில் RULE OF THUMB என்னும் ஒரு சொலவடை உண்டு , அக்காலத்தில் பீர் தயாரிப்பில் கொதிக்கும் நீரின் வெப்ப அளவை தங்களது கட்டைவிரலால் பார்க்கும் முறை இருந்தது , (அது தெர்மா மீட்டர்கள் இல்லாத காலம் ) ஏனென்றால் தண்ணீரில் ஈஸ்ட்களை கலக்கும் போது நீரின் வெப்பநிலை அதிகமாக இருந்தால் ஈஸ்ட்கள் இறந்து போக வாய்ப்புண்டு அதனால்தான் அக்காலத்தில் அப்படி ஒரு சொலவடை உருவானது .

*1977 ல் பீர் குடிப்பதில் 1.3 விநாடிகளில் 1 லிட்டர் பீரை குடித்ததே இதுவரை கின்னஸில் பதிவுசெய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது .

* உலகிலேயே அதிக விலை கொண்ட பீர் " TUTENKHAMEN " என்கிற இங்கிலாந்து பீரே ஆகும்.. இது கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டியை சேர்ந்த சில மாணவர்களால் NEFERTITI என்னும் பேரழகியின் மம்மி குறித்த அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த சில குறிப்புகளை கொண்டு, அக்கால எகிப்திய முறையில் உருவாக்கப்படும் ஒன்றாகும் . இதன் சமீபத்திய விலை ஒரு பாட்டிலுக்கு 52$கள்( ரூபாய். 2500) ஆகும் . இது மிககுறைந்த அளவே தயாரிக்கபடுவது.

*பெல்ஜியம் நாடு உலகிலேயே அதிக அளவு பீர் பிராண்டுகளை கொண்டுள்ளது . அந்த நாட்டில் மட்டுமே மொத்தம் 400 வகையான பீர்கள் விற்பனைக்கு உள்ளதாம்!

*பெல்ஜிய மதகுருக்கள் பீர்தயாரிப்பில் சிறந்தவர்கள் .

*Cenosillicaphobia என்றால் பீர் அருந்தும் போது நமது கோப்பை காலியாகிவிடுமோ என்கிற அச்சமே ஆகும்.

*கரப்பான்பூச்சிகளுக்கு பீர் மிகவும் பிடிக்கும் ( அதிலிருக்கும் ஈஸ்ட்களால் கவரப்பட்டதால் இருக்கலாம்) உங்கள் வீட்டில் கரப்பான் தொல்லை இருந்தால் ஒரு கப்பில் பீர் வைத்து அதில் கொஞ்சம் எலி விஷம் கலந்து வைத்து விட்டால் போதும் மொத்த கரப்பான்களும் அழிந்து விடும்.

*உலகில் டீக்கு அடுத்து அனைவராலும் விரும்பி அருந்தப்படுகிற பானம் காபி அல்ல '' பீர் ''.போதை தொடரும்..........


டிஸ்கி - மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு மற்றும் உங்கள் பாக்கட்டுக்கும் கேடு.

*********************

அவ்ளோதான்பா ;-)

**********************

பிகு : இந்தபதிவின் தகவல்கள் பல இடங்களில் இருந்தும் சேகரித்த தகவல்களின் தொகுப்பு , அவை எந்த ஒரு ஆங்கில பதிப்பின் மொழி பெயர்ப்பல்ல . இப்பதிவை வேறெங்கும் மீண்டும் பதிவிடவோ அல்லது மின்னஞ்சலில் அனுப்பினாலோ அல்லது பிறருடன் பகிர்ந்து கொண்டாலோ தயவுசெய்து எனது வலைப்பதிவின் முகவரியை குறிப்பிடவும் . நன்றி

20 comments:

நையாண்டி நைனா said...

/* மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு மற்றும் உங்கள் பாக்கட்டுக்கும் கேடு*/

பதிவுக்கு எப்பபடின்னு ? சொல்லவே இல்லையே......

நையாண்டி நைனா said...

உங்கள் பீரை முதல் ஸிப் அடித்த எனக்கு ஒரு 1/4 "பழைய முனி" (அதாங்க "OLD MONK"; தமிழிலே பெயர் வச்சா, வரி விலக்காமே) பரிசா தருவீங்களா?????

Unknown said...

தோழர் நையாண்டி நைனா.. சரக்குக்கு தோழர் லக்கியை அணுகவும்.. என்னிடம் சிடிகள் மட்டுமே..

E.Parthiban said...

good one where you found the english version

Unknown said...

திரு.பார்த்திபன்.. இதை எந்த ஆங்கில பதிப்பிலிருந்தும் மொழிமாற்றம் செய்யப்படவில்லை.. பல இடங்களிலும் (புத்தகங்கள் மற்றும் இணையம் ) சேகரித்த தகவல்களை மட்டுமே கொண்டு எழுதப்பட்டது...

நையாண்டி நைனா said...

நான் டாவு கட்டுறா பொண்ணுக்கும் பீரை ரொம்ப பிடிக்கும்னு கேள்வி பட்டு நானும் பீரு மேல பீரா உட்டுகினு அழைஞ்சேன்... அப்பாலிக்கா தான் எனக்கு மேட்டர் புரிஞ்சது.. அது சொன்னது.. எங்க ஊட்டு பக்கத்திலே இருக்கிற சாம்பிராணி போடுற "பீர் மொம்மது" பாய் என்று....

Cable சங்கர் said...

எனக்கு பீர் அடிக்கணும் போல இருக்கு.. சாயங்காலம் போலாமா..?அதிஷா..

நையாண்டி நைனா said...

/*cable sankar said...
எனக்கு பீர் அடிக்கணும் போல இருக்கு.. சாயங்காலம் போலாமா..?அதிஷா..*/

போங்க...போங்க... என் எதிரி பீரை தானே அடிக்க போறீங்க......

நையாண்டி நைனா said...

ராசா, சரக்கு அடிச்சாச்சு... ராசா.... ஒரு "தங்க ராசாக்கள்" வெண் சுருட்டு தர முடியுமா???

வால்பையன் said...

பீர் குறித்த மேலதிக தகவல்களுக்கு அணுக வேண்டிய முகவரி
பரிசல்காரன்

பிராந்தி குறித்த தகவல் வேணுமா
ஓடிவா நம்ம வூட்டு பக்கம்

பரிசல்காரன் said...

நல்ல நடை அதிஷா.

தென்னாப்பிரிக்காவில் பல அலுவலகங்களில் நம்மூர் மினரல் வாட்டர் போல பீர் காலன்கள் உண்டு.

அங்கே பார்களில் பீருக்கென்று வாட்டர் டேப் போல பீர் குழாய்கள் உண்டு. அதில் ஒரு குறிப்பிட்ட அபார்ட்மெண்ட் ஒன்றில் ப்ளம்பர் செய்த தவறால் தண்ணீருக்குப் பதில் பீர் வரவே, அந்த வீட்டுப் பெண்மணி அதை ட்ரம்களில் நிரப்பிவைத்துவிட்டாள். பிறகு பார் சிப்பந்திகள் வந்து கேட்டபோது, ‘அது என் தப்பில்லையே’ என்று தர மறுத்துவிட்டாளாம்.

ஆஸியுடனான சரித்திரப் புகழ்வாய்ந்த (432ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற) மேட்ச் அன்று எல்லா பார்களிலும் வரும் அனைவருக்கும் 3 கோப்பை பீர் இலவசமாகத் தரப்பட்டதாம்.

இதெல்லாம் என் நண்பர் ஒருவர் மூலம் அறிந்தது.

@ கேபிள் சங்கர்

நெக்ஸ்ட் டைம் மீ டூ....

NONO said...

//அது தவிர 3.5 சதவீதமே ஆல்கஹால் அடங்கிய பீர் குடிகாரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் மட்டுமல்ல..//

பியர் 2,5% - 8,5% வரையும் உள்ளது!!! ஏன் போதையே
யில்லாத(NO ALCOHOLIC) பியரும் உண்டு!

Anonymous said...

1977 ல் பீர் குடிப்பதில் 1.3 விநாடிகளில் 1 லிட்டர் பீரை குடித்ததே இதுவரை கின்னஸில் பதிவுசெய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது .

LOL. That's simply not possible!

Otherwise, it's a good post, appreciate the efforts, athisha!

விலெகா said...

5000தவுசனுக்கெ நமக்கு காசு கெடைக்காது நாம எங்கே இங்கிலாந்து பீரெல்ல்லாம் அடிக்கிறது:(((

வீணாபோனவன் said...

இங்கே 11% பியரும் உண்டு...பொயர்: Maximum Labatt Ice

தவிர, 65% ஆல்க்ககோல் கொண்ட ஜமேய்க்கன் ரம்கலும் உண்டு...

-வீணாபோனவன்.

SK said...

எனக்கென்னவோ இத பாத்தா பீர பத்தி சொன்னத விட டாஸ்மாக் விளம்பரம் மாதிரி இருக்கு. குடிக்கிறவங்க இத பாத்து விட போறதில்ல குடிக்காத்தவங்க இத பாத்து குடிக்க ஆரம்பிக்க போறத்தில......இதெல்லாம் தேவையா.............

அத்திரி said...

அருமையான ஆராய்ச்சிபா. சும்மா கிக்குன்னு இருக்கு.

வெண்பூ said...

தல கடந்த 5 பதிவுக்கும் சேத்து இங்க ஒரு அட்டன்டன்ஸ் போட்டுக்கிறேன்.. :)))

benza said...

Facts without source is zero.
Learn to write quoting your sources so as to help the reader do his or her own research.
Your effort is respected but you are reducing your writing to level of ridicule when you leave your important witness at home.
Just ponder for a moment ... do you not think anyone could say anything under the sun and expect ''everyone'' to accept as correct is the wildest notion on earth?
Hope you get my message without resentment......thank you.

பிரபு சஹாயராஜ் said...

தற்செயலா இந்த Article படிக்க நேர்ந்தது ...போச்சு போச்சு ... இப்ப மணி சரியா 6 PM ... போஓச்சா ... நேரா பொய் டாஸ்மாக் வரிசெய் ல நிக்கப்போறேன் .. ஹையோ ஹைய்யோ .. என் யா இப்படி பண்றீங்க .. :-)