சென்னையில் கீற்று வாசகர் சந்திப்பு .....

>> 20 November 2008




கீற்று இணையதளம் குறித்து அனைவருக்கும் தெரிந்திருக்கலாம் . தெரியாதவர்கள் இங்கே பார்க்கவும் http://www.keetru.com/ . நமது தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் போல தமிழில் வெளியாகும் பல தமிழ் சிற்றிதழ்களை ஒரே இடத்தில் தொகுத்து தரும் அட்சயபாத்திரம் கீற்று இணையதளம் .

ஞாநியின் தீம்தரிகிட இதழ் இணையத்தில் வரத்துவங்கிய காலக்கட்டத்தில் அவை கீற்று இணையதளம் மூலமாகவே கிடைத்து வந்தது , தீம்தரிகிட இதழ் மூலமாகவே எனக்கு கீற்று அறிமுகமானது , அதன் பிறகு அங்கே வெளியாகும் அணங்கு,கதைசொல்லி ,புரட்சிப்பெரியார் முழக்கம் போன்ற சிற்றிதழ்கள் ஆனந்த விகடனும் குமுதமும் மட்டுமே தெரிந்த எனக்கு இன்னொரு உலகினை அறிமுகப்படுத்தியது . புத்தகங்கள் தமிழில் கிடைக்க அரிதான வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் இவ்விணையதளம் ஒரு வரப்பிரசாதமாய் திகழ்கிறது .

இவ்வாரம் இவ்விணையதளம் தனது நான்காம் ஆண்டை துவக்குகிறது .

மிக அருமையாக நடந்துவரும் இவ்விணைய தளத்தின் வாசகர்கள் சந்திக்கவும் உரையாடவும் இவ்வாரம் சென்னையில் ஒரு வாசகர் சந்திப்பை அவ்விணையதள நண்பர்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர் . இச்சந்திப்பில் வாசகர்கள் கலந்து கொண்டு தங்களது, கீற்று தளம் குறித்த உங்கள் நிறைகுறைகளையும் அதனை மேம்படுத்த உங்களது ஆலோசனைகளையும் வழங்கலாம் . உங்களுக்கு ஏதேனும் அவ்விணையதளம் குறித்த சந்தேகங்கள் இருப்பின் அதனையும் கேட்டு தெரிந்து கொள்ள ஏதுவாய் இச்சந்திப்பு அமையும்.


வலைப்பதிவர்கள் மற்றும் கீற்று வாசகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் .


நாள்: 30-11-2008, ஞாயிற்றுக் கிழமை


நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


இடம்: BEFI Hall, நரேஷ் பால் சென்டர், தேனாம்பேட்டை, சென்னை (காமராஜர் அரங்கம் எதிரில்)


மேலதிக விபரங்களுக்கு - http://keetru.com/editorial/readers_meet.php


இவ்விழாவில் கலந்துகொள்ள எந்தவித கட்டணங்களும் கிடையாது , அதுபோல இவ்விழாவில் கீற்று வாசகர்கள் தவிர அவ்விணையதளம் குறித்து அறிய விரும்பும் யாரும் கலந்து கொள்ளலாம் . இதில் நமது வலைப்பதிவர்கள் பலரும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது .


*********************************

அவளோதான்பா........ ;-)

*********************************

8 கருத்துக்கள்:

பரிசல்காரன் November 20, 2008 5:18 PM  

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

ரொம்ப நாளாச்சு அறிவுரை சொல்லி...

...எல்லாப் பதிவின் முடிவிலும் எழுதும் ‘அவ்ளோதான்பா’வை எடுத்து விடவும்.

எதுவுமே ’அவ்ளோதான்’ இல்லை. இன்னும் வரும். முன்னைவிட சிறப்பாய்.. கூர்மையாய்..

கும்க்கி November 20, 2008 7:43 PM  

அவ்ளோதான்பா...
என்றால்...இப்போதைக்கி..அல்லவா?

அதிஷா November 20, 2008 8:48 PM  

\\\ எதுவுமே ’அவ்ளோதான்’ இல்லை. இன்னும் வரும். முன்னைவிட சிறப்பாய்.. கூர்மையாய்..\\

தோழர் அது இப்போதைக்கு அவ்ளோதான்பா... அது அந்த பதிவின் முடிவு அல்லது முற்றும் போல

எப்போதைக்கும் அவ்ளோதான்பா இல்லை...

அதிஷா November 20, 2008 8:49 PM  

வாங்க கும்க்கி.. என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேன்றாங்களே...

தமிழ் பிரியன் November 20, 2008 9:38 PM  

அவ்ளோதானாப்பா.. ;)

cable sankar November 21, 2008 1:25 AM  

நன்றி அதிஷா மீண்டும் சந்திப்போம்..

நையாண்டி நைனா November 21, 2008 3:56 PM  

/*எப்போதைக்கும் அவ்ளோதான்பா இல்லை...*/

இதை நான் எப்"போதை"க்கும் வரவேற்கிறேன்.

வெண்பூ November 22, 2008 9:56 PM  

நான் கீற்று வாசகன் அல்ல.. அதனால இங்க ஒரு பிரசன்ட் சார் மட்டும் போட்டுக்கிறேன்.. :)))

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP