25 December 2008

சென்னையில் அதிரடி சரவெடி பதிவர் சந்திப்பு

ஹாய் மச்சான்ஸ் மச்சிஸ்..

இந்த வாரம் சிங்கப்பூர்லருந்து நம்ம ஜோசப் பால்ராஜ் அண்ணன் வராரு, அடுத்த வாரம் இங்கிலீசு புத்தாண்டு வருது , அப்புறம் இரண்டு வாரம் கழிச்சு தமிழ்புத்தாண்டு வருது , பொங்கல் வருது ... இப்படி நிறைய வரதால , உடனே நம்ம மக்களையெல்லாம் சந்திக்கலாம்னு பலரும் விரும்புறதா தெரியுது .

அதனால இந்தவாரம் சனிக்கிழமை , சாயங்காலம் 5.00 மணிக்கு , தி.நகர் நடேசன் பார்க்ல ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யலாம்னு பதிவர்கள் பிரியப்படறாங்க.

மக்கள் அனைவரும் தவறாம இந்த கூட்டத்தில கலந்துகிட்டு , அங்கே வருகிற ஸ்ரீஸ்ரீ ஜோசப் பால்ராஜ் சுவாமிகள் ஆசிகளை பெறலாம்.

தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டமும் இருக்கும் ( ஆல்கஹால் நிச்சயம் இல்லை ! ) .

சென்ற முறை மெரினாவில் மழை வந்து ஆட்டத்தை கெடுத்தது போல இந்த முறை நிகழாது என வருணபகவானை வேண்டிக்கொள்வோம். இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்முறை சிலபல மண்டபங்கள் தேடப்பட்டது , விழாக்காலமாதலால் ஒன்றும் சரியாக அமையவில்லை . அதனால் மழைவந்தாலும் சமாளிக்க முடிந்த நடேசன் பார்க்கை பாலபாரதி அண்ணன் தேர்வு செய்தார்.

வெறும் கொண்டாட்டம் மற்றும் சந்திப்பு தவிர்த்து , சில முக்கிய நாட்டுநடப்புகளும் விவாதிக்கப்படும் . மென்மையான விவாதங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் .

பல அதிரடி பதிவர்களும் அல்டிமேட் பதிவர்களும் கலந்துக்குவாங்கனு எதிர்பார்க்குறோம்..

மக்கள்ஸ் மறந்து விடாதீர்கள் மறந்தும் இருந்துவிடாதீர்கள்..

சந்திப்பு நாள் - டிசம்பர் 27 -

இடம் - நடேசன் பார்க் , திநகர் , சென்னை.

நேரம் - மாலை 5.00

தலைமை - திரு.பாலபாரதி

பதிவர் சந்திப்பு பதிவர்களுக்கு மட்டுமல்ல , வாசகர்களுக்கும்தான் , அதனால் புதுப்பதிவர்களும் , வாசகர்களும் கூச்சப்படாம கலந்துக்கோங்க..

அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர் வாரீர்...

மேலதிக விபரங்களுக்கு -

அதிஷா - 9884881824 அல்லது dhoniv@gmail.com

லக்கிலுக் - 9841354308 அல்லது luckylook32@gmail.com

முரளிக்கண்ணன் - 9444884964


வந்து சேருங்க மக்கா...

புத்தாண்டை வரவேற்கலாம்... ஜோசப் பால்ரோஜோட...

42 comments:

நட்டு said...

பதிவர் கொண்டாட்டடம் வாழ்த்துக்க்கள்

Cable Sankar said...

நம்ம நம்பரை சேர்த்துக்கங்க அப்பு..

ஜெகதீசன் said...

பதிவர் கொண்டாட்டடம் வாழ்த்துக்க்கள்

தமிழ்நெஞ்சம் said...

பதிவர் கொண்டாட்ட வாழ்த்துக்கள்.

அதிரடி சரவெடி வெடிக்கட்டும்.

கே.ரவிஷங்கர் said...

நன்றாக நடக்க வாழ்த்துக்கள்.

எனக்கு 97 வயது ஆகி விட்டதால்
என்னால் வர இயலாது.மேலும் எனக்கு spanish தவிர வேறு மொழி
தெரியாது. இதுவே ஸ்பானிஷில் அடித்து தமழில் transliterate ஆகியிருக்கிறது.

நடேசன் பார்க்கில் நல்ல மொழி பெயர்ப்பாளர்கள் வேறு கிடைக்கமாட்டர்கள்.

shikuwkill! koxjjdd!goodkcuk!

கோவி.கண்ணன் said...

//ஸ்ரீஸ்ரீ ஜோசப் பால்ராஜ் சுவாமிகள் ஆசிகளை பெறலாம்.//

யூசூப் பால்ராஜ் ஐயங்கார் ஸ்வாமிகளின் ஆசி என்று எழுதி இருக்க வேண்டும் !

:)

VIKNESHWARAN said...

வாழ்த்துகள்...

இராகவன் நைஜிரியா said...

பதிவர் கொண்ட்டாட்ங்களுக்கு மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

இப்போ நானும் ஒரு பதிவர் ஆயிட்டேன்.. இருந்தாலும் வரமுடியல.. அதுக்காக எல்லோர்கிட்டேயும் மன்னிப்பு கேட்டுகிறேன்.

வருண பகவான் கருணை காண்பிப்பார் என நம்புகின்றேன்.

PoornimaSaran said...

பதிவர் சந்திப்பு இனிதே நடக்க வாழ்த்துக்கள் :))

அத்திரி said...

உள்ளேன் ஐயா

RAHAWAJ said...

கலந்து கொள்ளும் அனைத்து பதிவர்களுக்கு வாழ்த்துக்கள், நிகழ்வு நல்லமுறையில் நடைபெற "சாணியடி சித்தரின்" பிரதான சீடர் சுவாமி விக்கியாணந்தா அவர்களிடம் ஆசி பெருங்கள் ஆதிஷா

செந்தழல் ரவி said...

///.தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டமும் இருக்கும் ( ஆல்கஹால் நிச்சயம் இல்லை ! ) . ///

vara maatten po

அதிஷா said...

வாங்க நட்டு போல்ட்டு

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

அதிஷா said...

கேபிள்சங்கர் உங்க நம்பரையும் போட்டுறேன் .

நீங்க சந்திப்புக்கு முதல்ல வரணும் ஓகேவா.. ;-)

அதிஷா said...

வாங்க ஜெகதீசன்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

அதிஷா said...

நன்றி தமிழ்நெஞ்சம்

அதிஷா said...

\\ நடேசன் பார்க்கில் நல்ல மொழி பெயர்ப்பாளர்கள் வேறு கிடைக்கமாட்டர்கள். \\

ரவிசார் எங்க கைவசம் அபரிமிதமான ஒரு மொழிபெயர்ப்பாளர் இருக்காரு.. அவருதான் டோண்டுராகவன்.. பதிவர்சந்திப்புனா முதல் ஆளா இருப்பாரு..

நீங்களும் கட்டாயம் வாங்கோ..

அதிஷா said...

கோவி அண்ணா ... ;-)

அதிஷா said...

நன்றி விக்கி..

அதிஷா said...

ராகவன் அண்ணா.. நீங்களும் ஒரு பிரபல பதிவராகீட்டீங்க.. வாழ்த்துக்கள்

வருகைக்கு நன்றி

அக்னி பார்வை said...

உள்ளேன் அய்யா

தாமிரா said...

வந்தா போலீஸ் புடிச்சுக்குமாமே.. அப்பிடியா?

இராகவன் நைஜிரியா said...

//அதிஷா said...
ராகவன் அண்ணா.. நீங்களும் ஒரு பிரபல பதிவராகீட்டீங்க.. வாழ்த்துக்கள்

வருகைக்கு நன்றி //

எல்லாம் உங்கள் வழிக்காட்டுதல் மூலமாகத்தான்.

குப்பன்_யாஹூ said...

தி. நகர் சூடான இடம் ஆச்சே. ஓஹோ புரிகிறது சூடான இடுகைகள் பற்றி சூடான பதிவர்கள் சந்திப்பதால், தி நகர் தேர்வு செய்யப் பட்டு உள்ளது என அனுமானிக்கிறேன்.

குப்பன்_யாஹூ

madhiyarasu said...

சாக்லேட் தருவீங்களா

ஜோதிபாரதி said...

திரு யூசுப் பால்ராஜ் ஐய்யங்கார்வாலைக் கொஞ்சம்(நல்லா) கவனிச்சு அனுப்புங்க!
வாழ்த்துக்கள்!!

கும்க்கி said...

நேர,பண.,மன..,விரயம்...சென்னை தவிர்த்த இதர நண்பர்களுக்கு.
ப்லோக்கில் உள்ள எதையும் நேரில் எதிர்ப்பாக்க வேண்டாத அப்பாவிகள் சென்று வரலாம்...மீண்டும் முதல் வரி.

கும்க்கி said...

கமெண்ட் மாடுரேஷன் உள்ள அறிவு ஜீவிகளால் இந்த கமெண்ட் வெளியிடப்பட்டால் மிக்க நன்று..இல்லையெனில் அதைவிட நன்று.

ச்சின்னப் பையன் said...

பதிவர் கொண்டாட்டடம் வாழ்த்துக்க்கள்...

அதிஷா said...

\\ கமெண்ட் மாடுரேஷன் உள்ள அறிவு ஜீவிகளால் இந்த கமெண்ட் வெளியிடப்பட்டால் மிக்க நன்று..இல்லையெனில் அதைவிட நன்று. \\

திரு.கும்க்கி அவர்களுக்கு வணக்கம்

தங்கள் கருத்தை வலியுறுத்திய பின்னூட்டத்தை வெளியிட தாமதமானதுக்கு மன்னிக்கவும்.. சில சொந்த வேலைகள் இருக்கிறது. வலைப்பதிவுகளுக்கு நடுவில் அதையும் பார்க்க வேண்டுமே.

நீங்கள் கலந்துகொண்ட பதிவர்சந்திப்பில் இதற்கு முன் மன,பண,நேர விரயமும் வருத்தங்களும் இருந்திருந்தால் பதிவர்சந்திப்புக்களை நடத்துகின்ற சக அல்லது அனைத்து சென்னை பதிவர்கள் சார்பாக வருந்துகிறேன்.

ப்ளாக்கில் உள்ளதை தவிர்த்து நீங்கள் பதிவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தால் மகிழ்ந்திருப்பேன்.இப்படிக்கு

கமெண்ட் மாடரேஷன் உள்ள அறிவிஜீவி. அதிஷா

புருனோ Bruno said...

ஊருக்கு செல்கிறேன். சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்

கும்க்கி said...

எதிப்பார்ப்புக்கள் ஏதும் இல்லை..
ஆயினும் சரியான முன்னேற்பாடுகளோ அல்லது இட வசதியோ அல்லது அனைவரும் கலந்து பேசக்கூடிய வாய்ப்போ அல்லது வரவழைத்த விருந்தினர்கள் பேசாமலே சென்றதோ....இவை அனைத்தும் சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் குழப்பமான சூழ்நிலையில் நடத்தப்பட்டது.

மீண்டும் இவ்வாறு நிகழாமல் இருப்பின் நல்லது.

கும்க்கி said...

மற்றவை தனி மடலில்...

வால்பையன் said...

//கும்க்கி said...

நேர,பண.,மன..,விரயம்...சென்னை தவிர்த்த இதர நண்பர்களுக்கு.
ப்லோக்கில் உள்ள எதையும் நேரில் எதிர்ப்பாக்க வேண்டாத அப்பாவிகள் சென்று வரலாம்...மீண்டும் முதல் வரி.//

ஹா ஹா ஹா

வேணும் நல்லா வேணும்
விட்டுட்டு போனா இப்படி தான்

வால்பையன் said...

சந்திப்பு போட்டாக்களை எதிர்பார்க்கிறேன்.

சந்திப்பில் கலந்து கொள்பவர்களுக்கு அண்ணன் லக்கிலுக் இலவசமாக அவரது புத்தகத்தை தருவார்னு பேசிக்கிறாங்க!
அது உண்மையா, வதந்தியா?

ஜோதிபாரதி said...

வால்பையன் said...
//சந்திப்பு போட்டாக்களை எதிர்பார்க்கிறேன்.

சந்திப்பில் கலந்து கொள்பவர்களுக்கு அண்ணன் லக்கிலுக் இலவசமாக அவரது புத்தகத்தை தருவார்னு பேசிக்கிறாங்க!
அது உண்மையா, வதந்தியா?//

அவர் இலவசமாகத் தருகிறேன் என்கிற மனநிலையில் இருந்தாலும் கூட தாங்களும், இன்ன பிற பதிவர்களும் காசு கொடுத்து தான் வாங்குவேன் என்று சொன்னால் அல்லது அடம் பிடித்தால்(பிடிவாதமாக இருந்தால்) அதற்கு அவர் மறுப்பேதும் சொல்லாமல் பெற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்!

narsim said...

//ஆல்கஹால் நிச்சயம் இல்லை ! ) . //

நிச்சயமாக இல்லையா, இல்லை என்பது நிச்சயமாக இல்லையா.. அல்லது இது எதுவும் நிச்சயம் இல்லையா??

Anonymous said...

///
கலந்து கொள்ளும் அனைத்து பதிவர்களுக்கு வாழ்த்துக்கள், நிகழ்வு நல்லமுறையில் நடைபெற "சாணியடி சித்தரின்" பிரதான சீடர் சுவாமி விக்கியாணந்தா அவர்களிடம் ஆசி பெருங்கள் ஆதிஷா
///

இங்கே எதற்கையா சாணியடி சித்தரை வம்புக்கு இழுக்கிறீர்கள்... அவர் பாவம் திருமணமாகி ஹனிமூன் கூட போக முடியாத நிலையில் வருந்திப் புலம்பிக் கொண்டிருக்கிறார்...

மணிகண்டன் said...

நான் சனிக்கிழமை ராத்திரி 8 மணிக்கு இந்தியா வரேன். பதிவர் சந்திப்ப ஒத்திபோடுங்க.

KaveriGanesh said...

அதிஷா மதுரையிலுருந்த்து பதிவர் மீட்டிங்கில் நானும் கலந்து கொள்கிறேன்.

நானும் கலந்து கொள்கிறேன்.


அன்புடன்

காவேரி கணேஷ்

ஊர் சுற்றி said...

உள்ளேன் ஐயா...

ஸ்ரீ..... said...

நண்பர் அதிஷாவிற்கு,

பதிவர் சந்திப்பு குறித்த என் கருத்துக்களைக் காண அழைக்கிறேன். சந்திப்பு நிறைவானதாய் இருந்தது என்பதையும் தெரிவிக்கிறேன்.

நட்புடன்,

ஸ்ரீ...