01 December 2008

FLASH NEWS : அழகிரி மற்றும் மாறன் சகோதரர்கள் சந்திப்பு


இன்று முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் இத்தனை நாளாக சண்டைக்கோழிகளாய் முட்டிக்கொண்டு மோதிய அழகிரி மற்றும் மாறன் சகோதரர்கள் சந்தித்துக்கொண்டனர் .
அங்கே என்ன பேசப்பட்டது என்பது குறித்த விபரங்கள் இதுவரை தெரியவில்லை .
இன்னும் சற்றுநேரத்தில் கலைஞர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேச இருக்கிறார் . அது குறித்து பின்னால் இங்கேயே அப்டேட் வரலாம் ,
ஒரு வேளை அழகிரி , மாறன் & கோ இணைந்தால்
1.இனி கலைஞர் டிவியின் கதி என்ன ? ( கலைஞர் செய்திகள் வேறு )
2. இனி ஜெயா டிவியுடனான சன்டிவியின் நட்பு என்னாவது ?
3.இனி கேப்டனுக்கு யார் செய்தி வாசிப்பார்கள்?
4.இனி கேப்டனின் திருமுகம் காட்டப்படுமா சன்டிவியில் ?
5.இனி நரசிம்மா படம் கேடிவியில் காண இயலுமா?
6.இனி ஜெ வின் அறிக்கைகள் ஜெயாடிவியில் மட்டும்தானா ?
7.இனி ஆர்க்கார்ட்டார் கதி என்ன ?
8.இனி மின்வெட்டு , ஸ்ப்பெக்டரம் குறித்தும் , இனி தினகரனில் எப்படி செய்திகள்
வெளியாகும் ?
9.இனி மானும் மயிலும் கலைஞரில் ஆடுமா ?
10.இனி லக்கிலுக் டிஆர்பி ரேட்டிங் பதிவுகள் போடுவாரா ?
11.இனியும் சன் குழுமம் பார்ப்பன அடிவருடி என்று வலைப்பூக்களில் வசைப்பாடப்படுமா ?
12.இனி உலகம் எப்படி சுழலும்.
13.இனி தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு என்னாகும் ?
இப்படி இன்னும் பற்பல.. உங்களுக்கும் பல இதுபோல தோணலாம்....
இந்த பதிவில் இடப்படும் ஆகக்கூடி மிகச்சிறந்த பின்னூட்டத்திற்கு தி.மு.கவின் வலையுலக கொ.ப.செ லக்கிலுக்கின் முதல் புத்தகமான '' சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் '' பரிசாக அளிக்கப்படும் .
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது . ( நடுவர்கள் - கென் , நர்சிம் மற்றும் பரிசல் )
CONDITIONS APPLY................. ;-)

46 comments:

மதிபாலா said...

மீ பர்ஸ்ட்!!!

மேல இருக்குற எல்லாமே கொஞ்ச்சம் கொஞ்ச்சம் நடக்கும்.

அரவிந்தன் said...

எது எப்படியோ மானா மயிலாட கலைஞர் தொலைக்காட்சியில் தொடர்ந்து வரவேண்டும்...

இவன்
தொடையழகி ரம்பா ரசிகர் மன்றம்.
பெங்களூர் கிளை

அக்னி பார்வை said...

கேப்டன் டீவி விரைவில் வரும்.

இப்பொழுது ஒன்றாக இணந்த்ஹலும் மீண்டும் பிரிந்துவிடுவார்கள்..
-----------

பின்னூட்ட டுபுரித்தனம், நீங்க சொல்லல நான் சொல்லிட்டேன்

அத்திரி said...

1.இனி கலைஞர் டிவியின் கதி என்ன ? ( கலைஞர் செய்திகள்
வேறு

?????!!!!!!!!!


2. இனி ஜெயா டிவியுடனான சன்டிவியின் நட்பு என்னாவது ?

நட்பு உடைந்துவிடும்

3.இனி கேப்டனுக்கு யார் செய்தி வாசிப்பார்கள்?

கேப்டன் தான் டிவி ஆரம்பிக்கிறாரே

4.இனி கேப்டனின் திருமுகம் காட்டப்படுமா சன்டிவியில் ?
1000சதவீதம் சான்ஸே இல்லை. காட்டினால் மறுபடியும் சுனாமி..........

5.இனி நரசிம்மா படம் கேடிவியில் காண இயலுமா?

இந்தக் கொடுமைய மறுபடியும் பாக்க் முடியுமா/கேப்டன் படம் அவரோட டிவில மட்டும்தான்

6.இனி ஜெ வின் அறிக்கைகள் ஜெயாடிவியில் மட்டும்தானா ?

ச்சே விண் டிவி இருக்குலா

7.இனி ஆர்க்கார்ட்டார் கதி என்ன ?

மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி கிடைச்சுது. இனிமே ஒரு பக்கம் தான். அதனால ரிலாக்ஸா இருப்பார்

8.இனி மின்வெட்டு , ஸ்ப்பெக்டரம் குறித்தும் , இனி தினகரனில் எப்படி செய்திகள்
வெளியாகும் ?

மின்வெட்டா??? தமிழ்நாட்டிலா சான்சே இல்லையினு செய்தி வந்தா டென்சன் ஆக கூடாது.

ஸ்பெக்ட்ரம் நா என்ன

9.இனி மானும் மயிலும் கலைஞரில் ஆடுமா ?

இது இல்லைனா கலைஞர் டிவி இல்லை. டிஆர்பி ரேட்டிங்க்ல கைய வச்சா எப்படி

10.இனி லக்கிலுக் டிஆர்பி ரேட்டிங் பதிவுகள் போடுவாரா ?

போடுவாரு ஆனா சன்னை வாரமாட்டாரு

11.இனியும் சன் குழுமம் பார்ப்பன அடிவருடி என்று வலைப்பூக்களில் வசைப்பாடப்படுமா ?

)))))))))))))))))))))

12. இனி உலகம் எப்படி சுழலும்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Unknown said...

இன்னைக்கு டிசம்பர் ஒண்ணு தானே, ஏப்ரல் ஒண்ணு இல்லிங்களே!!!

Unknown said...

மிக முக்கியமான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாயிண்ட் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது

அவிச்ச கடலை‌‌ said...

அரசியல்லே இதெல்லாம் சகஜம்பா."நாங்க ஆடுவதும் பாடுவதும் காசுக்கு.பிற ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு.இன்னிக்கு ஒண்ணு சேரப் போறதும் காசுக்கு.நாளைக்கு மீண்டும் பிரியப் போறதும் காசுக்கு"

அவிச்ச கடலை‌‌ said...

தயாநிதி மாறனுக்கு மீண்டும் மத்திய மந்திரி பதவி தரப்படும்.எம்பி பதவியை ராஜினாமா செய்யாததன் ரகசியம் இது தானோ!!

ஜெகதீசன் said...

:))

வெண்பூ said...

ஹி..ஹி.. கொஞ்ச நேரத்துக்கு முன்னால தினகரன்.காம் போய் பாத்துட்டு குழம்பிட்டேன். எப்பவுமே தமிழக அரசுக்கு எதிரா எதாவது இருக்கும் அதில் எல்லாமே சினிமா நியூஸ் மட்டுமே இருந்தது.. இப்பதான் கிளியர் ஆச்சு.. :)))

Unknown said...

ஒன்னுமே புரியலே
உலகத்துலே !
என்னமோ நடக்குது
மர்மாய் இருக்குது !
கண்ணாலே கேட்டதும்
கனவாய் தோன்றுது!
காதலே கேட்டதும்
கதை போல் ஆனது !

ரோஜா காதலன் said...

அதிஷா,

இன்னும் கொஞ்சம் கேள்விகள் இருக்கு...

தயாநிதி மாறனுக்கு எந்த பதவி கிடைக்கும்?
மத்திய அமைச்சர் ராஜாவின் கதி என்னவாகும்?
சன் டிவி மதுரையில் ஒளிபரப்புவது யார் மூலமாக நடக்கும் மற்றும் ராயல் கேபிள், சுமங்கலி கேபிள் நிறுவனங்களின் எதிர்காலம் என்ன?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த இணைப்பு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
ஸ்டாலினும், கனிமொழியும் இந்த இணைப்பிற்கு நேரடி ஆதரவு தருவார்களா இல்லை வேறுவிதமான விளைவுகள் இருக்குமா?
கலைஞர் தனது அதிகாரப்பூர்வமான வாரிசாக ஸ்டாலினை அறிவிப்பாரா அல்லது அதிகாரப்பகிர்வை ஏற்படுத்துவாரா?

இப்படியே கேள்விகள் நிறைய மக்களிடமும் உடன்பிறப்புகளிடமும் இருந்தாலும், கலைஞரிடம் தான் அனைத்திற்கும் பதில் உள்ளது.

இந்த சந்திப்பின் முடிவு, கழகத்திற்கு நன்மையாக முடிந்தால், மக்களுக்கும் நன்மையே !

ஜெகதீசன் said...

சன்டீவி டாப் 10 ல தெனாவட்டை முந்தி வாணரம்ஆயிரம் முதலிடம் வந்துருமா?

ஜெகதீசன் said...

நடுநிலையான சன் செய்தியில்

நேற்றுவரை படகுப் போக்குவரத்து நடந்த வேளச்சேரி என்னாச்சு?

துண்டிக்கப் பட்ட சிதம்பரம் நகராட்சி என்ன ஆச்சு?

அரசுக்கு எதிராகப் போராடிய மக்கள் எங்க போனாங்க??

குசும்பன் said...

நா தழு தழுக்க கலைஞர் ஒரு உருக்கமாக கவிதை படிப்பார்! தயாநிதி ஆனந்தம் தொண்டய அடைக்க கண்கள் கலங்கி பேசுவார்!
அழகிரி சிரிச்சுக்கிட்டே போஸ் கொடுப்பார்!

இதுதான் நடக்கும் பாருங்க!!!

Ganesan said...

இனி தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு என்னாகும் ?

ஹா ஹா தினகரன் தாக்கப்பட்டது வெளீநாட்டு சதியாமே

வாக்காளன் said...

1. அப்பாடா , பிரிஞ்சாங்கடா என்று ஆனந்த்த்கூத்தாடியவர்கள் நிலை என்னவாகும்?
2. காதலில் விழுந்தேன் க்கு எல்லாம் அறிக்கை கொடுத்த அம்மா என்ன செய்வார்?
3. இந்த பிரச்சனை முடியாம பார்த்துக்கிட்ட ஜூ வி, குமுதம் எல்லாம் என்ன பன்னும்?
4. பிரிஞ்சதுல குஷியாகிப்போன இட்லி வடை, சட்னி சாம்பார், அவியில் பொரியல் எல்லாம் பாவம் என்ன பன்னும்?

பழமைபேசி said...

//..........
..........
இனி தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு என்னாகும் ?
இப்படி இன்னும் பற்பல.. உங்களுக்கும் பல இதுபோல தோணலாம்....//

இனிமேலாவது, இவிங்களுக்காக உணர்ச்சி வசப்படாம இருந்து, நமக்கு ஒன்னும் ஆகாமப் பாத்துகுவோம் அப்பு! நாம நம்ம பொழப்பை பாக்கலாம்!!
எங்க கிழவி படிச்சுப் படிச்சு சொல்லும்.... தாய் புள்ளைக வெவகாரத்துக்கு நடுப்புல போவக் கூடாதுடான்னு.... மாஞ்சி மாஞ்சி சேதி படிச்சு, மனசு நொந்தது எனக்குத்தான?! :-o(

குசும்பன் said...

அதிஷா நாளையோ அல்லது மறுநாளோ கும்மிடுறேன் சாமி என்று கலைஞர்க்கு ஒரு கடிதம் எழுதுவார்!!!

பழமைபேசி said...

//நீரடித்து நீர் விலகுமா என்ன? //

பாருங்கப்பா, இப்ப இதைச் சொல்லுறாங்க! ஏப்பா, இதை மொதல்லயே சொல்லி இருந்தா நாங்க எங்க பாடு பழமயப் பாக்கப் போயிருப்பமல்லோ?!

Anonymous said...

உங்கள் கேள்விகள் எல்லாம் லாஜிக் ஆனவை என்றாலும் அரசியல் வியாதிகளிடம் என்ன லாஜிக் எடுபடும்?

Unknown said...

அய்யா.......
எனக்கு தெரிஞ்ச உண்மைய மட்டும் சொல்லிபோடறேஞ்சாமி...

ஆடு..மாடு...கோழி எல்லாம் வழக்கம் போல நடக்குஞ்சாமி...ஆமா சொல்லிபுட்டேன்.அம்புட்டுத்தேஞ்சாமி.


(உங்க ராம்போ த ஸ்டீல் பாடிக்கு இந்த ஆராய்ச்சியெல்லாம் தேவைய்ங்களா..?)

வெண்பூ said...

//
ரோஜா காதலன் said...
இந்த சந்திப்பின் முடிவு, கழகத்திற்கு நன்மையாக முடிந்தால்,
//

கழகம் என்பதன் அர்த்தம் கலைஞர் குடும்பம் என்றால் நீங்கள் சொல்வது சரியே..

//
மக்களுக்கும் நன்மையே !
//
ஹி..ஹி..ஹி.. ஹெ.ஹெ.ஹெ....

gulf-tamilan said...

//நா தழு தழுக்க கலைஞர் ஒரு உருக்கமாக கவிதை படிப்பார்! தயாநிதி ஆனந்தம் தொண்டய அடைக்க கண்கள் கலங்கி பேசுவார்!
அழகிரி சிரிச்சுக்கிட்டே போஸ் கொடுப்பார்//
இப்போதுதான் கலைஞர் தொலைக்காட்சியில் வந்தது !!!

விஜய் ஆனந்த் said...

ஹோக்கனேக்கல் குடிநீர்த்திட்டம் என்ன ஆகும்???

சன் டீவில இருந்து கலைஞருக்கு தாவினவங்க கதி??? தவிர கலைஞர்லயிருந்து திரும்பவும் சன்னுக்கு போனவங்க நெலம???

அறிவாலயத்தில இருந்து சன் வருமா...இல்ல கலைஞரா???


இ்னிமே தினகரன்ல கருத்துக்கணிப்பு வருமா??? அப்படியே வந்தாலும் அழகிரியின் இடம்???

அப்போ திரும்பவும் தயாநிதி மத்திய அமைச்சர் ஆயிடுவாரா?? அப்படி ஆயிட்டா, ராஜா??? ஸ்பெக்ட்ரம்???

கலைஞர் சன் டீவி நிகழ்ச்சிகளுக்கும் டிப்ஸ் & ப்ரொடக்ஷன் சப்போர்ட் கொடுப்பாரா???

மழையில பாதிக்கப்பட்டவங்களுக்கு மீட்புப்பணிகளும், உதவிகளும் (நடுவர் கவனத்திற்கு: அதிஷா அல்ல!!!)உடனடியா கெடச்சிடுமா???

குமுதம், சன் & கலைஞர் செய்திகளுக்கு ஆறு வித்தியாசம் கண்டுபி்டிக்கச்சொல்லுமா???

உஸ்ஸ்ஸ்ஸ்...அப்பா...இப்பவே கண்ணக்கட்டுதே....

நாதஸ் said...
This comment has been removed by the author.
நாதஸ் said...

உடைந்த கண்ணாடியை ஒட்டுவது கடினம்.
அப்படி ஒட்டவச்சு ஓட்டு சேர்க்க ஆசை படறாங்க.
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா :D

பரிசல்காரன் said...

அருமையான மேட்டர் தல..

ஜெயிக்கப் போறவங்களுக்கு வாழ்த்துக்கள்!!!

Jackiesekar said...

12.இனி உலகம் எப்படி சுழலும்.

நல்ல வரி அதிஷா

Anonymous said...

தோழர் அதிசா,

1.இனி கலைஞர் டிவியின் கதி என்ன ? ( கலைஞர் செய்திகள் வேறு )

ஊடகங்களில் நிலவும் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்ப சன்டிவி, கலைஞர் டிவி இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படும்.

2. இனி ஜெயா டிவியுடனான சன்டிவியின் நட்பு என்னாவது ?

அப்படி எந்த நட்பும் இதுவரை ஏற்படவில்லை, சன்டிவி தனது தொழில் போட்டியாளர்கள் யாரோடும் இதுவரை நட்பு பாராட்டியது கிடையாது.

3.இனி கேப்டனுக்கு யார் செய்தி வாசிப்பார்கள்?

அம்மையாரின் அறிக்கைகளைப் படிக்க மட்டுமே செயல்படும் ஜெயா ப்ளஸ் தொலைகாட்சி போல கேப்டனும் ஒரு தொலைக் காட்சி ஆரம்பித்துக் கொள்ள வேண்டியதுதான் ( யாரும் பார்த்தாலும், பார்க்க விட்டாலும்).

4.இனி கேப்டனின் திருமுகம் காட்டப்படுமா சன்டிவியில் ?

கண்டிப்பாக, அவரது திரைப்படங்கள், பாடல்கள் ஒளிபரப்பாகும் போது...

5.இனி நரசிம்மா படம் கேடிவியில் காண இயலுமா?

திரைப்படம், பாடல்கள் இதிலெல்லாம் சன்டிவி அரசியல் பார்ப்பதில்லை.

6.இனி ஜெ வின் அறிக்கைகள் ஜெயாடிவியில் மட்டும்தானா ?

ஜெயா ப்ளஸ், வின் டிவி இதெல்லாம் உங்களுக்கு டிவியாகத் தெரியவில்லையா?

7.இனி ஆர்க்கார்ட்டார் கதி என்ன ?

அவருக்குப் பிரச்சினை எதுவும் இருக்காது...

8.இனி மின்வெட்டு , ஸ்ப்பெக்டரம் குறித்தும் , இனி தினகரனில் எப்படி செய்திகள் வெளியாகும் ?

இனி இருப்பது மட்டுமே வெளியாகும், இல்லாததது எதுவும் வெளியாகாது.

9.இனி மானும் மயிலும் கலைஞரில் ஆடுமா ?

கண்டிப்பாக.

10.இனி லக்கிலுக் டிஆர்பி ரேட்டிங் பதிவுகள் போடுவாரா ?
pass

11.இனியும் சன் குழுமம் பார்ப்பன அடிவருடி என்று வலைப்பூக்களில் வசைப்பாடப்படுமா ?

சன் குழுமம் பார்ப்பன அடிவருடும் வேலையைப் பார்க்காது.

12.இனி உலகம் எப்படி சுழலும்.
pass

13.இனி தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு என்னாகும் ?

அது ஏற்கனவே ஒன்றுமில்லாமல் போய்விட்டது தோழர்.

Anonymous said...

ஏண்டா!அம்பிகளா!
என்னடா செஞ்சித் தொலைத்தேள்!
ஏதாவது செஞ்சுக் கலைஞரைத் தொலைச்சுக் கட்ட என்னவெல்லாம் செஞ்சோம்.மாமிகள் ஒன்னும் சரியா செய்யலையே!
மாமி டி.வி. தானே நமக்கப் பெரிய பலம்.ஒன்னும் ஆகாமப் பாத்துண்டுடுங்கோ.எது வேண்ணாலும் செய்யலாமுன்னு வேதத்துலே சொல்லியிருக்கோன்னா!சோ மாமா வண்ட ஐடியா கேளுங்கோ!அவனுக்கும் வயசாயிடுத்தோன்னா!மண்டையிலே வெளியேயுங் காலி,உள்ளேயும் சரியா இல்லே!
போங்கோ!கலி காலம்.ஒன்னும் சரியா வல்லே!இன் டர்நெட்டிலே எழுதுனாப் போதாது.மாமிகளத் தயார் பன்னுங்கோ.அதான் கடசி ஆயுதம்.

பெருமூச்சான் said...

நண்பரே
சன்-லேந்து கலைஞர் டிவி பக்கம் போனாங்களே
அவங்க நிலம?

பெருமூச்சான் said...

நண்பரே
சன்-லேந்து கலைஞர் டிவி பக்கம் போனாங்களே
அவங்க நிலம?

கோவி.கண்ணன் said...

பங்காளிங்க இன்னிக்கு அடிச்சுக்குவாங்க நாளைக்கு பிணைஞ்சிகுவாங்க வேடிக்கைப் பார்த்தவன் முட்டாப்பய ஆகிடுவான்.

:)

Thamira said...

ஒருநாள் எனக்கும் ரமாவுக்கும் பயங்கர சண்டை. அடிச்சுக்கிற அளவுபோயிடுச்சு.. &^*&^%$#%^&*^)_(* வார்த்தைகள் வேறு.....

மறுநாள், காலையில் படுக்கையிலிருந்து முத்தத்தோடு எழுப்பினாள். ஏனோ காதல் ததும்பியது, கிளம்பும்மா சினிமாவுக்கு போகலாம் என்றேன்.....

Thamira said...

எப்பிடியோ இவுங்க சேந்ததுல எனக்கு @$@#$@$@$# ங்கிற முறையில சந்தோஷம்தான்ப்பா.. எனது முந்தைய பின்னூட்டத்துக்கு புத்தகம் பரிசு வரலைன்னா தெரியும் சேதி.!

அத்திரி said...

என்ன தாமிராஇங்க வந்துமா தங்கமணி சங்கதி...))))))))))))))

Anonymous said...

ஆடி மாசம் ஒழுங்கா காதடிக்க்ரதில்ல, அய்ப்பசி, கார்த்திகை மாசம் ஒழுங்கா மழ்யடிக்கிரதில்ல, வைகையாறு, காவிரியாதிலேல்லாம் வெள்ளம் வாறதில்ல. பட்டமெல்லாம் மாறிப்போச்சு இதுல்ல எவன் எவன்கூட சேந்தா எனக்கென்ன. நானே வானத்தப் பாத்துக்கிட்டு இருக்கேன். போங்கப்பே போயி இவிங்கலப் பத்தி பேசுறத விட்டு புள்ள புட்டிகளை படிக்க வைங்கப்பேய்...

Anonymous said...

ஒராளு தமிழ்நாட்டுல நம்பெர் ஒன் பணக்காரன், ஒராளு தமிழ்நாட்டுல நம்பெர் ஒன் அரசியல்வாதி. யார் லாபத்திற்காக யார் காலில் யார் விழுந்தான்களோ. எப்படியும் அவுங்களுக்கு நல்ல லாபம் கெடைக்கும். மக்களுக்கு நாமம் கெடைக்கும். அய்யோ நாமம் பாப்பனுதே அதன்னால மக்களுக்கு வேற என்ன கெடைக்கும்....

Anonymous said...

superb

வாக்காளன் said...

இது கருணாநிதி , அவர் பேரன்கள் வீட்டு பிரச்சனை.. அதை பற்றி ஏன் பக்கம் பக்கமாக பத்திரிக்கைகள் எழுத வேண்டும்.. நீங்கள் விவாதிக்க வேண்டும்?

முதல்வரின் ஆட்சியில் நடக்கும் தவறுகள், சறுக்கல்கள் பற்றி எழுதுங்கள்.

எல்லோர் குடும்பத்திலும் நடக்கும் உள்ளடி சன்டை தான் இது.. எல்லோருடை குடும்பதிலும் ஒரு கட்டத்திலும் சேர்ந்துவிடுவது போல இவர்களும் சேர்ந்துவிட்டார்கள்..

உங்களின் 13 வது கேள்வி மட்டுமே தெளிவான கேள்வி.. மற்ற கேள்விக்கெல்லாம் டெம்ளேட் பதில் தான். கீழே உள்ள 4 பதிலில் எது வேண்டுமோ போட்டுக்கலாம்..

1. அரசியலில் இதெல்லாம் சகஜம்
2. குடும்ப சன்டையில் இதெல்லாம் நடக்கும்.. வீட்டுக்கு வீடு வாசப்படி
3. இந்த கேள்விகள் தான் இப்போ நாட்டுக்கு முக்கியமா?
4. நமக்கு தேவையற்ற கேள்விகள்

மணிகண்டன் said...

வாக்காளன், உங்க குடும்ப சண்டைல மூணு பேர கொளுத்தி விட்டு இருக்கீங்களா ? வீட்டுக்கு வீடு வாசபடின்னு எழுதறீங்களே.

அதே சமயம், இது ஒன்னும் அவ்வளவு பெரிய விஷயம் இல்ல. கொஞ்சம் மதுரை மக்களுக்கு தொல்ல கம்மி. அத தவிர இவங்க சேர்ந்தாலும், சேராட்டியும் நமக்கு ஒன்னும் பாதிப்பு இல்ல.

- இரவீ - said...

பாகபிரிவினை பத்தி பேச்சு வார்த்தை நடக்குதோ ? (தமிழ் நாடு பத்தாது - குடும்பம் கொஞ்சம் பெருசு - நாட்டை பிரிச்சு குடுக்க பரிந்துரைக்கவும்)

பாகபிரிவினைய பொறுத்து மாற்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

Anonymous said...

பாகபிரிவினை பத்தி பேச்சு வார்த்தை நடக்குதோ ? (தமிழ் நாடு பத்தாது - குடும்பம் கொஞ்சம் பெருசு - நாட்டை பிரிச்சு குடுக்க பரிந்துரைக்கவும்) அதுதான் ஈழத்தையும் கேக்கிறாரில்லே
தெய்வம் அவரூட்டு
குடும்ப சண்டைல மூணு பேர் என்ன 300 பேரைக்கொளுத்தினாலும் பரவாயில்லைங்கோ விட்டுத் தள்ளுங்கோ ஒண்ணா இருந்து எத்தினைப்பேரக் கொழுத்தப் போறாங்கெண்ணு கணக்கா எண்ணிக் கொள்ளுங்கோ கருமாதிக்கு காசு கொடுப்பாருங்கோ சவப்பெட்டியும், தப்பட்டையும் வெச்சு இருக்கீங்களா ?
குனிஞ்சு கொடுக்கிறவன்

வால்பையன் said...

//1.இனி கலைஞர் டிவியின் கதி என்ன ? ( கலைஞர் செய்திகள் வேறு )
2. இனி ஜெயா டிவியுடனான சன்டிவியின் நட்பு என்னாவது ?
3.இனி கேப்டனுக்கு யார் செய்தி வாசிப்பார்கள்?
4.இனி கேப்டனின் திருமுகம் காட்டப்படுமா சன்டிவியில் ?
5.இனி நரசிம்மா படம் கேடிவியில் காண இயலுமா?
6.இனி ஜெ வின் அறிக்கைகள் ஜெயாடிவியில் மட்டும்தானா ?
7.இனி ஆர்க்கார்ட்டார் கதி என்ன ?
8.இனி மின்வெட்டு , ஸ்ப்பெக்டரம் குறித்தும் , இனி தினகரனில் எப்படி செய்திகள்
வெளியாகும் ?
9.இனி மானும் மயிலும் கலைஞரில் ஆடுமா ?
10.இனி லக்கிலுக் டிஆர்பி ரேட்டிங் பதிவுகள் போடுவாரா ?
11.இனியும் சன் குழுமம் பார்ப்பன அடிவருடி என்று வலைப்பூக்களில் வசைப்பாடப்படுமா ?
12.இனி உலகம் எப்படி சுழலும்.
13.இனி தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு என்னாகும் ?//


கூடவே வேடிக்கை பார்க்கும் மக்களின் கதியை பற்றியும் கேட்டிருக்கலாம்!

வால்பையன் said...

யார், யாரை ஆதரிக்க போகிறார்கள் என்பதை பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஆனால் இருவரும் மாறி மாறி செய்த குற்றசாட்டுகளுக்கு விடை என்ன?
வழக்கம் போல மறந்துவிட வேண்டியது தானா?