பெண்களுக்கு அலைப்பேசியில் தொந்தரவு செய்வோர் மீது புகார் கொடுக்க‌

>> 05 February 2008

பெண்களுக்கு தொலைப்பேசி மற்றும் அலைப்பேசியில் தொந்தரவு செய்வோர் மீது புகார் கொடுக்க‌

1.தெரியாத‌ அழைப்புகள் அடிக்கடி வர நேர்ந்தால் உடனடியாக உங்கள் தொலைபேசியில் பொறுத்தி அந்த எண் மற்றும் நேரம் ஆகியவற்றை குறித்து கொள்ளவும்.

2.அலைபேசியில் உங்களுக்கு வரும் மற்றும் அழைப்புகள் பற்றிய விபரங்களை பத்திரமாக வைத்து கொள்ளவும்.

3.இது போன்ற ஆட்களிடம் அதிக நேரம் பேசாதீர்கள்

4.உங்களை பற்றிய விபரங்களை தர வேண்டாம்.

5.தவறான அழைப்பு பற்றிய விபரங்களுடன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு புகார் தரவும்.

6.நீங்கள் தரும் விபரங்கள் மிகவும் முக்கியமானவை அதை ஒரு போதும் உங்கள் அலைபேசியில் இருந்து அழிக்க வேண்டாம்.

7. நேரில் புகார் தர இயலாத/விரும்பாதோர் எண் : 100 ஐ தொடர்பு கொள்ளலாம்.

Read more...

ஒரு வினாடி

ஒரு சிறிய‌ க‌தை :

ஜென் துற‌வி ஒருவ‌ரை தூக்கிலிட‌ உத்த‌ர‌விட்ட‌ அர‌ச‌ன், துற‌வியை நோக்கி "உன்க்கு இன்ன‌மும் 24 ம‌ணி நேர‌ம்தான் இருக்கிற‌து,நீ அதை எப்ப‌டி வாழ‌ விரும்புகிறாய் ? " என‌ கேட்டான். துற‌வி சிரித்து கொண்டே "எப்போதும் வாழ்வ‌து போல் நொடிக்கு நொடி , என்னை பொறுத்த‌வ‌ரையில் இந்த‌ க‌ண‌த்துக்கு மேல் எதுவும் கிடையாது , என‌வே என‌க்கு 24 ம‌ணி நேர‌மும் 24 வ‌ருட‌மும் ஒன்று தான், நான் எப்போதும் கணத்துக்குக் கணம் வாழ்ந்து வந்திருப்பதால் எனக்கு இந்தக் கணமே அதிகம் தான் , 24 மணி நேரம் என்பது மிக அதிகம் , இந்த ஒரு கணமே போதும்" என்றார்.

படித்தது : ஓஷோவின் எதிர்ப்பிலேயே வாழுங்கள்

இக்கதையை படித்தவுடன் இன்றைய நகர சூழலிலே இது போல் ஒரு நொடியேனும் நான் வாழ்கிறேனா? எனது தின அலுவல்களை ( சென்னையின் பெரும்பாலான மக்களின் அலுவல்களும் இது போன்றவயே ) சிந்தித்து பார்க்கையில் இது சாத்தியமா என எண்ணத்தோன்றியது.

Read more...

என்னைப் பற்றி - ஒரு சிறு குறிப்பு

என்னைப்பற்றி :


இயற்ப்பெயர் வினோத் . தமிழில் வெளியாகும் ஒரு வாரப்பத்திரிக்கையில் நிருபர். பிறந்த வளர்ந்த ஊர் கோவை , கோட்டைமேடு . படித்தது கோவை மிக்கேல் மேல்நிலைப்பள்ளியில் . பட்டயபடிப்பு ராமகிருஷ்ணா பாலிடெகனிக் , துடியலூர் .

இப்போது பணி நிமித்தமாய் சென்னை , முகப்பேரில் தஞ்சம் .



பெயர்க்காரணம் :

என்னை நேரில் சந்திக்கும் பெரும்பாலனவர்கள் முதலில் கேட்கும் கேள்வி அது என்ன அதிஷா என்பதாகத்தான் இருக்கிறது .

அதிஷா என்பது ஒரு புத்தமத துறவியின் பெயர் . அதிஷா குறித்து நான் முதன்முதலில் படித்தது , ஓஷோவின் ஒரு புத்தகத்தில் (நாரதரின் பக்தி சூத்திரம் ) . எனக்குத் தெரிந்து அவரைப் பற்றி ஆங்கிலத்திலும் இந்திய மொழிகளிலும் புத்தகங்கள் மிகக்குறைவே. ஓஷோவை பின்பற்றுபவர்கள் மத்தியில் அவர் பிரபலம். ஓஷோ அவரைக்குறித்தும் அவரது தியான முறைகள் குறித்தும் பல அவரது பல புத்தகங்களிலும் குறிப்பிட்டிருக்கிறார். இவரும் புத்தரைப்போலவே அரசக்குடும்பத்தில் பிறந்து , பின் புத்தமதத்தை பின்பற்றி துறவியானார். அவர் பிறந்தது கி.பி.980 , மறைவு - கி.பி.1052 , அவர் பிறந்தது அன்றைய இந்தியாவோடு இணைந்திருந்த பெங்காலில் என்றாலும் , இப்போது அவ்விடம் பங்களாதேஷில் இணைந்திருக்கிறது. அவரது தியான முறைகள் தந்த்ரா(tantra) முறையை ஒத்த ஒன்று .

அவரது கோட்பாடுகள் புத்தரின் கடினமான வழியிலன்றி மிக எளிமையாய் தியானம் மற்றும் ஞானத்தை மக்களிடையே எடுத்துச்சென்றது. அதை இந்தியாவில் இருந்து வடக்காக பயணித்து செல்லும் வழியெங்கும் கற்ப்பித்தார். தனது வாழ்வில் கடைசி நாட்களில் மத்திய திபெத்தில் ஆஸ்ரமம் அமைத்து வாழ்ந்தார். தனது 72ஆம் வயதில் மறைந்தார். 1978ல் அவரது அஸ்தி திபெத்திலிருந்து பங்களாதேஷிற்கு எடுத்து வரப்பட்டு டாக்காவில் உள்ள மிகப்பிரபலமான தர்மராஜிகா புத்த விகார் என்னும் புத்த மடத்தில் வைக்கப்பட்டது . அவர் புத்தமதம் குறித்து 200க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். அந்த புத்தகங்களே பிற்காலத்தில் சீனாவிலும் , அதைத்தாண்டியும் புத்தமதம் பரவ உதவியதாக கருதப்படுகிறது. அவர் பல சமஸ்கிருத புத்தகங்களை திபெத்திய மொழியில் மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார். அதேபோல திபெத்திய மருத்துவமுறைகள் குறித்த புத்தகங்களும் எழுதியுள்ளார். அவர் தன் வாழ்நாளில் இயற்பியலிலும் தேர்ந்தவராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரைக்குறித்து மேலும் அறிந்துகொள்ள கீழ்க்காணும் புத்தகம் கிடைத்தால் படித்து தெரிந்து கொள்ளலாம். (அப்புத்தகம் கிடைத்தால் தெரிவிக்கவும் நானும் பல நாளாய் தேடி வருகிறேன் ) Lamp for the Path to Enlightenment, ரின்சென் .

அவர் குறித்தும் அவரது தியான அணுகுமுறைகள் குறித்தும் மேலும் அறிந்து கொள்ள ஆர்வமிருப்பின் என்னை தொடர்புக்கொள்ளலாம்.

எனது பதிவுகள் பற்றிய உங்களது விமர்சனங்களை எனக்கு மின்னஞ்சல் செய்யவும் என்னை தொடர்பு கொள்ளவும் dhoniv@gmail.com என்ற முகவரிக்கு மடலிடவும் .


அதிஷா

Read more...

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP