Pages

22 March 2008

சிறுதொடர்கதை : வலியில்லா வலி பாகம் 3

வலியில்லா வலி பாகம்-3 ;

நான் கடைசியாக பார்த்தது அவளையும் அந்த லாரியையும்தான் , நடு ரோட்டில் நின்று கொண்டிருந்த அவளை காப்பாற்ற முயற்சி செய்தது மட்டுமே என் நினைவில் இருந்தது , பிறகு என்ன நடந்தது என்பது எவ்வளவோ முயன்றும் ஞாயபகத்திற்கு வரவில்லை . நான் எங்கிருக்கிறேன்? , எனக்கு என்ன ஆயிற்று? ஐயோ அவளுக்கு? ஒன்றுமே புரியவில்லை , என்னால் என் உடலைக்கூட உணர முடியவில்லை , ஆனால் உடலெங்கும் வலி. அவளுக்கு என்ன அயிற்றோ , மேலும் வலித்தது அதிகமாக மிக அதிகமாக.........

என்னை சுற்றி நான்கைந்து குரல்கள் ஒலிப்பதை என் காதுகள் உணர்கின்றன , எனக்கு நன்கு அறிமுகமான ஒரு சிறுவனின் குரல் , '' அண்ணா இது நம்ம மெக்கானிக் அஸிஸ்டென்டுணா !! '','' டேய் உயிர் இருக்கானு பாரு ? '' இது டிரைவர் , '' அண்ணா நெறய ரத்தம் போயிருக்கேணா , நீயே பாருணா .... '' , '' இது தாங்காதுடா '' , இப்படியே இவர்கள் பேசிக்கொண்டிருக்க மனமோ அதில் சுவாரசியம் இல்லாமல் அவளுக்கு என்ன ஆயிற்றோ என சிந்தனை செய்கிறது . இந்த உயிர் போகும் வலி வேறு கொல்கிறது . புதிதாக ஒரு குரல் ஆஆ!!!! இது அவள் குரல் போல்........... இல்லை அவள் குரலேதான் . என் வலியெல்லாம் மறைந்தது , இனி நான் பிழைத்து விடுவேன்,இனி நான் பிழைத்து விடுவேன் , இனி நான் பிழைத்து விடுவேன் .........................................


என் உடலெங்கும் பரவியிருந்த வலி இப்போது இல்லை ,அவள் பேசுவதும் இப்போது நன்கு கேட்கிறது , ''நான் கடைசியாக பார்த்தது அவளையும் அந்த லாரியையும்தான் , நடு ரோட்டில் நின்று கொண்டிருந்த அவளை காப்பாற்ற முயற்சி செய்தது மட்டுமே என் நினைவில் இருந்தது , பிறகு என்ன நடந்தது என்பது எவ்வளவோ முயன்றும் ஞாயபகத்திற்கு வரவில்லை . நான் எங்கிருக்கிறேன்? , எனக்கு என்ன ஆயிற்று? ஐயோ அவளுக்கு? ஒன்றுமே புரியவில்லை , என்னால் என் உடலைக்கூட உணர முடியவில்லை , ஆனால் உடலெங்கும் வலி. அவளுக்கு என்ன அயிற்றோ , மேலும் வலித்தது அதிகமாக மிக அதிகமாக, இதுதான் உயிர் போகும் வலியோ .

என்னை சுற்றி நான்கைந்து குரல்கள் ஒலிப்பதை என் காதுகள் உணர்கின்றன , எனக்கு நன்கு அறிமுகமான ஒரு சிறுவனின் குரல் , '' அண்ணா இது நம்ம மெக்கானிக் அஸிஸ்டென்டுணா !! '','' டேய் உயிர் இருக்கானு பாரு ? '' இது டிரைவர் , '' அண்ணா நெறய ரத்தம் போயிருக்கேணா , நீயே பாருணா .... '' , '' இது தாங்காதுடா '' , இப்படியே இவர்கள் பேசிக்கொண்டிருக்க மனமோ அதில் சுவாரசியம் இல்லாமல் அவளுக்கு என்ன ஆயிற்றோ என சிந்தனை செய்கிறது . இந்த உயிர் போகும் வலி வேறு கொல்கிறது . புதிதாக ஒரு குரல் ஆஆ!!!! இது அவள் குரல் போல்........... இல்லை அவள் குரலேதான் . என் வலியெல்லாம் மறைந்தது , இனி நான் பிழைத்து விடுவேன்,இனி நான் பிழைத்து விடுவேன் , இனி நான் பிழைத்து விடுவேன் .........................................

என் உடலெங்கும் பரவியிருந்த வலி இப்போது இல்லை ,அவள் பேசுவதும் இப்போது நன்கு கேட்கிறது , '' சாரிமா.... ப்ளீஸ் புரிஞ்சுக்கோ!!! '' அவள் சாகவில்லை,அவள் சாகவில்லை,அவள் சாகவில்லை , என் மனம் மகிழ்ச்சியால் குதிக்கிறது . அவள் தொடர்ந்தாள் '' ப்ளீஸ்மா.... இங்க ஒரு ஆக்ஸிடெண்ட் டா!!.....................................ம்ம் வலையூர் பாலத்துக்கிட்ட , எனக்கு ஒன்னுமில்ல , ப்ராமிஸ்மா!!! , எனக்கு ஒன்னுமில்லடா , தினமும் ஒரு லூசு நான் காலேஜ் வரும் போது என்னை பாத்து சிரிப்பானு சொல்லல , இன்னைக்கு பாலம் வழியா வர்ரப்போ அவன் திடீர்னு ஓடி வந்து என்னை தள்ளி விட்டுட்டு பின்னால வந்த லாரில விழுந்துட்டான்டா .............., ஏன்னு தெரிலடா , எங்கிட்ட கேட்டா...............தெர்லமா ப்ளீஸ்....... , நான் இன்னைக்கு வர்ல ............வேண்டாம்மா !! ப்ளீஸ் ......... ம்ம் மீ டூ ........ ஐ லவ் யூ மா!!!!! '' , அவள் முடிக்க எனக்கு மீண்டும் வலிக்கிறது , உடலில் அல்ல உள்ளே உள்ளே உள்ளே... அதிகமாய் இன்னும் இன்னும் அதிகமாய் இன்னும் இன்னும் இன்னும் வலிக்கிறது , என்னால் இப்போது கேட்கவும் இயலவில்லை , ஆனால் இன்னும் கூட இருக்கிறது அந்த உயிர் போகும் வலி இல்லை உயிர் போக்கும் வலி .

முடிந்தது.

18 March 2008

சிறுதொட‌ர்க‌தை : வலியில்லா வலி ‍‍‍பாக‌ம் 2

வலியில்லா வலி பாகம்‍ 2
காலையிலிருந்து இதுவரைக்கும் நான் எதுவுமே சாப்பிடவில்லை . பசிக்கவில்லை , இது காதலால் வந்த பசியின்மை எல்லாம் ஒன்றும் இல்லை . இரவு கொஞ்சம் அதிகம் வேலை செய்யும் தவறுக்கு தண்டனை . அது நமக்கு தேவை இல்லை இப்போழுது . அதை பின்பு பார்ப்போம் , எனக்கு என்றுமே என் உடைகளை பற்றியோ என் உடல் முக அழகை பற்றியோ கவலை இருந்ததே இல்லை . இன்று கொஞ்சம் அதை பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கிறது . இருந்தாலும் அவள் என் மனதை தானே காதலிக்கிறாள் அவளுக்கு தெரியாதா மெக்கானிக் வேலை செய்பவன் எப்படி இருப்பான் என்று அதனால்தான் இத்தனை நாளும் என்னை பார்த்து புன்னகையும் கடைக்கண் பார்வயையும் காட்டி வந்தாள் என நானே என்னை தேற்றிக்கொண்டேன் .

அந்த சைக்கிள் வெகு தொலைவில் வருவது தெரிந்தது . அதன் பின்னே ஒரு லாரியும் வளைந்து வளைந்து வருவது நன்றாக தெரிந்தது . சுற்றிலும் வயல்வெளி என்பதால் அவள் அணிந்திருந்த சிவப்பு உடை கூட அழகாக தெரிந்தது . அவள் இப்பொழுது என்னை நோக்கி மெல்லியதாக சிரிப்பாள் , அதுதான் சமயமென்று அவளிடம் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் என கூறி என் காதலை சொல்லி விட வேண்டியதுதான் .என் மனது இன்னும் ஏதேதோ அவளிடம் பேச திட்டம் போடுவதை என்னால் தடுக்க முடியவில்லை. எனக்கு அது கூட பிடித்திருந்தது .
என் மனம் என்றுமே இது போல் இருந்ததில்லை ,அவளும் அந்த லாரியும் அருகருகே வருவதை பார்க்கையில் மனதின் உள்ளே வருகின்ற வலியை உணர முடிந்தது . என் வாழ்விலேயெ அன்றுதான் நான் மனதின் வலியை உணர்கிறேன் . ஆனாலும் அவ‌ளை பார்க்க‌ நினைக்கும் என் ஆவ‌ல் அதையும் ம‌ற‌க்க‌டிக்கிற‌து .

இதோ 30 அடி தூரத்தில் என் தேவதை , என்னால் அவளை இப்போது நன்றாக பார்க்க முடியவில்லை என்றாலும் , நான் என்னையும் அறியாது மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக உறைய ஆரம்பித்திருந்தேன் . என்னால் என்னை சுற்றி இருப்பவை எதையுமே உணர முடியவில்லை , நான் எங்கு நிற்கிறேன் என்று கூட ஞாயபகத்திற்க்கு வரவில்லை . இந்த பிரபஞ்சமே இருளானது போன்றும் அங்கே அவள் மட்டும் மங்கா ஒளி தரும் நட்சத்திரம் போன்றும் எனக்கு தெரிகிறது .
ச‌ட்டெனெ சைக்கிளை நிறுத்திவிட்டு த‌ன‌து புத்த‌க‌ப்பையிலிறுந்து அந்த‌ சிறிய போனை எடுத்து ஒரு முறை பார்த்து விட்டு அதை காதில் வைத்து பேச‌ ஆர‌ம்பித்திருந்தாள். என் ம‌ன‌ம் இப்போது இன்னும் அதிக‌மாக‌ வ‌லிக்க‌ ஆர‌ம்பித்திருந்த‌து . இதய‌ம் ப‌ட‌ப‌ட‌ என அடிப்ப‌து என‌க்கு மேலும் ப‌ய‌த்தை அதிக‌ரித்திருந்த‌து . அங்கே அவ‌ள் அந்த போனில் பேசி கொண்டிருக்க‌ பின்னால் அந்த‌ லாரி மிக‌ வேக‌மாக‌ அவ‌ளை நோக்கி வ‌ர‌........................................... ஆஆஆஆஆஆஆஆஆஆ.......................
தொட‌ரும்...................................................................
இக்க‌தையின் முடிவு அடுத்த‌ மூன்றாம் பாக‌த்தில் , உங்க‌ள் ம‌ன‌தில் இக்க‌தையை எப்படி முடிப்ப‌து என‌ எண்ண‌ம் தோன்றினால் பின்னூட்ட‌தில் தெரிவிக்க‌லாமே!!!!

17 March 2008

சிறுதொட‌ர்க‌தை : வலியில்லா வலி ‍‍‍பாக‌ம் 1

வலியில்லா வலி ‍‍‍பாக‌ம் 1 :
தினமும் அந்த பாலத்தை சரியாக 9.00 மணிக்கு கடப்பதை நான் பழக்கமாக கொண்டிருந்த்தேன் . அது என் வாழ்க்கையின் ஒரு பாகமாக ஆகிவிட்டிருந்தது . இப்போது மணி என்ன , தெரியவில்லை , அடுத்த மாதத்திற்க்குள் பணம் சேர்த்து கடிகாரம் வாங்க வேண்டும் என எண்ணிய படி எதிரில் வந்த அந்த படித்த பணக்காரரிடம் "ஐயா மணி என்னங்க? " என நான் வினவ அவர் என்னை ஒரு முறை மேலும் கீழும் அளந்தபடி " 8.50 " என்றது அவர் வாய் மட்டும் சொன்னது அவர் கண்களோ இன்னமும் என் அழுக்கடைந்த உடைகளையும் சவரம் செய்யாத என் தாடியையும் மேய்ந்து கொண்டிருந்ததை என்னால் நன்றாக உணர முடிந்தது , அவன் மனது என்னை பைத்தியக்கரன் என எண்ணுவதை உணர முடிந்த்தது . இவ்வேளையிலும் அடடா இன்னும் 10 நிமிடம் தானே இருக்கு என்று மனது மகிழ்ச்சியால் துடிப்பதையும் என்னால் உணர முடிந்தது .

அவ‌ளை முத‌ன் முத‌லில் அந்த‌ பால‌த்தில் தான் பார்தேன் , அது ஒன்றும் பெரிய பாலம் இல்ல ஒரு ஆள் உய‌ர‌ம் தான் இருக்கும் .ஊருக்கு ஒதுக்கு புரமாய் இருக்கும் . பாலத்தின் கிழே பெரிய சாக்கடை மட்டும் தான் , ஒரு நாள் அவசரதிற்க்கு மறைவா ஒதுங்க போயி வெளிய வர கண் முன்னால அவள் ,அவள் என்னை பார்த்து சின்னதா சிரித்து விட்டு போக , அன்றைக்கு உறைந்தவன் தான் இன்னமும் உருகலையே , தினமும் அவளை பார்க்கவில்லை எனில் நான் ஒரு மிருகமாய் மாறி விடுவது எனக்கே தெரியும் . அவளை பற்றி இது வரை ஒன்றும் தெரியாது . ஊர் பெயர் விலாசம் எதுவும் தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை . அவள் தினமும் காலை 9.00 மணிக்கு சரியாக வந்து விடுவாள் , நான் அவளுக்கு அரை மணி நேரம் முன்பே வந்து காத்திருப்பேன் . அவள் என்னை கடக்கும் போது காட்டும் புன்முறுவலுக்காகவும் என் மேல் விழும் ஒரு நொடி பார்வைக்காகவும் அரை மணி நேரம் என்ன 500 வருடங்கள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் . நானும் எத்தனையோ நாள் என் காதலை அவளிடம் சொல்லி விட நினைப்பதுண்டு ஆனால் அவளை கண்டாலே உறைந்த பனி கரடி போல் செயலற்று போகிறேன் . இன்றோடு நான் அவளைப் பார்த்து 1 வருடம் முடிய போகிறது . இன்று எப்படியாவது என் காதலை அவளிடம் சொல்லியே தீர்வது என்ற உறுதியோடு வந்திருக்கிறேன் . நிச்சயம் சொல்லி விடுவேன் . நிச்சயம் சொல்லி விடுவேன் .
அந்த சைக்கிள் தூரத்தில் வருவது தெரிய ஆரம்பிக்க இதயம் இன்னும் வேகமாக துடிப்பது கூட நன்றாக தான் இருந்தது . இதோ அவள் வந்து விட்டாள். என்றைக்கும் போல் இன்றும் ஏமாற்றம்தானா ?
தொட‌ரும்............................................................?