Pages

27 May 2008

சீனாவின் இன்றைய நிலை - சித்திரப்பதிவு


சில கேலிச்சித்திரங்கள் 50 பக்க எழுத்துக்களால் கூட விளக்க இயலாத பல உண்மைகளை மிகச்சாதாரணமாக கூறி விடும் . அது போன்ற ஒரு சித்திரமே இது . இன்றைய சீன அரசின் திபெத்திய மக்கள் மீதான அணுகுமுறையை எடுத்து காட்டும் இந்த சித்திரம் என் நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியது . மின்னஞ்சலில் அனுப்பிய நண்பருக்கு நன்றி.









































26 May 2008

உண்மைத்தமிழனின் '' புனிதப்போர் '' : குறும்பட விமர்சனம்

இன்றைய ஊடங்கங்களில் பெண்ணியம் பேசும் ஆண்கள் மிகச்சிலரே , அப்படிப் பேசினாலும் அவன் தனிமைப்படுத்தபடுகிறான் . அப்படிபட்டதொரு சமூகத்தில் பெண்ணியத்தை பறைச்சாற்றும் ஒரு ஆணின் உணர்வுகளையும் அவனை இவ்வாணாதிக்க சமுதாயம் எப்படி எதிர்கொள்கிறது என மிக மிக குறைந்த நேரத்தில் ( 10 நிமிடம் என எண்ணுகிறேன் ) அழகாகவும் மிக நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் .

ஆரம்ப காட்சி ஒரு மேடையிலிருந்து துவங்குகிறது , அங்கே ஆறு ஆண்கள் வந்து அமர படம் துவங்குகிறது . முதலில் ஒருவர் ( யார் கண்ணன் ) பேச துவங்குகிறார் , அவர் நாட்டில் பெண்ணியம் பேசுவோர் அதிகரித்துவிட்டதாகவும் , அவர்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்றும் , ஆண்களே உயர்ந்தவர்கள் என்றும் , அதற்காத்தான் இங்கே நாம் கூடியுள்ளோம் எனக் கூறி அமர்கிறார் . அடுத்தடுத்து வருபவர்களும் அதை முன்மொழிவதோடு பெண்கள் மூட்டைப்பூச்சிகள் , நசுக்கப்படவேண்டியவர்கள் , அவர்களுக்கு பாவம் பார்த்தால் நம்மை அழித்து விடுவார்கள் , பெண்கள் எப்போதும் ஆண்களை விட தாழ்ந்தவர்கள், நம் துன்பங்களுக்கு அவர்களே காரணம் என ஒருவர் பின் ஒருவராக பேசி அமர்கின்றனர் . இவ்வாறு ஒவ்வொருவராக பேசி அமர அவர்களுக்கு முறையே மோர்,இளநீர்,பெப்சி,கோக் தரப்படுகிறது . அந்த வரிசையில் கடைசியாக ஒருவர் பேசுகிறார் , அவர் பெண்களை பற்றி உயர்வாக பேசுகிறார் , பெண்கள் சிறந்தவர்களென்றும் அவர்கள் நமக்கு சமமானவர்கள் என்றும் பேச சக பேச்சாளர்கள் அதிருப்தி அடைகின்றனர் , அவர் தன் பேச்சை முடித்துக்கொண்டு அவரது இருக்கையில் அமர அவர் முன்னால் சில பாட்டில்கள் வைக்கப்படுகிறது , '' மவனே இப்டியே பேசின உனக்கு ஆசிட்தான் '' என கூட்டத்திலிருந்து ஒரு ஒலி கேட்க , படம் முடிகிறது .

இப்படத்தின் சிறப்பம்சமாக நான் கருதுவது படத்தில் யாருடைய முகமும் காட்டப்படவில்லை , நடிகர்களது உடலசைவுகளும்,அவர்களது வாயும் மட்டுமே காட்டப்படுகிறது . படம் பார்த்த எல்லோருக்குமே அது பிடித்திருக்கும் என எண்ணுகிறேன் . அதே போல் ஒவ்வொரு முறை குளிர்பானங்கள் வைக்கும் போதும் நம் மனதிலொரு சிறிய சஸ்பென்ஸ் இழையோடுவது மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது . அந்த முகமறைப்பு ஒளிப்பதிவு யுக்தியும் அருமை .இப்படத்தின் பெரிய குறை அதிகப்படியான வசனங்கள் , சொல்ல வந்த கருத்தை அதிகம் ஒலிக்க செய்ததைவிட சிறிது ஒளிக்கவும் செய்திருக்கலாமெனத்தோன்றுகிறது . அந்த ஆசிட் காட்சியும் ஏனோ கதையோடு ஒட்டவில்லை ( அந்த முடிவு பலரை நகைக்க வைக்கலாம் )மற்றபடி படம் அருமையாக உள்ளது . உண்மைத்தமிழனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் .

எந்த ஒரு கலைஞனுக்கும் சரியானதொரு களம் அமையும் வரை அவனது திறமைகள் வெளியுலகிற்கு தெரிவதில்லை .

நம் சக பதிவரின் குறும்படத்தை வெளியிட்ட மக்கள் தொலைக்காட்சிக்கு பதிவுலக நண்பர்கள் சார்பாக நன்றிகள்

24 May 2008

தொடர்புக்கு

மின்னஞ்சல் - dhoniv@gmail.com

உரையாட - 9500061607

21 May 2008

சென்னை வலைப்பதிவருங்க சந்திப்பு 18.05.2008

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு 18.05.2008


வலைப்பதிவருங்க சந்திப்பு சென்னைல நடக்கப்போறது எனக்கு 18ம் தேதி சாயங்காலம் வரைக்கும் தெரியாது , ஒரு வாரமா கொஞ்சம் வேலை அதனால தமிழ்மணம் பக்கமும் தல வைக்கல,சந்திப்பு மேட்டரும் தெரியாது , ஒரு நாலரை மணிக்கு பாலாண்ணாகிட்டருந்து கால் , தம்பி கிளம்பிட்டியானு !! எனக்கு டூமில்னு இருந்துச்சு !!! எங்கனு கேட்டா ............ சந்திப்பு , காந்தி சிலைங்கறாரு , நான் , அண்ணே என்னணே சொல்லவே இல்லனு சொன்னதும் ஒகே பரவால உடனே கிளம்பி வானுட்டாரு .



படபடனு கிளம்பி காந்தி சிலை போய் சேர மணி 6.30 , காந்திசிலை பின்னால போயி நம்மாளுங்களுக்கு வலை வீசினா யாரையும் காணோம் , ஒரு உருவத்த மட்டும் எங்கயோ பாத்த மாதிரி இருக்கேனு பக்கத்துல போயி பார்த்தா பாலாண்ணா!!!!!!!!! ஆள் அடையாளமே தெர்ல , தலைல ஒரு கேப் , மீசை ஆள் அடையாளமே தெர்ல , அண்ணேனு கூப்பிட்டு முகத்தப் பாத்தப் பிறகுதான் அடையாளமே தெரியுது . பாலாண்ணாப் பக்கத்துல ஒரு பொண்ண உக்கார வச்சு பேசிட்டுருந்தாரு , அப்புறம்தான் தெரிஞ்சுது அந்தப் பொண்ணு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆளுனு , அண்ணன் ரொம்ப சீரியஸா எதோ பேசிட்டுருந்தாரு , நமக்குதான் சீரியசுனாலே புடிக்காதே , அப்டிக்கா அங்கருந்து ஜகா வாங்கினு ஜோதில கலக்கலாமுனு நம்ம சனங்கள தேடுறேன் யாருமே தெரிஞ்ச முகமாவே இல்ல , இன்னாடாது பேஜாராகீதேனு சுத்தும் முத்தும் பாத்தா நம்ம மு.க !!!!!!!

'' மு.க'' னா '' மு.கருணாநிதி '' ஐயா இல்லீங்கோ நம்ம வலைக்கலைஞர் முரளிகண்ணன்ங்க , அடடா நம்மாளுனு மனசு மஜாவாய்டுச்சி .
அவருகிட்ட கொஞ்ச நேரம் பேசிகிட்டே லெப்டுல பாக்கறேன் அமைதியே உருவாய் அஜித்க்குமார் மாதிரி டீக்கா நம்மாளு டோண்டு சார் ( அப்பாடா அஜித்த பழி வாங்கியாச்சு!!!!!!! ;-) ) அவருக்கு ஒரு நமஸ்காரத்த வச்சிட்டு ,அவரோட கொஞ்ச நேரம் அளவளாவிட்டு , மறுபடியும் நம்ம முக கிட்ட அவால்லாம் யாருனு கேட்டேன் .



அவரு , விழா நாயகர் கோ.க ( கோவிகண்ணன்) ( அவருக்காகதான் இந்த சந்திப்புனு சொல்லிக்கிட்டாங்க ஆனா அவரு அப்பிராணி மாதிரி '' சிவனேனு '' உக்காந்திருந்தாரு ) அவரு நண்பர், தருமி ஐயா , வளர்மதி , MPசுந்தர் , லிவிங் ஸ்மைல் வித்யா , டாக்டர் புருணோ அப்புறம் சின்னதுரை இன்னும் ரெண்டு,மூனு பேரோட பேரு மறந்திறுச்சு , ( மன்னித்தறுளவும் ) .
கோ.க அவங்கூரு சாக்லேட் குடுத்தாரு , நம்ம வலைப்பதிவுங்க மாதிரியே இருந்துச்சு ( வாயிலப் போட்டதும் கரைஞ்சிருச்சு ) , ஜ்யோவ்ராம் சாரும் அதியமான் அண்ணாவும் வளர்மதி சாரும் சீரியஸா எதோ பேசிட்டுருந்தாங்க ( ஆஹா மறுபடியும் சீரியஸா !!!!!!!!!!) உடனே அங்கருந்து எஸ் ஆகி லக்கிய கூட்டிக்கிட்டு தம் கட்ட கிளம்பினேன் .
ஒரு தங்கராசா வடிகட்டிய பத்த வச்சுகிட்டு அவரு ஆச பட்ட மாதிரி மானவாரியா மொக்க போட்டாலும் ம்ம்ம்ம் ஆளு அசரலயே ( ஆனாலும் லக்கி நீங்க ரொம்பபபபப நல்ல்ல்ல்ல்லவருயா ) .


அந்த இந்தியன் எக்ஸ்பிரஸ்ப் பொண்ணு எல்லாரையும் வளைச்சு வளைச்சு பேட்டி எடுத்துட்டுருந்துச்சு . நான் வரதுக்கு முன்னாடியே போட்டோ எடுத்தாங்களாம் . ( ச்சே கொஞ்சம் சீக்கிரம் வந்துருக்கலாமோனு தோணுச்சு ), இதுபோக எல்லாரும் பல மேட்டருங்க ( சீரியஸா ) விவாதிச்சுகிட்டாங்க .


நான் ரொம்ப எதிர்பார்த்தது உண்மைத்தமிழன் அண்ணாவதான் அவரு கடைசி வர வரல . மணி 8 ஆயிருச்சு , வானம் வேற 10 பின்நவீனத்துவப் பதிவுகள ஒன்னா படிச்ச மாதிரி மாமாங்கமா இருட்டுகட்டிருந்துச்சு , எதோ ஒரு குரல் சபை கலையலாம்னதும் , அலைகடலென வந்த பதிவர் கூட்டம் கலைய ஆரம்பிச்சுது .



நான் , பாலா, வித்யா, புருனோ, சின்னதுரை , முக , லக்கி எல்லாருமா சேர்ந்து பதிவர் பார்ட்டிக்காக " the light house tea stall "ல் சங்கமமானோம் , அங்கே அனைவருக்கும் தடபுடலாக தேநீர் விருந்து தரப்பட்டது . இப்படியாக இந்த பதிவர் சந்திப்பு இனிதே நிறைவடைந்தது .

இதுபோன்றப் பதிவர் சந்திப்புகளை அடிக்கடி(மாதமொருமுறை) நடத்தினால் என் போன்ற புதிய பதிவர்களுக்கு ஒரு நல்ல motivation ஆக இருக்கும் . அதுமட்டுமல்லாது இம்முறை பல மூத்தப்பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது . இம்மகிழ்ச்சியான சந்திப்பை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றிகள் .