18 January 2009

பொதுஇடங்களில் புகைபிடிக்கலாம் வாங்க!பொதுஇடங்களில் புகைபிடிக்க சில மாதங்களுக்கு முன் தடைவிதித்து இந்திய அரசு சட்டம் நிறைவேற்றியது அனைவருக்கும் தெரிந்திருக்கும். பலருக்கும் மறந்தும் போயிருக்க வாய்ப்புண்டு.


அது முதலில் காட்டுத்தீ போல பரவி பின் அணைந்து புகைந்து மண்ணாய் போனது அனைவருக்கும் நினைவிருக்கும். இருந்தாலும் நம் மக்களுக்கு பொது இடத்தில் புகைப்பிடிக்கையில் இருந்த தயக்கத்தையும் போலீஸ் வசூலின் மீதான அச்சத்தையும் போக்கும் வகையில் சென்னை பீடி சிகரெட் விற்பனையாளர்கள் சங்கத்தினர் சென்னை முழுவதும் உள்ள பெட்டிக்கடைகளில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். முதலில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை பார்த்துவிடுவோம் .


இந்த வியாபாரிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பார்த்தால் எங்கு வேண்டுமானாலும் புகைப்பிடிக்க அனுமதி உள்ளதாகத்தான் தெரிகிறது. அரசுதரப்பிலிருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வராத சூழலில் தன்னிச்சையாக அந்த சங்கத்தினர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை. அச்சங்கத்தினர் குறிப்பிட்டுள்ள டீக்கடைகள் மற்றும் பெட்டிக்கடைகள் சென்னையின் எல்லா இடங்களிலிலும் புற்றீசல் போல பரவியிருக்க கூடிய ஒன்று. வண்டிகள் நிறுத்துமிடங்கள் பொதுஇடமில்லையா? . தெருக்கள் மற்றும் சாலைகள் பொது இடமில்லையா? அமைச்சர் அன்புமணி இது குறித்து அறிவாரா? இச்சங்கத்தினர் இதற்காக அரசிடம் அனுமதி பெற்றனரா?


பொதுஇடங்களில் புகைப்பிடிக்கத்தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டதன் முக்கியமான காரணம் , PASSIVE SMOKING எனப்படும் சிகரட் பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் அடையும் பாதிப்புதான். இந்தியாவில் புற்றுநோய் பரவ மிக முக்கிய காரணமாக இருப்பது இந்த பாஸிவ் ஸ்மோக்கிங். ஆனால் இந்த அறிவிப்பு அந்த காரணத்தையும் அதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தையும் கேலியாக்குகிறதே!


பொது இடத்தில் புகைப்பிடிக்க தடைச்சட்டம் கொண்டு வந்த போது அதை ஆதரித்துப் பேசிய பலரும் இப்போது எங்கே போயினர். அதை அமலாக்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராயாமல் கோவில்களில் ஆடு மாடு வெட்ட தடைச்சட்டம் போல ஒரு சட்டத்தை கொண்டுவந்து விட்டு , பின் அதை அமலாக்க இயலாமல் பரிதவிக்கும் நிலையே உள்ளது.


இன்று பெரும்பாலான பொதுஇடங்களில் புகைப்பிடிக்கத்தடை என்கிற பலகை மட்டுமே உள்ளது , அதை யாரும் மதிப்பதில்லை என்பதுமே நிதர்சனமான உண்மை.


எந்த ஒரு சட்டமும் மக்களின் ஆதரவால் மட்டுமே செயல்வடிவம் பெறும். தனது விளம்பரத்திற்காக நடைமுறை சிக்கல்கள் குறித்து ஆராயாமல் கொண்டுவரப்படும் எந்த சட்டமும் நிலைக்காது. அது பொதுஇடபுகைப்பிடிக்க தடைச்சட்டம் போல புகைந்துதான் போகும்.


இனிமேலாவது இது போன்ற சட்டங்களை நிறைவேற்றும் முன் அதிலுள்ள நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்து , அதை எப்படி சரியான முறையில் செயல்படுத்த இயலும் என்பதையும் ஆராய்ந்து நிறைவேற்றினால் நல்லது.
சிலபலநாட்களாக மிக அமைதியாக இருக்கும் அன்புமணிராமதாசு இது குறித்து அறிந்துகொண்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டால் மிக நல்லது.20 comments:

கோவி.கண்ணன் said...

ஜூப்ப்பரு!

Anbu said...

சூப்பர் அண்ணா.நன்றாக அலசி இருக்கிறீர்கள்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தெரு, சாலைகளில் புகைபிடிக்கலாம் என அமைச்சர் முதலிலேயே சொல்லியிருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரை முடிந்தவரையில் அடுத்தவரை பாதிக்காமல் புகைபிடிப்பது தவறில்லை.

வெண்பூ said...

அடப்பாவிகளா.. அவனுங்க லிஸ்ட்ல சொல்லியிருக்குற எடம் எல்லாம் பொது இடம் இல்லையா?

கடைசி ரெண்டு வரிகள் அருமை..

KarthigaVasudevan said...

//பொதுஇடங்களில் புகைப்பிடிக்கத்தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டதன் முக்கியமான காரணம் , PASSIVE SMOKING எனப்படும் சிகரட் பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் அடையும் பாதிப்புதான். இந்தியாவில் புற்றுநோய் பரவ மிக முக்கிய காரணமாக இருப்பது இந்த பாஸிவ் ஸ்மோக்கிங். ஆனால் இந்த அறிவிப்பு அந்த காரணத்தையும் அதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தையும் கேலியாக்குகிறதே!//

இது ரொம்ப நாள் கேலிக்கூத்து ஆச்சே!!! முதல்ல பாசிவ் ஸ்மோக்கிங் கேடுகள் பத்தி எல்லாருக்கும் தெரியணுமே!?
இல்லாட்டி கேலியா தான் போகும் எல்லாமே ஹெல்மெட் சட்டம் மாதிரி!

//எந்த ஒரு சட்டமும் மக்களின் ஆதரவால் மட்டுமே செயல்வடிவம் பெறும். தனது விளம்பரத்திற்காக நடைமுறை சிக்கல்கள் குறித்து ஆராயாமல் கொண்டுவரப்படும் எந்த சட்டமும் நிலைக்காது. அது பொதுஇடபுகைப்பிடிக்க தடைச்சட்டம் போல புகைந்துதான் போகும்.//

அதான் நடந்துட்டு இருக்கு.ஆட்சில இருக்கறவங்களுக்கு சட்டம் போடறது மட்டுமா வேலை? காபி வித் அனு ல வரணும்,விட்டா மானாட...மயிலாட ல கூட நடுவரா கூப்டா சிலர் போயிடுவாங்களோ என்னவோ? மக்களுக்கும் ஆயிரத்தெட்டு வேலை.சட்டத்தை தூக்கி விட்டத்துல போட்டுட்டு "ஜோடி நம்பர் ஒன் பார்க்கப் போக வேண்டாமா ? சொல்வதற்கு ஒன்றுமில்லை அதிஷா !

நல்ல பதிவு ...தொடரட்டும்.

Ŝ₤Ω..™ said...

அலுவ‌லகங்களில் வைக்கப்பட்டிருக்கும் "புகார் பெட்டி"..
பொது இடங்களில் எழுதப்பட்டிருக்கும் "இங்கே குப்பை கொட்டாதீர்கள்" ..
சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் "இங்கே சிறுநீர் களிக்காதீர்"..
சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் "ஒரு வழிப் பாதை"..
மருத்துவமனை, பள்ளிகளுக்கு அருகில் உள்ள "ஒலி எழுப்பாதீர்"..
இன்னும் பற்பல நகைச்சுவை அறிவிப்புகள் நம் நாட்டில் உள்ளனவே..

Unknown said...

பெட்டி வந்து விட்டிருக்கும்

Sanjai Gandhi said...

வினோ, இந்த அறிவிப்பு நேத்து தினமலர்ல விளம்பரமா வந்திருந்தது. :)

//இந்த வியாபாரிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பார்த்தால் எங்கு வேண்டுமானாலும் புகைப்பிடிக்க அனுமதி உள்ளதாகத்தான் தெரிகிறது.//

அதை படிச்சிட்டு எனக்கும் இதே தான் தோன்றியது. :(

Anonymous said...

அதிஷா,

நல்ல கட்டுரை. வாழ்துக்கள்.

இப்ப இல்லீங்க அந்த சட்டம் கொண்கு வந்ததுலேர்ந்தே இப்படித்தான். போலீசு அரசாங்கத்துக்கு உதவியா இருக்கணும். ஆனா இங்க போடற சட்டத்த உபயோகப்படுத்திக்கிட்டு அவங்க சம்பாதிக்கப் பார்க்கிறான்ங்ககறதுதான் நிதர்சனமான உண்மை.

என்னை பொறுத்தவரை சட்டம் கொண்டு வந்ததுலே நல்லது தான். சொல்லறாமதிரி மத்தவங்களை கொன்னு நாம சந்தோஷமா இருக்கணும்னு அவசியம் இல்ல..நாம அந்த மிருக ஜாதிய சேர்ந்தவங்களும் இல்ல.

RAHAWAJ said...

நல்லா சூப்பரா இருக்கு எது உங்க பதிவா? இல்லை எது,எங்கே,எப்படி எதுக்கு நல்லதுன்னு தெரியாம சட்டம் போடும் அரசாங்கம் தான்,போனா போகுது உங்க பதிவும் "சூப்பரோ சூப்பர்" அதிஷா

Focus Lanka said...

Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்.
http://www.focuslanka.com

அத்திரி said...

//இனிமேலாவது இது போன்ற சட்டங்களை நிறைவேற்றும் முன் அதிலுள்ள நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்து , அதை எப்படி சரியான முறையில் செயல்படுத்த இயலும் என்பதையும் ஆராய்ந்து நிறைவேற்றினால் நல்லது.//

சட்டமா முக்கியம் "கட்டிங்" தான் முக்கியம்

அத்திரி said...

//தெரு, சாலைகளில் புகைபிடிக்கலாம் என அமைச்சர் முதலிலேயே சொல்லியிருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரை முடிந்தவரையில் அடுத்தவரை பாதிக்காமல் புகைபிடிப்பது தவறில்லை//

ரிப்பீட்டேய்..............

Unknown said...

அதிஷா,

நல்லா இருக்கு பதிவு.பொது இடம்னா
என்னா? அதன் விதிகள் என்ன? அதில்
இல்லாத இடங்களைத்தான் அந்த பானர் சொல்லுகிறதா?

அடுத்து பொது இடங்களில் இளம் தாய்மார்கள் குழந்தைக்கு breast feeding(மார்புப் பாலூட்டுதல்)குறித்து
இந்தப் பதிவு படிக்கவும்.

I'm uncomfortable about breastfeeding my three month old in public places. What should I do?கிழே உள்ள விதி எது பொது இடம் என்பது.(புகை தடைக்கு):-

Smoking is strictly prohibited in all public places in India.

Public Places" include auditoriums, Auditorium, Hospital Buildings, Health Institutions, Amusement Centres, Restaurants, Hotels, Public Offices, Court Buildings, Educational Institutions, Libraries, Public Conveyances, Open Auditorium, Stadium, Railway Stations, Bus Stops/stands, Workplaces, Shopping Malls, Cinema Halls, Refreshment Rooms, Discotheques, Coffee House, Pubs, Bars and Airport Lounge.
Any violation of this act is a punishable offence with fine upto Rs. 200

However, a hotel having thirty or more rooms or restaurant having a seating capacity of thirty persons or more & airports may provide/have a separate smoking area or space, as required by the rules.

Unknown said...

அதிஷா,

மன்னிக்க. லிங்க் வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

இதுதான் லிங்க்.பேஸ்ட் செய்து பார்க்கவும்

http://www.babycenter.in/baby/breastfeeding/public-places-expert/

Joe said...

பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது என்ற சட்டம் ஒரு பெரும் கேலிக்கூத்து!

அந்த போஸ்டேரில் உள்ளபடி புகை பிடிப்பவர்கள் எங்கு வேண்டுமானலும் புகை பிடித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஒரே ஒரு நல்ல விஷயம், அலுவலங்களில் இருந்த புகைபிடிக்கும் இடங்கள் இப்போதில்லை என்பது தான்.

சரவணகுமரன் said...

ஆஹா...

RAMASUBRAMANIA SHARMA said...

Nallla Pathivu...Sonna Yar keekkaranga..."Sattam Potttu Thadikinra Koottam Thaduthu Kondae Irukkuthu"....Avlothan...!!!!

ராமலக்ஷ்மி said...

//இன்று பெரும்பாலான பொதுஇடங்களில் புகைப்பிடிக்கத்தடை என்கிற பலகை மட்டுமே உள்ளது , அதை யாரும் மதிப்பதில்லை என்பதுமே நிதர்சனமான உண்மை.//

வருத்தத்திற்குரிய விஷயம். விதிகளை மதிக்காது போவதும் மீறுவதும் [சாலை விதிகள் உட்பட] நம்மவருக்கு புதிதல்லவே. ஆயினும் சில பேரையாவது சட்டம் சிந்திக்க வைத்திருக்குமானால் அந்த மட்டில் சந்தோஷம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஜோ அவர்கள் சொல்லியிருப்பது போன்ற சில மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதும் அந்தச் சட்டத்தினால்தான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

Vijayasankar Ramasamy said...

pugai pothu idathilthane pidikka koodathu.
En vayila pidikalamthane.enna mouth is not public place .it is private place nu friend oruthan solran.