19 January 2009

வில்லு - விவ'கார'மான விமர்சனம்


''ஐயோ............ அப்பா... உங்கள கொன்னவங்கள நான் பயிக்கு பயி வாங்காம விதமாத்தேன் '' அந்தக் கால எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் பெரும்பாலான படங்களில் இப்படி ஒரு வசனம் கட்டாயம் இருக்கலாம். அது சமயங்களில் அம்மாவாகவும் தங்கையாகவும் இருக்கும். ஆனால் எது எப்படி இருந்தாலும் அது எப்படி நடந்தாலும் இருப்பத்தைந்து வருடங்களுக்கு பின்தான் நடக்கும்.


எம்.ஜி.ஆருக்கு பிறகும் எழுபதுகளின் கடைசியிலும் எம்பதுகளின் துவக்கத்திலும் வெளியான பெரும்பாலான படங்களின் கதை இதுவாகத்தான் இருக்கும். எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய பக்தரான என் தந்தைக்கு (கோவையில் இன்றும் எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் திரையிடப்படும் தியேட்டர் வாசலில் என் தந்தை பங்குபெறும் எம்.ஜி.ஆர் பக்தர்கள் பேரவையின் போஸ்டர்களை காண முடியும்) எம்.ஜி.ஆருக்குப் பிறகு மிகவும் பிடித்த நடிகர் விஜய்தான். அவராலேயே அதற்கான காரணத்தை கூற இயலுவதில்லை. விஜய்க்கு எம்.ஜி.ஆர் ஆகவேண்டும் என்கிற ஆவல் வந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் ''பம்பிருந்தா பயிப்பு இல்ல பயிப்பிருந்தா பம்பில்ல '' என்று எம்.ஜி.ஆரைப்போல வசனம் பேசினாலும் சொல்வதற்கில்லை. போதும்டா நடிகர்களா உங்களால தமிழ்நாடு பட்ட பாடு என்று எண்ணத்தோன்றுகிறது.


விஜயின் கட்சிக் கொடி அல்லது மன்றக் கொடி மகா கேவலமாக இருக்கிறது . மாற்றினால் தேவலை. அந்த கொடியோடுதான் வில்லுத்திரைப்படமும் துவங்குகிறது . படமும் கொடியைப்போலவே மகா கொடுமையாக இருக்கிறது.


வீரமான தந்தை , அவரை விவேகமாய் வெல்லும் அல்லது கொல்லும் வில்லன்கள் ( விவேகமாய் இருந்தால் வில்லன்களாம்) . 25வருடங்களுக்கு பிறகு வீரம்+விவேகம் என்கிற வின்னிங் காம்பினேஷனில் வில்லன்களை பந்தாடும் நாயகன். நடுவில் வடிவேலு,விவேக்,சந்தானம் வகையறாக்களின் கா(ம)டி , தொப்புள் என்னும் பிரதேசத்துக்கு கூட ரோஸ்பவுடருடன் லிப்ஸ்டிக்கும் போட்டுக்கொண்டு வந்து நான்கு பாடல்களுக்கு ஆடும் அற்புத ஹீரோயினுடன் காதல் . பாடல்களுக்காக காதலா காதலித்ததால் பாடலா? .அதில் மூன்று குத்துப்பாடல் , ஒரு மெலடி , ஒரு டிஸ்கோ அல்லது பாப் , ராப் இப்படி ஏதாவது ஒன்று .


காசு நிறைய இருந்தால் ஹிரோயினோடு பாரினில் போடலாம் குத்தாட்டம் . காசில்லாவிட்டால் லோக்கல் செட்டிலும் போடலாம் (குத்தாட்டம்தான்). ஐந்து அனல் பறக்கும் சண்டைகள். 50க்கும் மேற்ப்பட்ட பஞ்ச் டயலாக்குகள். இதற்கு மேல் விஜய் படத்தில் வேறு என்ன எதிர்பார்த்துவிட முடியும் அல்லது சொல்லி விட முடியும். அவ்வளவுதான் வில்லு. படம் முடிவதற்குள் நம் செல்லு,பல்லு எல்லாம் உடைந்துவிடுகிறது.


அஜித்தின் பில்லா வெற்றி விஜயை ரொம்பவே பாதித்திருக்கவேண்டும். படம் மேக்கிங் பில்லா சாயல். ஹாலிவுட்தரத்தில் படமெடுக்கிறேன் பேர்வழி என்று பாதி படம் முழுக்க கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு படத்தில் பாதிபேர் கொல்லுகிறார்கள். விக்ரமன் படங்களில் பொதுவாகவே பணக்காரர்களை காட்டுவதற்கு கோட்டுசூட்டை உபயோகிப்பார். இப்போதெல்லாம் அன்டர்கிரவுண்ட் தாதாக்களை காட்டும் போதும் அதே போன்றதொரு யுக்தியை கடைபிடிக்கின்றனர். என்ன கொடுமை விக்ரமன் இது.


வில்லுத்திரைப்படத்திற்கு சமீபகாலமாய் எல்லா தொ.காட்சிகளிலும் பிரபுதேவாவும் விஜயும் மாறி மாறி விளம்பரம் செய்யும் கொடுமை தாங்க முடியவில்லை. இவர்களுக்கு சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் எவ்வளவோ தேவலாம். அவராவது காசு கொடுத்து விளம்பரம் செய்கிறார். இவர்கள் பல நல்ல(?) நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குகிறேன் பேர்வழி என்று ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய வில்லு படத்திற்கு விளம்பரம் செய்கின்றனர். செய்திகளில் மட்டும்தான் விளம்பரம் வரவில்லை( செய்திகளில் விளம்பரம் , படிக்காதவன் படத்திற்கு மட்டும்தானாம் - சன்செய்திகளில் அந்த கொடுமைக்கதை தனி ).


படத்தின் கதையை முதல் பத்தியில் சொல்லிவிட்டபடியால், படம் குறித்து என்னத்த சொல்ல! . படத்தின் முதல் பாதியில் இருந்த வேகமும் விறுவிறுப்பும் துள்ளலும் எள்ளலும் இரண்டாம் பாதியில் மொத்தமாய் மிஸ்ஸிங். அதுவும் விஜயை இராணுவ கெட்டப்பிலெல்லாம் பார்த்து தொலைக்கவேண்டியிருக்கிறது. பிரகாஷ்ராஜை வேறு மாதிரி நடிக்க சொல்லலாம் அலுப்பு தட்டிவிட்டது. விஜய்க்கு இன்னும் போக்கிரிமேனியா மாறவில்லை போல அதே மாதிரி நடிக்கிறார்(?) . ஒரு வேளை பிரபுதேவாவின் வழிகாட்டுதலாய் இருக்க கூடும். நயன்தாராவால் இதற்கு மேல் தமிழ்திரைப்படங்களில் காட்ட இயலாது . இதற்கு மேல் காட்டினால் வில்லுத் திரைப்படத்தை ஜோதி தியேட்டர் காலைகாட்சிகளில்தான் ரிலீஸ் செய்ய வேண்டியிருக்கும் ( ஆனால் தற்செயலாக படம் ஜோதியில்தான் ரிலீஸாகியிருக்கிறதாம்) .


வடிவேலு அடிவாங்குவதை பார்க்கும் போது பாவமாக இருக்கிறது , மாட்டுடனெல்லாம் சண்டை போட்டு அடிவாங்குகிறார் (கிராபிக்ஸ்க்கு நன்றி) . வெகு நாட்களுக்கு பிறகு ரஞ்சிதா 80களில் பார்த்த அம்மா சென்டிமென்ட் காட்சிகளில் நடித்து நம் கண்களை குளமாக்கவெல்லாம் இல்லை , மெகாசீரியல் அம்மா ரேஞ்சில் நடித்திருக்கிறார். (விஜயை விட ரஞ்சிதா உயரமானவராம் உண்மையா தெரியவில்லை).


மற்றபடி படத்தின் பிளஸ் - பாடல்கள் , நடனம் , கேமரா , காமெடி , முதல் பாதி , விஜயின் துள்ளல் , சண்டைக்காட்சிகள்


மைனஸ் - மற்ற எல்லாமே


பிரபுதேவாவின் தெலுங்குப்படமான நுவொஸ்தானன்டே... படம் பார்த்து மிரண்டு போயிருக்கிறேன். இந்த பையனுக்குள்ளயும் என்னவோ இருந்திருக்கு பாரேன் என்று. இந்த படத்தை பார்க்கும் போது அவரை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.
Statutory warning -


Sometimes Watching Vijay movies can be injurious to your mental and physical health - be careful


42 comments:

Sankar said...

Your review is more entertaining than the movie ;)

சரவணகுமரன் said...

//விக்ரமன் படங்களில் பொதுவாகவே பணக்காரர்களை காட்டுவதற்கு கோட்டுசூட்டை உபயோகிப்பார். //

//இந்த பையனுக்குள்ளயும் என்னவோ இருந்திருக்கு பாரேன் என்று.//

:-))

☀நான் ஆதவன்☀ said...

//( செய்திகளில் விளம்பரம் , படிக்காதவன் படத்திற்கு மட்டும்தானாம் - சன்செய்திகளில் அந்த கொடுமைக்கதை தனி ).//

நீங்க ராஜ் செய்திகள் பார்க்கலையா??? அதுல "காதல்னா சும்மா இல்ல" திரைப்படம் வெற்றி நடை போடுகிறது என்று சொன்னார்களே....

Bee'morgan said...

'தல'யின் ஏகனுக்கு போட்டியாகத்தான் விஜய் 'வில்லை'யே கையில் எடுத்தார் என்று சில உளவுத்துறை தகவல்கள் சொல்கின்றன.. :o) நீங்க எழுதியிருக்கறத படிச்சா அப்படித்தான் தோணுது..

A N A N T H E N said...

:D

அதிலை said...

என் பணத்தை விரயம் செய்யப் பார்த்தேன்... நன்றி

ரமேஷ் வைத்யா said...

//நயன்தாராவால் இதற்கு மேல் தமிழ்திரைப்படங்களில் காட்ட இயலாது . இதற்கு மேல் காட்டினால் //
ம்ஹூம்... கொஞ்சம் காசை மிச்சப்படுத்தலாம் என்று பார்த்தேன். முடியாது போலிருக்கே... ஒரு வேளை அமெரிக்க பாணி நெகடிவ் விளம்பரமாக இருக்குமோ...

அதிஷா,
ஃப்ளோ சூப்பர்ப். ரசிக்கும்படி எழுதிருக்கிறீர்கள்.

வெண்பூ said...

இந்த கிழி கிழிச்சிட்டீங்க..

//
''பம்பிருந்தா பயிப்பு இல்ல பயிப்பிருந்தா பம்பில்ல '' என்று எம்.ஜி.ஆரைப்போல வசனம் பேசினாலும்
..
..
படமும் கொடியைப்போலவே மகா கொடுமையாக இருக்கிறது.
..
காசில்லாவிட்டால் லோக்கல் செட்டிலும் போடலாம் (குத்தாட்டம்தான்).
..
Statutory warning
//
இதையெல்லாம் ரசிச்சி சிரிச்சேன் அதிஷா..

m said...

It was a nice reading....atleast Vijay is somehow indirectly enterntaining ;)...Cabutan use to call himself 'karuppu MGR'...i wonder how Vijay plans to call himself?!

நையாண்டி நைனா said...

என்னோட வீட்டிற்கு வந்தத்திற்கு நன்றி தல

பார்ப்போம் பொறுத்திருந்து, வில்லு எத்தனை பேருக்கு, இலக்காகிறது என்று...

நையாண்டி நைனா said...

என்னோட வீட்டிற்கு வந்தத்திற்கு நன்றி..... தல

பார்ப்போம் பொறுத்திருந்து, வில்லு எத்தனை பேருக்கு, இலக்காகிறது என்று...

Anonymous said...

தல,

நேர்மையான விமர்சனம். குமுதம் விமர்சனக் குழுவுல உங்களுக்கு ஒரு இடம் இருக்குது.

Mahesh said...

பரிசலுக்கு போட்ட கமெண்டேதான் இங்கயும்...

ஒரே வரி .. வில்லு - விஜய் படம் இதுக்கு மேல விமர்சனமே தேவையில்ல

Anonymous said...

villu - konjam dullu...

வால்பையன் said...

//Sometimes Watching Vijay movies can be injurious to your mental and physical health - be careful //

ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு!
always Watching Vijay movies can be injurious to your mental and physical health - be careful

இப்படி தான் இருக்கனும்

BEST FUNDS ARUN said...

இவர்களுக்கு சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் எவ்வளவோ தேவலாம். அவராவது காசு கொடுத்து விளம்பரம் செய்கிறார். இவர்கள் பல நல்ல(?) நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குகிறேன் பேர்வழி என்று ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய வில்லு படத்திற்கு விளம்பரம் செய்கின்றனர். செய்திகளில் மட்டும்தான் விளம்பரம் வரவில்லை( செய்திகளில் விளம்பரம் , படிக்காதவன் படத்திற்கு மட்டும்தானாம் - சன்செய்திகளில் அந்த கொடுமைக்கதை தனி ).


excellant comment athisa.
better join in anandavikaton

Anonymous said...

பதிவின் கடைசி எச்சரிக்கையும், முடல் பின்னூட்டமும் சூப்பர்.

முரளிகண்ணன் said...

nice and interesting write up

Gajen said...

//இதற்கு மேல் காட்டினால் வில்லுத் திரைப்படத்தை ஜோதி தியேட்டர் காலைகாட்சிகளில்தான் ரிலீஸ் செய்ய வேண்டியிருக்கும்//

ஹிஹி..நல்ல கேள்வி..இதெயெல்லாம் இன்னுமா தமிழ் சினிமா உணரவில்லை??

குடுகுடுப்பை said...

Statutory warning -


Sometimes Watching Vijay movies can be injurious to your mental and physical health - be careful

//

ரெண்டும் ஆயிப்போச்சு.இப்போ டாக்டர் விஜய பாக்கனும்

butterfly Surya said...

படம் பார்ந்து நொந்து போயிருந்தேன்.

விமர்சனம் படித்து தெளிந்தது..

விரைவில்... (ஏப்ரல் 14 }


இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக........................

Anonymous said...

Nice review Adhisa..keep it up

Anonymous said...

//25வருடங்களுக்கு பிறகு வீரம்+விவேகம் என்கிற வின்னிங் காம்பினேஷனில் வில்லன்களை பந்தாடும் நாயகன் //

not 25 years 20 years only. why you are increasing 5 years of vijay.

நையாண்டி நைனா said...

/*வீரமான தந்தை , அவரை விவேகமாய் வெல்லும் அல்லது கொல்லும் வில்லன்கள் ( விவேகமாய் இருந்தால் வில்லன்களாம்) . 25வருடங்களுக்கு பிறகு வீரம்+விவேகம் என்கிற வின்னிங் காம்பினேஷனில் வில்லன்களை பந்தாடும் நாயகன்.*/

இதை தானே ரசுணிகாந்து கடந்த 40 வருசமா செஞ்சார்

Anonymous said...

இப்படி "காதலும் கற்று மற(1) - தன்னம்பிக்கைத் தொடர் - நீங்களும் நல்ல பிகர்தான்.......!!!
ஒரு பதிவ போட்டு தொடரும்னு போட்டத மறந்திடிங்க போல....

RAHAWAJ said...

சூப்பரோ சூப்பர் அதிஷாஜி,நல்ல வேளை இன்னும் படம் பார்க்கவில்லை,இப்ப வர்ர படம் எல்லாம் டப்பாவாகீது நைனா,

ஷாஜி said...

//இவர்களுக்கு சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் எவ்வளவோ தேவலாம்.//

--செம கமெண்ட் அதிஷா..

(டாக்டர் என்பதால் விஜய் இப்படி விளம்பரம் செய்கிறாரோ..)

ரசித்து சிரித்தேன்...

Senthil said...

\\Statutory warning -


Sometimes Watching Vijay movies can be injurious to your mental and physical health - be careful \\

soopperapu

senthil, bahrain

Anonymous said...

///Statutory warning -


ALWAYS Watching Vijay movies can be injurious to your mental and physical health - be careful/////

பூங்குழலி said...

சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் எவ்வளவோ தேவலாம். அவராவது காசு கொடுத்து விளம்பரம் செய்கிறார். இவர்கள் பல நல்ல(?) நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குகிறேன் பேர்வழி என்று ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய வில்லு படத்திற்கு விளம்பரம் செய்கின்றனர்

:))))

நீங்க என்ன எழுதி என்ன ,குருவி மாதிரி இதுக்கும் ஒரு வெற்றி விழா எடுக்கத்தான் போறாங்க ...ஏதோ சில தொலைக்காட்சியில
அதையும் போடத்தான் போறாங்க

VIKNESHWARAN ADAKKALAM said...

நீ என்ன சொன்னாலும் நான் பாடம் பார்த்தே தீருவேன்...

Unknown said...

ennathu ivlo solliyum padatha parthe theeruvingala.. enna thairiyam... sari epadiyo ponga pathutu neengalum adisha mari vanthu azhunga... vithi yara vitathu....

Anonymous said...

good reviw.Prabhu deva said villu is like a jamespond's film. i cant digest this word in my life.

Anonymous said...

KADAVULE INTHA VIJAYKKU THAYAVU SENJI ARASIYAL LA POSTING KUDUTHUDU ILLANA IVVA IPPADI PADAM NADICHI NAMMA ELLARAYUM KONNUDUVAN....................

Anonymous said...

அதிஷா,

உங்கள் விமர்சனம் மிகப் பிராமதம். ஆனாலும் உங்களுக்கு விஜய் மீது கொஞ்சம் இரக்க சுபாவம் இருக்கிறது போலும். இல்லையென்றால் படத்தின் ப்ளஸ் பாயிண்டுகளை இப்படி அள்ளிட் தெரித்து இருக்க மாட்டீர்கள்.

கடைசி வாசகம் மிக அருமை. இன்சுரன்ஸ் பண்ணிட்டேன் அண்ணா!!! இருந்தாலும் பயமா இருக்கு...இதெல்லாம் (படம் பார்க்க வேண்டிய சூழ்நிலை)நடந்திருமோன்னு பயமா இருக்கு.

Anonymous said...

some scenes were deleted in tat movie..at 1 st day shows vijay will be dugged under the earth and he will come again without any damage...and at entry scene he will fly for long time with sarees..these scenes were deleted in later shows

ஜெகநாதன் ராமையா said...

three songs are from Telugu Movies
Sankar Dada M.b.b.s And Jalsa.
In the good,bad and ugly english movie,when Bad was taking bath in a tub one man enter there and tell him that he's here to take revenge etc..then bad shoot and him and tell
"If you want to shoot ,shoot ,Don't talk".
And after long years they have taken this dialoque in Villu.
(konajam kudam sooraniaye illama romba varusathuhu munthi vantha padathule irunthu Raymonds suiting and shirting (Sudal).

THYAGU said...

\\போதும்டா நடிகர்களா உங்களால தமிழ்நாடு பட்ட பாடு \\

THYAGU said...

போதும்டா நடிகர்களா உங்களால தமிழ்நாடு பட்ட பாடு

Anonymous said...

Nalla thaan edukkiranga...Padam....Thala ezhuthu....itha yellam parkka vendi irukkuthu.....

Unknown said...

மாமா கொன்னுட்ட போ ...........

Ramesh said...

"அஜித்தின் பில்லா வெற்றி விஜயை ரொம்பவே பாதித்திருக்கவேண்டும். படம் மேக்கிங் பில்லா சாயல்."

Asith fanaa neenga ohho sari sari, "AVANAA NEEYU"