22 January 2009

சென்னையில் பதிவர் சந்திப்பு - 25-01-2009

ஹாய் மச்சான்ஸ் அண்டு மச்சிஸ்.....

(என்னது நமீதா சொன்னாதான் புடிக்குமா... )

எப்படி இருக்கீங்க... நீங்க பண்ண , பண்ற புண்ணியத்துக்கு நல்லாத்தான் இருப்பீங்க.... விசயம் அதில்ல... அதாவது என்னன்னா.....

சமீபத்தில........... புத்தாண்டு முடிஞ்சிருக்கு , பொங்கல் முடிஞ்சிருக்கு , சென்னை சங்கமம் முடிஞ்சிருக்கு , மிக முக்கியமான விசயம் நம்ம புத்தகக்கண்காட்சி முடிஞ்சிருக்கு , நிறைய திருவிழாக்கள் முடிஞ்சிருக்கறதால நம்ம மக்கள்லாம் அந்த அனுபவங்களை பத்தி சகபதிவர்கள் கிட்ட பகிர்ந்துக்கணும்னு ஆசைப்படறதா முந்தாநாள் பாத்த கிளிஜோசியர் ஒருத்தர் சொன்னாரு , அதனால இந்த வாரக்கடைசில ஒரு பதிவர் சந்திப்பு வச்சு குசலசுபயோகங்களையும் அப்புறம் புத்தககண்காட்சி பத்தியும் பேசிக்கலாம்னு ஒரு யோசனை.

இதுக்கு நடுவுல நம்ம கோவி.க(அ)ண்ணனும் நம்ம பின்னூட்ட புயல் விஜய் ஆனந்தும் சிங்கப்பூர்லருந்து வராங்களாம் நம்மளையெல்லாம் சந்திச்சு குசலம் விசாரிக்க... சோ... இந்த வாரம் ஞாயித்துக்கிழமை பதிவர் சந்திப்பு வச்சிரலாம்னு சிலபல முக்கியபதிவர்கள்ல்லாம் ( நான் இல்லபா ) சேர்ந்து முடிவுபண்ணிருக்காங்களாம்.

அதனால மக்களே , பதிவர்களே , பின்னூட்ட நண்பர்களே , வாசகச்செல்வங்களே அனைவரும்

ஞாயித்துக்கிழமை சாயங்காலம் நம்ம

மெரினா பீச்சு காந்திசிலையாண்டை வந்துருங்கோ ... அங்க மீட் பண்ணலாம்...

சந்திப்பு தேதி - 25-1-2009

இடம் - மெரினா கடற்கரை காந்திசிலை பின்புறமுள்ள நீரில்லா குட்டை

நேரம் - மாலை 5.30 முதல் 8.00 வரை

மக்களே சந்திப்பு முடிஞ்சதும் அனைவருக்கும் தேநீர் விருந்து உண்டு கட்டாயம் கலந்துகிட்டு தேநீர் பருகவும்...

அதே மாதிரி இது பதிவர்களுக்கு மட்டுமான சந்திப்பு கிடையாது , யார் வேணாலும் கலந்துகிட்டு கலக்கலாம்.. கலந்துரையாடலாம்...

வாங்க மச்சான்ஸ் அண்டு மச்சீஸ் மெரினா அலறட்டும்....


இதுக்கு மேல உங்களுக்கு இன்னா டவுட்டு வந்தாலும்..

என்னோட dhoniv@gmail.com ங்கற மெயல்ஐடிக்கு ஒரு மெயிலனுப்புங்க

இல்லாட்டி இந்த நம்பருக்குலாம் கூப்புட்டு கேளுங்கோ.. ஓகேவா..

அதிஷா - 9884881824

லக்கிலுக் - 9841354308

முரளிக்கண்ணன் -9444884964

நர்சிம் -9940666868

ஒகேவா...


கடைசியாக கிடைத்த தகவல் படி அண்ணன் கோவி அவர்கள்

90477 44151

என்ற எண்ணில் சனிக்கிழமையிலிருந்து கிடைப்பார்.. அவரிடமும் அளவலவாலாம்.. ( ஸ்பெல்லிங் மிஸ்டேக் சாரி).....**************************
நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு -
மெரினாவில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு போலீஸின் கெடுபிடி அதிகமிருப்பதால் , பதிவர் சந்திப்பு இடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
புதிய இடம் மற்றும் நேரம் -
இடம் - கிழக்குப்பதிப்பகத்தின் மொட்டைமாடி
நேரம் - 5.30 முதல் சந்திப்பு முடியும் வரை ( apprx 7.30 வரை)
கிழக்குப்பதிப்பகம் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் அமைந்துள்ளது . (எல்டாம்ஸ் ரோடு மியூசிக் வோர்ல்டு அருகில் )
சிரமத்திற்கு மன்னிக்கவும்.

22 comments:

கோவி.கண்ணன் said...

மீ த பர்ஸ்ட் !

வந்துடுறேன் என்று சொல்ல வந்தேன் !

:))

கணேஷ் said...

என்னை மாதிரி பொடியன்களும் வரலாமா?

Unknown said...

என்னை மாதிரி சிறுவர்களே வரும் போது உங்களுக்கு என்ன ராம்சுரேஷ் கட்டாயம் வாங்க...

வராட்டிதான் சங்கடமா இருக்கும்

$$$$ ANBU $$$$ said...

அண்ணா நானும் வரலாமா?

அத்திரி said...

உள்ளேன் ஐயா... கோவி கண்ணனை கண்டிப்பா பாக்கனும்

Anbu said...

எனக்கும் உங்கள எல்லாரையும் பார்க்க வேண்டும் போல் உள்ளது

Anonymous said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.
25ம்தேதி காலை முதல் அம்பத்தூரில் முதளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடைபெறுகின்றது பதிவர்கள், அந்த மாநாட்டிற்க்கும் வந்துவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நட்புடன
வினவு
http://vinavu.wordpress.com/2009/01/19/mbem01/

VIKNESHWARAN ADAKKALAM said...

அண்ணே இங்கயும் சந்திப்புதான்... வாழ்த்துகள்...

முரளிகண்ணன் said...

ஆகட்டும் சாமி

எம்.எம்.அப்துல்லா said...

மீ த ஆப்செண்ட்டுபா

வழக்கம் போல விரட்டிவுடுறாய்ங்க டூருக்கு :(

கணேஷ் said...

மிக்க நன்றி அதிஷா! கண்டிப்பாக வருகிறேன்.

//சந்திப்பு தேதி - 25-10-2009

இதில் TYPO என்று நினைக்கிறேன். 25-01-2009 யாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

குடந்தை அன்புமணி said...

இந்த முறை முன்னாடியே வந்துடுவேன். மாதம் தவறாக உள்ளது, கவனிங்க ஆதி!

அ.மு.செய்யது said...

தகவலுக்கு நன்றி நண்பரே !!!

என்னைப் போன்று எழுத ஆரம்பித்து ஒரு மாதமே ஆன
புதிய பதிவர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒரு சந்திப்பு.

க‌ண்டிப்பாக‌ வ‌ருவோம்.

அக்னி பார்வை said...

உள்ளேன் ஐயா!

Ŝ₤Ω..™ said...

present sir..

பரிசல்காரன் said...

சந்திப்பில் புத்தகம் வெளியிட்ட யுவகிருஷ்ணாவுக்கு ஏதோ சிறப்பு செய்யப்போகிறார்களென்று கழுகார் ஜூ.வியில் சொல்லியிருந்தாரே.. அப்டியா?

Anonymous said...

பதிவு அருமை. அடிக்கடி இதுபோன்று எழுதுங்கள்!

Sure said...

Valthukkal

T.V.ராதாகிருஷ்ணன் said...

present sir

குப்பன்.யாஹூ said...

சிவசங்கர மேனன் பயணம் செய்து போரை நிறுத்தி தமிழர்களின் வாழ்வில் ஒளி வீசச் செய்த வெற்றி குறித்த சிறப்பு விவாதம் உண்டு என காக்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

குப்பன்_யாஹூ

Anonymous said...

அண்ணே!!! நம்ம ப்ளாக் பேர்ல இருக்குற இடத்துல சந்திப்பு நடக்குதுன்னு ரெம்பவே க்க்குஸியாயிட்டேன்..இப்போ
நான் நித போற க்ளையெண்டு ஆபிஸ்க்கு சஸ்ச்ட்டு ஆப்போஜிட்டுல மாத்திகினீங்கோ...

இந்த சென்னைச் (அ)(சி)றுவன் வரலாமா?

Anonymous said...

குடிக்கறதுனா Direct ஆ பாருக்கு போகவேண்டியதுதானே