நேற்றைய பதிவில் சென்னைப்பதிவர் சந்திப்பு குறித்து ஒரு அறிவிப்பு வெளியாகியிருந்தது . அச்சந்திப்பு சென்னை மெரினா கடற்கரையில் நடப்பதாக இருந்தது . ஆனால் 60வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு கடற்கரை முழுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பார்க்கிங் மற்றும் கூட்டமாய் அமர்ந்து பேசுவதும் பிரச்சனையாக இருக்கும் என பல பதிவர்களும் வாசகர்களும் நேற்று தொலைப்பேசியில் அழைத்து தெரிவித்தனர். அங்கே நேரில் சென்று பார்த்த போது பிரச்சனை ஒருமாதிரியாக புரிந்தது.
திடீரென இப்படி ஒரு சிக்கலை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. நடேசன் பார்க்கில் கொசுக்கடி பிரச்சனை இருப்பதால் புதிதாக ஒரு இடம் தேர்ந்தெடுப்பதில் பல சிக்கல்கள் இருந்தன.
அதனால் கிழக்குப்பதிப்பகத்தின் மொட்டைமாடியில் சந்திப்பை நடத்தலாம் என முடிவாகி அப்பதிப்பகத்தை அணுகினோம். அவர்களும் பெருந்தன்மையோடு அவர்களது மொட்டைமாடியில் நமது பதிவர்சந்திப்பை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கினர்.
எனவே இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கிழக்குப்பதிப்பகத்தின் மொட்டைமாடியில் நம் ஏற்கனவே திட்டமிட்டபடி நமது பதிவர்சந்திப்பு நடைபெறும்.
புதிய இடம் மற்றும் நேரம் -
இடம் - கிழக்குப்பதிப்பகத்தின் மொட்டைமாடி
நேரம் - 5.30 முதல் சந்திப்பு முடியும் வரை ( apprx 7.30 வரை)
கிழக்குப்பதிப்பகம் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் அமைந்துள்ளது . (எல்டாம்ஸ் ரோடு மியூசிக் வோர்ல்டு அருகில் )
மேலதிக விபரங்களுக்கு -
எனது முந்தைய பதிவு - http://www.athishaonline.com/2009/01/chennai-bloggers-meet-25-01-09.html
அதிஷா - 9884881824
லக்கிலுக் - 9841354308
முரளிக்கண்ணன் -9444884964
நர்சிம் -9940666868
கோவிக்கண்ணன் - 90477 44151
*******************************
தீடீரென உருவான இந்த பிரச்சனையால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும். அனைத்து வாசகர்களும் , பதிவர்களும் கட்டாயம் சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
நன்றி
21 comments:
மன்னிப்பு.. எனக்கு பிடிக்காத வார்த்தை.. ஞாயிறு மாலை தண்டனை உண்டு.. ஹிஹிஹி..
சரி அண்ணா. நான் அங்கு வந்து விடுகிறேன்..ஆனா எனக்கு கிழக்கு பதிப்பகம் எங்கு இருக்கிறது என்று தெரியாது தயவு செய்து சொல்லி விடுங்கள்.
உள்ளேன் ஐயா
மக்களே உஷார் ! போலீஸ் வந்தா ஓட முடியாத எடத்துல அதிஷா கூட்டம் ஏற்பாடு பண்றாரு ! இதுல ஏதோ வில்லங்கம் இருக்கு !
நான் வந்தா என்னா கொடுப்பிங்க??
நான் வந்தா என்னா கொடுப்பிங்க??
பார்த்துங்க... பழக்கதோஷத்திலே, ஹரன் பிரசன்னா ஏதாவது பதிவர் கொண்டுவந்திருக்கிற குமுதத்தையோ, ஆ.வி.யை யோ வெளியிடுறேன் என்று சொல்லி வெளியிட்டு, அப்பாலிக்கா பதிவும் போட்டுட போறாரு...
*******************************
/*சரி அண்ணா. நான் அங்கு வந்து விடுகிறேன்..ஆனா எனக்கு கிழக்கு பதிப்பகம் எங்கு இருக்கிறது என்று தெரியாது தயவு செய்து சொல்லி விடுங்கள்.*/
எங்கே இருக்கும்? ஊருக்கு கிழக்கே தான் இருக்கும்.
ஆமா...? ஊருக்கு கிழக்கே தானே மெரீனா பீச்சு தானே இருக்கு....!?!?
அப்ப கிழக்கு பதிப்பகம் எங்கே இருக்கு?
ஹான்.... கண்டு பிடிச்சிட்டேன். மேற்கு பதிப்பகத்துக்கு எதிராலே இருக்கு.
கீழே புக் வாங்கினால்தான் மேலே போகலாமாமே, நிசங்களா ?
உடனே வேறு இடம் பிடித்து சந்திப்பு ஏற்பட உதவிய தங்களின் முயற்சிக்கு கோடானு கோடி நன்றிகள் ஆதிஷா. paaraattukkal.
குப்பன்_யாஹூ
நண்பர்களே !
நான் வரும் ஞாயிறு அன்று அதாவது 25-01-2009 அன்று அம்பத்தூரில் நடக்கவுள்ள ''முதலாளித்துவ பயங்கரவாத மாநாட்டில்' ' கலந்து கொள்ள வேண்டும். ஐ.டி தொழிலாளர்கள் பலரும் கலந்து கொள்வதால் தயவுசெய்து பதிவர்சந்திப்பு தேதியை மாற்றி குடியரசு தினத்தன்று சந்திக்கலாமே
regards
mani
/*நான் வந்தா என்னா கொடுப்பிங்க??*/
கீழ்பாக்கத்துக்கு ரெண்டு டிக்கட் தருவோம்.
ஒண்ணும் இல்லை, வில்லு படத்துக்கு ரெண்டு டிக்கட் தருவொம்னு சொன்னேன்.
உள்ளேன் அய்யா....
வெளியூர் பதிவர்களூக்கு வண்டி சத்தம் வழங்கப்படுமா.?
அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்
நீங்கள் முன்னரே இடத்தை ரிசர்வேஷன் செய்திருந்தால், அவர்கள் குடியரசு தினத்தை வேறு இடத்தில் வைத்திருப்பார்கள். (அவர்கள் முதலில் ரிஷர்வேஷன் செய்திருக்கக் கூடும்.) எதுக்கும் பர்ஸ்ட் கம் பர்ஸ்ட் செர்வ் பேசிஸ்ல அவங்களே விழா நடத்தட்டும். அடுத்தமுறை பதிவர்கள் சார்பில் முன்னரே புக் செய்து விட வேண்டும். இல்லை என்றால் அவர்கள் குடியரசு தினத்தை நடத்தி விடுவார்கள்.
எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை சாதனையாக்கி வெற்றிகரமாக நடத்துங்கள் அதிஷாஜி
இதில் உச்சகட்ட காமெடி என்னவென்றால், இப்போது கிழக்கில் இருக்கும் ஒருவர்தான் நேசகுமார் என்று போலிடோண்டுவிடம் தகவல் அனுப்பி அவரை படு ஆபாசமாக எழுதவைத்த கோவியானந்தா அதே கிழக்கில் கருத்துரை(??) ஆற்றவிருப்பதுதான்...
ஹி ஹி
சந்திப்பு தித்திப்பாக நடக்க வாழ்த்துகள்!
வாழ்த்துகள்!
அம்பத்தூரில்
ithu enga ereya
வாழ்த்துகள்
யாருவேனும்னாலும் வரலாமா...
திரு.முத்துராமலிங்கம்...
இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
கட்டாயம் கலந்து கொள்ளவும்.
Post a Comment