29 January 2009

FLASH NEWS - சிங்கள இனவெறி அரசை கண்டித்து பத்திரிக்கையாளர் தீக்குளிப்பு

சிங்கள இனவெறி அரசை எதிர்த்து இன்று சென்னை சாஸ்திரி பவன் எதிரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் ஆர்ப்பாட்டத்தில் திடீரென பத்திரிக்கையாளர் முத்துக்குமரன் தீக்குளித்தார். இவர் பெண்ணே நீ என்னும் மாதப்பத்திரிக்கையில் அச்சுக்கோர்க்கும் பிரிவில் பணியாற்றி வந்தார் . அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் சென்னையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

34 comments:

ஜெகதீசன் said...

:((

முரளிகண்ணன் said...

:-(((((

வீ. எம் said...

வருத்தமாக உள்ளது.. தோழர்களே உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம்.. உயிர் இருந்தால் தானே போராட முடியும்..

இதையும் உள்ளர்த்தம் கற்பித்து விம்ர்சித்து கொண்டாட வலையில் "சோ" கால்ட் நல்லவர்கள் இங்கே இருப்பார். அனானி பெயரில் மட்டும். எல்லாம் விதி

Anonymous said...

I'm soorry. :((

ஆதித்தன் said...

எங்களுக்காக தமிழுறவுகளாகிய நீங்கள் செய்யும் போராட்டங்களுக்கு என்றைக்கும் உங்களுக்கு கடன்பட்டு இருப்போம். ஆனால் உண்ணாவிரதத்தாலோ, தீக்குளிப்பாலோ
என்ன பயனை அடைய முடியும் என்று விளங்கவில்லை. உங்களை நாம் இழக்க விரும்பவில்லை. இதுபோன்ற செய்கைகளால் நம் இன எண்ணிக்கை குறைகிறதென்று எதிரிகள் மகிழ்வார்களே ஒழிய, ஒருபோதும் நிலை நமக்கு சாதகமாகாது. தயவு செய்து போராட்டவடிவத்தை மாற்றி,
அரசியல்ரீதியாக செயல்பட்டு, தமிழர்களுக்கு விடிவைத்தருகிற அரசை பதவியில் அமர்த்துங்கள்.

ARV Loshan said...

பரிதாபம்.. வேண்டாம் தமிழக சகோதரர்களே.. போதும் உயிரிழப்புக்கள்..

இங்கே தமிழர் உயிரிழக்கக் கூடாது என்று நீங்கள் உங்கள் உயிரை மாய்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

puduvaisiva said...

what a bad news this morning?
Athisha write more about the staff

I am too much worry read this news

puduvai siva

VIKNESHWARAN ADAKKALAM said...

:((

Unknown said...

மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது..எதற்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல :(

வாசுகி said...

மிகவும் வருத்தமாக உள்ளது.
உயிரிழப்புகள் போதும்.
இங்கு மக்களின் உயிர் இழப்புகளை நீக்க நீங்கள்
உயிர்மாய்த்துக்கொள்வது நியாயம் அற்றது.இதனால் பயனும் இல்லை.
தயவு செய்து உயிரை பணயம் வைக்காதீர்கள்.

சந்தனமுல்லை said...

:((

வெற்றி said...

மிகவும் வருத்தமான செய்தி.
சகோதரர் முத்துக்குமரன் சுறுக்காகப் பூரண குணமடைய இறைவனைத் தொழுகிறேன்.

தமிழக உறவுகள் தீக்குளிப்பது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

இலங்கை அரசோ அல்லதி இந்திய நடுவண் அரசோ தமிழர்களின் உயிரைப் பொருட்டாக மதிப்பதாக நான் நினைக்கவில்லை.

இதுவரை 500 க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களப் படைகளால் கொல்லப்பட்டும் இந்திய அரசு ஒன்றும் செய்யவில்லை.

ஆகவே தீக்குளித்து உயிரை மாய்ப்பதால் இந்திய நடுவண் அரசு செவிசாய்க்காது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-(((((((((((((((

ஆதித்தன் said...

அந்தச் சகோதரர் மரணித்தார் என்று கேள்விப்படுகிறேன். அவருக்கு என் இதயபூர்வமான அஞ்சலிகள்.

SUBBU said...

:-((((((((((((((( :-(((((((((((((((

Karthik said...

:(

Anonymous said...

பத்திரிகை அலுவலகத்தில் வேளை பார்போர் எல்லாரையும் (சுத்திகரிப்பாளர் உட்பட) பத்திரிகையாளர் என்றழைப்பதை நிறுத்தவேண்டும்

Anonymous said...

I heard he already died,
I am really sad about it.
we are very grateful for our tamil nadu brethern for showing support and solidarity with eelam tamils.
but please don't die in vain.
your lives are precious,
fasting and burning alive are not the ways to show your protest.
There are other ways to show your feelings.
we are loosing our young people in thousands in eelam ,we don't want that to happen in tamil nadu as well.
Muthukumaran,may your soul rest in peace,hope one day eelam tamils will gain their freedom.

பரிசல்காரன் said...

:-(((((((((

வினோத் கெளதம் said...

மிகவும் துக்கமான செய்தி...மறைந்த நண்பரின் ஆத்மா சாந்தி அடையட்டும்..

மணியன் said...

:((((
எனது அஞ்சலிகள் :(

மணியன் said...

:(((
அவர் இறந்ததாக அறிகிறேன்.எனது இதய அஞ்சலிகள் :(

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வேதனை அளிக்கும் இன்னொரு நிகழ்வு!
ஆற்றாமையால் கண்ணீர் விட்டு தலை குனிவதை விட சாவதே மேல் என்று முடிவெடுத்த முத்துக்குமரனிடம் பாடம் கற்க தமிழ் அரசியல் தொழிலதிபர்கள் தயாராக இல்லை. அதை இன்னும் உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். முத்துக்குமரன் போன்ற உணர்வுள்ள ஆயிரம் ஆயிரம் இளைஞர்களுக்கு வரலாற்றுப் பிழை செய்த அரசியல் வியாபாரிகளே, நீங்கள் என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்? உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கா? தூ என்று துப்பினால் அது தகும் என்று எண்ணத் தோன்றுகிறது.

இராகவன் நைஜிரியா said...

மரணமடைந்த முத்துகுமாரன் அவர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்.

சென்ஷி said...

மிகவும் துக்கமான செய்தி...மறைந்த நண்பரின் ஆத்மா சாந்தி அடையட்டும்..

ARV Loshan said...

எங்களுக்காக உயிரை விட்ட அந்த அப்பாவி சகோதரனுக்கு அஞ்சலிகள்..
இனி யாரும் எமக்காக உயிர் விடாதீர்கள்.. எமக்காக பல ஆயிரக்கணக்கானோர் உயிரை விட்டும் ஏதும் நடக்கவில்லை.. பரிதாபமான,சபிக்கப்பட்ட ஜென்மங்கள் நாம்..

தமிழக அன்பு உள்ளங்களே உங்கள் அன்புக்கும்,ஆதரவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்..

Unknown said...

அந்தத் தமிழனுக்கு எனது இதய அஞ்சலிகள்.

தயவு செய்து உயிரிழப்புக்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.தமிழினத்துக்கு உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடாது.

Anonymous said...

:(
ஏன் இப்படி?? :(

தமிழ் ஓவியா said...

முத்துக் குமாரின் உணர்வை மதிக்கிறேன். அதே வெளை இது போன்ற குறிப்பாக தீக்குளிப்பு போன்ற போராடங்கள் தேவையில்லாதது. அருள்கூர்ந்து யோசித்து மாற்றுப் போரட்ட வடிவத்தை கையிலெடுங்கள்.

இது குறித்து தி.க.தலைவர். கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள செய்தி இதோ:

"அந்தோ! கொடுமை! கொடுமை!! ஈழத் தமிழர் பிரச்சினை:
சென்னையில் இளைஞர் தீக்குளித்து மரணம்

தற்கொலைப் போராட்டத்தைக் கைவிட்டு
அறப்போர்பற்றி சிந்தியுங்கள்!
தமிழர் தலைவர் கி. வீரமணி அன்பு வேண்டுகோள்

ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க வேண்டி மாணவர்கள் உண்ணாவிரதம் போன்ற அறப்போர்களில் ஈடுபட்டதைத் தாண்டி, இன்று சென்னை சாஸ்திரி பவன் முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனக்குத்தானே தீக்குளித்து இறந்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனைக்குரியது; ஆழ்ந்த துன்பத்தைத் தருவது.
இந்தியப் பேரரசு இதுபோன்ற கொடுமைகள் நடக்காவண்ணம் மேலும் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்த முன்வாருங்கள்.

ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க இங்குள்ள நாம் உயிர்த் தியாகம் செய்வது என்பதனால் முழுப் பயன் அடைந்து விட முடியாது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராடிட உயிருடன் இருப்பது அவசியமாகும்.

எனவே, மாணவத் தோழர்களே, இளைஞர்களே அருள்கூர்ந்து இம்மாதிரி தற்கொலைப் போராட்ட முயற்சியைக் கைவிட்டு, வேறு ஆக்க ரீதியான அறப்போர்கள் பற்றி சிந்தியுங்கள் என்று அன்புடனும், உரிமையுடன் மாணவத் தோழர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
---------நன்றி "விடுதலை" 29-1-2009

Anonymous said...

இவரின் உயிரிழப்பு பரிதாபகரமானது.அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஈழத்தமிழனின் விவேகம் கலந்த வீரம் தமிழகத்தமிழனிடம் இல்லை. இன்னமும் உணர்வுவயப்பட்டு இந்தமாதிரி முட்டாள்தனங்களில் ஈடுபடும் பக்குவமற்ற மனநிலைதான் நம்மிடம் உண்டு. இதனால்தான் தீக்குளிப்பு படுக்கேவலமாய் போய் வைகோ திமுகவை விட்டு நீக்கப்பட்ட போதுகூட மூவர் தீகுளித்தனர்.

முத்துக்குமரன் மரணம் எந்தஒரு விளைவும் ஏற்படுத்த போவதில்லை. இரண்டு துக்கம் கொண்டுவதோடு போய்விடும். இதே நபர் மக்களிடையே 1980களில் இருந்த ஈழ அலையை வேறு முறையில் ஏற்படுத்த முயற்சித்திருக்கலாம். அதை விட்டு தன் குடும்பத்தை நிற்கதியாய் விட்டுவிட்டு போனதுதான் மிச்சம்.அவர் போய்விட்டார் அவரது குடும்பம்?

இச்சம்பவத்தை சிலர் வீரம், தியாகம் என குளோரிஃபை பண்ண முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கின்றது. இந்த மாதிரியான உணர்வுவயப்பட்ட போரட்ட முறைகள் முட்டாள்தனமானவை என இகழப்படுவதின் மூலம் டிஸ்கரேஜ் செய்யபட வேண்டும். தமிழனின் உயிர் இவ்வளவு இலகுவில் இழக்க தகுந்தல்ல!

Kavi said...

எங்களுக்காக இப்படி உயிரைவிடவும் தயாராய் உள்ள தமிழக உறவுகளை எண்ணி பெருமிதமாய் இருக்கிறது.

ஆனால் எங்களுக்காக போராட தயவு செய்து உங்கள் உயிரை மாய்க்க வேண்டாம்.

இந்த அண்ணனின் தியாகத்தை எழுத வார்த்தைகளே இல்லை. எனது கண்ணீர் வணக்கங்கள்!

அவரது குடும்பத்தினருக்கு என்ன ஆறுதல் சொல்ல??? உங்களுக்கு... ஈழமக்கள் நாங்கள் இருக்கிறோம்.

☀நான் ஆதவன்☀ said...

தோழரின் ஆத்மா சாந்தியடையட்டும்

தமிழக தலைவர்கள் வெட்கி தலை குனிய வேண்டும்.

Anonymous said...

நாங்கள் நிறைய அண்ணன்களை இழந்து விட்டோம் இனியும் வேன்ன்டம் இழப்புக்கள் அதுவும் இப்படி ஓர் வேதனையனா ஓர் சம்பவம்
உங்கள் ஆத்மா சந்தியடையாப் பிரார்த்திக்கும் நாம் (ஈழத் தமிழ் தங்கைகள்)

Anonymous said...

Thamizhaga thalaivargal innum manam kettu poi manthiri pathaviyil otti kondu irukka venduma? Soodu soranai irunthal rajinama seyyungal! Gongress periyakkam thamizhagathil koondodu azhiya pogum naal vegu tholaivil illai!