02 February 2009

இரண்டு கோப்பை ஜென்கதை - கொறிக்க ஒரு கவிதை


ஒரு கை ஓசை -
வெகுதொலைவில் இருந்து வந்த ஐந்து மாணவர்கள் , அந்த குருகுலத்திற்கு ஞானம் பெற வந்திருந்தனர். குருவை சந்தித்து தங்களது வரவையும் காரணத்தையும் கூறினர். குரு அவர்களை வரவேற்று ஞானம் பெறுவதற்கு முன் ஒரு சிறிய தேர்வுண்டு அதில் தேர்ந்தால் தான் கற்றுத்தருவதாய் கூறினார்.


அடுத்த நாள் குரு , மாணவர்களை அழைத்தார்.


''ஒரு கை ஓசை கேட்கும் வரை தியானியுங்கள்'' என்று கூறிவிட்டு சென்று விட்டார்.


மாணவர்கள் விடா முயற்சியோடு தியானமிருந்தனர். நாட்கள் கடந்தன. ஒரு கை ஓசை கேட்கவேயில்லை. பல மாதங்கள் கடந்தன . அந்த ஓசை கேட்கவேயில்லை. 3 வருடங்கள் கடந்தது. மாணவர்களால் அந்த தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதற்கு மேலும் ஞானம் பெற இயலும் என்கிற நம்பிக்கையை இழந்து குருவிடம் சென்றனர்.


''குருவே எங்களுக்கு நம்பிக்கை இல்லை இந்த தேர்வில் வெற்றி பெற முடியுமென்று அதனால் நாங்கள் எங்கள் ஆசிரமத்திற்கே போகிறோம் ''


''இன்னும் ஒரு மாதம் முயலுங்கள் முடியாவிட்டால் போகலாம்'' புன்னகைத்தபடியே கூறினார் குரு.


ஒரு மாதம் கடந்தது... மீண்டும் தோல்வி.. குரு இந்த முறை ஒரு வாரம் முயற்சி செய்ய சொன்னார்..


மீண்டும் தோல்வி.. குரு அவர்களை அழைத்துக்கொண்டு ஒரு கிணற்றிற்கு சென்று..


இன்னும் மூன்று நாட்கள் தருகிறேன் அதற்குள் இத்தேர்வில் வெற்றி பெறாவிட்டால் நீங்கள் வாழ்வதே கேவலம்.. இந்த கிணற்றில் விழுந்து செத்துவிடுங்கள் என்றார்.


அவர்கள் இரண்டு நாட்களிலேயே ஒரு கை ஓசையை கேட்டனர்.


***************************


இச்சைகள் ஆயிரம் :


அந்த மாணவன் தனது குருவிடம் கூறினான் , '' குருவே எனக்கு அடிக்கடி கட்டுபடுத்த முடியாத அளவுக்கு இச்சைகளும் கோபமும் எழுகிறது.. அதை எப்படி சரி செய்வது ''


''உனக்கு மிக வித்யாசமான பிரச்சனை இருக்கிறது , எங்கே காட்டு உனது பிரச்சனையை ''


''அது எப்படி இப்போதே காட்ட இயலும்.. ''


''பின் எப்போது காட்டுவாய்''


''அது வரும் போது காட்டுகிறேன் ''


''அப்படினா அது உன்னோடே பிறந்ததில்லை , உன் பெற்றோரும் தந்ததில்லை. யோச்சித்துப்பார் '' என்றபடி தியானத்தில் மூழ்கினார்.


********************


தனிமையின் இரவு

நள்ளிரவில் தாகம்

நகங்களில் குளுமை

உதட்டில் வெடிப்பு

உயிர்ப்பில் காமம்

இளஞ்சிவப்பு சூரியன்

புதிதாய் யவனம்

மனதில் தீ நீ

இட்ட முத்தங்களின் சுவடு

பின்னிரவு இருள்

வெட்கை பின் வேட்கை

இளமை கலைந்து

பின் கலைத்து

பிணமாய் நான்

அருகில் நீ


***********************

11 comments:

Anbu said...

me the first

வினோத் கெளதம் said...

அப்ப முதல் கதையுல சீடர்கள் கடைசியா பொய் சொல்றாங்களா..

கவிதை அருமை..
அவர்கள் தம்பதியர்களா இல்லை காதலர்களா..

Unknown said...

குருவே!

முதல் இரண்டும் புரிந்து ஞானம் அடைந்தேன்.முன்றாவது(கவிதை)
புரியாமல் அஞ்ஞானியாகிருக்கிறேன்.

சற்று ஞான விளக்கை மேல் அடிக்க.

Unknown said...

ரவி சார் உங்களுக்கு என்ன புரிஞ்சுதோ அதுதான் அதன் அர்த்தம்..

ஒன்னுமே புரியாட்டி அதுதான் அதன் மீனிங்

RAHAWAJ said...

சூப்பர் அதிஷாஜி, கலக்கிட்டிங்க அடிக்கடி ஜென் கதைகள் போடவும்

மணிகண்டன் said...

*****
ரவி சார் உங்களுக்கு என்ன புரிஞ்சுதோ அதுதான் அதன் அர்த்தம்..

ஒன்னுமே புரியாட்டி அதுதான் அதன் மீனிங்
*****

அர்த்தம் எல்லாம் உண்டா அப்படினா ?

மணிகண்டன் said...

***** கலக்கிட்டிங்க அடிக்கடி ஜென் கதைகள் போடவும் *****

மனுஷனுக்கு இருக்கற குழப்பம் போதாதா ?

படிச்சா புரியற மாதிரி இருக்கற ஈசாப் கதைகள் தான் வேணும் !

இல்லாட்டி சுந்தர் எழுதற "அ" கதைகள் போய் படிங்க.

Hisham Mohamed - هشام said...

சங்கு........//

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கிட்டிங்க அதிஷா

ARV Loshan said...

அதிஷா, கதைகள் அருமை.. சாவு தெரிந்தால் சகலமும் வரும்..;)

கடைசி கவிதை கலக்கல்.. :)

//வெட்கை பின் வேட்கை
இட்ட முத்தங்களின் சுவடு//

டச் பண்ணிய வரிகள்..

(அதுசரி,நீங்கள் மணிரத்னம் ரசிகரா?) ;)

VIKNESHWARAN ADAKKALAM said...

கதைகள் அசத்தக் மாமு...