Pages

02 April 2009

எ.வீ.ஜ-5 - பாலபாரதியும்,பதிவர் சந்திப்பும்,பின்ன ஞானும்..!

எதிர்வீட்டு ஜன்னல்கள் - 5


பிப்ரவரி 2008


பாருங்கடா பதிவு எழுதுகிறேன் என ஒரு அடப்பாசு பிளாகை துவங்கிய நேரம் அது. இன்றும் அது அடப்பாசாகத்தான் இருக்கிறது. ஓரளவு பாசாகும் தகுதியோடிருந்தாலும். அவனைத்தவிர யாருமே படித்திராத பதிவுகள் நிரம்பிய பிளாக் அது. பின்னூட்டங்கள் கூட ஒன்று விட்ட அண்ணனுக்கு போன் போட்டு போட சொன்னது. அவரும் ஒன்று போட்டார். அச்சமயத்தில் ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தார் அந்த வலையுலக தல.


அவனும் கலந்துகொண்டான் அனைவரும் அன்போடு பேசினர். கூச்ச சுபாவம் அதிகம் கொண்டிருந்தவன் யாருடனும் பேசவில்லை.சந்திப்பு முடிந்து திரும்பியவன் மீண்டும் வெகுண்டெழுந்து எழுதத்துவங்கினான். மீண்டும் அதே நிலைதான். படிக்க ஆளில்லை. நமக்குநாமே என்கிற நிலைதான். அவனே வேறு வேறு பெயர்களில் அவனுக்கே பின்னூட்டங்கள் போட்டுக்கொண்டான். பின்னூட்ட டுபுரித்தனங்கள் அவனுக்கு கை வந்தன. இங்கே தனிமையாய் உணர்ந்தான். மீண்டும் எழுதுவதில் சுணக்கம். எழுதுவதே இல்லை.


ஏப்ரல் - 2008

ஒரு ஞாயிறு மதியம். துணிதுவைத்துக்கொண்டிருந்தான். அன்றைக்கு பதிவர் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. இவனுக்கு அங்கே செல்ல ஏனோ மனதில்லை. பதிவு எழுதவே பிடிக்காதவனுக்கு பதிவர் சந்திப்பு எதற்கு. யாருமே படித்திராத பதிவராய் தன்னை உணர்ந்து கொண்டு விலகி நின்றான். இனி எழுதவே போவதில்லை. எழுதி என்னத்தை கிழித்து விட்டோம் என விரக்தியுற்று அதை மறந்து தொலைத்து கிழித்து விட்டான். துணியை துவைத்தபடி. நான் போகாவிட்டால் யாருக்கு என்ன நஷ்டம்,யார் கவலைப்படப் போகிறார்கள். ஆனாலும் மனதிற்குள் ஒரு வேதனை.

ஒரு அலைபேசி அழைப்பு , எதிர்புறம் அந்த பதிவர் என்னடா தம்பி சந்திப்புக்கு வரலையா என உரிமையோடு ஒரு கேள்வி. துணிதுவைத்ததில் உடலெங்கும் நனைந்திருந்தது கண்களைத்தவிர . இப்போது அதுவும் சேர்த்து. இவனால் பதில் கூற முடியவில்லை. உடனே கிளம்பி வாடா என் டுபுக்கு என அழைக்கிறார். படபட சடசடவென உடையை மாற்றிக்கொண்டு கிளம்பினான். அண்ணா எப்படினா பதிவு எழுதறீங்க எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்குது, என் பதிவ யாருமே படிக்க மாட்டேன்றாய்ங்க எதுக்கு நான் எழுதணும் எழுதவும் வரமாட்டேங்குது இதையே பல பதிவர்களிடமும் கேட்டான்.

சந்திப்பு முடிந்தது. எழுதத்துவங்கினான். எதையாவது எழுதுடா என அந்த அண்ணன் விதைத்த நம்பிக்கை மனதில் ஒளிர எதையாவது எழுதத் துவங்கினான்.



ஜனவரி 2009

இதோ இப்போதும் எழுதிக்கொண்டே இருக்கிறான். 2 லட்சம் பேர் பார்த்துவிட்டார்கள் அவன் வலைப்பூவை. குமுதம் தனது டாப் டென்னில் ஏழாம் இடம் கொடுத்தது.

இன்று

மண்ணாய் போயிருக்க வேண்டிய அவனை மரமாய் வளர விதை போட்டவர் அந்தப் பதிவர். அவர் மட்டும் இல்லாவிடில் அவன் வாழ்க்கையில் வலையுலக எழுத்தென்பது கமா இல்லாமல் முற்றுப்புள்ளியாய் முடிந்திருக்கும் .

அந்த பதிவர் , பாலபாரதி என பலராலும் அறியப்பட்ட அவனது பாலாண்ணா!

இதோ ஒரு வருடத்தை நிறைவு செய்கிறான் அவன் தனது வலையுலக பயணத்தில். அவன் தன் செல்ல பாலாண்ணாவுக்கே முதல் நன்றியை தெரிவிக்க ஆசைப்படுகிறான். நன்றி என ஒரே வார்த்தையில் முடித்துவிட முடியவில்லை. இதுவரை தனக்கு வந்த பாராட்டுக்கள் அனைத்தையும் அவருக்கே தர எண்ணுகிறான். அது அவருக்கே உரியதாம். அதில் யாருக்கும் பங்கில்லை என்கிறான். பாசக்கார பயபுள்ள..

2006 ஆம் ஆண்டு அது, பதிவுலகில் பாலபாரதி என்பவரின் வரவு பலருக்கும் பிற்காலத்தில் சிம்மசொப்பனமாக இருக்க போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியாது. ஒரு குழு மட்டுமே கொட்டமடித்துக்கொண்டிருந்த வலையுலகில் அவர்களை எதிர்த்து , அவர்களை எதிர்ப்பவர்களை ஒருங்கிணைத்து சிலரது ஆதிக்கத்தில் இருந்த பதிவுலகை அனைவருக்குமாய் ஆக்கிய பெருமை பாலபாரதிக்கே உரியது. பதிவர் சந்திப்புக்கள் பலதையும் பதிவர் பட்டறைகளும் நடத்தி பதிவுலகின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் அவர்.

அவரது வலைத்தள முகவரி - http://blog.balabharathi.net




********************************************

பதிவருங்களுக்கு ஒரு கடிதாசு;

அன்புள்ள மாம்ஸ் அண்டு மச்சிஸ்!

எப்படிக்கீறீங்கோ..

புச்சு புச்சா நெரிய பதிவருங்கோ எழுதுறாங்கோ.. அதிலயும் நெரிய பேரு சோக்கா எழுதுறாங்கபா.. நம்ம பதிவுலக பெர்சுங்கோ அவங்களலாம் நேர்ல பாக்கணும்னும் அவங்களோட மீட் பண்ணிக்கனும்னும் முடிவு பண்ணிக்கீதுங்கோ... அதுமில்லாம புச்சா வந்த பதிவருங்களும் ஒருத்தர ஒருத்தர் மீட் பண்ணிக்கினு கும்சா இருக்க ஒரு வழியா இது இருக்கும்னு தேனாம்பேட்டை ரைட் ரங்கம்மா நினிக்கிது..

அதனால் மக்கள்ஸ் பகீர்னு இந்த வீக்கு ஒரு பதிவர் சந்திப்பு வைக்கலாம்னு பெருங்குடிமக்கள்லாம் முடிவு பண்ணீர்ச்சுங்கோ..

அதனால இன்னானா...


வலையுலக பெரிசு பாலபாரதி அவர்களின் தலைமைல


வர ஏப்ரல் மாசம் 5 ஆம் தேதி சாயங்காலம் நம்ம சென்னைலக்கீற நம்ம மெரீனா பீச்சாண்டக்கீற நம்ம காந்தி செலையாண்டக்கீற தண்ணில்லாத குட்டயாண்ட அல்லாருமா சேந்துக்கீனு கடலை வாங்கி தின்னுகினு கும்சா குந்திக்கினு குஜாலா கும்மி அடிக்கலாம்னு முடிவு பண்ணிக்கீறோம். அல்லாரும் வந்து சேருங்கோ மக்கள்ஸ்...

இன்னார்தான் கலந்துக்கணும், இன்னார்லாம் கயந்துக்க கூடாதுனு ஒன்னியும் ரூல்ஸ் கடியாதுபா! நீங்கோ பதிவு எழுதுங்கோ எழுதாதீங்கோ படிங்கோ படிக்காதீங்கோ யாரையாவது அடிங்கோ அடிக்காதீங்கோ ஆனா பதிவர் சந்திப்புக்கு வந்துருங்கோ...!

இத்தான் பேசணும் இதெல்லாம் பேசப்பிடாதுனு ஒரு ரூல்ஸ் கீல்ஸ்லாம் கடியாது.. யார் வேணா பேசலாம் இன்னா வேணா பேசலாம்..


இந்த பதிவர் சந்திப்பு யாரும் சேர்ந்துகிணு கூட்டம் போட்டுக்கிணு நட்த்துறதுலாம் கடியாது.. அல்லாருமா சேர்ந்துகிணு அல்லாருக்காவும் நட்த்துறது..


அல்லாரும் வந்து சேருங்கோ மக்களே...


எடம் - மெரீனா பீச்சு காந்தி செலையாண்டை


டைமு - 5 மணிலேருந்து அரட்ட கச்சேரி முடியற வரிக்கும்


நாளு - 05-04-2009 ஞாய்த்துகெழமை


மக்களே மறந்துடாதீங்கோ மறந்தும் வூட்ல தூங்கிடாதீங்கோ.. மருவாதியா வந்து சேருங்கோ அல்லாங்காட்டி பதிவு போட்டு உங்க நிஜார பேஜார் பண்ண வேண்டிருக்கும்..


எதினாச்சும் டவுட்டு இர்ந்த நம்பருக்கி போன் பண்ணுங்கோ.. ( சுண்டக்கஞ்சிக்கு ரிசர்வேஷன் இந்த நம்பர்ல கடியாது அதுக்கு வேற நம்பர் நேர்ல வாங்கோ வாங்கி தரேன்)


பாலபாரதி – 9940203132


லக்கிலுக் – 9841354308


அதிஷா – 9884881824


கேபிள் சங்கர் - 9840332666


முரளிகண்ணன் - 9444884964


அவ்ளோதான்மா கடுதாசி..


இப்படிக்கு உங்கள் அன்புள்ள


அதிஷா..




******************************




பதிவுலகில் ஒரு மாதமாவது தாக்கு பிடிப்பேனா என எண்ணியவன் ஒரு வருடத்தை கடக்கிறேன்...


என் பாதையில் எப்போதும் வழிகாட்டியாகவும் விழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருந்த இருக்கும் இருக்கவிருக்கும் முரளிக்கண்ணன்,பரிசல்,வடகரைவேலன்,வெயிலான்,ஜ்யோவ்ராம் சுந்தர்,வால்பையன், நர்சிம் ,கே.ரவிஷங்கர், உ.த அண்ணன்,கோவிண்ணா,செந்தழல்ரவி,பைத்தியக்காரன்,கேபிளார்,தாமிரா,ரமேஷ்வைத்யா அண்ணே,கார்க்கி,மருத்துவர் புருனோ,சஞ்சய் காந்தி,தூயா மிக முக்கியமாக நான் சந்தித்திராத என் நண்பர்கள் விக்கி என்கிற விக்னேஷ்வரன் மற்றும் மணிகண்டன், என்னை படித்த பிடித்த கடித்த கடிந்த பின்னூட்டமிட்ட பின்னூட்டமிடாத வாசகர் வாசகி என அனைவருக்கும் என் நன்றிகள் ஆயிரம் லட்சம் கோடி கோடி கோடி..நன்றிகள்


திரட்டிகள் இல்லாமல் நான் இல்லை என்பதில் உறுதியாய் இருக்கிறேன். என் பதிவுகள் திரட்டும் தமிழ்மணம்,தமிழிஷ்,தமிழ்வெளி,தமிழ்பிளாகட், திரட்டி.காம்,மாற்று, என அனைத்து திரட்டிகளுக்கும் நன்றிகள்.




*********************************