31 March 2009

இரண்டு வார்த்தை கதைகள் பத்து!
தலைப்பு - 1.முதலிரவு உறவின் மிகச்சிலவிநாடி உச்சத்தில் கணவன்


கதை - வயகரா வாங்கிருக்கலாமோ?


**********************************************************************


2.கள்ளிப்பால் குடிக்கும் குட்டிப்பாப்பாவின் கடைசி நினைவுகள்


கசக்குதே ஏன்?


***********************************************************************


3.காலயந்திரத்தில் பின்னோக்கிச் டைனோசர் காலத்திற்கு சென்றவன்


அங்கே கடிக்காதே!


***********************************************************************


4.காலயந்திரத்தில் பின்னோக்கிச் டைனோசர் காலத்திற்கு சென்றவன் துரத்திவரும் டைனோசரிடம் மாட்டிக்கொள்ளும் முன்


பெட்ரோல் கொண்டுவரலையே!


*************************************************************************


5.சத்யவானை வேண்டிநிற்கும் நவீன சாவித்திரியிடம் எமன்


நோப்ராப்ளம் காப்பி-பேஸ்ட் ( நாலுவார்த்தை வந்துருச்சோ ஒன்னு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணி இதையும் வச்சுக்கோங்க)


***************************************************************************


6.அவளை ரசிக்கும் கணவனைக்கண்டு மனம்வெதும்பி அவனை ரசித்தாள் மனைவி


மானாட மயிலாட


****************************************************************************


7.அரைமணிநேரமாய் தேடித்தேடி கண்ட இடமெல்லாம் வெட்டு வெட்டென வெட்டினான்


நரை முடி


*****************************************************************************


8.காதலன் காதலி அரைமணிநேர நெருக்கமான டெலிபோன் பேச்சில் இறுதியாய் முடிவானது


புருஷன கொன்னுடலாம்


*******************************************************************************


9.லட்சரூபாய் சம்பாதிப்பவனுக்கு பெண்தர மறுத்த குடும்பத்தினர்


பையன் ஐ.டியாம்


*********************************************************************************


10.ஆயுள் தண்டனை முடிந்து நாளை விடுதலை-இன்று


மாரடைப்பில் மரணம்


**********************************************************************************

38 comments:

Vadielan R said...

அதிஷா கதைக்ள் அனைத்தும் அற்புதம். உடனே நல்ல பத்திரிக்கைக்கு அனுப்பி வைங்க தொடரட்டும் எழுத்துப் பணி

நன்றி

வாழ்த்துக்கள் 05/04/2009 அன்று நடைபெறும் பதிவர்கள் சந்திப்பிற்கு முடிந்தால் பங்குகொள்கிறேன்.

Raju said...

நல்லா இருக்கு பாசு..

Anonymous said...

எல்லாமே நல்லா இருக்கு அதிஷா.

//அவளை ரசிக்கும் கணவனைக்கண்டு மனம்வெதும்பி அவனை ரசித்தாள் மனைவி


மானாட மயிலாட//

அதிகமாக ரசித்தேன். சரியான வழிகாட்டுதல் இருந்தால் நல்ல உயரங்கள் செல்வாய். வாழ்த்துக்கள்.

அப்புறம் கடவுளும் நானும்னு ஒரு புத்தகம் சாருவோடதுல உனக்கும், லக்கி, நர்சிம், ஜ்யோராம் சுந்தர் ஆகியோருக்கும் நன்றி சொல்லியிருக்காரு. மகிழ்ந்தேன்.

மணிஜி said...

"இரண்டு வார்த்தை கதைகள் பத்து"

"டபுள் ஓகே"

வால்பையன் said...

//காதலன் காதலி அரைமணிநேர நெருக்கமான டெலிபோன் பேச்சில் இறுதியாய் முடிவானது


புருஷன கொன்னுடலாம்//

இது தான் டாப்பு!

முரளிகண்ணன் said...

அருமை அதிஷா.

இரண்டாவது மனக் கஷ்டம்

தராசு said...

//கள்ளிப்பால் குடிக்கும் குட்டிப்பாப்பாவின் கடைசி நினைவுகள்

கசக்குதே ஏன்?//

நெகிழ வைத்தது.

//அவளை ரசிக்கும் கணவனைக்கண்டு மனம்வெதும்பி அவனை ரசித்தாள் மனைவி

மானாட மயிலாட//

ரசிக்க வைத்தது.

//லட்சரூபாய் சம்பாதிப்பவனுக்கு பெண்தர மறுத்த குடும்பத்தினர்

பையன் ஐ.டியாம்//

.......... வைத்தது (வேண்டாம் ஐ.டி.காரங்க எல்லாம் அடிக்க வருவாங்க)

butterfly Surya said...

அனைத்தும் அருமை.

Namma Illam said...

சூப்பர் தல! என்னம்மா யோசிக்கிறீங்க

ARV Loshan said...

:) superb..

2nd one touching

Unknown said...

அதிஷா,

நல்லா இருக்கு. நான் ரசித்தது.2,7,8

2-சோகம் 7-நகைச்சுவை 8-திரில்லர்

நான் எழுதியது:-

தலைப்பு:அதிஷா! நான் கூடஇரண்டு வார்த்தைக் கதைகள் எழுதியிருக்கேன்.
பின்னூட்டமே காணலியே?

கதை: அதாங்க பதிவுலகம்!

(அல்லது ”விதி வலியது”)

சூரியப்பிரகாஷ் said...

கதைகள் அனைத்தும் முத்து முத்துதாய் இருந்தது........

இரண்டு வார்த்தைகளில் பாராட்ட இயலவில்லை..........

narsim said...

மிக மிக ரசித்தேன் அதிஷா.. எல்லாக்கதைகளுமே டாப்..

ரவிஷங்கர் கலக்கி வருகிறார் பின்னூட்டங்களில்.. சூப்பர் தலைவா.. வெண்ணிறஆடை மூர்ர்தி மேட்டரயையே இன்னும் சிரிச்சுட்டு இருக்கேன் இங்க அதவிட கலக்கல்.

சி தயாளன் said...

அருமை.....வாழ்த்துக்கள்...நிறைய நாட்டு நடப்பு செய்திகளுடன்....கோர்த்திருக்கிறீர்கள்..

RAHAWAJ said...

நல்லா இருந்தது

Prabhu said...

சுஜாதா கற்றதும் பெற்றதும்ல போடுற மாதிரி இருந்தது. நல்லாருக்கு!

நையாண்டி நைனா said...

அநியாயம்... அக்குருவம்.... ரெண்டு வார்த்தை கதைக்கு, ரெண்டு பக்கம் தலைப்பு வைப்பீங்க போல இருக்கே....

தலைப்பையும் சுர்க்குங்க பாசு.

அப்புறம் கதை ஒக்கே.

Anbu said...

பத்தும் மிக அழகாக இருக்கிறது அண்ணா

ரமேஷ் வைத்யா said...

இதுல பல விசயம் கைக்கூ ஆவும் போலிருக்கேபா...
அங்கே கடிக்காதே... ஹாஹாஹா

மண்குதிரை said...

ரசித்தேன்.

மணிகண்டன் said...

ரெண்டு மூணு கதை ரொம்பவே சூப்பர். இது ரொம்ப ஈசியா எழுத முடியாது.

Ramesh said...

Nice!

//
5.சத்யவானை வேண்டிநிற்கும் நவீன சாவித்திரியிடம் எமன் //

காப்பி பேஸ்ட் (IT guys?)

Thamira said...

அனைத்து அருமை அதிஷா.!

இரண்டாவது கதை உண்மையில் ஆகச்சிறந்தது. காலத்தால் நிற்கக்கூடியது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

எல்லாக்கதைகளுமே டாப்..

ஊர்சுற்றி said...

//9.லட்சரூபாய் சம்பாதிப்பவனுக்கு பெண்தர மறுத்த குடும்பத்தினர்


பையன் ஐ.டியாம்
//
ஆத்தாடீ.....அம்புட்டுதானா?

Cable சங்கர் said...

அருமையான கதைகள.. அதிலும் அந்த கள்ளிப்பால், காதலன் காதலி பேச்சு, மானாட, மயிலாட, எல்லாமே சூப்ப்ர்

வேந்தன் said...

அருமை :)

Suresh said...

//.கள்ளிப்பால் குடிக்கும் குட்டிப்பாப்பாவின் கடைசி நினைவுகள்


கசக்குதே ஏன்?//

மனது கரைந்தது ....

உங்க புகைப்படம் அருமை... அதுவே ஒரு கதை சொல்லுது நண்பா..

//திஷா கதைக்ள் அனைத்தும் அற்புதம். உடனே நல்ல பத்திரிக்கைக்கு அனுப்பி வைங்க தொடரட்டும் எழுத்துப் பணி //

முதல இத செய்ங்க

Suresh said...

திருக்குறள் மாதிரி ...

கருத்துக்கள் ஆயிரம் ... சொல்லுது ..உங்க கதைகள்

Suresh said...

முடிஞ்சா ... கடைப்பக்கம் வந்து வாழ்த்துங்க.. உங்கள மாதிரி மக்கள பார்த்து ...insipire anavan naan

Unknown said...

Excellent stories. Never have read something like this before...அற்புதம், அற்புதம், அற்புதம்...

ஜோசப் பால்ராஜ் said...

அதிஷா அய்யர்,
பேஷ், பேஷ் நெம்ப நல்லா இருக்கு,
பத்திரிக்கைகளுக்கு அனுப்புங்கோ.

Nithi said...

Superb!! Nalla Karpanai.

Vennira aadai Moorthi Matter ??!! Sonna...ellorum sirippom illa ??

Anonymous said...

CT Narayanan
அற்புதம்
நல்லா இருக்கு

aashick said...

Yaaroo, Wonderful, exciting

VISA said...

hei lovely.

Anonymous said...

None of them are ok.. You need good readers.. otherwise you will be prised for worst writtings also...

Anonymous said...

Rename the post:

The stories is in the title. and two more words to end.