02 June 2009

இன்பக்கதைகள் இன்பினிட்டி(6) - கொலைகாரன் காதல்


விர்ர்ர்ர்ர்..... அந்த பைக் 97 கி.மீ வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. அவளது விழியோரம் கண்ணீர் வழிந்து காதோரம் காய்ந்து கொண்டே இருந்தது. முகத்தை மூடியிருந்த துப்பட்டா எந்நேரத்திலும் அவிழ்ந்து விடுமோ என பயத்தில் இருக்கி பிடித்து கொண்டிருந்தாள். சில விநாடிகளில் அவனது முதுகில் முகத்தை அழுத்தி வைத்துக்கொண்டாள். அவனுக்கு கிளுகிளுப்பாய் இருந்தது. இதற்குத்தானே இத்தனை வேகம் செல்ல வேண்டியிருக்கிறது.

வினோ இத்தனை வேகமாய் செல்பவனில்லை. அவனது வாகனமும் இத்தனை வேகமாய் செல்லும் என்பது அதற்கே இன்றுதான் தெரிந்திருக்கும். விர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

டேய் பசிக்குதுடா என்றாள் மேகலா என்கிற மேகி.

'' என்ன சாப்பிடற.. '' வண்டியின் வேகத்தை சில கி.மீக்கள் குறைத்தபடி கேட்டான் வினோ.

''தயிர் சாதம் இல்லாட்டி ஒரு ஹாட் டாக் இல்லாட்டி ஒரு பர்கர் '' முதுகோடு ஓட்டிக்கொண்டு கேட்டாள்.

''நீதான் காசுத்தரணும் ''

''இல்லாட்டி மட்டும்.. போ எங்காவது நல்ல கடைக்கு '' என்றபடி அவனது முதுகில் செல்லமாய் கடித்தாள். வண்டி 100 கி.மீயை தாண்டியது.

இரண்டு நாட்களுக்கு முன்னால் காபி டேயில் தனியாய் காபி குடித்துக்கொண்டிருக்கையில் இருக்கைகளில்லா மாலை வேளையில் அவனருகில் அமர்ந்து காபி குடிக்க வேண்டிய கட்டாயத்தில் அமர்ந்தாள் மேகலா. அப்போது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. இன்று இப்படி ஆகப்போகிறதென்று. நீங்க ஸ்டெல்லாவா என்று ஆரம்பித்தான் வினோ. அவளோ இல்லைங்க நான் மேகலா என்பதாக துவங்கியது அவர்களது காதல் பயணம். வாய்முழுக்க காபியோடு அவளுக்கு அவன் சொன்ன ஜோக்குகள் இன்று நூற்றி இரண்டில் பறக்கிறது. பிரிய மனமின்றி பிரிகையில் தனது விசிட்டிங் கார்டைக்கொடுத்து ஏதாவது இன்வெஸ்ட்மென்ட் பிளான் இருந்தா சொல்லுங்க நான் பண்ணுவேன் என்று கொடுத்தது. அவள் அன்றிரவே அவனை அழைத்தது. இருவருக்கும் நான்கு மணிநேர மொபைல் உரையாடலில் பனிரெண்டு மணிக்குள்ளாக காதல் பூத்தது எல்லாம் பழங்கதை. இன்று இருவரும் ஈசிஆர் ரோட்டில் கடற்கரையை கிழித்த படி பட்டாம்பூச்சி போல் ஓட்டிக்கொண்டு பறக்கின்றனர்.

அவளுக்கு வினோவை மிகவும் பிடித்திருந்தது. வினோவுக்கும். அவன் ஒரு எழுத்தாளன். எல்லா கதைகளிலும் உணர்ந்து அனுபவித்து எழுத வேண்டும் என என்னும் ஆண் கேத்தி ஆக்கர். இதோ இன்னொரு கதைக்கு இவள் நாயகி.

அந்த பர்கர் ஷாப் மாயாஜாலைத்தாண்டி ஐந்தாவது கி.மீயில் இருந்தது. ஓரகடம் என எங்கோ ஒரு மஞ்சள் நிற போர்டு தெரிந்தது.அதன் மேல் விஜயகாந்த் கும்பிட்டுக்கொண்டிருந்தார். அருகிலேயே ராமதாஸ் அதற்கருகில் கலைஞர் அதற்கருகில் ஒரு ஆயா ரோட்டோரம் நொங்கு விற்றுக்கொண்டிருந்தாள். பனை நொங்கென்றால் வினோவிற்கு கொள்ளை இஷ்டம். மேகலாவிற்கும் அதனால் இஷ்டம்.

''ஆயா இரண்டு குடுங்க.. ''

இரண்டை வாங்கி ஆளுக்கொன்றாய் தின்ன ஆரம்பித்தனர்.

''வினோ ஏதோ கதை எழுதிட்டிருக்கேனு சொன்னியே.. என்ன கதை ''

''அதுவா , ம்ம் சொல்றேன் வா இப்படி உள்ளே போயிரலாம்.. ''

''பயமாருக்குடா வினோ, பாரு யாருமே இல்ல ''

''ஹேய் டோன்ட் வொரி .. நான் உன்னை கொலை பண்ணதானே கூட்டிட்டு வந்திருக்கேன்''


''ஹாஹாஹாஹா... லூசுப்பாப்பா ''

''என்னடா சிரிக்கிற நான் சீரியஸாத்தான்டா சொல்றேன்..

''ச்சீப்போடா முத்தம் வேணும்னா கேட்டு வாங்கிக்கோ ஒன்னுக்கு பத்தா தரேன்.. இப்படி பயமுறுத்திலாம் என்ன எதுவும் பண்ண முடியாது... எனக்கு கராத்தேலாம் தெரியும் , என்ன ரேப்லாம் பண்ண முடியாது ''

''சிரிக்காத.. என் கதைலயும் ஹீரோயின் இப்படித்தான் சிரிப்பா ஆனா கடைசில செத்துருவா.. அந்த ஹீரோ ரொம்ப நல்லவன் காதலிக்கு வலிக்க கூடாதுனு விஷ ஊசிலாம் பாக்கட்ல போட்டு எடுத்துட்டு வந்துருப்பான்.. இதோ பாரு இப்படித்தான் '' தன் பாக்கட்டிலிருந்து ஒரு பிளாஸ்டிக் கவரும் அதிலிருந்து ஒரு சிரஞ்சியும் வெளியே எடுத்தான்.

''ஓஓ இப்படிலாம் பயமுருத்தினா நான் பயந்துடுவேனா.. போடா நீயும் உன் கதையும்''

''பாப்பா பீ சீரியஸ்.. நான் நிஜமாவே உன்னை கொல்லப்போறேன்.. என் கதைப்படி அப்படித்தான் நடக்கும்.. ''

'' ஓஓ என்ன கதை.. சொல்லவே இல்லை ''

அலைகளின் சத்தம் தவிர சுற்றிலும் ஒன்றுமே கேட்கவில்லை. ரோட்டோரமிருக்கும் அந்த கிழவியைத்தவிர சுற்றுப்புறமெங்கும் ஒருவருமில்லை.

''ஒரு ஹீரோ ஒரு ஹீரோயின் .. ஹீரோ ஒரு எழுத்தாளன் அவனுக்கு எதுவா இருந்தாலும் பிராக்டிக்கலா பண்ணிப்பார்த்து அதையே கதையா எழுதறதுலதான் ஆர்வம். அவன் ஒரு கொலைய கதையா எழுதணும்னு , அதனால ஒரு காதலிய தேடறான் பழம் மாதிரி ஒரு காதலி வந்து விழற.. அவளை கொலை செய்றான்.. அதான் கதை''

''வினோ நாம போகலாம்டா.. நீ ஏன் ஏதோ மாதிரி பேசற.. உன் முகம் வேற மாறுது .. எனக்கு இப்போ நிஜமாவே பயமாருக்குடா.. ''

''ஹாஹாஹா இப்போ நிஜமாவே பயந்துட்டியா.. ஹாஹாஹா... பயப்படாதே வலிக்காம கொல்றேன்.. ''

''ப்ளீஸ்.. இப்படிலாம் பேசாத.. நான் போறேன் '' என அவனருகில் மிக நெருக்கமாய் கையைக்கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவன் எழுந்து நடக்கத்துவங்கினாள்.

''ஹேய் லூசு குட்டி அப்படிலாம் இல்லடி சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன்.. ஒரு முத்தம் குடு.. ''

''எனக்கு மூடில்ல நான் கிளம்பறேன்.. இப்போ நீ வரியா இல்லையா ''

''ச்சீ லூசு .. மேகி ப்ளீஸ் உக்காரு.. ஐ வாஸ் ஜஸ்ட் ஜோக்கிங்.. '' எழுந்து நகர முயன்றவளை கையைப்பிடித்து இழுத்து அமரவைத்தான்.

''...................... '' மேகலா உம்மென்று அமர்ந்திருந்தாள்.

''என்னடா என்னை பார்த்தா கொலைகாரன் மாதிரியா இருக்கு.. ''

''............................'' தலையை கால்களுக்கு நடுவில் புதைத்துக்கொண்டு அமைதியாய் இருந்தாள்.

''சரி வா போகலாம்.. ஒரு கிஸ் கூட பண்ணல.. ஏன்டி எந்த கொலைகாரனாவது இப்படி எல்லாத்தையும் சொல்லிட்டு கொலை பண்ணுவானா.. அதும் என்னைப்பார்த்தா கொலைகாரன் மாதிரியா இருக்கு.. இரு ஒன் மினிட்.. '' தனது லேப்டாப் பேகிலிருந்து அவசரமாய் இரு டைரியை எடுத்தான்..

''இந்தா இதுல ஒரு கையெழுத்துப்போட்டுக்குடு.. ''

''எதுக்கு. '' முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு கேட்டாள்.

''நான் பொதுவா யார கொல்றதா இருந்தாலும் அவங்க கையெழுத்து வாங்கிக்கறது என்னோட ஸ்டைல்.. அதான்.. ஹாஹாஹா''

''போடா.. '' என்று அவனது கன்னத்தில் செல்லமாய் அறைந்தாள்..

''ரொம்ப பயப்படாதே சும்மா உன் ஞாபகார்த்தமா இருக்கும்ல.. அதுக்குத்தான்.. போடு.. பாப்பா ப்ளீஸ்.. ''

ஐ லவ் யூ மை கொலைகார ராஸ்கல் என்று எழுதி கீழே மேகி என கையெழுத்திட்டாள்,

வினோ நேரத்தைப்பார்த்தான் மதியம் ஒன்று.

''சரிவாடா குட்டிம்மா போகலாம்.. ''


''வேணான்டா.. இருக்கலாம்.. ப்ச்.. '' அவன் கன்னத்தில் அவசரமாய் முத்தமிட்டாள். அவன் அப்படியே அவளை வாரியணைத்து உதட்டில் கழுத்தில் கன்னத்தில் என மாறி மாறி முத்தமிட்டான். இருவரும் மதிய உச்சி வெயிலேயே.. பிளாஸ்டிக் பையில் கொண்டு வந்திருந்த காண்டம் பாக்கட் பிரிக்கப்பட்டது. இரண்டற கலந்தனர்.

''டேய் இனிமே இப்படிலாம் விளையாடாத என்ன .. நான் நிஜமாவே பயந்துட்டேன்..''

தனது பேண்ட்டை சரி செய்து கொண்டபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். முகமெல்லாம் வேர்த்து முகத்திற்கு முன்னால் அவளது தலைமுடி கொத்தாக கலைந்து போய் வியர்வையில் ஓட்டி இருந்தது. அதை ஒதுக்கியபடி அவளை நோக்கி புன்னகைத்தபடி

''ஹாஹாஹா.. அப்போ நான் கொலைகாரன் இல்லனு நம்பிட்டியா.. ஹாஹாஹா.. '' என்று சிரித்தபடி அருகில் மணலில் புதைந்து கிடந்த அந்த வெற்று சிரஞ்சியை எடுத்தான்.

அடுத்த நாள் காலை தனது கணினியில் ஒரு அழகான புன்னகையோடு தட்டச்சத் துவங்கினான்.. விர்ர்ர்ர்ர்... அந்த பைக் 97...

30 comments:

Anbu said...

me the first

Anbu said...

அண்ணா கதை சூப்பர்...மிகவும் ரசித்து படித்தேன்..

james Rajendran said...

Ohhhhhhhh

My God...!!!!!!!!!!!!!!!!!!!!!

James Rajendran / Coimbatore

James said...

Ohhhhhhhhhhhhhhhh

!!!!!!!!!!!!!!

James / CBE

சென்ஷி said...

:-)

என்னன்னமோ சொல்றீங்க.. என்னனன்னமோ செய்யறீங்க..

இதை எல்லாம் பார்த்து படிச்சு கமெண்டு போட அந்த பொண்ணு உசுரோட இல்லையேன்னு நினைக்கறப்ப வருத்தமா இருக்குது அதிஷா!

Karthikeyan G said...

Super 0 super...

Subankan said...

ஆகா, அப்ப இந்தக் கதை எழுதினவன் இப்படியெல்லாம் செய்துபாத்துட்டுத்தான் எழுதினானா?

ச்சும்மா..

Anonymous said...

அடுத்த நாள் காலை தனது கணினியில் ஒரு அழகான புன்னகையோடு தட்டச்சத் துவங்கினான்.. விர்ர்ர்ர்ர்... அந்த பைக் ........

Avanaaaa neeeee !!!!! Avvvvvvvvv

( Nile Raja )

சங்கணேசன் said...

வினோ = அதிஷா
மேகலா = ?

அதிஷா said...

நன்றி அன்புத்தம்பி

வணக்கம் ஜேம்ஸ் மிக்க நன்றி

சென்ஷி அண்ணே விட்டா நீங்களே போலீஸ்க்கு போய் கம்பிளைன்ட்டு குடுத்திருவீங்க போலருக்கே

நன்றி கார்த்திகேயன் ஜி

அதிஷா said...

நன்றி சுபாங்கன்..

நன்றி நைல் ராஜா.. அவனேதான்..

நன்றி சங்கணேசன் மேகலாவதான் கொன்னுட்டானே பாவி

வெண்பூ said...

அதிஷா.. கலக்கல்.. பைக் மட்டுமில்ல கதையோட வேகமும் > 100 கி.மீ

T.V.Radhakrishnan said...

அருமை..

அதிஷா..சுஜாதாவின்..என் முதல் மலையாளக் கதை..படித்திருக்கிறீர்களா?

அதிஷா said...

நன்றி வெண்பூ

நன்றி டிவிஆர் சார். படித்திருக்கிறேன். அந்த கதையின் பாதிப்பு இதில் வந்தது தற்செயலெல்லாம் இல்லை. எனக்கு இந்த கதையை வேறு மாதிரி முடிக்க தெரியவில்லை என்பதே உண்மை. அதனால் கிளைமாக்ஸ் மட்டும் சுஜாதாவிடம் இரவல்.

வெண்பூ said...

//
இந்த கதையை வேறு மாதிரி முடிக்க தெரியவில்லை என்பதே உண்மை. அதனால் கிளைமாக்ஸ் மட்டும் சுஜாதாவிடம் இரவல்.
//

கொய்யால, காப்பி அடிச்சிருக்கியா நீயி.. :)))))

$anjaiGandh! said...

எத்தனப் பேர் இப்டி கிளம்பி இருக்கிங்க? :)

http://vediceye.blogspot.com/2009/06/blog-post.html


இதையும் படிங்க.. :)

வால்பையன் said...

பீச்சுல எதாவது பொணங்கிடக்கான்னு தேடுங்கப்பா!

அதிஷா said...

வெண்பூ கடைசியில் அவன் கதை எழுத துவங்குது மட்டும் காப்பி

நன்றி வால்பையன் பீச்சோரம் இருந்த பொணத்தை இப்போதான் அப்புறப்படுத்திட்டு வந்தான் வினோ.. பொணம் கிடைக்காது

நன்றி சஞ்சய் சுவாமி ஓம்கார் கதைலாம் கூட விடறாரா? சாரி எழுதறாரா?

VIKNESHWARAN said...

மாம்ஸ் அது அது தானே.... ஓகே ஓகே... ஷேமமா இருடா அம்பி...

தமிழ் பிரியன் said...

கலக்கறேள் அம்பி! சூப்பர்!

Cable Sankar said...

நைஸ் ஸ்டோரி..

KUMATYA said...

Good thriller love.........

அதிஷா said...

நன்றி விக்கி .. ஆமா அதேதான்..

நன்றி த.பி அண்ணே..

நன்றி கேபிளாரே.. என்ன இருந்தாலும் உங்க லெவலுக்கு எழுத முடியாது

நன்றி குமட்டியா ( ஐ லைக் யுவர் நேம் வெரி மச்.. உவ்வ்வே.. சூப்பர் )

sasi said...

ada paavingala.........

Prabu said...

Bike and STORY also fast and superrrrrrrrrrrrrrrrr............

நமிதா..! said...

டெஸிபாபா கதை(?) நல்லாயிருந்திச்சிஇது நல்லாயில்லையானு கேட்டபாடாது ஏன்னா இன்னும் படிக்கலை :)

வாழவந்தான் said...

வினோ எழுத்தாளரா மனநோயாளியா?
சுமார் கதை தான்

Prakash said...

ஏன் எல்லா முறையும் கதாநாயகனின் பெயர் வினோ , கதாநாயகியின் பெயர் மே

Anonymous said...

Tremendous.......

ஊர்சுற்றி said...

இன்பக்கதைகளில் சுமாரான ஒன்று....