
மாசிலாமணி -
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வந்திருக்கும் நாலாவது படம் ( நாலாவதுதானா? ) . அதே ஆள்மாறாட்டக் கதை , அதே காதல்தான் , ஆனா வேகமும் விறுவிறுப்புமான திரைக்கதை . நிறைய கொண்டாட்டம். கலகல காமெடி. வழிய வழிய மசாலா. கொஞ்சூண்டு முகம் சுளிக்காத கவர்ச்சி. குத்துப்பாட்டு டான்ஸ் . ஏ டிபிகல் சன் பிக்சர்ஸ் திரைப்படம்.
''குடும்பத்தோட சினிமாவிற்கு போய் இரண்டு மணிநேரம் உற்சாகமாக பொழுதைக்கழிக்க''
இதான் சன் பிக்சர்ஸின் பார்முலாவாக இருக்கக்கூடும். சரியாக கில்லிபோல அடித்திருக்கிறார்கள். பக்கத்துச்சீட்டு வாண்டுகள் மற்றும் பெற்றோரின் எண்ணிக்கை உறுதிப்படுத்தியது. அதிலும் பாடல்களுக்கு குழந்தைகளின் ரியாக்சன் பயத்தை உண்டாக்கியது. (அடுத்த தலைமுறை பாவம்!)
மற்றபடி உலகத்தரம் , சிறந்த கதையமைப்பு , அருமையான நடிப்பு என்றெல்லாம் பாராட்ட ஒரு இழவும் படத்தில் இல்லை.
மாசிலாமணி - JUST FOR FUN. ஒரு வாட்டி மகிழ்ச்சியா குடும்பத்தோட பார்க்கலாம்
************
டெர்மினேட்டர் -4
இதுவரைக்கும் வந்த டெர்மினேட்டர் திரைப்படங்களிலேயே மகா மட்டமான திரைப்படம் இது. அர்னால்ட் நல்ல வேளை நடிக்கவில்லை. கிரிஸ்டியன் பேல் நம்மூர் ஜே.கே.ரித்தீஷ் ரேஞ்சில் மொக்கையாக நடித்திருக்கிறார்.
கதை தமிழில் பார்த்தாலே புரியவில்லை. இதில் ஆங்கிலத்தில் பார்த்த புண்ணியவான்கள் நிலை பரிதாபம்தான். அதானல் நோ ஸ்பாய்லர்ஸ். (கதை என்னவென்று தெரிந்தால்தானே சொல்வதற்கு ). ஒரு காட்சியில் 3டி அனிமேசனில் அர்னால்ட் தோன்றுகிறார்.(சரியாக நான்கு நிமிடங்கள்தான் ) . அற்புதமான கிராபிக்ஸ் . ஆறுதல்! . சுஜாதா எப்போதோ சொல்லியிருந்தார் அடுத்த பத்து வருடங்களில் திரைப்படங்களில் நடிக்க நடிகர்களின் தேவை இருக்காது என்று!
நிறைய கிராபிக்ஸ் , நிறைய ரோபோக்கள் , நிறைய துப்பாக்கிகள் (அதிநவீன! ) . டூமீல் டூமீல் டமால் டமால். மயிறு. தலைவலிதான் மிச்சம்.
இந்த படத்தின் இயக்குனர் MCG . பாவம் பிள்ளையார் பிடித்திருக்கிறார். அது குரங்காய் வந்திருக்கிறது.
மற்றபடி தியேட்டர் கேன்டீனில் வாங்கிய பப்ஸ் சூடு குறைவு.
டெர்மினேட்டர் 4 - இந்த படத்தை பார்ப்பதற்கு விஜயகாந்தின் மரியாதை திரைப்பட டிரைலர் பார்த்து செத்து போயிரலாம்.
*************
முத்திரை -
முடியல! அடபோங்கப்பா..
50 ரூவா தண்டம்.
*************
மரியாதை -
டிபிகல் விக்ரமன் படம். ஆனால் அதே டொயாங் டொயாங் பிண்ணனி இசை. அதே லாலா பாட்டு. அதே சோக பாட்டு .அதே குடும்பம். அதே மலையோரத்து குடிசை. என்னதான் புதுசு.
அப்பா-மகன் சென்டிமென்ட் . ( வாரணம் ஆயிரம் ஞாபகம் இருக்கா.. அதை விட நல்லா இருக்கு இது )
கட்டை குரலில் பேசினா வயசான விஜயகாந்த் , சாதா குரலில் அங் என பேசினால் இளைய விஜயகாந்த் என்பது அனைவருக்கும் தெரியும். இதில் அப்பா கட்டை குரல் மகன் அங்..! ஆனா முகம் சேம்!
மற்றிபடி லேடிஸ் ரசிக்கும் காமெடி , லேடிஸ் துரோகம் , லேடிஸ் சென்டிமென்ட் என்று விஜயகாந்த் நடித்த மெகாசீரியல் போல இருக்கிறது.
ஆனால் கொடுமை என்னவென்றால் தியேட்டரில் பல பெண்கள் குடும்பத்தோடு குழந்தை குட்டிகளோடு காண முடிந்தது.
விக்ரமன் தன் சக்ஸஸ் கதை ஃபார்முலாவை வைத்து இன்னும் ஆயிரம் படங்கள் எடுக்கக்கடவது. அநியாயம் ஒரே கதையை எத்தன வாட்டிதான் எடுப்பீங்க.. அழுதுருவேன்..
இரண்டரை மணிநேரம் வாய்விட்டு சிரித்து மகிழ அதி அற்புதமான திரைப்படம்.
சீரியஸ் காட்சிகளிலும் சிரிப்பு வருவது படத்தின் மிகப்பெரிய பலம். விஜயகாந்த் டான்ஸ் வெரிகுட்யா என்று ஜெர்மனியில் இருந்து வந்த ஒரு லேடிஸ் பேசிக்கொண்டு சென்றதே சாட்சி.
மரியாதை - செம காமெடி மச்சி.. ( யூத்துகள் நிறைய பேர் தியேட்டரில் பார்க்க முடிந்தது )
*******
இப்படியாக நான்கு மொக்கைப்படங்கள் பார்த்த விக்ரமாதித்யன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறி தூக்கில் தொங்கி செத்துப்போய் வேதாளமானான்.
30 comments:
FUNNY MAN YOU.
nonthu noodles aagi irupenga pola ?
மரியாதை விமர்சனம் ஓக்கே.. எங்கள் தங்கத்தலைவியைப்பற்றி விமர்சினம் எங்கே??
நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்.
ராசா , நாடோடிகள் நல்லா இருக்கு. போயிட்டு வாங்க
டெர்மினேட்டர் 4 - இந்த படத்தை பார்ப்பதற்கு விஜயகாந்தின் மரியாதை திரைப்பட டிரைலர் பார்த்து செத்து போயிரலாம்.
superp!!!
தற்பொழுது வெளியாகி தமிழ்நாட்டையே பரபரப்பாக்கி கொண்டிருக்கும் ......
காவியத் தலைவி..........
தங்கத் தாமரை..........
கொடிஇடையழகி.......
கில்மா புயல்....
சொர்க்க நாயகி.......
கின்னார தும்பி புகழ் ஷகிலாவின் .....
" அந்தரங்க அழகி " படத்தைப் பற்றி விமர்சனம் இல்லாததால்...
இந்த பதிவிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன்.............!!!!!
பாழாப்போன அந்த மரியாதை படத்தை நேத்துத்தான் DVDல பாத்து தொலஞ்சேன்.
Nalla velai naan pilaidthu kondean.
Yeppadi Inda maadiri Padatha yellam Paakureenga...?
U r Really great...!(Yevvalavu daan Poi sollradu)
கொடுமை கொடுமைனு கோயிலுக்கு போனா.... யோவ் அதி... பாதி படத்தில எழுந்து டாஸ்மாக் போற அளவுக்கு வெறுப்பாயிடுச்சு... போனா வாரம் நான் பார்த்த ஒரு படம்.
என்ன பண்றதுன்னே தெரியலய்யா...
பதிவர் சந்திப்பு - ஒரு விருப்பம்.
கச கசன்னு குருப் குருப்பா பேசிகிட்டு இல்லாம ஒரு முறையா சின்ன அறிமுகம், பிரபல பதிவர்களின் நறுக் பேச்சுகள், பிரச்சினைகள், அதுக்கான தீர்வு, பழைய பஞ்சாயத்துகள், சில வருத்தங்கள், குறிப்புகள், அப்புறம் கொஞ்சமா விவாதம் ன்னு நடக்க என்னோட விருப்பம், ஆசை. பார்த்து பேசி ஏதாவது பண்ணுங்க. முதன் முறையா நான் பார்த்த.(.? ) கடந்த பதிவர் சந்திப்புல என்ன பண்ணாங்கன்னு என் சிற்றறிவுக்கு இது வரைக்கும் எட்டல. வாழ்த்துகள். ஒரு ப்ரெசென்ட் போட்டுகோங்க என் இடத்திற்கு....
:-)))))))))))
பதிவு எழுதுவதற்காகவே படத்துக்கு போவீங்களா! கிறுக்கு பிடிச்சுட போகுது. பீ கேர்ப்புல்!
விமர்சனம் நல்லா இருக்கு.கடைசி வேதாளம் “பன்ச்” நல்லா இருக்கு.ஆனா
வேதாளம் வேற விக்கிரமாதித்தியன் வேற.
மரியாதைப் பார்த்த எபக்டா?
//கட்டை குரலில் பேசினா வயசான விஜயகாந்த் , சாதா குரலில் அங் என பேசினால் இளைய விஜயகாந்த் என்பது அனைவருக்கும் தெரியும்//
இரட்டை வேட சிவாஜிப் படங்களில்
கிருதா அஞ்சு செண்டிமீட்டர் இருந்தால்
தம்பி.நாலு செண்டிமீட்டர் இருந்தால் அண்ணன்.
மூன்று வேட சிவாஜிப் படங்களில்
கடைசி தம்பி ஐந்தரை செண்டிமீட்டர் கிருதா ப்ளஸ் ரொம்ப “குறும்புத்தனம்”
இருக்கும்.
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் - நாங்களும் பார்த்து நொந்தொமில்ல
சினிமாவுல இதெல்லாம் சகஜம் தானே
//மற்றபடி தியேட்டர் கேன்டீனில் வாங்கிய பப்ஸ் சூடு குறைவு.
//
பப்ஸ் சூடு கம்மின நீங்க உட்லாண்ட்ஸ் தியேட்டர்ல
தான் படம் பார்த்து இருக்கனும்......பப்ஸ் பத்தி நல்ல
விமர்சனம்......
//
இரண்டரை மணிநேரம் வாய்விட்டு சிரித்து மகிழ அதி அற்புதமான திரைப்படம்.
//
நெருப்பை தண்ணி ஊத்தி அணைக்கலாம்,
அய்யா எரிமலை அணைக்க முடியாது......
( யூத்துகள் நிறைய பேர் தியேட்டரில் பார்க்க முடிந்தது )
ungala madiriya?
*******
இப்படியாக நான்கு மொக்கைப்படங்கள் பார்த்த விக்ரமாதித்யன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறி தூக்கில் தொங்கி செத்துப்போய் வேதாளமானான்.////
nachu comentu!
மரியாதை படத்துக்கு விமர்சனம் எழுதிய அதிஷா மீராஜாஸ்மின் பற்றி ஒரு வரி கூட எழுதாததை இட்டு வெளி நடப்பு செய்கிறோம்.
மீரா பேரவை
சவுதி அரேபியா.
(இப்படியாக நான்கு மொக்கைப்படங்கள் பார்த்த விக்ரமாதித்யன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறி தூக்கில் தொங்கி செத்துப்போய் வேதாளமானான்.)
விக்ரமன் = வேதாளமானான்?????????
இதனைய பார்த்த பிறகும் நீயி இன்னும் உசுரோட இருக்கியே.... அண்ணாத்தே... உனக்கு மரணமே கிடையாது அண்ணாத்தே....
யோவ்... ஜெட்லி உம்ம பதிவ ஒப்பன் பண்ண முடியலே நண்பா... அதுன்னாலே தான் உம்ம கடை பக்கம் வர முடியலே...
கடைசி வரிகளுக்கு இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன் அதி. ரசனை.!
:-)
:) arumai
\\இப்படியாக நான்கு மொக்கைப்படங்கள் பார்த்த விக்ரமாதித்யன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறி தூக்கில் தொங்கி செத்துப்போய் வேதாளமானான்.//
அதானே உயுரோட இருக்க சான்சே இல்ல.
//கிரிஸ்டியன் பேல் நம்மூர் ஜே.கே.ரித்தீஷ் ரேஞ்சில் மொக்கையாக நடித்திருக்கிறார்.//
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ஆர் அவர்களை கிண்டல் செய்வதை கடைசியாக எச்சரிக்கிறேன்!
நல்லயில்ல ஆமா சொல்லிபுட்டேன்!
sun tv la Maasilaamani super hit thiraipadam..... intha maathiri padam varalainu rasigargal yengi thavikkiraanganu sonnaanunga.......
Ennapaa avanga nenaichittu irukkaaanga.....
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
Post a Comment