இறகுகள் இங்கே சிறகுகள் எங்கே!
>> 06 August 2009

காற்றில் கரைந்தது
உடலெல்லாம் எரித்தது
கண்ணிலும் சுரந்தது
நீ இல்லாத போதில்
தடவியே சிவந்த
முந்தும் காதல்
பார்க்காத போதெல்லாம் பார்த்து
சிலிர்த்து
வியர்த்து
உயிர்த்து
மனதடைத்து
வெறுத்து
தூதூதூதூதூ மயிறு
கடப்பதற்குள் கடந்துவிட்ட
உடைந்த மனதின்
படுக்கையில்
உடைகளைந்த போதெல்லாம்
இன்னும் வேண்டும்
என் உச்சம்
முகமெங்கும் எச்சம்
மிச்சம்
கட்டியணைக்கையில் முதுகு சீண்டலில்
கண்விழிக்கையில்
காணவில்லை உன்னை
எங்கே மறைத்திருந்தாய்
உன் பாழும் சிறகுகளை!
*****************

6 கருத்துக்கள்:
xxxxx மிக நல்ல உரையாடல் ஆசிரியன். xxxx கவிதை, கிவிதை என்று கெட்டு சீரழிந்துப்போய் அருமையான சிறுகதைகளையும், கட்டுரைகளையும் கவிதையாக்கி கொலைசெய்வது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று
நான் நினைச்சதைவிட நீங்க பெரிய ஆளுன்னு நினைக்கிறேன் தோழர்.!
அதிஷா,
கவிதை நல்லாயிருக்கு.
ரசித்தேன்.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
கவிதையை பத்தி :- எனக்கு ஒன்னுமே புரியலை. அதுனால நல்ல கவிதையா தான் இருக்கணும்.
கவிதை நல்லா இருக்கு (ஏதோ)
சிரமமின்றி எழுதியதோ!!
அதிஷா,32 கேள்விகள்; பதில் சொல்ல வரவும்.:)
Post a Comment