சும்மா டைம் பாஸ் மச்சி!

>> 13 July 2009





ஒரு குட்டித்தத்துவம் -

''பெண்களும் பிரச்சனைகளும் மணியும் ஓசையும் மாதிரி அடிக்கு ஏத்த மாதிரி ஓசை கேக்கும் '' -


BY அகில உலகப்புகழ் அதிஷானந்தா!


***************


எத்தனை நாள் ஆகிவிட்டது இப்படி ஒரு கிரிக்கெட் ஆட்டம் பார்த்து. கடந்த ஆறு மாதங்களாகவே தொடர்ச்சியான டி20 ஆட்டங்கள் ஒரு வித சலிப்பையும் கடுப்பையுமே தந்துகொண்டிருந்தது. இந்த நேரத்தில்தான் சமீபத்தில் ஆஷஸ் தொடர் ஆரம்பமானது. முதல் டெஸ்ட் போட்டி நேற்றோடு முடிந்தது. மிக அருமையான ஆட்டம். ஐந்து நாளும் ஆராவாரம். ஆஸி வெற்றியின் விளிம்பை முத்தமிட்டு திரும்பியது. இங்கிலாந்து கடைசி பந்து வரை போராடி ஆட்டத்தை டிரா செய்தது. என்ன விறுவிறுப்பு. எத்தனை பொறுப்பான ஆட்ட முறை. எத்தனை நுணுக்கமான களப்பணிகள். எக்ஸலன்ட்.

டி20 தன் ஆட்ட அளவில் சிறந்ததாக இருந்தாலும் அது ஒரு விபச்சாரியிடம் செல்வதைப்போன்றதாகவே படுகிறது. உடனடி ஆறுதல். மற்றபடி டெஸ்ட் ஆட்டங்களே ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரனின் முழுத்திறமையையும் வெளிக்கொணரும் மற்றும் அதீத ஆட்டத்திறனும் தேவைப்படுகிற ஒரு ஆட்டமாகவே கருதுகிறேன். டெஸ்ட் ஆட்டங்கள் மனைவியோடு ஆடுவதைப்போல. ஆடிக்கொண்டே இருக்க அதீத பொறுமையும் ஆற்றலும் திறமையும் தேவை. கொஞ்சம் பிசகினாலும் காலி.

ஆஸி அணியின் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தால் மிக எளிதாய் எந்த சுப்பனும் குப்பனும் முனியனும் சொல்லிவிடலாம். அந்த அணியின் மட்டமான பந்து வீச்சுதான் என்று. நம்மூரில் பல காலம் ஆடிய அதி அற்புத பந்து வீச்சாளர் அகார்கர் போலவே நான்கு பேரை வைத்திருக்கிறார் பாண்டிங். தேவையானபோது தேவைகளை தீர்க்கும் வார்ன் , மெக்ரா போன்றவர்கள் அல்ல அவர்கள். அதுவே பிரச்சனை. மற்றபடி மிக அருமையான ஆட்டம் அந்த முதல் டெஸ்ட். முடிந்தால் கட்டாயம் ஹைலைட்ஸ் பாருங்கள் நல்ல விறுவிறுப்பு.

இப்படி ஒரு டெஸ்ட் இங்கே நடக்க பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிரிலங்கா அந்த அணியை 90 ரன்களுக்குள் சுருட்டி வீசியது இன்னும் பிரமாதமாக இருந்தது. இன்னொரு பக்கம் டெஸ்ட் ஆட்டங்களில் சுமாரான பங்களாதேஷ் அணி வெஸ்ட் இன்டீசுக்கு இணையாக விளையாடிக்கொண்டிருக்கிறது.

டெஸ்ட்டுனா டெஸ்ட்டுதான்..

***************


பதிவுலக மக்களுக்காக ஒரு குட்டி வீடியோ (கடைசி இரண்டு பதிவுகளிலும் வீடியோ சேர்த்தமையால் இது ஹாட்ரிக் வீடியோ ) இதை பார்த்தும் சிரிக்கலாம். இந்த வீடியோவுக்கும் சமீபத்திய வலையுலக மக்களின் பிரச்சனைகளுக்கும் ஒரு எழவு கருமாந்திர தொடர்பும் இல்லை இல்லை இல்லை.



மிக நல்ல பிரிண்ட்டு. இத பாத்தாவது திருந்துங்க மக்கள்ஸ்.


*****************

சனிக்கிழமை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நமது அன்பு அண்ணன் சாம் ஆண்டர்சனின் யாருக்கு யாரோ ஸ்டெப்புநீ படம் பார்த்து தமிழகத்தில் பலருக்கும் ஆண்மைக்குறைவு , விரைவீக்கம் , மூலம் , பௌத்திரம் முதலான பிரச்சனைகள் உருவானதாய் பல நேயர்களும் ( இனிமே வாசகர்கள்னு சொல்ல மாட்டேனாக்கும் ) கருத்து தெரிவித்திருந்தனர். முழுப்படத்தையும் பார்த்து மகிழ்ந்த அனைத்து எங்கள்குல சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.

படத்திற்கு நடுவே சாம் ஆண்டர்சன் படம் குறித்து நிறைய கூறினார். அதில் முக்கியமானது.

''இந்த படம் நம்ம இயக்குனரோட 35 வருஷ கனவு லட்சியம் , 35 வருஷமா இந்த கதைய மனசுக்குள்ளயே வச்சிருந்து , அதுக்காக ரொம்ப கஸ்டப்பட்டு இந்த படத்த எடுத்து ரிலீஸ் பண்ணாரு.. படம் முழுக்க ஒவ்வொரு காட்சிலயும் அவரோட உழைப்ப நீங்க பாக்கலாம்.. ''

''அல்லேலுயா ''


*****************

கவிஞ்சர் தபூ சங்கர போன வாரம் ஒரு சூட்டிங்கில் சந்திக்க முடிஞ்சது. அவரோட கவிதை புக்குலாம் பாத்திருக்கேன். ( ஒன்லி பாத்திருக்கேன் ) . திடீர்னு இயக்குனர் ஆகிட்டாராம்.

''வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்'' பட சூட்டிங் எம்.ஜி.எம் ரிசார்ட்டில் நடந்துகொண்டிருந்தது.

படத்தின் ஹீரோ குங்கும்பபூவும் கொ.புறாவும் பட ஹீரோ ( பேரு தெரியல )

ஹீரோயின் யாரோ. (ரொம்ப சுமாரான பிகர்தான், ஸ்கிரீன்ல அழகா தெரிவாங்களோ என்னவோ )

மத்தபடி படத்தோட டைட்டில் ரொம்ப புடிச்சிருந்தது.

சரி இந்த பட டைட்டில ஒரு பொண்ணுகிட்ட சொன்னா என்ன சொல்வாங்கனு டிரைபண்ணி பார்த்தேன்.

அவங்க சொன்னாங்க.. போலீஸ்ல ஈவ்டீசிங்னு கம்ப்ளைன்ட் தருவேன்னு.

மீ த எஸ்கேப்பு.

**********************

சமீபத்தில் டுவிட்டரில்..

- நாரதர் கலகம் நன்மையில் முடியுமாமே?

-நாரதரா! யோவ் நீயே ஒரு நாரதர் தானய்யா?

-ஹலோ நான் சொல்றது கைல வீணைலாம் வச்சிட்டு குடுமி வச்சிருப்பாரே அந்த நாரதர்.. contd
நாரதர் நாராயணானு சண்டை மூட்டிட்டு போயிடுவாரு சிவபெருமான் பக்தன் டவுசர கழட்டிட்டு எல்லாம் என் திருவிளையாடல்ம்பாரு

-அட வீணை வச்சிருக்கறது சரஸ்வதிய்யா.. நாரதர் வச்சுருக்கறது வேற!

-ஹலோ அது பெரிய வீணை மடில வச்சு செய்றது! நாரதரோடது சின்ன வீணை கைல புடிச்சு செய்றது

-டிங்!

***********

இந்த வாரம் புதன் கிழமை என்ன விசேசம்?

சரியான பதில் அளிக்கும் முதல் பத்து நேயர்களுக்கு எனது பின்னவீனத்துவ புத்தகமான ''சரசு கொஞ்சம் உரசு '' உடனடியாக மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.

பின்னூட்டத்தில் உங்க மெயில் ஐடியை தெரிவிக்கவும். அல்லது dhoniv@gmail.comக்கு ஒரு மடலை தட்டிவிடவும்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.


************

வர்ட்டா!

30 கருத்துக்கள்:

குசும்பன் July 13, 2009 12:27 PM  

ஆட்டங்கள் மனைவியோடு ஆடுவதைப்போல. //

ம்ம்ம்ம் அப்புறம்?

பீர் | Peer July 13, 2009 12:32 PM  

//ஹலோ அது பெரிய வீணை மடில வச்சு செய்றது! நாரதரோடது சின்ன வீணை... //

டிங்... டிங்...டிங்...

வண்ணத்துபூச்சியார் July 13, 2009 12:32 PM  

படத்தின் ஹீரோ குங்கும்பபூவும் கொ.புறாவும் பட ஹீரோ ( பேரு தெரியல///////

ராமகிருஷ்ணன்..

ராஜா | KVR July 13, 2009 12:37 PM  

// டெஸ்ட் ஆட்டங்கள் மனைவியோடு ஆடுவதைப்போல.//

கல்யாணம் ஆகிடுச்சா?

பிரியமுடன்.........வசந்த் July 13, 2009 12:38 PM  

போடு ஆட்டம் போடு
நாங்க பாக்காத ஆட்டம் ஏது......

அதிஷா தல இப்பிடியெல்லாம் தத்துவம் சொல்ல அனுபவம் ரொம்ப இருக்கு போல அதாங்க அந்த பெண்கள் தத்துவம்

'இனியவன்' என். உலகநாதன் July 13, 2009 12:48 PM  

நண்பா,

உரையாடல் சிறுகதை போட்டி முடிவு வரும் தலைவா.

நம்ப ரெண்ண்டு பேரும் ஜெயிக்க போறோம்ல

Anonymous,  July 13, 2009 12:49 PM  

ஹலோ தபு ஷங்கர் ரொம்ப நாளா assitant directer ஆ வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தார் பா ...அதெல்லாம் தெரியாம நக்கல் பண்ணக்கூடாது ////////

'இனியவன்' என். உலகநாதன் July 13, 2009 12:49 PM  

iniyavan2009@gmail.com

விடை இப்போதான் சொன்னேன்.

அதிஷா July 13, 2009 12:52 PM  

அடப்பாவி கிழவு புருஷனுங்களா.. பதிவு பப்ளீஸ் பண்றதுக்குள்ள நாலு மைஸ் ஓட்டா..

அனுஜன்யா July 13, 2009 1:35 PM  

உனக்கு T-20 மற்றும் டெஸ்ட் மேட்ச் ஒப்பிட வேற உருப்படியா கிடைக்கலியா?

//ஆஸி அணியின் தோல்விக்கான காரணங்களை//

யோவ், மேட்ச் டிரா தானே ஆச்சு?

அனுஜன்யா

லவ்டேல் மேடி July 13, 2009 1:43 PM  

// அதிஷானந்தா! //


அட .. நம்ம ஷகிலாந்தாவோட ஷிஷ்யகோடி.....!!!






// இந்த வாரம் புதன் கிழமை என்ன விசேசம்? //



அதிஷானந்தா ... புதன் கிழமை புதிதாக மகளிர் அணி துவங்கப் போகும் நாள்..


இடம் : கொல்லி மலை அண்டர் கிரவுன்ட் ,

( வயா ) கோத்தகிரி 15th பெண்டு ,

ஜல்சாபேட்டை ஹைவே ,

ந்யூ ஜெர்சி - 600 010 .



நேரம் : அர்த்த ராத்திரி 12 .00 மணியளவில் ....



குறிப்பு : சென்னை மாநகரப் பேருந்தில் வருபவர்கள் , சோமாரிகுப்பம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி , பீச்சாங்கை பக்கம் உள்ள ரோட்டில் வரவும் .


சிறப்புக் குறிப்பு : முன்பதிவு வசதி உண்டு.

ICQ July 13, 2009 1:53 PM  

இந்து முன்னணியினரிடம் அடிபடக் கடவாய்..

ICQ July 13, 2009 1:54 PM  

// அதிஷா said...

அடப்பாவி கிழவு புருஷனுங்களா.. பதிவு பப்ளீஸ் பண்றதுக்குள்ள நாலு மைஸ் ஓட்டா..//
மைனர் குஞ்ச சுட்டுட்டாங்களா? :))))))))))))

மணிகண்டன் July 13, 2009 2:37 PM  

***
உனக்கு T-20 மற்றும் டெஸ்ட் மேட்ச் ஒப்பிட வேற உருப்படியா கிடைக்கலியா?
***

repeattu...

ஆஸ்திரேலியா பவுலிங் எல்லாம் ஓகே. எதிர்பார்த்த அளவுக்கு மோசமா போடலை. பாண்டிங் அவரோட டீம்ல வார்னே, மெக்கிராத் இல்லைன்னு ரியலைஸ் பண்ணனும். பேட்டிங் பண்ணிக்கிட்டே இருக்ககூடாது. ஹய்டேன், கில்கிரிஸ்ட் போயிட்டாங்க. கிளார்க் கம்ப்ளீட் grafter ஆயிட்டாரு. வேகமா ரன் அடிக்கணும். 674 ரன் எடுக்கும்போது ரன் ரேட் நாலுக்கு மேல நிச்சயம் இருக்கணும். பட், ஸ்டில் க்ளோஸ் ஷேவ்.

மணிகண்டன் July 13, 2009 3:27 PM  

அதிஷா, உண்மையாகவே சாம் அன்டேர்சன் நேர்க்காணல் நடந்துதா ? என்ன அநியாயம் ?

Niyaz July 13, 2009 4:35 PM  

//மனைவியோடு ஆடுவதைப்போல//

Test match is a real testing match for a player.

கே.ரவிஷங்கர் July 13, 2009 5:03 PM  

//ஹலோ அது பெரிய வீணை மடில வச்சு செய்றது! நாரதரோடது சின்ன வீணை கைல புடிச்சு செய்றது//

நாரதரோடது சின்ன வீணை பெயர் மஹதி.எல்லா இடத்திற்கும் தூக்கிக்கொண்டுப் போக வசதியாக.

மஹதி என்றால் மகா/பெரிய/great
என்று அர்த்தம்.

’மஹதி”ன்னு கர்நாடக இசை ராகம் ஒண்ணு இருக்கு.”அதிசிய ராகம் ஆனந்த ராகம்” என்ற பாட்டு முதல் சரணம் இதில் போடப் பட்டது.

இந்த பெயரில் ஒரு தமிழ் சினிமா பாடகி உண்டு(அய்யைய்யோ அய்யைய்யோ பிடிச்சிருக்கு பாட்டைப் பாடினவர்)வீணையின் பொருட்டுதான் அவருக்கும் அந்த பெயரை வைத்ததாக அவரே சொன்னார்.

பிருஷ்டம்/சம்போகம் இந்த வடமொழிப் பெயரெல்லாம் பசுமரத்தாணிப் மனதில் இருக்கு.

அம்பி இதையும் தெரிஞ்சுக்கனும்.கேட்டியா!

வால்பையன் July 13, 2009 5:30 PM  

//நாரதரோடது சின்ன வீணை கைல புடிச்சு செய்றது//


அப்போ எல்லா ஆம்பளைங்களும் நாரதர் தானா?

share market tips July 13, 2009 7:28 PM  

ஒன்னும் பிரிலபா இன்னாத்த எய்தி command ட கொடுக்கிறது நம்மான்டையும் ஒரு வலைப்பூ இக்கீது வந்து பார்த்து ஒரு command ட கொடுபா
http://panguvanigamtips.blogspot.com/

ஊர்சுற்றி July 13, 2009 8:58 PM  

"உரையாடல் சிறுகதை போட்டி முடிவு"

நானும்தான் கெலிக்கப் போறேன். :)

ஊர்சுற்றி July 13, 2009 9:01 PM  

ஐ....எனக்குத் தெரியுமே....

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள். சரியா?

VIKNESHWARAN July 13, 2009 10:51 PM  

நல்ல பாட்டு மச்சி...

வந்தியத்தேவன் July 13, 2009 11:08 PM  

அதிஷானந்தாவின் ஜனனதினமா?

Starjan ( ஸ்டார்ஜன் ) July 13, 2009 11:11 PM  

குத்து குத்து கும்மாங்குத்து

"அகநாழிகை" July 14, 2009 12:34 PM  

அதிஷா,
புதன்கிழமை வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

" உழவன் " " Uzhavan " July 14, 2009 1:25 PM  

கிரிக்கெட் அலசல் சூப்பர்

ஆதிமூலகிருஷ்ணன் July 14, 2009 1:37 PM  

''வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்'' படத்தின் ஹீரோ குங்கும்பபூவும் கொ.புறாவும் பட ஹீரோவா.?

கடவுளே.. ஏந்தான் தபூ டேஸ்ட் இப்படி போச்சுதோ? இதுக்கு படமே எடுக்காம இருந்திருக்கலாம்..! அல்லது அதிஷாவை ஹீரோவா போட்டுருக்கலாம். சை.!

அப்புறம் சீரியஸா ஒரு வேண்டுகோள்: யாருக்குள் யாரோ.. சரியான சமயத்தில் கரண்ட் போய்விட்டது மறுநாள் காலைதான் வந்தது. சிரிக்காதீர்கள், நிஜம்தான். ரொம்ப ஏமாந்துபோய்விட்டேன். சமீபத்தில் எனது அதீத எதிர்பார்ப்பு தோல்வியில் முடிந்தது இதில்தான். எங்காவது இண்டர்நெட்டில் படம் கிடைத்தால் இணைப்பு தரவும்.. பிளீஸ்.!!

பேரரசன் July 14, 2009 2:50 PM  

டி20 தன் ஆட்ட அளவில் சிறந்ததாக இருந்தாலும் அது ஒரு விபச்சாரியிடம் செல்வதைப்போன்றதாகவே படுகிறது. உடனடி ஆறுதல். மற்றபடி டெஸ்ட் ஆட்டங்களே ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரனின் முழுத்திறமையையும் வெளிக்கொணரும் மற்றும் அதீத ஆட்டத்திறனும் தேவைப்படுகிற ஒரு ஆட்டமாகவே கருதுகிறேன். டெஸ்ட் ஆட்டங்கள் மனைவியோடு ஆடுவதைப்போல. ஆடிக்கொண்டே இருக்க அதீத பொறுமையும் ஆற்றலும் திறமையும் தேவை. கொஞ்சம் பிசகினாலும் காலி.

எம்புட்டு அறிவு.... இந்த ராசாவுக்கு...

ஜெகநாதன் July 16, 2009 11:15 AM  

மீ த லாஸ்ட்டேய்!!!! ( மீத பர்ஸ்ட்​டேய் பின்னூட்டங்களால​கொஞ்சம் பாதிக்கப்பட்டிருக்கேன்..) இதுக்கு அப்புறமும் யாராவது இந்த இடுகைக்கு பின்னூட்டம் ​போட்டாங்கன்னா.... மீ த பர்ஸ்ட் ஆப் லாஸ்ட்-ன்னு மாத்தி படித்துக் ​கொள்ளவும்!

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP